என்னை கவனிப்பவர்கள்

செவ்வாய், 2 அக்டோபர், 2012

காந்தியைப் பற்றி சுஜாதா


    இன்று மகாத்மா காந்தியின் பிறந்த நாள். உலகமே வியந்து போற்றும் அந்த மாமனிதரைப்பற்றி புதிய தலைமுறையினர்  சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்று தோன்றுகிறது. அல்லது புரிய வைக்கத் தவறி விட்டோம். அது எவ்வளவு அவசியமானது  என்பதை காலம் கடந்து உணரப் போகிறோம்.

  நவீன யுகத்தில் காந்தியின் கொள்கைகள் ஒத்துவருமா? இதோ எழுத்துலக  மன்னன்  சுஜாதா மகாத்மா காந்தியின் கிராமப் பொருளாதாரம் பற்றி என்ன கூறுகிறார் என்பதை   அவர் வார்த்தைகளிலேயே பார்க்கலாம். "
  சுஜாதா கூறுகிறார் "காந்தியின் கிராமப் பொருளாதாரம் இன்றைய உலகில் சாத்தியமா? யோசிப்போம்.
    காந்தி கிராமங்கள்  தன்னிறைவு பெற்றிருக்க வேண்டும் என்று  சொன்னார். கூடுமானவரை ஒரு கிராமத்துக்குத் தேவையான பொருள்கள் கிராமத்திலேயே உற்பத்தியாகி அங்கேயே பயன் படுத்த முடியும் என்று நம்பினார். அதற்காக ஏற்படும்  விஞ்ஞானத் தடைகளை நீக்க வேண்டும் என்றார். நகரத்தை சாராமல் கிராமம் இருக்க முடியுமா? அதுவும் இன்றைய நாளில் நகரத்தின் தாக்கம் கிராமத்துக்கு பல திசைகளிலிருந்து வருகிறது. விஞ்ஞான  வளர்ச்சி காரணமாக நகரத்தின் நுகர்வோர் கலாசாரம் கிராமத்துக்கு வந்து விடுகிறது. கிராமத்தின் பணம் நகரத்தில் செலவழிக்கப் படுகிறது.............
   கிராமத்தில் ஆரம்பத்தில் ஊறு காய்க்கு  மட்டும் இருந்த  சாஷே க்கள் இப்போது எல்லாப் பொருட்களுக்கும் வந்து கிராமத்திலும் இடம் பிடித்துவிட்டன.  இந்திய துணைக் கண்டத்தின் மிகப் பெரிய கண்டு  பிடிப்பு இந்த சாஷே தந்திரம்.ஊடகங்களும் தொழில் நுட்பமும் சேர்ந்து திட்டமிட்டு பணம் பிடுங்கும் தந்திரம். அதனால் காந்திஜி சொன்ன தன்னிறைவு வராமல் நகரத்தின் சார்பு அதிகமாகி கிராமங்கள் தங்கள் அடையாளங்களை  இழந்துவிடும் அபாயம் மிக உண்மையானது.

   இப்போதே டிவி சினிமா பாதிப்பால் கிராமத்து கலை வடிவங்கள் மெல்ல அழிந்து வருகின்றன.இந்தக் கலைகள் டிவி மூலம் புத்துயிர் பெறுகின்றன என்று நானும் ஆரம்பத்தில் நம்பினேன். சிந்தித்தால் அது நிகழ வில்லை என்பது தெளிவாகிறது...........

   குடியரசு தினவிழாவில் காட்டப்படும் கிராமிய நடனகள் சேட்டுப்  பெண்களும் ஐ .ஏ .எஸ்  மனைவிமார்களும் கொரியோகிராபி செய்தவை
நாட்டுபுறப் பாடல்கள் களையெடுப்பிலும் தாலாட்டிலும் பாடப்படாமல் அவை பாம்குரோவில் ரூம் போட்டு பாடப்படுகின்றன.இவ்வாறான கலாசாரத் தாக்கம் பொருளாதார முன்னேற்றத்திற்கு கொடுக்கும் விலை.
இத்தனையும் மீறி கிராமங்கள் தங்கள் அடையாளங்களை காப்பாற்றிக் கொள்ள முடியுமா?

