கற்று குட்டியின் கணினிக் குறிப்புகள்
EXCEL இல் எண்களில் உள்ள ரூபாயை எழுத்துக்களாக மாற்ற முடியுமா? என்ற பதிவிற்கு நான் எதிர் பாராத அளவிற்கு வரவேற்பளித்த அத்தனை பேருக்கும் நன்றி.(தெரியாம பண்ணிட்டோம். விட்டுடுப்பா எங்களை என்று யாரோ சொல்வது கேக்குது. ஆனாலும் விடமாட்டோம் இல்ல)
அந்தப் பதிவின் கருத்துரையில் நண்பர் முகமது கையூம் "தற்போது அனைத்து வங்கியின் காசோலை ஒரே அளவில் உள்ளது. எனவே காசோலையில் தேதி, பெயர், தொகை - எண்ணால் மற்றும் எழுத்தால் உரிய இடத்தில் வீட்டில் உள்ள பிரிண்டரில் டைப் செய்ய வழி முறை உள்ளதா?" என்று கேட்டிருந்தார். நான் வோர்டில் இந்த செட்டிங்சை செய்து வைத்திருந்தேன். ஆனால் அதைவிட எளிதாக காசோலை கணக்குகளை எளிதில் கையாளும் வண்ணம் எக்செல்லில் ஒரு இலவச டெம்ப்ளேட் கிடைத்தது. அதன் மூலம் நம் வீட்டில் கூட பிரிண்டரில் காசோலையில் பெயர் தேதி தொகைகளை எளிதாக நிரப்ப செய்ய முடியும்.
கையாள்வதற்கு மிக எளிமையான இதை பயன்படுத்த Excel மேக்ரோ Enable செய்யப்பட்டிருக்க வேண்டும்
இதோ விளக்கம்
கீழுள்ள இணைப்பின்மூலம் Cheque Print என்ற எக்செல் கோப்பை டவுன் லோட் செய்யவும்.
Cheque Print Download
இந்த பக்கத்திற்கும் சென்று டவுன்லோட் செய்து கொள்ளலாம்
http://www.xl.nkworld.in/2013/03/bank-cheque-printing-software-in-excel.html
இதை கணினியில் உங்களுக்கு வசதியான இடத்தில் வைத்துக் கொள்ளவும். கோப்பை திறந்தவுடன் மேக்ரோக்கள் செயல்பட அனுமதி கேட்கும்.படத்தில் உள்ளவாறு Options ஐ கிளிக் செய்துEnable the Content தேர்ந்தெடுக்கவும்
இந்த பைலில் மூன்று ஷீட்டுகள் உள்ளன முதல் சீட் HOME..இதில் காசோலை பிரிண்ட் செய்வதற்கான குறிப்புகள் கொடுக்கப் பட்டுள்ளன
அடுத்தது Data . இந்த ஷீட்டில் காசோலை விவரங்களை டைப் செய்யவேண்டும்.
இந்த விவரங்களில் Amount in words நான் forumula பயன்படுத்தி இருக்கிறேன்.நீங்கள் ரூபாயை எழுத்துக்களால் டைப் செய்தும் கொள்ளலாம்
அடுத்தது Data . இந்த ஷீட்டில் காசோலை விவரங்களை டைப் செய்யவேண்டும்.
இந்த விவரங்களில் Amount in words நான் forumula பயன்படுத்தி இருக்கிறேன்.நீங்கள் ரூபாயை எழுத்துக்களால் டைப் செய்தும் கொள்ளலாம்
பலருக்கும் உதவலாம்... நல்ல விளக்கத்துடன் கூறி உள்ளீர்கள்...
பதிலளிநீக்குநன்றி...
நன்றி தனபாலன் சார்
நீக்குஐயா...
பதிலளிநீக்குஉதவிகரமான தகவல்... அழகான விளக்கக் குறிப்புடன் படங்களும் இணைத்து பதிவிட்டமைக்கு நன்றி.
நன்றி குமார்
நீக்குநல்லதொருதகவலை விளக்கமாக பகிர்ந்தமைக்கு நன்றி! வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குஇணையத்தின் மூலமே பெரும்பாலான செலவுகள் செய்து விடும் தற்போதைய நாட்களில் காசோலை பழக்கம் குறைந்து வருகிறது.
பதிலளிநீக்குகாசோலை அதிகம் பயன்படுத்துவர்களுக்கு பலன் தரும் பகிர்வு.....
பயனுள்ள பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.!
பதிலளிநீக்கு
பதிலளிநீக்குவலைத்தளத்தின் "கம்பியூட்டர் புரொபஷர்" முரளி அவர்களே உங்களின் பதிவு பயனுள்ள பதிவு வாழ்த்துக்கள் இது போல பதிவுகளை தொடர்ந்து இடுங்கள் தமிழில் படிப்பவர்களுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும்
நல்ல தகவல், அதிக அளவில் காசோலை பயன்படுத்துவோருக்கு இது மிக உதவியாக இருக்கும், நாமும் முயற்சி செய்து பார்க்கலாம், இன்ட்ரஸ்டிங் ஆக இருக்கும் நன்றி.
பதிலளிநீக்குநல்ல தகவல்,
பதிலளிநீக்குVetha.Elangathilakam
பலருக்கு உதவும் தகவல் அய்யா...
பதிலளிநீக்குஆனால், எழுத்துகள் பெரியதும் சிறியதுமாய் படிக்க சிரமமாய் உள்ளது... வரும் பதிவுகளில் ஒரே சீராய் எழுதுங்கள் அய்யா...
நன்றி வணக்கம்..
அப்படியா? எனது கணினியில் அனைத்தும் ஒரே அளவாக சரியாகத்தானே தெரிகிறது, என்னவென்று பார்க்கிறேன். வேறு பிரவுசரில் செக் செய்து பார்க்கிறேன். தகவலுக்கும் வருகைக்கும் நன்றி
நீக்குத.ம: 3
பதிலளிநீக்குபயனுள்ள தகவல். ஆனால் இதை வங்கிகள் ஏற்றுக் கொள்கின்றனவா?
பதிலளிநீக்குநாம எப்பவாவது ஒருக்காதான் செக் யூஸ் பண்ணுறோம் அதனாலே கையாலே எழுதிட்டுப் போறது.
பதிலளிநீக்குஇருந்தாலும் கம்பெனிகளுக்கு இது மிகவும் பிரயோஜனமானது மிக்க நன்றி...!
நமக்குப் புரியாத விஷயம். அதனால் 'உள்ளேன் ஐயா' சொல்லிவிட்டு நடையைக் கட்டுகிறேன்.
பதிலளிநீக்குயாராவது கேட்டால் சொல்லலாம் என்று குறித்து வைத்துக் கொண்டிருக்கிறேன்.
நன்றி!
பயனுள்ள தகவல்கள் அய்யா.நன்றி
பதிலளிநீக்கு