என்னை கவனிப்பவர்கள்

சனி, 20 அக்டோபர், 2012

வள்ளுவர் மன்னிப்பாரா?


   திருக்குறள் பலரைப் போலவே என்னையும் கவர்ந்த நூல். அதன் சுருக்கமான வடிவம், குறள்  வெண்பாவின் ஓசை நயம் எனக்குப் பிடித்தமான ஒன்று.அந்தப் பாதிப்பின் விளைவாக அவ்வப்போது குறள்  வடிவில் எதையாவது கிறுக்குவது உண்டு. அப்படிக் கிறுக்கியதில் ஒன்று இதோ.(வள்ளுவரும் புலவர்களும் மன்னிப்பாராக)


                  கணினி யுகக் காதல் குறள்

           1. மின்னஞ்சல் விரைவென்று சொல்லிடு வாருந்தன்
             கண்ணஞ்சல் காணா  தவர்

           2. வன்பொருளாம்  வஞ்சியர் இதயம் அதைஇயக்க
             மென்பொருள் தேவை அறி

           3. முகநூலில் காட்டிவிடு  முகமே! எழுதுவேன்
             அகநூலில் ஆயிரம் பா

           4. ரயில் அனுப்ப முடியாது தூதாய்  
             மெயிலனுப்பி வைப்பேன் படி

           5. பதிவெழுதி வைத்தேன் உன்நினைவை  பாட்டாய்
             எதுவெழுதி  என்ன பயன்.

           6. என்பெயரை உள்ளிட்டேன் ஆனாலும் என்கணினி
             உன்பெயரை  காட்டுதே ஏன்?

           7. மடிக்கணினி போலே அமர்ந்திடுவாய் என்மேல்
             இயக்கிடுவேன் இஷ்டம்போல் இனி

           8. கண்ணோட்டம் சொல்லுமாம் காதல்; முதலில் 
              பின்னூட்டம்  இட்டுவை இன்று.

           9.. மின்வெட்டு வாட்டியதை நான்மறந்தேன் எப்போதோ 
              கண்வெட்டு காட்டியதால் நீ 

          10 கைபேசி துணையோடு காத்திருந்தேன் மாலைவரை
              மெய்பேச ஏன்மறந்தாய் சொல்


 (சீர் தளை ன்னு இலக்கணம்லாம் பாக்காதீங்க பாஸ். படிச்சிட்டு மறந்துடுங்க!)

 




35 கருத்துகள்:

  1. இரண்டிரண்டு வரிகளில் ஒரு கவிதை! நன்றாக இருக்கிறது!

    பதிலளிநீக்கு
  2. தேடினேன் தேடியும் கிட்டவில்லை உங்களை
    வாழ்த்திட ஒற்றை சொல்.

    காதல் குரல்...
    பின்னீட்டீங்க சார் புது யுக வள்ளுவரோ !

    பதிலளிநீக்கு
  3. நல்ல முயற்சி நண்பரே.. அழகான வரிகள்... நவீன திருக்குறளோ..?

    பதிலளிநீக்கு
  4. அடேயப்பா மின்வெட்டுக்கும் சேர்த்தா ?
    நன்றாக இருக்குதௌ சார்..

    பதிலளிநீக்கு
  5. திருவள்ளுவர் மன்னிச்சுடுவார்..ஆனால் நான்?

    உங்க நல்ல நேரம் என் நண்பராகிட்டீங்க!:-)))

    கணிணி உலக காதலர்கள் எல்லாம் ஆங்கிலத்தில்தானே "லவ்வு-லாங்குவேஜ்" பேசுவாங்க.

    அடுத்து ஆங்கிலத்தில் குறள் எழுத முயலுங்க! :)

    பதிலளிநீக்கு
  6. வள்ளுவர் நிச்சயம் கோபித்துக் கொள்ளமாட்டார்
    கருத்தும் வார்த்தைப் பிரயோகங்களும் அருமை
    வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  7. வெறும் 10 தான் இருக்கு, மீதி 1320 எங்கே?

    பதிலளிநீக்கு
  8. ஓசை தடங்கல் இல்லாம இருந்தா, சீர் தளை தப்பில்லாம அமைஞ்சுடும்.

    எல்லாம் சரியாவே இருக்கு.

    காதல் குறள்கள் அருமை!

    கலக்குங்க!

    ‘பளிச்’னு அத்தனை அழகா இருக்கே! அந்தப் பொண்ணு யாரு?

    எனக்கு சினிமா நடிகைகளையே தெரியாது!

    பதிலளிநீக்கு
  9. ‘சீர் தளை ன்னு இலக்கணம்லாம் பாக்காதீங்க. படிச்சிட்டு மறந்துடுங்க.’ என்று நீங்கள் சொன்னாலும் நான் இலக்கணத்தை பார்க்காமல் தங்களின் கவிதையைப் படித்தேன். மறக்க இயலவில்லை. வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  10. //மின்வெட்டு வாட்டியதை நான்மறந்தேன் எப்போதோ
    கண்வெட்டு காட்டியதால் நீ//

    //கைபேசி துணையோடு காத்திருந்தேன் மாலைவரை
    மெய்பேச ஏன்மறந்தாய் சொல்//

    காதல்ரசம் வெள்ளமாய் ஓடுகிறதே!

    பதிலளிநீக்கு
  11. அட!

    நல்லாயிருக்கு நண்பரே..
    அதிலும்..