      எத்தனையோ தாக்கங்களை சமாளித்தவை நம் இந்திய கிராமங்கள்.
1819இல் கிழக்கிந்தியக் கம்பனியின் ரகசிய கமிட்டி இவ்வாறு அறிவிக்கிறது ".....சிக்கலில்லாத சாதாரணமான இந்த முனிசிபல்  பஞ்சாயத்து அரசாங்கங்களில் பழங்கால முதலே மக்கள் வசித்து வருகிறார்கள். ராஜ்ஜியங்கள் சிதைக்கப் படுவதையோ பங்கு போட்டுக் கொள்ளப் படுவதையோ பற்றி அவர்கள் கவலைப்படுவதே இல்லை. கிராமத்துக்கு ஹானி ஒன்றும் ஏற்படாதவரை கிராமம் எந்த ராச்சியத்தில் சேர்க்கப் பட்டாலும் எந்த மன்னனுக்கு கட்டுப் பட்டிருக்க நேர்ந்தாலும் அவர்கள் கவலை கொள்வதில்லை. கிராமத்தின் பொருளாதார அமைப்பு கலையாமல் நிற்கிறது."

   காந்திஜி அகிம்சையை ஆதாரமாகக் கொண்ட பொருளாதாரத்தையும் பலாத்காரத்தை ஆதாரமாகக் கொண்ட இயந்திரப் பொருளாதாரத்தையும் ஒப்பிட்டு முன்னதே ஏற்றது என்று சொன்னார்.

    இத்தனை நூற்றாண்டுகளாக குலையாமல் பல்வேறு தாக்கங்களை சமாளித்த இந்த கிராமத்து முழுமையான பொருளாதாரம்.இப்போது மிகச் சுலபமாக கலைக்கப் படுகிறது.இந்த தாமதமான காலக் கட்டத்தில் இதை எதிர்ப்பதில் பயனில்லை,

   காந்தி பரிந்துரைக்கும் பொருளாதாரத்தின் முக்கிய அம்சம் ஆடம்பரமின்மை,அகிம்சை, உழைப்பில் புனிதத் தன்மை, ஓய்வு  பற்றி மயக்கம்,மானுட கௌரவம். இவைகளைத்தான் வலியுறுத்தினார். அதை இன்றைய[புதிய சூழ்நிலையில் நிச்சயம் கொண்டுவர முடியும். பொருளாதார வியாபார தாக்கங்களை அரவணைத்துக் கொண்டு அவைகளின் நல்லவைகளை மட்டும் எடுத்துக் கொண்டு கிராமத்தின் ஆதார அடையாளங்களை இழக்காமல் காந்தியின் புதிய சர்வோதயத்தைக் கொண்டு வரமுடியும் என்று நான்  நம்புகிறேன்.
எப்படி? ஆடம்பரமின்மை நவீனப் பொருட்கள் வேண்டாம் என்று சொல்லவில்லை.ஆடம்பரப் பொருட்கள் வேண்டாம்.செருப்பு  இருக்கட்டும் ஸ்னீக்கர் வேண்டாம். சாஷே வேண்டாம்..ஆனால் பள்ளிகளில் கம்ப்யூட்டர் வேண்டும் அதன் மூலம் பிற்பட்ட பள்ளிகளிலும் மிகச் சிறந்த கல்வியைக் கொண்டு வர முடியும்.

