(மே தின சிறப்புக் கவிதை)
கட்டிடங்களை
பார்க்கும்போதெல்லாம்
அஸ்திவாரம் நினைவுக்கு
வந்ததுண்டா!
இன்றாவது நினைத்துப் பார்!
ஆடை அணியும் போதெல்லாம்
சரவணா ஸ்டோர்,ஜெயச்சந்திரன் .....
தவிர
அதை நெய்தவன்
நினைவு வந்திருக்கிறதா?
இன்றாவது நினைத்துப் பார்!
தீப்பெட்டிகளை
திறக்கும்போதும்
தீக்குச்சியின்
மருந்துத் தலைகளை
பார்க்கும் போதும்
பாஸ்பரஸ் நெடியில்
பணி செய்யும்
மழலைத் தலைகள்
நினைவுக்கு வருமா!
இன்றாவது நினைத்துப் பார்!
உன்
வியர்வை நாற்றம்
போக்கும்
வாசனை சோப்பை
பயன்படுத்தும்போதெல்லாம்
அதற்காக உழைத்தவனின்
வியர்வை வாசம்
உணர முடிகிறதா?
இன்றாவது நினைத்துப் பார்!
சாலையில் நடந்து
போகையிலும்
வாகனங்களில்
செல்கையிலும்
தகிக்கும் வெய்யிலில்
தாரை
உருக்கி ஊற்றியவனை
நினைத்துப் பார்த்திருக்கிறாயா?
இன்றாவது நினைத்துப் பார்!
நீ பசித்து உண்ணும்போதெல்லாம்
தன் பசியைப்
போக்க முடியாமல்
தடுமாறியும்
விடாப்பிடியாக விவசாயம்
செய்யும் உழவனை
நினைத்துப் பார்த்திருக்கிறாயா?
இன்றாவது நினைத்துப் பார்!
அது போகட்டும்
சமையல் அறையில் இருந்து
வரும் உணவின் வாசம்
உன் நாசியைத் துளைக்கும்போதும்
நாவில் வியர்வை வழிய
காத்திருக்கும்போதும்
உன் வீடடுப் பெண்களின்
சலியா உழைப்பையாவது
சற்றே நினைத்திருப்பாயா?
இன்றாவது நினைத்துப்பார்!
**********************************************************
உழைத்துக் களைத்திருக்கும் தொழிலாளர்களே நீங்கள் சிரிப்பதற்காக
காணோமே?"
"அவங்களுக்கெல்லாம்
உழைப்பாளர் தினம்
விடுமுறையாம்".
*************************************************************************************************************
இதையும் படியுங்க :
அருமையான கவிதை. நெஞ்சைத்தொடும் வரிகள்....
பதிலளிநீக்குமேதின வாழ்த்துகள்..
பதிலளிநீக்குஅருமையான கவிதை நண்பரே,, வாழ்த்துக்கள் ..!
பதிலளிநீக்குஅருமை அருமை
பதிலளிநீக்குஇதுதான் கவிதை
மனம் கவர்ந்த படைப்பு
மே தின நல் வாழ்த்துக்கள்
அருமையான கவிதை...மே தின நல் வாழ்த்துக்கள் நண்பரே...
பதிலளிநீக்குஅருமை அருமை ! நெகிழ வைத்த கவிதை !
பதிலளிநீக்குஉளைபவர்களை நினைத்துப் பார்க்க வைத்த உங்களுக்கு நன்றிகள் பல
பதிலளிநீக்குமிகவும் அருமையான சிந்தனை இதுவரை நினைக்காதவர்களைக் கூட நினைத்துப் பார்க்க வைக்கும் வரிகள் .
பதிலளிநீக்கு''//Gobinath said...
பதிலளிநீக்குஅருமையான கவிதை. நெஞ்சைத்தொடும் வரிகள்...//
முதல் கருத்திற்கு நன்றி..
//இராஜராஜேஸ்வரி said...
பதிலளிநீக்குமேதின வாழ்த்துகள்..//
ஆதரவிற்கு நன்றி.
//Ramani said...
பதிலளிநீக்குஅருமை அருமை
இதுதான் கவிதை
மனம் கவர்ந்த படைப்பு
மே தின நல் வாழ்த்துக்கள்//
அய்யா,தங்கள் மேலான கருத்தை அளித்து பாராட்டுவதோடு தவறாமல் வாக்களிக்கவும்
செய்கிறீர்கள். மிக்க நன்றி. தங்கள் உயர்ந்த உள்ளத்திற்கு நன்றி.
//ரெவெரி said...
பதிலளிநீக்குஅருமையான கவிதை...மே தின நல் வாழ்த்துக்கள் நண்பரே..//
தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.
//திண்டுக்கல் தனபாலன் said...
பதிலளிநீக்குஅருமை அருமை ! நெகிழ வைத்த கவிதை !//
தங்கள் கருத்து என்னை உற்சாகப் படுத்துகிறது. மிக்க நன்றி அய்யா!
//சீனு said...
