சுஜாதா இப்படி சொல்கிறார்
"தமிழ்ப் புத்தாண்டை அடுத்து டாக்டர் கலைஞர் அவர்களின் திருக்குறள் உரை நூலின் வெளியீட்டு விழா மேடையில் பல அறிஞர்கள் பேசினார்கள்.ஜி.கே.மூப்பனாரும் கலந்து கொண்ட விழா. மறைமுகமான அரசியல் குறிப்புக்கள் பலவற்றால் பேச்சாளர்கள் பார்வையாளர்களைப் பரவசப் படுத்தினார்கள்
கலைஞர் அடுத்த முதல்வராக வருவது ஏறக் குறைய நிச்சயமாகிவிட்ட நிலையில் இவ்வாறு திகட்டத் திகட்ட புகழ்வது எதிர் பார்க்கக் கூடியதே. இதில் யார் தகுதிக்காகாப் புகழ்கிறார்கள் யார் பதவிக்காக என்று பதம் பிரிக்கும் ஆற்றல் கலைஞருக்கு குறள் படிப்பதால் நிச்சயம் இருக்கும்.
கலைஞர் தெய்வம் இறைவன் பற்றிய தன் சொந்தக் கருத்துக்களுக்கு சாமார்த்தியமாக உரை எழுதி இருக்கிறார்.கடவுள் வாழ்த்து வழிபாடு ஆகிறது. தெய்வம் நம்மைவிட அறிவில் மூத்த பெருந்தகையாளர் ஆகிறார்.
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்
என்ற குறளுக்கு "கடவுளே! என்று கூவி அழைப்பதால் நடக்காத காரியம் ஒருவர் முயற்சியுடன் உழைக்கும்போது அந்த உழைப்புக்கேற்ற வெற்றியைத் தரும் " என்ற உரை வியப்பும் திகைப்பும் தருகிறது.
திருக் குறளை ஒழுங்காகப் படித்து அதற்கு மிக நுட்பமான, சில சமயம் நம்மை பிரமிக்க வைக்கும் விளக்கங்கள் சொல்லக் கூடிய ஒருவர் இந்த மாநில முதல்வராக வருவது நம் அதிர்ஷ்டமே. நிச்சயம் குறளை கலைஞர் தனக்கும் வழிகாட்டியாக எடுத்துக் கொள்வார் என்று நம்புவோமாக!
குறளில் எல்லாப் பிரச்சனைகளுக்கும் விடை இருக்கிறது.
இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்
என்ற குறளில் மேனஜ்மென்ட்டின் சாராம்சமே இருக்கிறது.பொருட்பால் முழுவதிலும் ஒருநல்லாட்சிக்கு உண்டான அத்தனை வழி முறைகளும் உள்ளன.
வள்ளுவர் தெய்வத்தை நம்பினாரா மறுபிறவியை நம்பினாரா, அவர் ஜைனரா,பெண்களை இழிவாகப் பேசினாரா போன்ற கல்லூரி வளாக ஆராய்ச்சிகளை விட்டு விட்டு நடைமுறை வாழ்வுக்கு அதில் கிடக்கும் அத்தனை ரத்தினங்களையும் பரீட்சை பண்ணிப் பார்க்க ஒரு வாய்ப்பு கலைஞருக்கு கிடைத்திருக்கிறது.
அதற்கான நீண்ட ஆயுள் பெறவும் திருக்குறளில் மருந்து உள்ளது.
அற்றது அறிந்து கடைப் பிடித்து மாறல்ல
துய்க்க துவரப் பசித்து! "
என்று முடித்துள்ளார்.
இந்தக் கட்டுரையில் கலைஞரின் புலமை மட்டுமல்ல சுஜாதாவின் குறட்புலமையும் பிரமிக்க வைக்கிறது. இக்கட்டுரையில் இறைமாட்சி என்ற அதிகாரத்தில் உள்ள பத்து குறள்களுக்கும் சுஜாதா கூறியுள்ள உரை நம் கவனத்தை ஈர்க்கிறது.
இந்தக் கட்டுரையில் கலைஞரின் புலமை மட்டுமல்ல சுஜாதாவின் குறட்புலமையும் பிரமிக்க வைக்கிறது. இக்கட்டுரையில் இறைமாட்சி என்ற அதிகாரத்தில் உள்ள பத்து குறள்களுக்கும் சுஜாதா கூறியுள்ள உரை நம் கவனத்தை ஈர்க்கிறது.
பதிவின் நீளம் கருதி அதை நான் சேர்க்கவில்லை.
அநேகமாக இந்தக் கட்டுரை எழுதப் பட்டது 1996 ஆக இருக்கலாம் என்று கருதுகிறேன்.