   காந்தியின் அகிம்சை தழுவிய பொருளாதாரத்தை புரிந்து கொள்வது கொஞ்சம் கஷ்டம். இயந்திரம் முதாளித்துவத்தின் கையாளாக இருக்கிறது.மனித உழைப்பை வெளியே விரட்டிவிட்டு சிலருடைய கையில் அதிகாரமும் செல்வமும் குவியும்படி செய்கிறது என்று காந்தி கருதினார். அன்னியப் படையெடுப்பால் நாட்டுப் புறங்கள் அதிக பயப்பட வேண்டியதில்ல. நகரப் பிரதேசங்களே படையெடுப்புக்கு இலக்காகின்றன. ரத்தம் தோய்ந்த மேல் நாட்டு வழி நமக்கு ஏற்றதன்று. அந்த வழியில் மேலை நாட்டினருக்கே அலுப்பு தட்டியாயிற்று. இதைத்தான் காந்தி அகிம்சை கலந்த பொருளாதாரம் என்கிறார். வன்முறைக்கு வழி வகுக்காத வழிமுறை.

   "கிராமங்களில் அதிகம் ஒய்வு கூடாது என்றார் காந்தி.உழைக்காமல் உணவுப் பொருட்களையும் பிற தேவைகளையும் செப்பிடு வித்தைக்காரன் போல ஒரு மந்திர சக்தியால் சிருஷ்டித்து விட முடியும் என்ற நிலை ஏற்பட்டால் நான் அதைப் பற்றி அஞ்சி நடுங்குகின்றேன்". என்கிறார் காந்தி.
கிராமத்தில் உழைப்புக்கு மதிப்பும் வாய்ப்பும் கொடுக்கும் அளவுக்கு இயந்திர மயமாக்கம் இருந்தால் போதும்.அமெரிக்கா போல ஆயிரம் ஏக்கர் நிலத்தை ஒரே ஒருவர் அறுவடை செய்யும் மாடல் நமக்கு ஏற்றதில்லை.நமக்கு ஆள் பற்றாக் குறை இல்லை.  வாய்ப்புக் குறைவினால்ல்தான் கிராமத்தவர் நகரங்களுக்கு இடம் பெயர்கின்றனர். காந்தி உடல் உழைப்பை பவித்ரமாகக் கருதினார்.நம் உடல்களாகிய உயிருள்ள இயந்திரங்களை துருப்பிடிக்க வைத்துவிட்டு உயிரற்ற இயந்திரங்களை ஏற்படுத்த முயல்கிறோம்.என்று வருத்தப் பட்டார்.அவர் எல்லா இயந்திரங்களுக்கும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை கைராட்டினம் கூட அபூர்வ மதிப்புள்ள ஓர் இயந்திரம்தான் என்கிறார்.

  இயந்திரம் என்ற கணிப்பில் காந்திஜி கணிப்பொறியை வரவேற்றிருப்பார்.காரணம் அவர் விரும்பும் மானுட கௌர்வம் கணிப்பொறிகள் வரவால் நமக்குக் கிடைக்கும். இன்றைய அறிவியல் உலகம் செல்லும் திசையில் கிராமங்களை நவீனப்படுத்துவது தவிர்க்க முடியாத ஒன்றாகும்.
  அதை எதிர்க்காமல் பயன் படுத்திக்கொண்டு காந்தியின் அடிப்படை அம்சங்களை மறக்காமல் கிராமங்களை அமைக்க கணிப்பொறிகளும் செய்தித் தொடர்பு சாதனங்களும் உதவ வேண்டும்"

  சுஜாதாவின் இந்தக் கட்டுரை கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கு முன்னால் எழுதிய "நூற்றாண்டின் இறுதியில்  சில சிந்தனைகள்" என்ற நூலில் படித்தது. கொஞ்சம் பெரிய கட்டுரையை கருத்தும் வார்த்தைகளும் சிதையாமல் சுருக்கித் தந்திருக்கிறேன்  என்று நினைக்கிறேன்

***********************************************************
இதைப் படித்திருக்கிறீர்களா 



40 கருத்துகள்:

  1. தினமும் பயன்படுத்தும் எங்களுக்கு தெரியும் கைராட்டினம் கூட அபூர்வ மதிப்புள்ள ஓர் இயந்திரம் தான் என்று...

