என்னை கவனிப்பவர்கள்

திங்கள், 19 நவம்பர், 2012

பாதித்த செய்திகள்! போதித்த விஷயங்கள்!

    பத்திரிகைகளில் பலவிதமான செய்திகளைப் படித்தாலும் சில செய்திகள் மனதில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. அப்படிப் பாதித்தவற்றில் இரண்டை மட்டும் குறிப்பிட விரும்புகிறேன்.
1.சிறுநீரகங்களை விற்க அனுமதி கோரிய ஆந்திரப் பெண்கள்.
2.தருமபுரி வன்முறை 

 சிறுநீரகங்களை விற்க அனுமதி கோரிய ஆந்திரப் பெண்கள்.

      துபாயில் வேலை செய்யும் ஆந்திராவைச் சேர்ந்த ஆறு பேர் துபாய் சிறையில் அடைக்கப் பட்டுள்ளனர். காரணம்; நேபாளி காவலாளி ஒருவரை கொன்றதாக குற்றம் சாட்டப் பட்டு 24 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப் பட்டுள்ளது. இது நடந்து ஏழு ஆண்டுகள் முடிந்து விட்டது. அவர்களுக்கு எந்த சட்ட உதவியும் கிடைக்கவில்லை.
    துபாய் சட்டப்படி கொலையான நபரின் மனைவி கேட்கும் தொகையை குற்றம் செய்தவர்கள் தர சம்மதித்தால் அவர்களை விடுவிக்கலாம்..இந்த சூழ்நிலையில் நேபாளி காவலாளியின் மனைவியிடம் நடந்த பேச்சுவார்த்தையில்  அந்த ஆறு பேரை பெரிய மன்னிப்பதாகவும் தனக்கு 15 லட்சம் ரூபாய் இழப்பீட்டுத் தொகை  வழங்கவேண்டும் என்று கூறியுள்ளார்.

      இதை அறிந்த அந்த ஆறு பேரின் மனைவியும் ஏழ்மை நிலையில் உள்ள தங்களால் அவ்வளவு தொகையை புரட்ட முடியாது என்பதால் தங்கள் கணவன்மார்களைக் காப்பாற்ற தங்களது சிறுநீரகங்களை விற்க அனுமதிக்குமாறு மாநில மனித உரிமைகள் ஆணையத்திடம் அனுமதி கோரி இருந்தனர்.பலரிடம் கேட்டும் உதவி கிடைக்காததால் இதைத் தவிர வேறு வழி தெரியவில்லை என்று தங்கள் மனுவில் கூறி இருந்தனர். மனுவை விசாரித்த ஆணையம் சம்பந்தப் பட்ட அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. . நல்லதே நடக்க வேண்டும்.

  இந்தப்  பெண்கள் நவீன சாவித்திரிகளாக என் கண்களுக்கு தெரிகின்றனர்.இவர்களது கணவர்களைப் போன்றவர்கள் வெளிநாடு  செல்லுபோது எந்த சூழ்நிலையிலும்  சுயக் கட்டுப்பாட்டுடன்  நடந்து கொள்ள வேண்டும். குடும்பத்தை காப்பாற்ற வெளிநாடு செல்பவர்கள் தங்களை காப்பாற்ற குடும்பம் தவிக்கும் இக்கட்டான சூழ்நிலையை உருவாக்கி விடக் கூடாது.
*************************************************************************************************************
தருமபுரி வன்முறை 

  சமீபத்தில் தருமபுரி மாவட்டத்தில் காதல் திருமணம் செய்து கொண்டதை எதிர்த்து வன்முறை நடந்து 10 நாட்களுக்கு மேல் ஆகியும் இன்னும் மனதை விட்டு அகலவில்லை. மகள் காதல் திருமணம் செய்து கொண்டதால் தந்தை தற்கொலை செய்து கொள்ள ஆத்திரமுற்ற பெண்ணின் இனத்தவர்  பையன் வசிக்கும் பகுதியில் வீடுகளை தீ வைத்துக் கொளுத்தியும் இருசக்கர வாகனங்கள் உள்ளிட்ட  பொருட்களையும் உடைத்தும் சேதப் படுத்தி உள்ளனர் என்ற பத்திரிகைச் செய்தி அதிர்ச்சியையும் வருத்தத்தையும் ஏற்படுத்தியது.  250 க்கும் மேற்பட்ட வீடுகள் சேதப்படுத்தப் பட்டுள்ளது.  

