என்னை கவனிப்பவர்கள்

வெள்ளி, 5 ஜூலை, 2013

புஷ்பா மாமியின் புலம்பல்கள்-டெபாசிட் கட்டணுமாம்-எதுக்கு?

   "முரளி! மாங்கா எல்லாம் பறிக்கலையா? கீழே விழுந்து வீணாறதே!" மாமரத்தை பார்த்துக் கொண்டே உள்ளே வந்தார் புஷ்பா மாமி
"உங்கம்மா இருந்தா பத்து இருபது மாங்கா கொடுத்து அனுப்புவா.ஆவக்கா ஊறுகா போடுவேன்....."
"வாங்க மாமி! பறிக்கறதுக்கு ஆள் கிடைக்கல .பறிச்சதும் கொடுத்தனுப்பறேன்.." .
"அது கிடக்கட்டும். இதப் பாரு அநியாயமா இருக்கு. கரண்ட் பில் ஏத்திட்டானா என்ன எங்க கரண்ட் பில்  எக்கச் சக்கமா வந்திருக்கு  . இதுவரை இப்படி வந்ததே கிடையாது .  620 யூனிட்டுக்கு 2530 ரூபாதான் ஆகணும். முன்னாடி நீ  சொன்னமாதிரிதான் கணக்கு பண்ணி பாத்தேன்.ஆனா 3209 போட்டிருக்கானே. 679 ரூபா எக்ஸ்ட்ராவா இருக்கே! நீ பாத்து சொல்லு" என்று EB கார்டை நீட்டினார்.
" மாமி இந்த மாசம் எல்லாருக்குமே அதிகமாத்தான்  வந்து இருக்கும் . டெப்பாசிட் அமவுண்ட் சேத்திருப்பான் "
"டெப்பாசிட்டா? நாம எதுக்கு டெப்பாசிட் கட்டனும் ஏற்கனவே அதெல்லாம் கட்டிதானே இருக்கோம்..கரண்டு பில்லே எக்கச் சக்கமா இருக்கு. இதுல டெப்பாசிட் வேறயா."
"மின்சாரா வாரிய விதிப்படி  ரெண்டு வருஷத்துக்கு ஒரு முறை   பயன்படுத்தற கரன்டுக்கு தகுந்த மாதிரி  குறைந்த பட்ச டெப்பாசிட் தொகையை மாத்தி அமைப்பாங்க. ஒவ்வொரு தடவையும் இப்படி கட்டிக்கிட்டுதான் இருக்கோம். அந்த தொகை அப்பவெல்லாம் குறைவா இருந்ததால   நமக்கு தெரியலை. எங்களுக்கும் அப்படிதான் போட்டிருக்கான்?"
"அவன்  போடறதை எப்படி சரியான்னு தெரிஞ்சிக்கறது.. எவ்வளுவுதான் டெபாசிட் கட்டணும்.? கொஞ்சம் விவரமா சொல்லு "
"நாம போன வருஷத்துல   கரண்ட் பில் கட்டியிருக்கற தொகையை  வச்சு ஒரு மாத சராசரி கண்டு பிடிக்கணும்.. அதைப் போல மூணு மடங்கு தொகை டெபாசிட்டா  நம்ம அக்கௌண்ட்ல இருக்கணும். 
  ஒரு வருடத்த  கணக்கில எடுத்துக்கறப்ப நிதி ஆண்டா கணக்குல எடுத்துக்கணும் .அதாவது ஏப்ரல் 2012 இல இருந்து மார்ச்2013  வரை. இந்த டெப்பாசிட் தொகை ஏற்கனவே .நம்ம அக்கவுண்ட்ல இருக்கறதவிட குறைவா இருந்தா, கூடுதலா உள்ள தொகையை நாம வாங்கிக்கலாம். இல்லன்னா நம்மோட கரண்ட் பில் தொகையில இருந்தும் கழிச்சுக்கலாம். இது நம்ம விருப்பம்தான். அதிகமா இருந்தா பில்லோட சேர்த்தே போட்டுடுவாங்க. குறைவா இருந்தா நீங்க EB ஆபீஸ்ல கிளைம் பண்ணி வாங்கிக்கணும்."
"என்னமோ போ!! ஒன்னும் புரியலடா!"

