என்னை கவனிப்பவர்கள்

ரஜினி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ரஜினி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 30 செப்டம்பர், 2017

ரஜினியிடம் பாடம் கற்பாரா டி.ராஜேந்தர்?


   டி.ராஜேந்தர் அவ்வப்போது பரபரப்பாக ஏதாவது பேசி தான் இருப்பதை காட்டிக் கொள்வார். அடுக்கு மொழி பேசி நம்மையும்  கொல்வார். அவரது அடுக்கு மொழியை இன்னும் ரசிக்கிறார்கள் என்று நினைத்துக் கொண்டிருப்பதை  என்னவென்று சொல்வது.  அவரது தற்பெருமை பேச்சுக்களைக் கேட்டுக் கேட்டு நமக்கு அலுத்துப் போய்விட்டது என்றாலும் அவர் விடுவதில்லை. தன்னை கோமாளியாக பலரும் பார்ப்பதை அவர் உணர்ந்திருக்கிறாரா  என்று தெரியவில்லை. உலகத்திலேயே மிகச சிறந்த திறமை சாலி  தான்தான் என்று உண்மையாகவே நம்பிக் கொண்டிருக்கிறார் போலும். இளையவர்களுக்கு தன் நடத்தை மூலம் வழி  காட்ட  வேண்டியவர் அவர்கள் வெறுக்கும் அளவுக்கு பெயரைக் கெடுத்துக்  கொள்ளத் தவறுவது இல்லை. 

   இவரது சமீபத்திய பரபரப்பு நடிகை தன்ஷிகாவை அழ வைத்தது. "விழித்திரு" ஆடியோ வெளியீட்டில் பேசிய நடிகை  தன்ஷிகா( கபாலியில் ரஜினியுடன்  நடித்தவர்) மேடையில் உள்ளோர் அனைவரையும் பற்றி  பேசியவர் அவரது போதாத காலம்  டி.ராஜேந்தரைப் பற்றிக் குறிப்பிட மறந்து விட்டார். பின்னர் மைக்கைப்பிடித்த டி. ராஜேந்தர் சபை நாகரீகம் கற்றுத் தருவதாக சொல்லி தான் நாகரிகத்தை மறந்து தன்சிகாவை காய்ச்சி எடுத்து விட்டார். ரஜினி படத்தில் நடித்ததால்  என்னை மறந்து விட்டார் என்றார். தவறை உணர்ந்த தன்ஷிகா காலைத் தொட்டு மன்னிப்பு கேட்டும் விடாமல் வெறி பிடித்தவர் போல சாடியது பலரையும் சங்கடத்தில் ஆழ்த்தியதை அறியாமல் தொடர்ந்தார். உங்கள் மேல் நான் மதிப்பு வைத்திருக்கிறேன். என்று குறுக்கிட்டு சொன்ன தன்ஷிகாவை 'உன்னுடைய  மதிப்பை கொண்டு எந்த மார்க்கெட்ல விக்கப் போறேன்' நீ சொல்லிதான் நான் வாழனும்னு அவசியம் இல்லை.' என்று மேலும் தாக்கினார்.  மீண்டும் சமாதானம் சொல்லியும்  அதை ஒப்புக்கேனும் ஏற்கவில்லை  ஓரளவுக்கு மேல் தாங்க இயலாத தன்ஷிகா அழ ஆரம்பித்து விட்டார். 
    மூத்த கலைஞர்  டி.ராஜேந்தரின் இப் பேச்சுக்கு பலரும் கண்டனம் தெரவித்துள்ளனர். ரஜினியின் மீது  பொறாமை கொண்டாற்போல் பேசிய டி.ஆர்,  ரஜினியிடம்  இருந்து பாடம் கற்க வேண்டும். 

   எந்திரன் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் ஐஸ்வர்யா ராய் பேசினார் . அப்போது படத்தின் தயாரிப்பாளர் , இயக்குனர் சங்கர், ஏ.ஆர்.ரகுமான் , அதில் பணியாற்றிய கலைஞர்கள் ஆடியன்ஸ் உள்ளிட்ட  அனைவருக்கும் பாராட்டும் நன்றியும் தெரிவித்த ஐஸ்வர்யா ராய்  ரஜினியை மறந்துவிட்டு பேச்சை முடித்து விட்டார். மேடையில் இருந்து இறங்கு முன் சட்டென்று நினைவுக்கு வதவராக மீண்டும் வந்து நன்றி கூறினார். ரஜினி அதை தவறாகக் கருதவில்லை. தன்னைத் தூற்றுபவரையும் தன் வசப் படுத்தும் பண்பு அவரிடத்தில் இருந்தது. ஜெயலலிதாவுக்காக தேர்தல் மேடைகளில் தன்னை கண்டபடி தூற்றிய மனோரமாவைக் கூப்பிட்டு தன் படத்தில் நடிக்க வைத்தார்.ஒரு வேளை அது விளம்பரத்திற்காகவே செய்திருந்தாலும் பாதகமில்லை. .
 ஐஸ்வர்யா  ராய் ரஜினியை மறந்த வீடியோ 



டி.ராஜேந்தர் தான் ஒரு வாசமில்லா பெருங்காய டப்பி என்பதை உணர்ந்தால் நல்லது.