  இந்த சம்பவம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட பொது நல மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.ஒய். இக்பால் மற்றும் நீதிபதி டி.எஸ். சிவஞானம் ஆகிய நீதிபதிகள் தங்களது தீர்ப்பில், இந்த விவகாரம் மிக ஆபத்தான ஒன்று என்றனர்.  பாதிக்கப் பட்டவர்களுக்கு உதவ தக்க நடவடிக்கைகள் உடனே எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர்.
  கல்வி,விஞ்ஞான தொழில் நுட்பத்தில் முன்னேறிக் கொண்டிருக்கிறோம் என்று பெருமைப் பட்டுக் கொண்டிருக்கிறோம். ஆனால்  இவை எதுவும் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் தடுக்க உதவவில்லையே என்ற ஆதங்கம் எழத்தான் செய்கிறது. மாறாக இவை சில சமயங்களில்  பேதங்களையும் வன்மங்களையும் வலுப்படுத்தவும் செய்துவிடுவது வேதனைக்குரியது. சாதி இனப் பாகுபாடுகள் நல்லதல்ல என்று கற்ற கல்வி சொன்னாலும் அதை மனம் ஏற்றுக்கொள்வதில்லை என்பது கசப்பான உண்மை. அதற்கு இன்னும் எத்தனை காலம் காத்திருக்க வேண்டுமோ? அதுவரை இது போன்ற சம்பவங்கள் இனி நடைபெறாமல் இருக்கவேண்டுமே என்பதே நமது விருப்பம்.

நினைவுக்கு  வந்த கவிதை 

                         யானைக்கு
                         மதம் பிடித்தது!
                         எல்லோரும் 
                         கலைந்து   ஓடினார்கள் 
                         எந்த மதம்
                         என்று பாராமல்!

 ***************************************************************************************



28 கருத்துகள்:

  1. இதை அறிந்த அந்த ஆறு பேரின் மனைவியும் ஏழ்மை நிலையில் உள்ள தங்களால் அவ்வளவு தொகையை புரட்ட முடியாது என்பதால் தங்கள் கணவன்மார்களைக் காப்பாற்ற தங்களது சிறுநீரகங்களை விற்க அனுமதிக்குமாறு மாநில மனித உரிமைகள் ஆணையத்திடம் அனுமதி கோரி இருந்தனர்.பலரிடம் கேட்டும் உதவி கிடைக்காததால் இதைத் தவிர வேறு வழி தெரியவில்லை என்று தங்கள் மனுவில் கூறி இருந்தனர். மனுவை விசாரித்த ஆணையம் சம்பந்தப் பட்ட அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. . நல்லதே நடக்க வேண்டும்.//

    கண்ணில் கண்ணீர் பொங்கிவிட்டதுய்யா நல்லவழி பிறக்கணும் ஆண்டவா....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெண்களுக்கு துன்பங்கள் எப்படி எல்லாம் வருகின்றன.தங்களின் நிலைதான் மனோ சார் எனக்கும்.

      நீக்கு
  2. நானும் கண்டேன்..இறுதியாக சொன்ன கவிதை அருமை.அது யாருடைய கவிதை என்பதையும் குறிப்பிட்டிருக்கலாம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எங்கோயோ எப்போதோ வேறு விதமாக கேட்டது.நான் கொஞ்சம் எனது பாணியில் திருத்தம் செய்திருக்கிறேன்.