 மாமியின் கார்டை வாங்கி பார்த்தேன். ஒரு வருட தொகையை கணக்கிட்டுப் பார்த்தேன் 
April  2012       -       950
June                    3105
August                  1300
October                 1210
Dec                    1120
Feb 2013               1030
                     -------------
 Total for 12 months     7715
                     -------------
 சராசரி             7715 / 12 =726.25

Deposit  amount revised   726.25 x 3 = 2178.75 = 2179
உங்க Security Deposit ஏற்கனவே எவ்வளவு இருக்குங்கறத மின்வாரிய இணைய தளத்துல பாத்து தெரிஞ்சுக்கலாம். 
https://www.tnebnet.org/  என்ற இனைய தளத்துக்கு சென்று பாத்தப்ப. மாமி வீட்டு செர்வீஸ் எண்ணை இணைத்து பார்த்தபோது ஏற்கனவே இருப்பில் இருந்த தொகை 1500 என்று தெரிய வந்தது.
திருத்தி அமைக்கபட்டது    2179
ஏற்கனவே உள்ளது          1500
                           -----------
 இன்னும் செலுத்த           679 
  வேண்டியது              --------------
இதைதான் The adequacy of Current Consumption Deposit (CCD) ன்னு சொல்லறாங்க
இந்த  679 ரூபாயைத்தான் 2530 ரூபா இந்த மாச கரண்ட் பில்லோட சேர்த்து இப்போ போட்டிருக்காங்க என்று விளக்கினேன்.
"அப்போ இது சரின்னு சொல்றயா? ஏமாற்றத்துடன் கேட்டார்.
ஆமாம் மாமி சரிதான்.
"சரிடா அப்பா நான் வரேன்."
புறப்படும்போது மீண்டும் மாமரத்தை பார்த்துக் கொண்டே "மாங்கா பறிக்கும்போது மாமியை மறந்துடாத." என்று ஞாபகப் படுத்தி விட்டு சென்றார் 
மாமி எதற்கும் இன்னும் இரண்டு மூன்று பேரை கேட்டு சரிபார்த்த பின்புதால் மின் கட்டணம் செலுத்துவார்,
சந்தேகங்களை தீர்த்துக் கொள்வது நல்லதுதானே!

*******************************************************************************************
கொசுறு: கரண்டே இல்லை! எங்களுக்கு இந்த தகவல்லாம் எதுக்கு? ன்னு நீங்க கேக்கலாம். உங்க டெபாசிட் கூடுதலா இருந்தா திரும்ப வாங்கிக்கறதுக்குத்தான். அதிகமா இருந்தா கட்ட சொல்வாங்களே தவிர கூடுதலா இருந்தா தானா  திருப்பி தரமாட்டாங்க. 
சென்னை வாசிகளுக்கு கொஞ்சமாவது பயனுள்ளதா இருக்கும்னு நினைக்கிறேன்.

******************************************************************************************

                       

32 கருத்துகள்:

 1. "வாங்க மாமி! பறிக்கறதுக்கு ஆள் கிடைக்கல .பறிச்சதும் கொடுத்தனுப்பறேன்.." .///
  மின்சாரக் கட்டணம் குறிப்புப் பற்றி யார் யோசிக்கப் போகிறார்கள்.தலைவிதியே என்றுதான் இருக்கப் போகிறார்கள்.
  சரிங்கோ மாமா ஆவக்கா ஊறுகா கொஞ்சம் அனுப்பி வையுங்கோ புண்ணியமா போகட்டும்

  பதிலளிநீக்கு
 2. அப்பாடா... இந்தக் கணக்கு புரிகிறது...! ஹிஹி...

  இணைப்பும் உதவும்... நன்றி...

  பதிலளிநீக்கு
 3. இப்போது எவ்வளவோ பரவாயில்லை... மின் வெட்டு குறைவு... எப்போதாவது இரண்டு அல்லது மூன்று மணி நேரம் தான் மின் வெட்டு... அதுவும் கடந்த 10 நாட்களில்...

  பதிலளிநீக்கு
 4. முந்தியெல்லாம் இந்த டெபாசிட் தொகைக்கு ஒரு நாமினல் வட்டி போட்டுக்கொடுப்பாங்க. அந்த நடைமுறை இப்பவும் இருக்கா? இல்லை, காந்தி கணக்குதானா?

  பதிலளிநீக்கு
 5. பயனுள்ள பகிர்வு
  விரிவான தெளிவான பகிர்வுக்கு நன்றி
  வாழ்த்துக்களுடன்....

  பதிலளிநீக்கு
 6. எங்களுக்கும் டெபாசிட் கட்டச் சொல்லி வந்து இருக்கு. இந்த முறை உறவினர்கள் வருகையால் அதிகம் மின்சார கட்டணம். வெயில் காலம் வேறு அதனால் மின் கட்டணம் அதிகம். ஆகஸ்ட் 8ம் தேதி கட்டியாக வேண்டும்.
  பயனுள்ள பகிர்வு.