    /// புரிய வைக்கத் தவறி விட்டோம். அது எவ்வளவு அவசியமானது என்பதை காலம் கடந்து உணரப் போகிறோம். ///

    உண்மை...

    பல பேர் அறிய நன்றாக சுருக்கி பதிவாக்கித் தன்மைக்கு நன்றி...

    பதிலளிநீக்கு
  2. காந்திஜி அவர்களின் பிறந்த நாள்
    சிறப்புப் பதிவு அருமை
    சுஜாதா அவர்களின் அருமையான
    கட்டுரையைப் பதிவாக்கித் தந்தமைக்கு
    மனமார்ந்த நன்றி

    பதிலளிநீக்கு
  3. நல்ல பதுவு
    பகிர்ந்தமிக்கு நன்றி தோழரே

    பதிலளிநீக்கு
  4. வாய்ப்புக் குறைவினால்ல்தான் கிராமத்தவர் நகரங்களுக்கு இடம் பெயர்கின்றனர். காந்தி உடல் உழைப்பை பவித்ரமாகக் கருதினார்.நம் உடல்களாகிய உயிருள்ள இயந்திரங்களை துருப்பிடிக்க வைத்துவிட்டு உயிரற்ற இயந்திரங்களை ஏற்படுத்த முயல்கிறோம்.என்று வருத்தப் பட்டார்.அவர் எல்லா இயந்திரங்களுக்கும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை கைராட்டினம் கூட அபூர்வ மதிப்புள்ள ஓர் இயந்திரம்தான் என்கிறார்.

    அற்புதமான விளக்கம் பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு

  5. சுருக்கித் தந்தாலும் சுவை குன்றாமல் தந்துள்ளீர் சகோ! இன்றைய காங்கிரஸ் காரர்களுக்கு தெரிந்தது சோனிய காந்திதான்!

    பதிலளிநீக்கு
  6. அருமையான விசயம் தலைவரே,
    காந்திக்கு இயந்திரம்னா சுத்தமா பிடிக்காது,
    ஆனா உலகம் முழக்க இயந்திர மயமாக்கலும் கணிணி மயமாக்கலும்தான் நடந்துகிட்டு இருக்கு

    பதிலளிநீக்கு
  7. கிராமிய பொருளாதாரம் பற்றிய காந்தியின் சிந்தனைகளை சுஜாதா வழியில் சிறப்பாக பகிர்ந்துள்ளீர்கள் நன்றி!

    பதிலளிநீக்கு
  8. காந்தியின் அடிப்படை அம்சங்களை மறக்காமல் கிராமங்களை அமைக்க கணிப்பொறிகளும் செய்தித் தொடர்பு சாதனங்களும் உதவ வேண்டும்"//

    நன்றாகச்சொன்னார் சுஜாதா.. இதன்படி நடந்தால் கிராமங்கள் தன்னிறைவு அடையும்.

    பகிர்வு அருமை.
    நன்றி, வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  9. அருமையாகச் சுருக்கித்தந்திருக்கிறீர்கள்

    பதிலளிநீக்கு
  10. நான் இதற்கு முன் இந்தக் கட்டுரையைப் படித்ததில்லை.
    பகிர்விற்கு மிக்க நன்றி முரளிதரன் ஐயா.

    பதிலளிநீக்கு
  11. இதுவரை படிக்காத கட்டுரையை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  12. பொறுமையை வளர்க்கவும் வறுமையைப் போக்கவும் கிராமத்தின் தனிச் சிறப்பை குலைக்காமலும் இருப்பதற்காக அண்ணல் காந்தி கைராட்டினத்தைப் பயன் படுத்தினார் என்றால் மிகையாகாது.

    உங்கள் கட்டுரைக்கு நன்றி
    வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  13. திண்டுக்கல் தனபாலன் said...
    தினமும் பயன்படுத்தும் எங்களுக்கு தெரியும் கைராட்டினம் கூட அபூர்வ மதிப்புள்ள ஓர் இயந்திரம் தான் என்று...
    /// புரிய வைக்கத் தவறி விட்டோம். அது எவ்வளவு அவசியமானது என்பதை காலம் கடந்து உணரப் போகிறோம். ///
    உண்மை...//
    நன்றி தனபாலன் சார்!