      நீக்கு
  3. மிகவும் சரியாகக் கூறியுள்ளீர்கள், குடும்பத்திற்காகப் பொருளீட்டச் செல்பவர்களுக்குச் சுயக்கட்டுப்பாடு மிகவும் தேவை. இல்லையெனில் அதனால் பாதிக்கப்படுபவர் குடும்பத்தினராகவே இருப்பர். இச்சம்பவத்தில் சம்பந்தப்பட்ட இரு தரப்புமே அங்கு பிழைக்கவந்தவர்கள் என்பதும் கவணிக்க வேண்டியதே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான் ஸ்ரீநிவாசன்.உண்மை எப்படி இருப்பினும் பாதிக்கப்படுபவர்கள் பெண்கள்தான்.

      நீக்கு
  4. அவர்களின் நிலை மாற வேண்டும்... மாறட்டும்...

    கவிதை வரிகள் : மதம் பிடித்தவர்களுக்கு சரியான சவுக்கடி...
    tm4

    பதிலளிநீக்கு
  5. சாதி இனப் பாகுபாடுகள் நல்லதல்ல என்று கற்ற கல்வி சொன்னாலும் அதை மனம் ஏற்றுக்கொள்வதில்லை என்பது கசப்பான உண்மை.

    வருத்தமே மிஞ்சுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் சகோதரி கல்வியால் மன மாற்றம் எதையும் ஏற்படுத்த முடியவில்லை.

      நீக்கு
  6. மதம் பிடித்துபிட்டால்
    மனிதம் தொலைந்து விடுகிறது தான் முரளிதரன் ஐயா.

    பதிலளிநீக்கு
  7. நண்பரே
    நல்ல சமுக விழிப்புணர்வு பதிவு தந்தமைக்கு நன்றி...இப்பதிவு எனது வலைப்பூவில் இணைத்துள்ளேன் நன்றியுடன்

    பதிலளிநீக்கு
  8. மனத்தைப் பாதித்த செய்திகள்
    கவிதை தூள்

    பதிலளிநீக்கு
  9. இரண்டும் கேட்கவே மிகவும் வருத்தமாக உள்ளது... சோக நிகழ்வுகள் தான், என்ன செய்ய!!!

    பதிலளிநீக்கு
  10. பெண்கள் குறித்து எவ்வளவுதான் பேசினாலும் இன்னமும் தீராததாகத் தான் உள்ளது என்பதற்கு உங்கள் பதிவே சாட்சி. காதல் திருமணங்கள் கல்வி வளர்ச்சியால் வரும் பொருளாதார உயர்வின்போது ஏற்றுக்கொள்ளப்படுகிறது. இன்னமும் வெறி கொண்டு அலைவதற்குக் காரணம் மக்களின் சகிப்புத் தன்மையை விட அரசியலாரின் அரசியல் ஆதாயம்தான் காரணம் எனத் தோன்றுகிறது

    பதிலளிநீக்கு
  11. இரண்டு தலைப்புகளிலுமே வேதனையான சம்பவங்கள், செய்திகள். தேர்தல் நெருங்க நெருங்க சிலருக்கு ஜாதிப் பித்தம் தலைக்கு ஏறிவிடும்.

    பதிலளிநீக்கு
  12. மனம் புழுங்கிப் போகிறது நண்பரே...
    இதுபோன்ற சம்பவங்களை நினைத்தால்....

    பதிலளிநீக்கு
  13. யானைக்கு
    மதம் பிடித்தது!
    எல்லோரும்
    கலைந்து ஓடினார்கள்
    எந்த மதம்
    என்று பாராமல்!//


    செய்திகள் மனதை கனக்கவைத்தன ...

    பதிலளிநீக்கு
  14. இரண்டு செய்திகளுமே வாசிக்க மனசுக்குக் கஸ்டமாவே இருக்கு !

    பதிலளிநீக்கு
  15. இரண்டு செய்திகளுமே வேதனையைத்தான் தருகின்றன. கவிதை அழகு.

    பதிலளிநீக்கு

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895