என்னை கவனிப்பவர்கள்

திருவிளையாடல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திருவிளையாடல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 25 ஜூலை, 2013

மீண்டும் திருவிளையாடல்



                மீண்டும் போட்டி  வைத்தார் 
                சிவபெருமான் 
                உலகை சுற்றிவர 

                அம்மை அப்பனை சுற்றி வரும் 
                அழுகுணி ஆட்டம் கூடாது 
                அழுத்தி சொன்னார் முருகன் 

                 சம்மதித்தார்  சிவபெருமான்.

                 இம்முறை   தோற்கக்  கூடாது;
                 முடிவுடன் விமானம் ஏறி விரைந்தார்
                 வேலன் .

                  மவுசுடனேயே இருக்கும்
                  புத்திசாலிப் பிள்ளையார் 
                  கணினி முன் அமர்ந்தார்
                  சொடுக்கினார் மவுசை
                  அழைத்தார் கூகுளை
                  வலம் வந்தார் பூமியை 
                  நொடியிலே முடிந்தது
                  பழம்  கிடைத்தது 
                  கணினி கைகொடுத்தது 

                  மீண்டும் திருவிளையாடல் 

*********************************************************

எச்சரிக்கை:எனது கணினி அனுபவம் இன்று மாலை அல்லது நாளை