என்னை கவனிப்பவர்கள்

பிராணி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பிராணி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 4 ஏப்ரல், 2012

சந்தேகப் பிராணி


                          இனியவளே!
                          மனதுக்குள் 
                          மலர்வனத்தை வைத்துக்கொண்டு 
                          முட்களை மட்டுமே 
                          காட்டுகிறாய்!

                          உன் உதட்டுக்கு 
                          இனியாவது 
                          உரிமை கொடு 

                          புன்னகை பூக்களை 
                          பூப்பதற்கு 
                          உன் இதழ்ச் செடிகளுக்கு 
                          உத்தரவு இடு.

                          மரத்துப்போன 
                          என் இதயத்திற்கு 
                          மறுபடியும் உணர்வு கொடு. 

                          சங்கிலிப் பிராணியாய் 
                          உன் பின்னால் நான்!

                          நீயோ இன்னும் 
                          சந்தேகப் பிராணியாய்......
                          நியாயமா பெண்ணே?

*****************************************