என்னை கவனிப்பவர்கள்

வியாழன், 25 ஜூலை, 2013

மீண்டும் திருவிளையாடல்                மீண்டும் போட்டி  வைத்தார் 
                சிவபெருமான் 
                உலகை சுற்றிவர 

                அம்மை அப்பனை சுற்றி வரும் 
                அழுகுணி ஆட்டம் கூடாது 
                அழுத்தி சொன்னார் முருகன் 

                 சம்மதித்தார்  சிவபெருமான்.

                 இம்முறை   தோற்கக்  கூடாது;
                 முடிவுடன் விமானம் ஏறி விரைந்தார்
                 வேலன் .

                  மவுசுடனேயே இருக்கும்
                  புத்திசாலிப் பிள்ளையார் 
                  கணினி முன் அமர்ந்தார்
                  சொடுக்கினார் மவுசை
                  அழைத்தார் கூகுளை
                  வலம் வந்தார் பூமியை 
                  நொடியிலே முடிந்தது
                  பழம்  கிடைத்தது 
                  கணினி கைகொடுத்தது 

                  மீண்டும் திருவிளையாடல் 

*********************************************************

எச்சரிக்கை:எனது கணினி அனுபவம் இன்று மாலை அல்லது நாளை 

29 கருத்துகள்:

 1. எதற்கும் கவனமாக இருக்கிறோம்...! ஹிஹி...

  பதிலளிநீக்கு
 2. பழம் ? ஆப்பிள்தானே கிடைத்தது ?

  பதிலளிநீக்கு
 3. மறுபடியும் முருகனுக்கு பல்பா .... அருமை!

  பதிலளிநீக்கு
 4. நாரதரே, உம் வேலையை காட்டிவிட்டீரே

  பதிலளிநீக்கு
 5. எதிர்பார்க்கிறேன் கணிணி அனுபவத்தை...

  பதிலளிநீக்கு
 6. வித்தியாசமான அருமையான சிந்தனை
  மிகவும் ரசித்தேன்.வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 7. ஹா ஹா ஹா சூப்பர் விளையாடல்

  பதிலளிநீக்கு
 8. நானும் உங்களை கணிணி அனுபவம் எழுத அழைப்பு விடுத்து இருக்கேன்! நேரம் இருந்தால் சென்று பார்க்கவும்! திருவிளையாடல் பார்ட் 2 சூப்பர்!

  பதிலளிநீக்கு
 9. சிரிப்புத்தான்.......வித்தியாசமா யோசிச்சிருகீங்க முரளி !

  பதிலளிநீக்கு
 10. எப்படியெல்லாம் யோசிக்கிறாங்கப்பா.;.

  பதிலளிநீக்கு
 11. I suddenly remembered that but for the Thiruvilayadal Movie, many such incidents would not have come to the attention of many people. I think those days movie gave us tremendous insight into many such things.Kattabomman,Kappaloiitiya Tamizhan,Karnan to name a few.
  Thought like sharing this with you.

  பதிலளிநீக்கு
 12. good...rasiththen
  well come to my site-
  Vetha.Elangathilakam.

  பதிலளிநீக்கு
 13. விநாயக விளையாடல்!

  //"எச்சரிக்கை..."......//

  அதுதான் காலைமுதல் வானம் உறுமிக் கொண்டே இருக்கிறதா....! :)

  பதிலளிநீக்கு
 14. ஹா ஹா... புதுமையான திருவிளையாடல்...

  பதிலளிநீக்கு
 15. போடுங்க போடுங்க உங்க கணினி அனுபவத்தை....! அதுக்கு எச்சரிக்கை வேறா அவ்வவ்....

  பதிலளிநீக்கு
 16. யானை வரும் முன்னே, மணி ஓசை வரும் பின்னே என்பது போல உங்கள் கணணி அனுபவத்திற்கு விநாயகரை வைத்து முன்னோட்டம்! நவீன திருவிளையாடல் ஓஹோ!

  பதிலளிநீக்கு
 17. சூப்பரா இருக்குங்க உங்க லேட்டஸ்ட் திருவிளையாடல் என் முக நூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளேன்...

  பதிலளிநீக்கு
 18. அன்பின் முரளிதரன் - போட்டி என்றாலே பிள்ளையார் தான் வெற்றி பெறுவார் - மவுஸ் கொண்டு கூகிளின் துணையுடன் உலகம் சுற்றி வந்து போட்டியில் வெற்றி பெற்று ஆப்பிளைக் கைப்பற்றிய பிள்ளையாரின் கடைக் கண் பார்வை பக்தர்களூக்கு எப்பொழுதும் உண்டு - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  பதிலளிநீக்கு

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895