என்னை கவனிப்பவர்கள்

.உங்கள் மின்னஞ்சல் முகவரியை FOLLOW BY EMAIL பகுதியில் இடவும்.மூங்கில் காற்றின பதிவுகள் உங்கள் மின்னஞ்சலுக்கு வந்து சேரும்.TPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்

Friday, November 9, 2012

இதை எழுதியது யாரு?கண்டுபிடியுங்க!     கவிதை  ரசிகர்களுக்கு ஒரு சவால்  இந்தக் கவிதை எழுதியது யார்னு சொல்லுங்க பாக்கலாம்? சரியா சொல்றவங்களுக்கு தீபாவளிப் பரிசா  என் இதயத்தில 10 G.B இலவச இடம் வழங்கப் படும்.(Google குடுக்குறதைவிட அதிகங்க) 
(எழுதிய  கவிஞர் மன்னிப்பாராக! பெரிய கவிதையை கொஞ்சம் எடிட் செய்திருக்கிறேன்.)

                                       அழைப்பு 

                             தயவு செய்து 
                             என்னைத் தொல்லை செய்!
                             தயவு  செய்து 
                             என்னைக் கொள்ளையடி!

                             கழுத்தடியில் ஒரு 
                             செல்லக்கடி கடி

                             கூந்தல் கலைத்து 
                             பூக்களை உதிர்த்துவிடு 

                             ஓடிப் பிடித்தென்னை 
                             உருக்குலைத்துப்  போடு 

                             குளித்துவரும்  என்னை 
                             மீண்டும் அழுக்காக்கு 

                             எதிர்பாரா இடத்தில் 
                             என்னைத் தீண்டு 
                             எவ்வளவு இயலுமோ 
                             அவ்வளவு தழுவு 

                             எங்கே என் உயிரென்று 
                             கண்டுபிடி 

                             உன் உதட்டு எச்சிலால்
                             என்  உடல் பூசு 

                             இது ஒன்றும் 
                             ஒருவழிப் பாதையல்ல

                             என் பங்குசெலுத்த 
                             எனக்கும் இடம் கொடு

                             மார்பகப் பள்ளத்தில் 
                             முகம் வைத்து மூச்சு விடு 
                             பூனையின் பாதம் பொருத்தி 
                             பொசுக்கென்று வந்து 
                             புடவை இழு!

                             உன் தீவிரவாதத்தால் 
                             என்னைத் திணற வை 

                             என்னைத் தூண்டிவிட்டு 
                             நித்தமொரு  தடவை 
                             அழவை!

                             வா!வா! 
                             என்னை  வலி செய் 
                             உயிர் பெருகி ஒலிசெய்!

                             உன் நகர்த்தலுக்கு 
                             துடிக்குதென் ஆடை 
                             உன்  நகம் கிழிக்க
                             ஏங்குதென் மார்பு!

                             எங்கே 
                             மீண்டும் ஒருமுறை 
                             முந்தானைக்குள் புகுந்து 
                             முயல் குட்டியாகு!

                             தட்டாதே!
                             தாய் சொல்லைக்கேள்!

                             பத்து மாதம் 
                             என்வயிறு சுமந்த 
                             பிஞ்சுப் பிரபஞ்சமே!


*****************************************************************************************
நேரம் இருந்தால் இதையும்படியுங்கள்

கற்றுக் குட்டியின் கணினிக் குறிப்புகள்-Font Shortcut-Word 2007 .html38 comments:

 1. தெரியவில்லை நண்பரே! இறுதியாக தாங்கள் சொல்லும்போது தெரிந்துகொள்கிறேன். அதுவரை காத்திருக்கிறேன்! நன்றி!

  ReplyDelete
 2. வைரமுத்து;

  எப்புடி ???

  உங்க இதயத்தில் இடம் பிடிசிட்டேனா :)

  ReplyDelete
 3. இலவசமா எதுவும் வேண்டாமாம் எங்களுக்கு.
  வைரமுத்து என்றே நானும் நினைக்கிறேன்.

  ReplyDelete
 4. யார்...எழுதியது?..தாங்களா?
  யார் எழுதியிருந்தாலும் அருமையான படைப்பு

  ReplyDelete
 5. என் நெஞ்சத்தைக் கொள்ளை கொண்டுவிட்ட கவிதை.

