என்னை கவனிப்பவர்கள்

புதன், 17 அக்டோபர், 2012

மனிதரைத் தவிர மற்ற பிறப்புகள் சுத்தம்-பாலகுமாரன்.

  
 கரையோர முதலைகள் பால குமாரனின் புகழ் பெற்ற நாவல்.இதில் நாயகி ஸ்வப்னா மற்றும் நாயகி தியாகு தவிர கவிதைக்காகவே படைக்கப் பட்டது இன்னொரு கதா பாத்திரம் ராமநாதன். இந்தப் பாத்திரத்தின் வாயிலாக பாலகுமாரன் மூன்று  கவிதைகள் படைத்திருக்கிறார். மூன்றுமே முதலைகள் பற்றியவை.முதலையின் குணங்களை கவனித்து மனித வாழ்க்கையோடு தொடர்பு படுத்தி எழுதப் பட்டவை. நன்கு கவனித்தால் கதைக்கும் கவிதைக்கும்  உள்ள தொடர்பை அறியலாம்.இரும்புக் குதிரைகளில் குதிரைகளை கவியாராய்ச்சி செய்த பால குமாரன் இந்தக் கவிதைகளில் முதலைகளைப் பற்றி சுவாரசியமான தகவல்களை தெரிவிக்கிறார்.

  வாயைத் திறந்து வைத்திருக்கும் முதலையின் வாய்க்குள் பறவைகள் நுழைந்து அதன் பல்லிடுக்கில் மாட்டி துன்பம் தந்து  கொண்டிருக்கும் மாமிச மிச்சங்களை கொத்தித் தின்னும். முதலையோ சட்டென்று வாயைமூடி பறவைகளை கொன்று தின்பதில்லை. தனக்கு உதவிய பறவைக்கு துன்பம் விளைவிப்பதில்லை 
இதை அழகாக வெளிப்படுத்தும் பாலகுமாரன் கவிதை

  முதலை கவிதைகள் 1.

                    கரையோரம்  முகவாய் வைத்து 
                    கதவுபோல் வாயைப் பிளந்து 
                    பல்லிடுக்கில் அழுகிப் போகும் 
                    மாமிச எச்சம் கொத்த 
                    பறவைக்குக் காத்திருக்கும்
                    முதலைகள் சோகத்தோடு;
                    பறவையும் மாமிசம் தானே?
                    பட்டுப்போல்  வாசனைதானே ?
                    முதலைகள் தர்மம் மாறா 
                    ஞானிகள் எந்த நாளும் 
                    வஞ்சனை இல்லாப் பிறவி
                    மனிதருள் மாமிச எச்சம் 
                    குப்பையாய்க் கிடந்தபோதும்
                    ஒரு நாளும் வாயைத் திறவார்
                    உள்ளதை வெளியே சொல்லார் 
                    சுத்தத்தை விரும்பும் உயிர்கள் 
                    தர்மத்தைக் கட்டிக் காக்கும் 
                    மனிதரைத் தவிர இங்கே 
                    அத்தனை பிறப்பும் சுத்தம் 

                                               (தொடரும்) 
*****************************************************************************************


  இதைப் படித்தீர்களா?
பாலகுமாரனின் கவிதைகள்!l
பாலகுமாரனின் இரும்பு குதிரைகள்-நிறைவுக் கவிதை
                         ***********************
 

43 கருத்துகள்:

  1. முதலைகளின் தர்மம் தெரிந்துதான் பறவைகள் முதலையை நெருங்குகின்றன.

    நம்மைக்கண்டால், சிறகடிக்கும் சத்தம்தான் கேட்கும். பறவை காணாமல் போய்விடும். இது நமது "தர்மம்" தெரிந்து பறவை நம்மை "நெருங்கி" வருவது!

    அருமையான படைப்பு!

    பதிலளிநீக்கு
  2. நல்ல கவிதை. இந்த கதையும் முன்பே படித்து ரசித்த ஒன்று.

    பதிலளிநீக்கு
  3. மனிதன் தவிர அத்தனை பிறப்பும் சுத்தம்

    பதிலளிநீக்கு
  4. அர்த்தமுள்ள வரிகள் தொடருங்கள்.

