என்னை கவனிப்பவர்கள்

கரையோர முதலைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கரையோர முதலைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 10 டிசம்பர், 2012

மனிதன் எந்த வகை?



  மனிதர்கள் முதலைகுணம்  கொண்டவர்களா? சிலர் அதன் குணம் கொண்டவர்கள் என்கிறார் பாலகுமாரன் தனது கரையோர முதலைகளில்.
      சீ! சீ! இந்தப் பழம் புளிக்கும் என்று எண்ணும் நரி குணம் உடையவர்கள் சிலர். ஓடி ஓடி களைத்து மானைப் பிடிக்க முடியாத புலி போல் சிலபேர்.கிடைத்தவரை தின்னும் ஆடு போல் சில பேர்.இப்படிப் பலவகைகளில் மனிதர்கள். ஆனால் முதலைகள் வித்தியாசமானவை

இதோ கரையோர முதலைகளில் ராமநாதன் என்ற பாத்திரத்தின் வாயிலாக பாலகுமாரன் படைத்த முதலைக் கவிதை

                      முதலைக்  கவிதை-பகுதி 3

                     புலிகளைப் போல முதலை 
                     மான்களை துரத்திப் போகா!
                     காக்கைகளைப் போலஎச்சில் 
                     இலைகளை நோட்டம் போடா;
                     எலிகளோ, ஈசல் கொல்லும்
                     பல்லியோ அல்ல முதலை;
                     கழுத்துவரை நீரில் அமர்ந்து 

                     கரையோரம் பார்த்திருக்கும்;
                     வேட்டைக்கு எறும்பு போகும்
                     புல்வெளியில் ஆடு மேயும் 
                     உலகத்து உயிர்கள் எல்லாம்
                     உணவுக்கு பேயாய் பறக்க 
                     வீட்டினில் இரையைத் தேடி 
                     ஏங்குவது முதலை மட்டும்;
                     ஒரு இலை விழுந்தால் கூட
                     முதலையின் முதுகு சிலிர்க்கும்;
                     ஒரு சுள்ளி முறிந்தால் போதும்
                     முதலையின் முகவாய் நிமிரும்;
                     ஒரு முறை சிக்கினாலும் 
                     உயிர் கொல்லும் போராட்டம்;
                     சக்கரம் அறுத்த போதும் 
                     முதலைகள் பிடியைத் தளர்த்தா;
                     ஒரு அதிசயக்  குழந்தை கேட்க 
                     முதன் முதலாய் முதலை விட்டது
                     பின் மனிதரை வளர்த்ததெல்லாம்
                     நீர் முதலை வழங்கிய வேதம்!

**************************************************************************************************************
இதைப் படித்தீர்களா?
மனிதரைத் தவிர மற்ற பிறப்புகள் சுத்தம்-பாலகுமாரன்.  
பாலகுமாரனின் முதலைக் கவிதைகள்-பகுதி 2   பாலகுமாரனின் கவிதைகள்!l
பாலகுமாரனின் இரும்பு குதிரைகள்-நிறைவுக் கவிதை

*************************************************************************************

புதன், 17 அக்டோபர், 2012

மனிதரைத் தவிர மற்ற பிறப்புகள் சுத்தம்-பாலகுமாரன்.

  
 கரையோர முதலைகள் பால குமாரனின் புகழ் பெற்ற நாவல்.இதில் நாயகி ஸ்வப்னா மற்றும் நாயகி தியாகு தவிர கவிதைக்காகவே படைக்கப் பட்டது இன்னொரு கதா பாத்திரம் ராமநாதன். இந்தப் பாத்திரத்தின் வாயிலாக பாலகுமாரன் மூன்று  கவிதைகள் படைத்திருக்கிறார். மூன்றுமே முதலைகள் பற்றியவை.முதலையின் குணங்களை கவனித்து மனித வாழ்க்கையோடு தொடர்பு படுத்தி எழுதப் பட்டவை. நன்கு கவனித்தால் கதைக்கும் கவிதைக்கும்  உள்ள தொடர்பை அறியலாம்.இரும்புக் குதிரைகளில் குதிரைகளை கவியாராய்ச்சி செய்த பால குமாரன் இந்தக் கவிதைகளில் முதலைகளைப் பற்றி சுவாரசியமான தகவல்களை தெரிவிக்கிறார்.

  வாயைத் திறந்து வைத்திருக்கும் முதலையின் வாய்க்குள் பறவைகள் நுழைந்து அதன் பல்லிடுக்கில் மாட்டி துன்பம் தந்து  கொண்டிருக்கும் மாமிச மிச்சங்களை கொத்தித் தின்னும். முதலையோ சட்டென்று வாயைமூடி பறவைகளை கொன்று தின்பதில்லை. தனக்கு உதவிய பறவைக்கு துன்பம் விளைவிப்பதில்லை 
இதை அழகாக வெளிப்படுத்தும் பாலகுமாரன் கவிதை

  முதலை கவிதைகள் 1.

                    கரையோரம்  முகவாய் வைத்து 
                    கதவுபோல் வாயைப் பிளந்து 
                    பல்லிடுக்கில் அழுகிப் போகும் 
                    மாமிச எச்சம் கொத்த 
                    பறவைக்குக் காத்திருக்கும்
                    முதலைகள் சோகத்தோடு;
                    பறவையும் மாமிசம் தானே?
                    பட்டுப்போல்  வாசனைதானே ?
                    முதலைகள் தர்மம் மாறா 
                    ஞானிகள் எந்த நாளும் 
                    வஞ்சனை இல்லாப் பிறவி
                    மனிதருள் மாமிச எச்சம் 
                    குப்பையாய்க் கிடந்தபோதும்
                    ஒரு நாளும் வாயைத் திறவார்
                    உள்ளதை வெளியே சொல்லார் 
                    சுத்தத்தை விரும்பும் உயிர்கள் 
                    தர்மத்தைக் கட்டிக் காக்கும் 
                    மனிதரைத் தவிர இங்கே 
                    அத்தனை பிறப்பும் சுத்தம் 

                                               (தொடரும்) 
*****************************************************************************************


  இதைப் படித்தீர்களா?
பாலகுமாரனின் கவிதைகள்!l
பாலகுமாரனின் இரும்பு குதிரைகள்-நிறைவுக் கவிதை
                         ***********************