இந்த தீபாவளி தொலைக் காட்சி சிறப்பு நிகழ்ச்சிகள் அவ்வளவாக என்னைக் கவரவில்லை.
விளம்பரங்களுக்கு இடையில் நிகழ்ச்சிகள், விளம்பரங்களே பரவாயில்லை என்று சொல்லுமளவுக்கு இருந்தது.
ஏதாவது ஒரு நிகழ்ச்சியில் வடிவேலு எங்காவது மக்களுடன் எம்.ஜி.ஆர் பாட்டு பாடிக் கொண்டு கண்ணில் படுவார் எந்த சேனலிலும் கண்ணில் படவில்லை.இம்முறை சந்தானக் காட்டில் மழை.
தீபாவளி அன்று மின்வெட்டு இல்லாதாதால் கொஞ்ச நேரம் கூட நிகழ்ச்சிகளில் இருந்து தப்பிக்க முடியவில்லை.ஏதாவது நல்ல நிகழ்ச்சி வாராதா என்று சானலை மாற்றியதுதான் மிச்சம். இந்தப் பட்டிமன்றங்களை சிறிது காலம் தடை செய்தால் நல்லது போல் தோன்றுகிறது.ஒரே முகங்கள் பார்த்துப் பார்த்து போரடிக்கும் நிலைக்கு வந்துவிட்டது. பட்டிமன்றங்கள் என்றால் நகைச்சுவையாகத்தான் இருக்கவேண்டும் என்று எழுதப்படாத சட்டமாகிவிட்டது. கலைஞர் டிவியில் அதுவும் லியோனியின் பட்டிமன்றம் ஏதோ மொக்கை ஜோக்குகள் சொல்லி சிரிக்கவைக்கிறது. அப்புறம் இதற்குப் போய் ஏன் சிரித்தோம் என்று சிந்திக்கவும் வைக்கிறது.
பின்னர் ஒளி பரபரப்பான விண்ணைத் தாண்டி வருவாயா ஏற்கனவே பார்த்துவிட்டாலும் பாடல்காட்சிகள் மட்டும் மீண்டும் பார்க்கத் தூண்டியது. பொதுவாக ஏ.ஆர் ரகுமான் இசை அமைக்கும் படங்களில் இசைதான் ஹீரோ.அதனையும் தாண்டி சிம்பு பேசப்பட்டததற்கு காரணம் கெளதம் மேனன்தான்.

ஜெயா டிவியில் ஏ.ஆர் ரகுமானின் பேட்டியில் சிறப்பு ஒன்றுமில்லை பேட்டி கண்டவர் டுவிட்டர் புகழ் சின்மயி. ஒருவர் பின் ஒருவராக வந்து ஏ.ஆர் ரகுமான் புகழ் பாடிக் கொண்டிருந்தார்களே தவிர உருப்படியான தகவல்கள் ஏதும் இல்லை.ரகுமான் பெரும்பாலும் அதிகமாக பேட்டி கொடுக்க மாட்டார். இந்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தி பேட்டியை சுவாரசியமாக ஆக்கி இருக்கலாம். ரகுமான் பேசுவதை புரிந்து கொள்வது சற்று சிரமம் இருந்தது. அவரது இசையில் இருக்கும் துல்லியம் பேச்சில் இல்லாதது விநோதம்தான்.
விஜய் டிவியில் கோபிநாத் நடத்திய துப்பாக்கி படம் பற்றி விஜய் ஏ.ஆர், முருகதாஸ் மற்றும் விஜய் ரசிகர்கள் கலந்து கொண்ட ஷோ ஒளி பரப்பானது. விஜயின் பெர்பாமான்ஸ் பற்றி முருகதாஸ் சொன்னபோது வெளியில் மிக அமைதியாக இருப்பவர் விஜய். ரிசர்வ் டைப்பாக இருக்கும் விஜய் பெர்பாமன்ஸ் என்று வந்து விட்டால் துள்ளலும் வேகமும் அவரது இயல்பாகி விடுகிறது.உண்மையில் எது பெர்பாமன்ஸ் என்று தெரியவில்லை என்று சொன்னது ரசிக்கும்படி இருந்தது.
ராஜ் டிவியில் வரலாறு திரைப்படம் கொஞ்சம் பார்த்தேன். கொஞ்சம் பழைய படம்தான் பரத நாட்டிய டான்சராக அஜீத் அசத்தி இருந்தார். நடிப்பில் விஜயை விட ஒரு படி முன்னே இருப்பதாகத் தோன்றியது.
****************************************************************************************************************
தீபாவளியைத் தாண்டியும் இன்னும் பிரதிபா காவேரி தத்தளித்துக் கொண்டிருக்கிறது. நங்கூரத்திற்காக காத்திருக்கிறதாம். மாளவிகாவின் (அதுவும் கப்பல்தாங்க!) பிணைப்பில் இருந்து இன்னும் விடுவிக்கப் படமுடியாத நிலையில் இருக்கிறதாம்.
இது யாருடைய கண்ணீர்க் கதை?

தீபாவளி அன்று தொ(ல்)லைக்காட்சி பக்கம் போக முடியவில்லை... தொகுப்பிற்கு நன்றி...
பதிலளிநீக்குநன்றி தனபாலன் சார்!
நீக்குஉறவுகளோடு உல்லாசமாய் தீபாவளி நாள்
பதிலளிநீக்குமுழுவதும் இருந்ததால் டி வி பக்கம்
தலைவைத்துப் படுக்கவில்லை
தங்களது விரிவான அருமையான பதிவின் மூலம்
அனைத்து நிகழ்ச்சிகள் குறித்தும் அறிந்து கொண்டேன்
பகிர்வுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
நன்றி ரமணி சார்!
நீக்குஉங்க தொகுப்பே எல்லா நிகழ்ச்சியையும் பார்த்த மாதிரி இருக்கு. எந்த ஒரு நிகழ்ச்சியையும் அழகாக விமர்சிக்கிறீர்கள்.
பதிலளிநீக்குநன்றி உஷா
நீக்குஎனக்கும்தான் ஒரு நிகச்சிகளும் பிடிக்கவே இல்லை. அருமையான தொகுப்பு.
பதிலளிநீக்குவருகைக்கு நன்றி செம்மலை ஆகாஷ்.
நீக்குவெளிநாட்டில் இருந்ததால்
பதிலளிநீக்குஎந்த நிகழ்ச்சியுமே பார்க்கவில்லை நண்பரே...
நன்றி மகேந்திரன்
நீக்குமகேந்திரன் வெளிநாட்டில்;நான் உள் நாட்டில்;ஆனால் ஒற்றுமை நானும் எதுவும் பார்க்கவில்லை-பொறுமை இல்லை-தங்கமணிக்கும் ஆர்வம் இல்லை(ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டே இருந்தால் போதாதா?)
பதிலளிநீக்குத.ம.6
போதும் போதும் குட்டன்
நீக்குதொலைக்காட்சி பார்க்க நேரமே வருவதில்லை.உங்கள் விமர்சனம் இணையத்திலாவது பார்க்கலாமா என்கிற ஆசையைத் தருகிறது முரளி !
பதிலளிநீக்குவருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஹேமா!
நீக்குநான் தொலைக் காட்சியில் செய்திகள் மட்டுமே கேட்பேன்!
பதிலளிநீக்குநல்லது.தப்பித்து விட்டீர்கள் நன்றி ஐயா!
நீக்குநம்மால் டிவியை 'ஆன்' செய்து பார்க்காமல் இருக்க முடியவில்லை பாருங்கள்! :))
பதிலளிநீக்கு