என்னை கவனிப்பவர்கள்

சனி, 27 ஜூலை, 2013

கணினி! நீஒரு டிஜிட்டல் ரஜினி!



                             கணினி!
                             நீஒரு
                             டிஜிட்டல் ரஜினி!
                             சிறுவரையும் சிறை பிடிக்கிறாய்
                             நடுவயதினருடனும் நட்பு  கொள்கிறாய்
                             வயதானவர்களையும்
                             வசீகரம் செய்கிறாய்.
                             பெண்களையும்  பிடித்திழுக்கிறாய்
                             மடிமேலும் அமர்ந்து கொள்கிறாய்
                             கைக்குள்ளும் அடங்கி விடுகிறாய்
                             நல்லதையும் காட்டுகிறாய்
                             பொல்லாததையும் புகட்டுகிறாய்
                             அந்தரங்கம் அலசுகிறாய்
                             சொந்தமா  பந்தமா நீ
                             உறங்கும் நேரம் தவிர
                             உன்னுடனே இருக்கப்
                             பிரியப் படுகிறாய் 
                             "வல்லவன் நான்" எனக்குள்
                             எல்லாம்  இருக்கிறதென்கிறாய்.
                             உன்னைத்தாண்டியும் உலகம் இருக்கிறது
                             அதை புரிந்து கொள்ளாதவரை
                             நாங்கள் உனக்கு அடிமை-
                             புரிந்து கொள்ளும் காலம் வரும்
                             அப்போது நீ எங்களுக்கு அடிமை 

****************************************************************************************

படித்து  விட்டீர்களா?
என்னை கவுத்திட்டயே சரோசா!-காதல் கடிதம் போட்டி
எனது முதல் கணினி அனுபவம் 
மீண்டும் திருவிளையாடல்

16 கருத்துகள்:

  1. உன்னைத்தாண்டியும் உலகம் இருக்கிறது
    அதை புரிந்து கொள்ளாதவரை
    நாங்கள் உனக்கு அடிமை-//

    இந்த அடிமைகள் பட்டியல் நீண்டுக்கொண்டே போகிறது. என்றுதான் நீங்கள் தீர்க்கதரிசனமாய் கூறிய அடுத்த வரிகள் நிஜமாகுமோ!

    பதிலளிநீக்கு
  2. எப்படீங்க இப்படி...? பாராட்டுக்கள்...

    பதிலளிநீக்கு
  3. சரியான கணினி பற்றிய புரிதல் கவிதை.

    பதிலளிநீக்கு
  4. கணிணியை பற்றி சிறப்பாக கவிதை வடித்து விட்டீர்கள்! அருமை! நன்றி!

    பதிலளிநீக்கு
  5. அருமையான கவிதை
    வாழ்த்துக்கள்....

    பதிலளிநீக்கு
  6. நண்பரே!
    நான் ஒரு பதிவு எழுதிபுட்டு.அப்புறம் பார்த்தால் உங்களின் இந்தப் பதிவும் என் பதிவும் தலைப்பில் ஒரேமாதிரி....கணினி! நீ என் நண்பன்டா! என்று வைத்திருக்கிறேன் இப்படித்தான் அதிலும் ஒரு கவிதையும் உண்டு...ஆக நமக்குள் நிறைய ஒற்றுமை இருக்கு...நாம் கணினி தந்த நண்பர்கள்

    பதிலளிநீக்கு
  7. அருமை அருமை
    எப்படி இப்படி வித்தியாசமாக சிந்திக்கவும்
    அருமையாகக் கொடுக்கவும் முடிகிறது
    வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  8. கணினியைத் தலைவா என்றழைக்க வேண்டியதுதான்!
    அருமை முரளி

    பதிலளிநீக்கு
  9. தத்துவார்த்த கவிதை அய்யா.
    கடவுளே கணினிதான்
    நன்றி

    பதிலளிநீக்கு
  10. புரிந்து கொள்ளும் காலம் வரும்
    அப்போது நீ எங்களுக்கு அடிமை //கணினியின் வேகத்துக்கு நம்மால் போகமுடியுமா?

    பதிலளிநீக்கு
  11. நல்ல ஒப்பீடு! இன்னும் சொல்லப்போனால் கணினி ரஜினிக்கும் மேலே!!!!

    பதிலளிநீக்கு
  12. கணினி நீ ஒரு டிஜிட்டல் ரஜினி.....

    ரசித்தேன் முரளி. வித்தியாசமான சிந்தனை.

    பதிலளிநீக்கு
  13. அனைவருக்குமான சூப்பர் ஸ்டாரான கணினியைப் பற்றிய பகிர்வு அருமை.

    பதிலளிநீக்கு

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895