  பதிலளிநீக்கு
 7. பயனுள்ள பகிர்வு ... முரளிதரன் ...கரண்ட் இல்லையென்றாலும் UPS இருப்பதால் எங்களுக்கும் டெபாசிட் அதிகமாகித்தான் போயுள்ளது...என் முக நூலில் பகிர்கிறேன்... என் தோழமைகளுக்கும் பயன்படட்டும்...

  பதிலளிநீக்கு
 8. நேற்று தான் என் வீட்டுக்கு ரூ. 9450/- கட்டிவிட்டு வந்தேன். இரண்டு மாத மின்கட்டணம் ரூ. 7450/- + கூடுதல் டெபோசிட் ரூ. 2000. மிகவும் ஜாஸ்தியாகத்தான் உள்ளது. வேறு வழியே இல்லை.

  டெபோஸிட் தொகைகளை யாரும் என்றும் திரும்ப வாங்கவே வழியில்லை. கேஸ் கனெக்‌ஷன் போலத்தான் இதுவும். அத்யாவஸ்யமான உபயோகப்பொருளாகவே உள்ளது.

  பயனுள்ள சுவாரஸ்யமான புலம்பல் பதிவு. பகிர்வுக்கு நன்றிகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பலரும் பேசிக் கொள்வதையே பதிவாக்கி இருக்கிறேன்.நன்ற்பி வைகோ சார்

   நீக்கு
 9. கூடுதல் டெபாசிட் கட்டணம் கட்டியிருக்கிறேன்! திருப்பி வாங்கியது இல்லை! புதிய தகவல்! விவரமாக விளக்கியதற்கு நன்றி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பெரும்பாலும் யாரும் திரும்ப வாங்குவது கிடையாது. கட்டணத் தொகையில் குறைத்துக் கொள்வார்கள்

   நீக்கு
 10. //இன்னும் இரண்டு மூன்று பேரை கேட்டு சரிபார்த்த பின்புதால் மின் கட்டணம் செலுத்துவார்,//சந்தேகம் தீர்ந்தாலும் தீராவிட்டாலும் கட்டிடனும் இல்லேனா பீஸை பிடுங்கிருவா!

  பதிலளிநீக்கு
 11. வராத கரெண்ட்டுக்கு இவ்வளவு பணம் கட்டுகிறீர்களா...?

  “சென்னை வாசிகளுக்கு கொஞ்சமாவது பயனுள்ளதா இருக்கும்னு நினைக்கிறேன்.“

  அவர்களுக்கு்ப பயனுள்ள தகவல் தான்.

  பதிலளிநீக்கு
 12. டெபாசிட் பற்றித் தெரியும். எங்களுக்கும் அதிகத் தொகைதான் வந்தது. புஷ்பா மாமி சாக்கில் எல்லோருக்கும் தெரிகிறது!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மையில் பலரும் கேட்டதையே நானும் தெரிந்து கொண்டு பதிவாக்கி இருக்கிறேன். நன்றி ஸ்ரீராம்

   நீக்கு
 13. புஷ்பா மாமி பேரைப் பார்த்ததும் படிக்க ஆரம்பிச்சுட்டேன்.

  பயனுள்ள தகவல்கள்.

  பதிலளிநீக்கு
 14. நல்ல தகவல். தமிழக வாசிகளுக்கு பயனுண்டு!

  பதிலளிநீக்கு
 15. ஒரு பயனுள்ள பகிர்வை கதை போல் நகர்த்தி அழகாக சொல்லிவிட்டீர்கள் ஐயா.

  பதிலளிநீக்கு
 16. கூடுதலா இருந்தா திருப்பி தந்துருவாங்க. அதாவது நாம கட்டற கரன்ட் மாச பில் தொகையிலருந்து கழிச்சிக்குவாங்க. எனக்கு அப்படித்தான் செஞ்சாங்க. ஒரு தகவல சொல்றப்போ சரியானதுதானான்னு பாத்துட்டு சொல்றது நல்லது. இருந்தாலும் இந்த டெப்பாசிட் தொகைன்னு சொல்றதே வட்டியில்லாம பப்ளிக்கிட்டருந்து கடன் வாங்கறதுன்னுதான் சொல்லணும். தனியார் நிறுவனங்கள் செஞ்சா பரவால்லை. அரசே இந்த மாதிரி செய்யிறது அக்கிரமம்.

  பதிலளிநீக்கு
 17. நிச்சயமா பயனுள்ள பதிவுதான்!!

  பதிலளிநீக்கு

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895