என்னை கவனிப்பவர்கள்

திங்கள், 1 அக்டோபர், 2012

விண்டோஸ் 7 ன் பயனுள்ள டூல்

    
   கணினி பற்றி எழுத வல்லுநர் பலர் இருக்கிறார்கள் என்றபோதும் ஒரு கடை நிலைப் பயனாளனாக நான் கணினியில் பயன்படுத்திப் பயன் பெற்றவற்றை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். அது என்னைப்போல் உள்ளவர்களுக்கு உதவும் என்று நம்புகிறேன். 

   விரைவில் விண்டோஸ் 8 வர இருக்கிறது.ஆனாலும் விண்டோஸ்  எக்ஸ்பி இன் ஆதிக்கத்திலிருந்து இப்போதுதான் மெல்ல விடுபட்டு  விண்டோஸ் 7 பயன்படுத்துபவர்கள் அதிகரித்துள்ளனர். விண்டோஸ் 7, XP யை விட மேம்பட்டது. பல வசதிகளை உள்ளடக்கியதாக விண்டோஸ் 7 உள்ளது அவற்றில் ஒன்று  Snipping  Tool. 
    அதை பற்றி சொல்வதற்கு முன்னர் ஒரு அழகான ஷார்ட் கட் கீ பற்றி சொல்ல ஆசைப்படுகிறேன்.
    நீங்கள் நிறைய விண்டோஸ்  திறந்து வைத்திருக்கிறீர்களா?
கீபோர்டில் "விண்டோஸ் + டேப்" கீயை அழுத்தி பாருங்கள். என்ன நடக்கிறது. இந்தப் பதிவின் கடைசியில் பாருங்கள்.
                           ************
   திரையை படம் பிடிக்க (ஸ்க்ரீன் ஷாட் ) பிரிண்ட் ஸ்க்ரீன் கீயைப் பயன் படுத்தி அதை பெயின்ட்டில் ஒட்டி படமாக சேமித்து பயன்படுத்துவது வழக்கம் .அல்லது கேம் ஸ்டூடியோ போன்ற மென் பொருளை  பயன்படுத்துவோம்.

   ஆனால் இவை எதுவும் இன்றி  கணினித்திரை முழுவதையுமோ அல்லது ஒரு நாம் விரும்பிய பகுதியையோ தேர்தெடுத்து படமாக சேமிக்கும் வசதியை இயல்பு நிலையிலேயே விண்டோஸ் 7 கொடுத்துள்ளது.
விண்டோஸ் ஸ்டார்ட் கியை க்ளிக் செய்து All Programs-Accesseries -Snipping tool செல்லுங்கள்

படம் 1

படம் 2 

   வலது பக்க மூலையில் snipping tool   தெரிவதைக் காணலாம். இப்போது திரையின் எப்பகுதி வேண்டுமோ அப்பகுதியை மௌசின்  உதவியுடன் செவ்வக வடிவில் தேர்வு செய்தால் அப்பகுதி மட்டும் காட்சி தனியாக காட்சி அளிக்கும் சேவ் பட்டனை அழுத்தி படத்தை jpeg format  இல் சேமிக்கலாம்.

படம் 3

  சேமிக்கும் முன்  படத்தில் மார்க் செய்ய,  குறிப்பிட்ட இடத்தை ஹைலைட்  செய்ய பென்சில் மற்றும் ஹைலைட்டர்  வசதிகள் உண்டு.
வீடியோக்களையும் பாஸ் செய்து தேவையான காட்சியை  இந்த டூலின் மெல்லாம் சேமிக்கலாம்.

இதில் ஸ்க்ரீன் கேப்சர் செய்ய 4 ஆப்ஷன்கள்  உள்ளன,
New க்கு அருகிலுள்ள அம்புக் குறியை கிளிக் செய்தால் 

  • Free-form Snip.  (நம் விருப்பப்பட்ட வடிவத்தில் மவுசைக் கொண்டு தேர்வு செய்ய ).
  • Rectangular Snip.  (Drag செய்து செவ்வக வடிவில் தேர்ந்தெடுக்க ).
  • Window Snip. ( ஒரு குறிப்பிட்ட விண்டோவை படம் பிடிக்க ).
  • Full-screen Snip.  (முழு திரையையும் படம் பிடிக்க .)
    என்ற  வாய்ப்புகள் காணப்படும் எதை வேண்டுமோ அதை தேர்வு செய்து கொள்ளலாம். Option பட்டன்  இல் வேறு சில வசதிகளையும் தேர்வு செய்யலாம். 