பதிலளிநீக்குஉழைப்பவர்களை நினைத்துப் பார்க்க வைத்த உங்களுக்கு நன்றிகள் பல//
பல பதிவுகளையும் பார்த்து கருத்திட்டமைக்காக மிக்க நன்றி சீனு!
வியர்வை வாசம் வீசும் வரிகள்.வாழ்வின் அடி நாதங்களை நினைத்துப்பார்க்கிற மனது வாய்க்கப்பெற்றவர்கள் மிகவும் அருகிப்போய்க்கொண்டே வருகிற பொழுது இது.
பதிலளிநீக்குஇவை எல்லாம் நினைத்துப் பார்த்திருந்தால் என்றோ நம் சமுதாயம் முன்னோக்கிப் பயணித்திருக்கும் ...
பதிலளிநீக்குநண்பா...! வணக்கம்...!
பதிலளிநீக்குஎன் இயற்பெயர் டி.முரளிதரன்...!
பதிவுகளுக்காக பிறந்த மண்ணுடன் சேர்த்து "காஞ்சி முரளி"...!
ஜஸ்ட் இப்போதான் மலிக்காவின் "நீரோடை"யில் பார்த்தேன்..!
என்னைப் போல... என் பெயரில் ஒருவனா...!
கவிதை அருமை...!
வாழ்த்துக்கள்...
//தினேஷ்குமார் said...
பதிலளிநீக்குஇவை எல்லாம் நினைத்துப் பார்த்திருந்தால் என்றோ நம் சமுதாயம் முன்னோக்கிப் பயணித்திருக்கும் ...//
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி தினேஷ்குமார்
//காஞ்சி முரளி said...
பதிலளிநீக்குநண்பா...! வணக்கம்...!
என் இயற்பெயர் டி.முரளிதரன்...!
பதிவுகளுக்காக பிறந்த மண்ணுடன் சேர்த்து "காஞ்சி முரளி"...!
ஜஸ்ட் இப்போதான் மலிக்காவின் "நீரோடை"யில் பார்த்தேன்..!
என்னைப் போல... என் பெயரில் ஒருவனா...!
கவிதை அருமை...!
வாழ்த்துக்கள்...//
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி நண்பா!
பெயரில் ஒற்றுமை நம் இருவருக்கும் உள்ளது அறிந்து மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். நட்பைத் தொடர்வோம்
படமே கவிதையாகி மனதைக் கலக்கியடிக்கிறது முரளி!
பதிலளிநீக்கு//ஹேமா said...
பதிலளிநீக்குபடமே கவிதையாகி மனதைக் கலக்கியடிக்கிறது முரளி!//
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.ஹேமா.
அருமையான கவிதை. கேள்விகள் ஒவ்வோன்றும் நெஞ்சைத்தொடுகின்றன. வாழ்துக்கள் முரளி என் தளத்தி இது எப்படி அப்டேட் ஆகாமல் தப்பித்தன என்று தெரியவில்லை. லேட்டாக வந்துவிட்டேன்
பதிலளிநீக்குமிக அருமையான கவிதை
பதிலளிநீக்குஇன்றுதானி பார்தேன்!
பதிலளிநீக்குஇன்றாவது பார்க்க முடிந்ததே என்று நினைத்துப் பார்கிறேன்! நன்று நன்று!
சா இராமாநுசம்
//புலவர் சா இராமாநுசம் said...
பதிலளிநீக்குஇன்றுதான் பார்தேன்!
இன்றாவது பார்க்க முடிந்ததே என்று நினைத்துப் பார்கிறேன்! நன்று நன்று!//
சா இராமாநுசம்//
மிக்க நன்றி அய்யா! ஒருமாதம் முந்தைய பதிவை தேடிப் பிடித்து படித்து பாராட்டும் தங்கள் உள்ளம் கண்டு உவகை அடைகிறேன் ஐயா!
//Jaleela Kamal said...
பதிலளிநீக்குமிக அருமையான கவிதை//
மிக்க நன்றி ஜலீலா கமால். தாமத நன்றிக்கு மன்னிக்கவும்.
//Avargal Unmaigal said...
பதிலளிநீக்குஅருமையான கவிதை. கேள்விகள் ஒவ்வோன்றும் நெஞ்சைத்தொடுகின்றன. வாழ்துக்கள் முரளி என் தளத்தி இது எப்படி அப்டேட் ஆகாமல் தப்பித்தன என்று தெரியவில்லை. லேட்டாக வந்துவிட்டேன்//
நன்றி! நன்றி! தாமதத்திற்கு மன்னிக்கவும்.
arumai neegan soonavatra parkum pothuellam ungal kavethai varegal nabagam varum nalla unrvana uerana varrgal ulla kevethai valthukal ungaluku
பதிலளிநீக்கு51E46E63FC
பதிலளிநீக்குTakipçi Satın Al
Footer Link Satın Al
Telegram Coin Botları
Osm Promosyon Kodu
Pubg New State Promosyon Kodu