  எழுதியவர்?

  வேறு யார்? என் பிரிய நண்பர் டி.என்.முரளிதரன்தான்!

  ReplyDelete
 6. இந்த வைர வரிகளை கவிப்பேரரசு அவர்களால் எழுத பட்டது சார் ...
  என்னை கொள்ளை கொள்ளும் கவிதை ...

  ReplyDelete
 7. சரியா சொல்றவங்களுக்கு தீபாவளிப் பரிசா என் இதயத்தில 10 G.B இலவச இடம் வழங்கப் படும்

  >>
  காதை கிட்ட கொண்டு வாங்க . சத்தமா சொன்னா காப்பியடிச்சு உங்க இதயத்துல இடம் பிடிச்சுடுவாங்க.---- சரிதானே நான் சொன்னது?!

  ReplyDelete
 8. நான் காதலி எழுதிய கவிதைன்னு நினைச்சு படிச்சுக்கிட்டே வந்தேன். முடிவுலதான் அம்மா எழுதிய கவிதைன்னு தெரிஞ்சது..., இங்கயும் எனக்கு பல்பா?!

  ReplyDelete
  Replies
  1. கூடுதலாக இடம் தேவைப்படின் எதை அழிப்பீர்கள்

   Delete
 9. 10 GB மட்டும் தானா...?

  நல்ல வரிகள்... நன்றி...

  ReplyDelete
 10. நல்லதொரு கவிதை! எழுதிய கவிஞருக்கு பாராட்டுக்கள்!

  ReplyDelete
 11. எழுதியது யாராயிருப்பினும் சிறப்பான கவிதையே!

  ReplyDelete
 12. தெரியவில்லை முரளி;ஆனால் கவிதை மனசில் நிற்கிறது

  ReplyDelete
 13. வைரமுத்துன்னு நிச்சயமா தெரியும்.வைரமுத்து கவிதைகளை நான் பெரும்பாலும் படிச்சிருக்கேன். முன்னாடி கமெண்ட் கொடுத்தவங்க தெரியலைன்னாலும் கூகுள்ள அந்த வரிகளை டைப் பண்ணியாவது கண்டுபிடிச்சிருக்கலாமே.. ம் யாரும் பிட் அடிக்க மாட்டாங்க போல.. ! ஒவ்வொரு விஷயத்தையும் மனம் கவரும்படி சொல்றிங்க. கவிதை படிச்சிட்டு அதை எழுதின கவிஞரையும் தெரிஞ்சிக்க செய்து. புதுமை+ வித்தியாசமான சிந்தனைகள்தான் உங்க வலை.

  ReplyDelete
 14. நாளை சொல்லிடறேன் சுப்ரமணியன்.

  ReplyDelete
 15. மோகன் குமார் said...
  வைரமுத்து;
  எப்புடி ???
  உங்க இதயத்தில் இடம் பிடிசிட்டேனா :)//
  நீங்க பதிவுலகில் என்னுடைய முதல் நண்பராயிற்றே.
  இதற்கு முன்னாடியே இடம் பிடித்து விட்டீர்கள்.
  இன்றைய பதில் சரியா என்பதை நாளை சொல்கிறேன்.

  ReplyDelete
 16. Sasi Kala said...
  இலவசமா எதுவும் வேண்டாமாம் எங்களுக்கு.
  வைரமுத்து என்றே நானும் நினைக்கிறேன்.//
  பதில் கண்டு புடிக்க முடியலன்னா இலவசம் வேண்டாம்னு சொல்லப் படாது.

  ReplyDelete
 17. இராஜராஜேஸ்வரி said...
  தாங்களே எழுதியதா !!??//
  நான் எழுதனும்னுதான் நினச்சேன். எனக்கு முன்னாடி வேற ஒருத்தர் எழுதிட்டார்.

  ReplyDelete
 18. PARITHI MUTHURASAN said...
  யார்...எழுதியது?..தாங்களா?
  யார் எழுதியிருந்தாலும் அருமையான படைப்பு//
  நான் இல்ல பார்த்தி,

  ReplyDelete
 19. பசி’ பரமசிவம் said...
  என் நெஞ்சத்தைக் கொள்ளை கொண்டுவிட்ட கவிதை.
  எழுதியவர்?
  வேறு யார்? என் பிரிய நண்பர் டி.என்.முரளிதரன்தான்!//
  ஆஹா!இது உண்மையா இருந்தா எப்படி இருக்கும்.