    பதிலளிநீக்கு
  14. Ramani said...
    காந்திஜி அவர்களின் பிறந்த நாள்
    சிறப்புப் பதிவு அருமை
    சுஜாதா அவர்களின் அருமையான
    கட்டுரையைப் பதிவாக்கித் தந்தமைக்கு
    மனமார்ந்த நன்றி//
    நன்றி ரமணி சார்!

    பதிலளிநீக்கு
  15. செய்தாலி said...
    நல்ல பதுவு
    பகிர்ந்தமிக்கு நன்றி தோழரே//
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  16. Sasi Kala said...
    வாய்ப்புக் குறைவினால்ல்தான் கிராமத்தவர் நகரங்களுக்கு இடம் பெயர்கின்றனர். காந்தி உடல் உழைப்பை பவித்ரமாகக் கருதினார்.நம் உடல்களாகிய உயிருள்ள இயந்திரங்களை துருப்பிடிக்க வைத்துவிட்டு உயிரற்ற இயந்திரங்களை ஏற்படுத்த முயல்கிறோம்.என்று வருத்தப் பட்டார்.அவர் எல்லா இயந்திரங்களுக்கும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை கைராட்டினம் கூட அபூர்வ மதிப்புள்ள ஓர் இயந்திரம்தான் என்கிறார்.
    அற்புதமான விளக்கம் பகிர்வுக்கு நன்றி.//
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி.

    பதிலளிநீக்கு
  17. புலவர் சா இராமாநுசம் said...
    சுருக்கித் தந்தாலும் சுவை குன்றாமல் தந்துள்ளீர் சகோ! இன்றைய காங்கிரஸ் காரர்களுக்கு தெரிந்தது சோனிய காந்திதான்!//
    வருகைக்கு நன்றி அய்யா!

    பதிலளிநீக்கு
  18. s suresh said...
    கிராமிய பொருளாதாரம் பற்றிய காந்தியின் சிந்தனைகளை சுஜாதா வழியில் சிறப்பாக பகிர்ந்துள்ளீர்கள் நன்றி!//
    நன்றி சுரேஷ்

    பதிலளிநீக்கு
  19. கோமதி அரசு said...
    நன்றாகச்சொன்னார் சுஜாதா.. இதன்படி நடந்தால் கிராமங்கள் தன்னிறைவு அடையும்.
    பகிர்வு அருமை.
    நன்றி, வாழ்த்துக்கள்.//
    நன்றி கோமதி மேடம்

    பதிலளிநீக்கு
  20. குட்டன் said...
    அருமையாகச் சுருக்கித்தந்திருக்கிறீர்கள்//
    நன்றி குட்டன்.

    பதிலளிநீக்கு
  21. அருணா செல்வம் said...
    நான் இதற்கு முன் இந்தக் கட்டுரையைப் படித்ததில்லை.
    பகிர்விற்கு மிக்க நன்றி முரளிதரன் ஐயா.//
    வருகைக்கு நன்றி அருணா!

    பதிலளிநீக்கு
  22. ராஜி said...
    இதுவரை படிக்காத கட்டுரையை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி//
    நன்றி சகோதரி.

    பதிலளிநீக்கு
  23. Suria said...
    பொறுமையை வளர்க்கவும் வறுமையைப் போக்கவும் கிராமத்தின் தனிச் சிறப்பை குலைக்காமலும் இருப்பதற்காக அண்ணல் காந்தி கைராட்டினத்தைப் பயன் படுத்தினார் என்றால் மிகையாகாது.
    உங்கள் கட்டுரைக்கு நன்றி
    வாழ்த்துகள்//
    நன்றி சூர்யா!