      நான் பெரும்பாலும் எனது வலைபக்கப் படங்களுக்காண ஸ்க்ரீன் ஷாட் எடுக்க இந்த Tool தான்  பயன் படுத்துகிறேன். 
    நன்றி 
    ***************************************
      விண்டோஸ்+டேப்  கீயை அழுத்தினால் நாம் திறந்த விண்டோக்கள் அழகாக சீட்டுக் கட்டு அடுக்கியது போல் தெரிவதைக் காணலாம்.
  கட்டை விரலால் விண்டோஸ் கீயை அழுத்திப்பிடித்துக்கொண்டு டேப் கீயை இன்னொரு விரலால் விட்டு விட்டு அழுத்த அழகாக விண்டோக்கள்  முன்னே தோன்றுவதை பார்க்கலாம். எது வேண்டுமோ அதை தேர்வு செய்து கொள்ளலாம்.

       **********************************************
இதைப் படித்தீர்களா?



26 கருத்துகள்:

  1. மிகவும் பிரயோசனமாதுவும் அறியாத தகவலும் சார்
    பலருக்கு உதவும் + எனக்குக் கூட.....:)
    பகிர்வுக்கு மிக்க நன்றி சார்

    பதிலளிநீக்கு
  2. நல்ல பயனுள்ள தகவல்.
    கணினிப்பற்றி நிறைய தெரிந்து கொள்ள வேண்டி உள்ளது. என், மகன், மகளிடம் கற்றுக் கொண்டு வருகிறோம். இந்த பதிவை என் கணவரும் படித்தார். எங்களுக்கு புரிவது போல் எளிமையாக அழகாய் சொன்னீர்கள். நன்றி.

    பதிலளிநீக்கு
  3. ‘Snipping tool’ பற்றிய தகவலை தந்தமைக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  4. கணணி பற்றி அறியாதவர்களுக்கு உதவும் மிகப் பயனுள்ள பதிவு

    பதிலளிநீக்கு
  5. http://www.tamilinfoway.com
    புதிய செய்திகள், சுவாரசியமான தவல்கள், பொழுது போக்கு அம்சங்கள் ... இன்னும் நிறைய ....
    படிங்க படிங்க படிச்சிகிட்டே இருங்க ......

    பதிலளிநீக்கு
  6. புதிய தகவலை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி...

    பதிலளிநீக்கு
  7. நான் இன்னும் WINDOWS XP இல்தான் இருக்கிறேன். WINDOWS 7 ஐப் பற்றிய தகவலுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  8. ஸ்னிப்பர் டூலை வைத்து படங்களை எடிட் செய்ததுண்டு.மானிட்டரில் இருப்பதை இமேஜ் ஆக்கமுடியும் என்பதை இப்போது தான் தெரிந்துகொண்டேன்.பயனுள்ளதாய் இருக்கிறது. என் கணவர் உங்களுக்கு நன்றியை சொல்ல சொன்னார்.

    பதிலளிநீக்கு
  9. நல்ல தகவல். எனக்கு நிச்சயம் உதவும்
    நன்றி முரளிதரன் ஐயா.

    பதிலளிநீக்கு
  10. என்னோட கம்ப்யூட்டரும் விண்டோஸ் 7 தான். அதனால, இந்த பதிவு எனக்கு ரொம்ப யூஸ் ஆகும்னு நினைக்குறேன் சகோ. அதனால காப்பி பண்ணிக்குறேன்.

    பதிலளிநீக்கு
  11. நான் XP தான் பயன்படுத்துகிறேன்.
    பகிர்வுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  12. windows 8 release preview பயன்படுத்துறேன்.