    பதிலளிநீக்கு
  5. அற்புத படைப்பு .. முதலையின் செய்கைகள் நம்மை சிந்திக்க வைக்கிறது

    பதிலளிநீக்கு
  6. முன்பே படித்திருந்தாலும் அதன் பொருளும் செய்தியும் என்றும் உணரத் தகுந்த ஒரு கவிதையை மீண்டும் நினைவூட்டியமைக்கு நன்றிகள் முரளி!

    பதிலளிநீக்கு
  7. மனிதரைத் தவிர இங்கே
    அத்தனை பிறப்பும் சுத்தம்

    அருமையான வரிகள் ....இதுபோன்ற சிறப்பான பதிவுகள் தரும் உம்மை எப்படி பாராட்டுவது எனக்கு தெரியவில்லை

    பதிலளிநீக்கு
  8. அருமையான கவிதை...

    நன்றி,
    மலர்
    http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

    பதிலளிநீக்கு
  9. உங்களின் பதிவைப் படித்ததும் பால குமாரரைத் தேடத் துாண்டுகிறது.
    நன்றி முரளிதரன் ஐயா.

    பதிலளிநீக்கு
  10. ஏதோ ஒரு விலங்கு (தோண்டி எடுக்கனும்) , காமம் ததும்பி இருக்கும்போது பெண்விலங்கின் சிறுநீரை குடிக்கும்னு ஒரு "செமினார்"ல படம், வீடியோலாம் போட்டுக்காட்டிச் சொன்னாங்க! :)

    பதிலளிநீக்கு
  11. நீங்க விலங்குகள் சுத்தம் பத்தி பேசினதும் ஞாபகம் வந்துச்சு. :)

    பதிலளிநீக்கு
  12. கரையோர முதலைகள் --அருமையான பகிர்வுகள்!

    பதிலளிநீக்கு
  13. அருமையாக சொல்லியிருக்கிறார் சார்...
    அர்த்தமுள்ளது

    பதிலளிநீக்கு
  14. முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி DD சார்!

    பதிலளிநீக்கு
  15. //வே.சுப்ரமணியன். said...
    முதலைகளின் தர்மம் தெரிந்துதான் பறவைகள் முதலையை நெருங்குகின்றன.
    நம்மைக்கண்டால், சிறகடிக்கும் சத்தம்தான் கேட்கும். பறவை காணாமல் போய்விடும். இது நமது "தர்மம்" தெரிந்து பறவை நம்மை "நெருங்கி" வருவது!
    அருமையான படைப்பு!//

    வருக சுப்பிரமணியன்..நீண்ட நாட்கள் ஆயிற்று.

    பதிலளிநீக்கு
  16. வெங்கட் நாகராஜ் said...
    நல்ல கவிதை. இந்த கதையும் முன்பே படித்து ரசித்த ஒன்று.//
    நன்றி வெங்கட்.

    பதிலளிநீக்கு
  17. //சீனு said...
    மனிதன் தவிர அத்தனை பிறப்பும் சுத்தம்//
    நன்றி சீனு.

    பதிலளிநீக்கு
  18. //Sasi Kala said...
    அர்த்தமுள்ள வரிகள் தொடருங்கள்.//
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சசிகலா

    பதிலளிநீக்கு
  19. அரசன் சே said...
    அற்புத படைப்பு .. முதலையின் செய்கைகள் நம்மை சிந்திக்க வைக்கிறது//
    நன்றி அரசன்

    பதிலளிநீக்கு
  20. வேங்கட ஸ்ரீநிவாசன் said...
    முன்பே படித்திருந்தாலும் அதன் பொருளும் செய்தியும் என்றும் உணரத் தகுந்த ஒரு கவிதையை மீண்டும் நினைவூட்டியமைக்கு நன்றிகள் முரளி!//
    நன்றி வேங்கட ஸ்ரீநிவாசன்.

    பதிலளிநீக்கு
  21. PARITHI MUTHURASAN said...
    மனிதரைத் தவிர இங்கே
    அத்தனை பிறப்பும் சுத்தம்
    அருமையான வரிகள் ....இதுபோன்ற சிறப்பான பதிவுகள் தரும் உம்மை எப்படி பாராட்டுவது எனக்கு தெரியவில்லை//
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பார்த்தி

    பதிலளிநீக்கு
  22. //பழனி.கந்தசாமி said...
    ரசித்தேன்.//
    நன்றி கந்தசாமி சார்!