    பதிலளிநீக்கு
  24. இப்போது தான் படிக்கிறேன். சுருக்கத்துக்கு நன்றி. (இதுவே சுருக்கமானு கேட்கத் தோன்றினாலும் :)

    "கிராமங்கள்" பற்றி காந்தி புரிந்து கொண்டதும் சுஜாதா புரிந்து கொண்டதும் அவர்களுடையக் காலக்கட்டத்துக்குப் பொருந்தியவை. சாஷே பற்றிப் புலம்பும் சுஜாதா, அதனால் சாதாரண கிராமத்தான் நல்ல சோப்பு ஷேம்பு உபயோகிக்கும் வாய்ப்பைப் பெற முடிந்ததை ஏன் பாராட்டி எழுதவில்லை என்று வியக்கிறேன். கிராமம் நகரத்தை அடைவதில் தவறில்லை. நகரம் கிராமத்தை அடைந்தால் கொஞ்சம் தகராறு.

    காந்தியின் self sufficient village அற்புதமான ஐடியா. கிராமம் என்றில்லை நகரத்துக்கும் பொருந்தும் சிந்தனை. ஆனால் இந்திய அரசியல் (கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் ஸ்வீடன், ஜபேன் தவிர பிற உலக நாடுகள் எல்லாவற்றிலும்) சட்டங்களும் திட்டங்களும் இதை விதையிலேயே அழித்துவிட்டன என்று தோன்றுகிறது.

    சிந்தைனையைத் தூண்டும் கட்டுரை. (நீங்கள் சுஜாதா ரசிகரா?)

    பதிலளிநீக்கு
  25. சுஜாதாவின் இந்தக் கட்டுரையை நான் படித்ததில்லை.

    சிதைவு ஏதுமின்றித் தந்ததற்குப் பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  26. அனைவரும் படிக்க வேண்டியக் கட்டுரை. பகிர்வுக்கு நன்றிகள்

    பதிலளிநீக்கு
  27. சுஜாதாவின் கட்டுரை மூலம் ஓர் அருமையான சமர்ப்பணம் காந்திஜிக்கும் கூடவே சுஜாதாவுக்கும் அறிவார்ந்த சமுதாயத்துக்கும்.நன்றி சகோ!

    பதிலளிநீக்கு
  28. இதுவரை நான் படிக்காத கட்டுரையை படிக்க ப்கிர்ந்ததுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  29. அறுவை மருத்துவன் said...
    சுஜாதாவின் இந்தக் கட்டுரையை நான் படித்ததில்லை.
    சிதைவு ஏதுமின்றித் தந்ததற்குப் பாராட்டுகள்.//
    நன்றி அறுவை மருத்துவன்.

    பதிலளிநீக்கு
  30. வேங்கட ஸ்ரீநிவாசன் said...
    அனைவரும் படிக்க வேண்டியக் கட்டுரை. பகிர்வுக்கு நன்றிகள்//
    நன்றி வெங்கட்

    பதிலளிநீக்கு
  31. ஒ.நூருல் அமீன் said...
    சுஜாதாவின் கட்டுரை மூலம் ஓர் அருமையான சமர்ப்பணம் காந்திஜிக்கும் கூடவே சுஜாதாவுக்கும் அறிவார்ந்த சமுதாயத்துக்கும்.நன்றி சகோ//
    நன்றி நூருல்

    பதிலளிநீக்கு
  32. தனிமரம் said...
    இதுவரை நான் படிக்காத கட்டுரையை படிக்க ப்கிர்ந்ததுக்கு நன்றி.//
    நன்றி தனிமரம்

    பதிலளிநீக்கு
  33. நல்ல கட்டுரை,காந்திஜீயின் கிராம பொருளாதாரம்பற்றிய அருமையான விளக்கம்,நன்றாக இருந்தது வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  34. நானும் இதை முன்பு படிக்கவில்லை.
    பகிர்விற்கு மிக்க நன்றிமுரளி.
    நல்வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு
  35. நல்ல பகிர்வு. அப்பாதுரை சொல்வதை ஆமோதிக்கத் தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895