    ஆனாலும், பதிவு போடுவதைத் தவிர வேறு எதிலும் ஈடுபாடு இல்லை.

    உங்களின் இந்தப் பதிவைப் படித்த பிறகு,வேறு வகையிலும் கணியைப் பயன்படுத்த வேண்டும் என்னும் ஆர்வம் பெருகியுள்ளது.

    நன்று நண்பரே.

    பதிலளிநீக்கு
  13. சிட்டுக்குருவி said...
    மிகவும் பிரயோசனமாதுவும் அறியாத தகவலும் சார்பலருக்கு உதவும் + எனக்குக் கூட.....:)
    பகிர்வுக்கு மிக்க நன்றி சார்//
    நன்றி சிட்டுகுருவி

    பதிலளிநீக்கு
  14. கோமதி அரசு said...
    நல்ல பயனுள்ள தகவல்.
    கணினிப்பற்றி நிறைய தெரிந்து கொள்ள வேண்டி உள்ளது. என், மகன், மகளிடம் கற்றுக் கொண்டு வருகிறோம். இந்த பதிவை என் கணவரும் படித்தார். எங்களுக்கு புரிவது போல் எளிமையாக அழகாய் சொன்னீர்கள். நன்றி.//
    மிக்க நன்றி கோமதி மேடம்.

    பதிலளிநீக்கு
  15. சு ராபின்சன் said...
    புதிய தமிழன் வலைதிரட்டி ( http://tamiln.org/ )//
    நன்றி ராபின்சன்

    பதிலளிநீக்கு
  16. வே.நடனசபாபதி said...
    ‘Snipping tool’ பற்றிய தகவலை தந்தமைக்கு நன்றி//
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்!

    பதிலளிநீக்கு
  17. Avargal Unmaigal said...
    கணணி பற்றி அறியாதவர்களுக்கு உதவும் மிகப் பயனுள்ள பதிவு//
    நன்றி மதுரைத் தமிழன்.

    பதிலளிநீக்கு
  18. திண்டுக்கல் தனபாலன் said...
    புதிய தகவலை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.//
    நன்றி தனபாலன் சார்!

    பதிலளிநீக்கு
  19. தி.தமிழ் இளங்கோ said...
    நான் இன்னும் WINDOWS XP இல்தான் இருக்கிறேன். WINDOWS 7 ஐப் பற்றிய தகவலுக்கு நன்றி//
    நன்றி தமிழ் இளங்கோ சார்!ஏழுக்கு மாறுங்கள்!

    பதிலளிநீக்கு
  20. //அரசன் சே said...
    நன்றிங்க சார் //...
    வருகைக்கு நன்றி அரசன்.

    பதிலளிநீக்கு
  21. அருணா செல்வம் said...
    நல்ல தகவல். எனக்கு நிச்சயம் உதவும்
    நன்றி முரளிதரன் ஐயா.//
    நன்றி அருணா

    பதிலளிநீக்கு
  22. ராஜி said...
    என்னோட கம்ப்யூட்டரும் விண்டோஸ் 7 தான். அதனால, இந்த பதிவு எனக்கு ரொம்ப யூஸ் ஆகும்னு நினைக்குறேன் சகோ. அதனால காப்பி பண்ணிக்குறேன்//
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி.

    பதிலளிநீக்கு
  23. குட்டன் said...
    நான் XP தான் பயன்படுத்துகிறேன்.
    பகிர்வுக்கு நன்றி//
    நன்றி குட்டன். விண்டோஸ் 7 க்கு மாறுங்கள்.

    பதிலளிநீக்கு
  24. அறுவை மருத்துவன் said...

    windows 8 release preview பயன்படுத்துறேன்.
    ஆனாலும், பதிவு போடுவதைத் தவிர வேறு எதிலும் ஈடுபாடு இல்லை.
    உங்களின் இந்தப் பதிவைப் படித்த பிறகு,வேறு வகையிலும் கணியைப் பயன்படுத்த வேண்டும் என்னும் ஆர்வம் பெருகியுள்ளது.
    நன்று நண்பரே.//

    நன்றி அறுவை மருத்துவன்.

    பதிலளிநீக்கு

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895