இவரது பேச்சைக் கேட்டுவிட்டு வீட்டு அம்மணி சொன்னது " அஞ்சு நிமிஷம்  பேச்சை கேட்டதுக்கே இப்படி இருக்கே . பாவம்  உஷா  " 



சனி, 27 ஜூலை, 2013

கணினி! நீஒரு டிஜிட்டல் ரஜினி!



                             கணினி!
                             நீஒரு
                             டிஜிட்டல் ரஜினி!
                             சிறுவரையும் சிறை பிடிக்கிறாய்
                             நடுவயதினருடனும் நட்பு  கொள்கிறாய்
                             வயதானவர்களையும்
                             வசீகரம் செய்கிறாய்.
                             பெண்களையும்  பிடித்திழுக்கிறாய்
                             மடிமேலும் அமர்ந்து கொள்கிறாய்
                             கைக்குள்ளும் அடங்கி விடுகிறாய்
                             நல்லதையும் காட்டுகிறாய்
                             பொல்லாததையும் புகட்டுகிறாய்
                             அந்தரங்கம் அலசுகிறாய்
                             சொந்தமா  பந்தமா நீ
                             உறங்கும் நேரம் தவிர
                             உன்னுடனே இருக்கப்
                             பிரியப் படுகிறாய் 
                             "வல்லவன் நான்" எனக்குள்
                             எல்லாம்  இருக்கிறதென்கிறாய்.
                             உன்னைத்தாண்டியும் உலகம் இருக்கிறது
                             அதை புரிந்து கொள்ளாதவரை
                             நாங்கள் உனக்கு அடிமை-
                             புரிந்து கொள்ளும் காலம் வரும்
                             அப்போது நீ எங்களுக்கு அடிமை 

****************************************************************************************

படித்து  விட்டீர்களா?
என்னை கவுத்திட்டயே சரோசா!-காதல் கடிதம் போட்டி
எனது முதல் கணினி அனுபவம் 
மீண்டும் திருவிளையாடல்

புதன், 12 டிசம்பர், 2012

அப்படி என்னதான் இருக்கிறது ரஜினியிடம்?

   
   இன்று ரஜினியின் பிறந்த நாள்.ரஜினி ரசிகர்களுக்கோ இந்நாள் ஒரு திருவிழா.காலையில் இருந்தே சேனல்கள் ஆரம்பித்து விட்டன ரஜினியின் புகழ் பாட. எந்த சேனலை திருப்பினாலும் ரஜினி ரஜினி ரஜினி. பத்திரிக்கைகள் ஒரு வாரத்திற்கு முன்பே அவரைப் பற்றிய செய்திகளை வெளியிட்டு விற்பனையைப் பெருக்கிக் கொண்டன.

  அப்படி என்னதான் இருக்கிறது அவரிடம்? அந்தக் காலத்தில் கதாநாயகனுக்கு தேவைப்பட்ட சிவந்த நிறமோ அற்புதமான உடல் வாகோ அபரிதமான நடிப்பாற்றலோ இல்லாமல் சினிமாவில் நுழைந்து தமிழ் சினிமாவில் முடிசூடா மன்னனாகத் திகழ்வதற்கு காரணம் என்ன? பல்லாயிரக் கணக்கான ரசிகர்களை இன்றுவரை இவரால் மட்டும் எப்படி தக்கவைத்துக் கொள்ள முடிந்தது?
   இதற்கு பத்திரிகைகள் பலபல காரணங்களை ஆராய்ச்சி செய்து அடுக்கிக் கொண்டிருகின்றன.

   பல 'முதல் முதலாக' சினிமா இலக்கணங்களை தகர்த்தவர்.கருப்பாய் இருப்பவர்களுக்கும் காதாநாயகக் கனவு நிறைவேறும் என்று நிரூபித்தவர். 

   கதாநாயகன் அதீதமான தற்புகழ்ச்சிப்  பாடல்களை தொடங்கி வைத்தவர்   பொதுவாக என் மனசு தங்கம் என்ற பாடல் மூலம். கமல்ஹாசன் கூட இதிலிருந்து தப்ப முடியவில்லை, "நான் வெற்றிபெற்றவன் இமயம் தொட்டுவிட்டவன்"என்று தொடர்ந்தார். விஜய் அஜித் சிம்பு போன்றவர்களும் அந்தப் பாணியைத் தொடர்ந்தனர்.

   பழைய படங்களில்  வில்லன்கள் முகத்தை குரூரமாக வைத்துக் கொண்டு கதாநாயகனுடன் ஆக்ரோஷமாகச் சண்டை இடுவார்கள்.கதாநாயகனோ பயங்கரமாகச் சண்டை போடும்போது கூட அவர் முகம் சிறிது கூட மாறாது. இதையும் தன் பழி வாங்கும் கதைப் படங்களில் மாற்றினார் ரஜினி.     