  ReplyDelete
 20. அரசன் சே said...
  இந்த வைர வரிகளை கவிப்பேரரசு அவர்களால் எழுத பட்டது சார் ...
  என்னை கொள்ளை கொள்ளும் கவிதை ...//
  நீங்க சொன்னது சரியான்னு நாளைக்கு சொல்லிடறேன்.

  ReplyDelete
 21. ராஜி said...
  சரியா சொல்றவங்களுக்கு தீபாவளிப் பரிசா என் இதயத்தில 10 G.B இலவச இடம் வழங்கப் படும்
  காதை கிட்ட கொண்டு வாங்க . சத்தமா சொன்னா காப்பியடிச்சு உங்க இதயத்துல இடம் பிடிச்சுடுவாங்க.---- சரிதானே நான் சொன்னது?!//
  நீங்க சொன்னது சரிதான்.அவரேதான்.

  ReplyDelete
 22. திண்டுக்கல் தனபாலன் said...
  10 GB மட்டும் தானா...?
  நல்ல வரிகள்... நன்றி...//
  அதுக்கென்ன சார் எவ்வளவு இடம்வேனும்னாலும் இருக்கு

  ReplyDelete
 23. s suresh said...
  நல்லதொரு கவிதை! எழுதிய கவிஞருக்கு பாராட்டுக்கள்!//
  உங்க பாராட்டை அப்படியே பார்சல் பண்ணிடறேன்.
  நன்றி சுரேஷ்

  ReplyDelete
 24. சென்னை பித்தன் said...
  தெரியவில்லை முரளி;ஆனால் கவிதை மனசில் நிற்கிறது//
  கருத்துக்கு நன்றி சார்!

  ReplyDelete
 25. ரெவெரி said...
  கவிப்பேரரசு..//
  நன்றி சார்!நாளை சொல்லிடறேன்..

  ReplyDelete
 26. உஷா அன்பரசு said...
  வைரமுத்துன்னு நிச்சயமா தெரியும்.வைரமுத்து கவிதைகளை நான் பெரும்பாலும் படிச்சிருக்கேன். முன்னாடி கமெண்ட் கொடுத்தவங்க தெரியலைன்னாலும் கூகுள்ள அந்த வரிகளை டைப் பண்ணியாவது கண்டுபிடிச்சிருக்கலாமே.. ம் யாரும் பிட் அடிக்க மாட்டாங்க போல.. ! ஒவ்வொரு விஷயத்தையும் மனம் கவரும்படி சொல்றிங்க. கவிதை படிச்சிட்டு அதை எழுதின கவிஞரையும் தெரிஞ்சிக்க செய்து. புதுமை+ வித்தியாசமான சிந்தனைகள்தான் உங்க வலை.//
  உங்க பதில் சரியான்னு தெரிஞ்சுக்க நாளை வலைப் பக்கம் வாருங்கள்

  ReplyDelete
 27. குட்டன் said...
  எழுதியது யாராயிருப்பினும் சிறப்பான கவிதையே!//
  நன்றி குட்டன்

  ReplyDelete
 28. வணக்கம் நாளை சந்திப்போம்

  ReplyDelete
 29. வரிகளைப் படிக்கும் பொது வைரவர் தான் நினைவுக்கு வருகிறார் அவராத்தான் இருப்பார் என நினைக்கிறேன் அவர் தொனியிலும் படித்து விட்டேன்

  ReplyDelete
 30. கருவாச்சி காவியம்....

  ReplyDelete
 31. கவிப்பேரரசு என்றே நினைக்கிறேன்...

  ReplyDelete
 32. தீபாவளி வாழ்த்துக்கள் அய்யா

  ReplyDelete
 33. நல்லதொரு கவிதை தந்தமைக்கு நன்றி முரளி !

  ReplyDelete
 34. கவிதை எழுதியவருக்கும்
  அதை வலையில் பிரசுவித்தவருக்கும்
  என் பாராட்டுக்கள்.

  ReplyDelete

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895