    . வன்பொருளாம் வஞ்சியர் இதயம் அதைஇயக்க
    மென்பொருள் தேவை அறி

    என்ற குறள் மிகவும் அருமை.

    பதிலளிநீக்கு
  12. ஆஹா நல்லத்தான் இருக்கு தோழரே

    பதிலளிநீக்கு
  13. அழகான முயற்சி!

    மிகவும் அருமை!!

    பதிலளிநீக்கு
  14. தி.தமிழ் இளங்கோ said...
    இரண்டிரண்டு வரிகளில் ஒரு கவிதை! நன்றாக இருக்கிறது!//
    நன்றி தமிழ் இளங்கோ சார்!

    பதிலளிநீக்கு
  15. //திண்டுக்கல் தனபாலன் said...
    கலக்குங்க...//
    நன்றி தனபாலன் சார்!

    பதிலளிநீக்கு
  16. //விஜயன் said...
    தேடினேன் தேடியும் கிட்டவில்லை உங்களை
    வாழ்த்திட ஒற்றை சொல்.
    காதல் குரல்...
    பின்னீட்டீங்க சார் புது யுக வள்ளுவரோ !//
    குரல் வடிவில் கருத்து அருமை. நன்றி விஜயன்.

    பதிலளிநீக்கு
  17. அகல் said...
    நல்ல முயற்சி நண்பரே.. அழகான வரிகள்... நவீன திருக்குறளோ..?//
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அகல்

    பதிலளிநீக்கு
  18. சிட்டுக்குருவி said...
    அடேயப்பா மின்வெட்டுக்கும் சேர்த்தா ?
    நன்றாக இருக்குதௌ சார்..//
    வருகைக்கு நன்றி சிட்டுக் குருவி

    பதிலளிநீக்கு
  19. Ramani said...
    வள்ளுவர் நிச்சயம் கோபித்துக் கொள்ளமாட்டார்
    கருத்தும் வார்த்தைப் பிரயோகங்களும் அருமை
    வாழ்த்துக்கள்//
    நன்றி.ரமணி சார்!

    பதிலளிநீக்கு
  20. Kathir Rath said...
    வெறும் 10 தான் இருக்கு, மீதி 1320 எங்கே?//
    ஏற்கனவே 20 எழுதி இருக்கேன் கதிர்.மொத்தம் 30
    இன்னும் 1300 தான் இருக்கு. ஹிஹி

    பதிலளிநீக்கு
  21. வருண் said...
    திருவள்ளுவர் மன்னிச்சுடுவார்..ஆனால் நான்?
    உங்க நல்ல நேரம் என் நண்பராகிட்டீங்க!:-)))//
    ஹையா... தப்பிச்சிட்டேன்.நன்றி.வருண்

    பதிலளிநீக்கு
  22. அறுவை மருத்துவன் said...

    // ஓசை தடங்கல் இல்லாம இருந்தா, சீர் தளை தப்பில்லாம அமைஞ்சுடும்.
    எல்லாம் சரியாவே இருக்கு.
    காதல் குறள்கள் அருமை!
    கலக்குங்க!
    ‘பளிச்’னு அத்தனை அழகா இருக்கே! அந்தப் பொண்ணு யாரு?
    எனக்கு சினிமா நடிகைகளையே தெரியாது!//
    உண்மைதான் அருவைமருத்துவரே!பாப்பா யாருன்னு தெரியாதுன்னு சொல்றதுதான் நம்ப முடியல
    நன்றி

    பதிலளிநீக்கு
  23. வே.நடனசபாபதி said...
    ‘சீர் தளை ன்னு இலக்கணம்லாம் பாக்காதீங்க. படிச்சிட்டு மறந்துடுங்க.’ என்று நீங்கள் சொன்னாலும் நான் இலக்கணத்தை பார்க்காமல் தங்களின் கவிதையைப் படித்தேன். மறக்க இயலவில்லை. வாழ்த்துக்கள்!//
    நன்றி சார்!

    பதிலளிநீக்கு
  24. வே.சுப்ரமணியன். said...
    காதல்ரசம் வெள்ளமாய் ஓடுகிறதே!//
    நன்றி சுப்பிரமணியன்.

    பதிலளிநீக்கு
  25. வெங்கட் நாகராஜ் said...
    :)) ரசித்தேன்.//
    நன்றி நாகராஜ் சார்!

    பதிலளிநீக்கு
  26. முனைவர்.இரா.குணசீலன் said...
    அட!
    நல்லாயிருக்கு நண்பரே..
    அதிலும்..
    . வன்பொருளாம் வஞ்சியர் இதயம் அதைஇயக்க
    மென்பொருள் தேவை அறி
    என்ற குறள் மிகவும் அருமை.//
    நன்றி முனைவர் சார்!

    பதிலளிநீக்கு
  27. //செய்தாலி said...
    ஆஹா நல்லத்தான் இருக்கு தோழரே//
    நன்றி நண்பரே!

    பதிலளிநீக்கு
  28. //kari kalan said...
    அழகான முயற்சி!
    மிகவும் அருமை!!//
    நன்றி கரிகாலன்.

    பதிலளிநீக்கு
  29. படிச்சிட்டு மறந்துடுங்க....படித்தேன் ஆனால் மறப்பது கடினம் ....நல்ல காதல் குரல்கள் ..குறள்கள்

    பதிலளிநீக்கு

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895