    பதிலளிநீக்கு
  23. அருணா செல்வம் said...
    உங்களின் பதிவைப் படித்ததும் பால குமாரரைத் தேடத் துாண்டுகிறது.
    நன்றி முரளிதரன் ஐயா.//
    நன்றி அருணா செல்வம்

    பதிலளிநீக்கு
  24. //குட்டன் said...
    அருமையான பகிர்வுக்கு நன்றி//
    நன்றி குட்டன்

    பதிலளிநீக்கு
  25. //இராஜராஜேஸ்வரி said...
    கரையோர முதலைகள் --அருமையான பகிர்வுகள்!//
    நன்றி சகோதரி!

    பதிலளிநீக்கு
  26. சிட்டுக்குருவி said...
    அருமையாக சொல்லியிருக்கிறார் சார்...
    அர்த்தமுள்ளது//
    நன்றி சிட்டுக் குருவி

    பதிலளிநீக்கு
  27. சரி, மனச்சுத்தம் பத்தி பேசுவோம்.

    * குயில் தன் குஞ்சுகளை காக்கையின் கூட்டில் முட்டையிட்டு "தன் கடமையை" இன்னொரு அப்பாவியை ஏமாற்றி வளர்க்க வைக்கிது.

    * சிங்கம் இன்னொரு குடும்பத் தலைவனை (சிங்கத்தை) கொன்றுவிட்டு, அந்த சிங்கத்தின் "மனைவியை" தன் மனைவியாக்குவதுடன், அந்த மனைவியின் குழந்தைகளை எல்லாமே இரக்கமில்லாமல் கொன்னுவிடுகிறது.

    எங்கே இருக்குங்க இந்த விலங்குகளிடம் மனச்சுத்தம்???

    பதிலளிநீக்கு
  28. அவரது ஆரம்ப கால படைப்புகளுக்கு நான் அடிமை..

    அவர் தாடி நீளம் அதிகம் ஆக ஆக என்னை விட்டு தொலை தூரம் சென்றுவிட்டார்...

    இருந்தும் ஆரம்ப கால படைப்புகளை எத்தனை முறையும் வாசிக்கலாம்...

    நன்றி நண்பரே...

    பதிலளிநீக்கு
  29. பாலக்குமாரன் நாவல் படிப்பதே ஒரு தனி சுகமே/

    பதிலளிநீக்கு

  30. இயல்பான கவிதை! உள்ளதை உள்ளவாறே உரைப்பது! நன்று

    பதிலளிநீக்கு
  31. பகிர்வுக்கு நன்றி.இது போன்று பல மிருகங்கள் பற்றிய நான் எழுதிய விடயங்கள் கீழே தரப்பட்ட லிங்கில் இருக்கின்றது படித்துப் பாருங்கள் . ஒரு அறிவித்தலுக்கு மாத்திரம்





    http://kowsy2010.blogspot.de/2010/10/blog-post_12.html

    பதிலளிநீக்கு
  32. //ரெவெரி said...
    அவரது ஆரம்ப கால படைப்புகளுக்கு நான் அடிமை..
    அவர் தாடி நீளம் அதிகம் ஆக ஆக என்னை விட்டு தொலை தூரம் சென்றுவிட்டார்...
    இருந்தும் ஆரம்ப கால படைப்புகளை எத்தனை முறையும் வாசிக்கலாம்...
    நன்றி நண்பரே...//

    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ரெவரி

    பதிலளிநீக்கு
  33. விமலன் said...
    பாலக்குமாரன் நாவல் படிப்பதே ஒரு தனி சுகமே///

    உண்மைதான் விமலன் சார்!

    பதிலளிநீக்கு
  34. புலவர் சா இராமாநுசம் said...
    இயல்பான கவிதை! உள்ளதை உள்ளவாறே உரைப்பது! நன்று/
    ஆம் ஐயா தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  35. சந்திரகௌரி said...
    பகிர்வுக்கு நன்றி.இது போன்று பல மிருகங்கள் பற்றிய நான் எழுதிய விடயங்கள் கீழே தரப்பட்ட லிங்கில் இருக்கின்றது படித்துப் பாருங்கள் . ஒரு அறிவித்தலுக்கு மாத்திரம் //
    தங்கள் பதிவைப் படித்தேன். அருமை மேடம்

    பதிலளிநீக்கு
  36. கதையை படிக்கத் தூண்டுகிறது
    தங்கள் பதிவும் கவிதையும்
    பகிர்வுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  37. பாலக்குமாரன் முதலை கவிதை படித்தநினவு இல்லை, பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895