   இவை  எல்லாவற்றுக்கும் மேலாக அவர் என்னதான் ஆன்மீகத்தின் மீது ஈடுபாடு கொண்டு அமைதியாக தோற்றமளிக்க முயன்றாலும் இயல்பாய் அமைந்துள்ள ஸ்டைல் என்ற ஒன்றுதான்  அவருடைய  ஈர்ப்பு சக்திக்கு காரணம் என்று பலரும் கருதுகிறார்கள்.
    இயல்பாகவே சற்று குழப்ப மனநிலை கொண்டவராக இருந்தபோதிலும் ரசிகர்கள் அதை ஒரு பொருட்டாக நினைப்பதில்லை.
   தன் மனதில் நினைத்ததை பட்டென்று சொல்லி அதிர்ச்சி கொடுக்கவும் தயங்கியதில்லை. ஜெயலலிதா கருணாநிதி இருவருக்குமே இதை செய்திருக்கிறார் ரஜினி.

    அவர் தமிழக மக்களுக்காக பல்வேறு விஷயங்களில் குரல் கொடுக்கவில்லை என்ற வருத்தமும் கோபமும் பலருக்கு உண்டு. ஆனால் ஒரே ஒரு நன்மை செய்திருக்கிறார். நிர்பந்தங்களின் காரணமாக அரசியலுக்கு வராததே அது.

   ரஜினி அவ்வப்போது குட்டிக் கதைகள் சொல்வது வழக்கம்.அவர் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் சொன்ன குட்டிக் கதை ஒன்று. எல்லோருக்கும் தெரிந்ததுதான் என்றாலும் மீண்டும் இதோ?

       மலையின் உச்சியைத் தொட மூன்று தவளைகள் முயற்சி செய்து கொண்டிருந்தன. அந்த மலையோ அடர்ந்த காடும் பயங்கரமான பாம்புகளும்,விலங்குகளும், விஷப் பூச்சிகளும் நிறைந்தது. மலை மீது ஏறிக் கொண்டிருந்த மூன்று தவளைகளைப் பார்த்து கீழே உள்ள மற்ற தவளைகள் போகாதீர்கள் போனால் பாம்புகள் விழுங்கிவிடும் என்று கூச்சலிட்டன.பயந்துபோன ஒரு தவளை மலை ஏறாமல் திரும்பி விட்டது.தொடர்ந்து ஏறிக் கொண்டிருந்த   தவளைகளை விலங்குகள் கொன்றுவிடும்  என்று மீண்டும் பயமுறுத்த இன்னொரு தவளையும் திரும்பி விட்டது. ஒரே ஒரு தவளை மட்டும் எந்த எச்சரிக்கையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து சென்று மலை உச்சியைத் தொட்டுத் திரும்பியது. அது மட்டும் எப்படி பயப்படாமல் பயணம் செய்து வெற்றிபெற்றது? 
     ஏனென்றால் அதற்கு காது கேட்காது.

   ரஜினியும் யாருடைய விமர்சனங்களையும் கிண்டல்களையும் பொருட்படுத்தாமல் தன் வழியில் பயணம் செய்தது அவர் வெற்றிக்குக் காரணமோ?

****************************************************************************************
ரஜினியின் பிறந்த நாளுக்கு முந்தைய நாளான பாரதியின் பிறந்த நாளை யாரும் கண்டு கொள்வதில்லை என்ற குறை உண்டு. கடந்த ஆண்டு பாரதி பிறந்தநாளில் கவிதை ஒன்றை பதிவிட்டிருந்தேன்.அதைப் பார்த்தவர் எண்ணிக்கை குறைவு. படித்தவர் எண்ணிக்கை அதை விடக் குறைவாக இருந்திருக்கக் கூடும்.
இதோ அந்தப் பதிவு 
http://tnmurali.blogspot.com/2011/12/blog-post_11.html 
மகாகவி பாரதி –நிலையாய் நிற்பவன்

 

புதன், 7 டிசம்பர், 2011

ஜீவ காருண்யம்


        
         தம்பி! 
          அங்கே 
          எறும்புப் புற்று 
          இருக்கிறது
          பார்த்து காலை வை!



          பெரியவரே! 
           கவலைப் படாதீர்கள் 
           எறும்பு கடித்து 
           நான்
           இறந்துவிட மாட்டேன்!




     
        
            தம்பி! 
             நீ 
             கால் வைக்கும்போது 
             சில எறும்புகள் 
             இறந்துவிடுமே!



                                
 ******************************************************************************************************

          
                'இது கதையா? கவிதையா?' 
                'என்ன? ரெண்டும் இல்லையா?'
                "அட! ஏதோ ஒன்னு. நல்லா கேக்குறாங்கய்யா டீட்டெயிலு"
    **************************************************************************************************

இதையும் படிங்க;
கமலஹாசனின் கவிதை 
செல்ல நாயின் இறப்பு! ஒரு மாதம் பரபரப்பு!பகுதி5