(சுஜாதாவின் 'நூற்றாண்டின் இறுதியில் சில சிந்தனைகள் என்ற புத்தகத்தில்' இருந்து)
*************************************************************************************
இதைப் படித்தீர்களா
திருக்குறள் பற்றிய சுஜாதாவின் கருத்துக்களும், கலைஞரின் உரையும் உங்கள் உதாரணங்களிலிருந்தே அந்த புத்தகத்தை படிக்க ஆர்வமாக உள்ளது.முயற்சி செய்கிறேன். நல்ல நூல்களை அறிமுகப் படுத்தும் உங்கள் நற்பணி தொடரட்டும்!
பதிலளிநீக்குநன்றி உஷா
நீக்குஆகா...திண்டுக்கல் தனபாலன்தான் வலைப்பூவின் திருவள்ளுவர் என நினைத்தேன்.சுஜாதாவின் குறட்புலமை என்று நீங்களும் திருக்குறளைப் பற்றி எழுதி அவருக்கு போட்டியா வந்துட்டீங்களே...
பதிலளிநீக்குதனபாலன் சாரின் பாணி தனி பாணி .படிச்சது ஞாபகம் வந்தது எழுதிட்டேன்.
நீக்குநல்ல பகிர்வு.நன்றி
பதிலளிநீக்குநன்றி அய்யா!
நீக்குசிறப்பபான பகிர்வு.
பதிலளிநீக்குவருகைக்கும் கருத்துக்கும் நன்றி சசிகலா!
நீக்குஇப்போ நிறையப் பதிவர்கள் குரளோடு ரொம்ப நெருக்கமாக இருக்கிறார்கள் போல தெரிகிறதே
பதிலளிநீக்குநல்லதுதானே?!
நீக்குநன்று
பதிலளிநீக்குநன்றி குட்டன்.
நீக்குநல்ல பகிர்வு நண்பரே
பதிலளிநீக்குநன்றி முனைவர் சார்!
நீக்குநானும் வியந்திருக்கிறேன் நண்பரே..
பதிலளிநீக்குவள்ளுவர் இவ்வளவு உயரமானவரா? என்று..
http://www.gunathamizh.com/2012/01/blog-post_24.html
வள்ளுவம் ஒரு அதிசயம்தான்.
நீக்குவியக்க வைக்கிறார் எப்போதும் வள்ளுவர் !
பதிலளிநீக்குஉண்மைதான் ஹேமா!
நீக்குமிக நல்ல பகிர்வு முரளிதரன் ஐயா.
பதிலளிநீக்குநன்றி அருணா!
நீக்குஇந்தக் கட்டுரையில் கலைஞரின் புலமை மட்டுமல்ல சுஜாதாவின் குறட்புலமையும் பிரமிக்க வைக்கிறது.
பதிலளிநீக்குபகிர்வுக்குப் பாராட்டுக்கள்..
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ராஜேஸ்வரி
நீக்குநல்ல நூலை அறிமுகப் படுத்தினீர் மிக்க நன்றி முரளி!
பதிலளிநீக்குநன்றி அய்யா!
நீக்குநல்ல நூல் சார்... பலரின் உரைகள் எழுதிய திருக்குறள் நூல்கள் உள்ளது...
பதிலளிநீக்குஆர்வம் இருந்தால் அனைத்தும் சாத்தியமே...
நன்றி...
tm9
ஆம்.சுஜாதாவும் திருக்குறளுக்கு உரை எழுதி இருக்கிறார்.நன்றி சார்!
நீக்குசுஜாதா அவர்களும் பல்வேறு தலைவர்களும்
பதிலளிநீக்குபுகழ்ந்த சூழலை நாசூக்காகச் சொல்லிப்போனவிதம் அருமை
அறியாதன பல அறிந்தேன்
பகிர்வுக்கும் தமிழ்மண டாப் டென்னுக்குள்
வந்ததற்கும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
நன்றி ரமணி சார்.தங்களைப் போன்றவர்களின் அன்பும் ஊக்குவிப்புமே இதற்கு காரணம்.
நீக்குதவறாமல் வாக்களிக்கும் தங்களுக்கு நன்றி கூற கடமைப் பட்டிருக்கிறேன்.
பதிலளிநீக்குஅந்தக் காலத்திலிருந்து திருக்குறளுக்கு யார் யாரெல்லாம் உரை எழுதி இருக்கிறார்கள் என்று முன்பு ஒருமுறை இரண்டு பக்கம் படங்களுடன் வெளியிட்டிருந்தது ஆனந்த விகடன். சுஜாதாவும் உரை எழுதி இருக்கிறார்.
பதிலளிநீக்கு//கலைஞர் அடுத்த முதல்வராக வருவது ஏறக் குறைய நிச்சயமாகிவிட்ட நிலையில் இவ்வாறு திகட்டத் திகட்ட புகழ்வது எதிர் பார்க்கக் கூடியதே.//
இதற்கு சுஜாதாவும் விதி விலக்கல்ல! :))
நன்றி ஸ்ரீராம்
பதிலளிநீக்குமிக நல்ல பகிர்வு
பதிலளிநீக்குசுஜாதா அவர்களும் தனியாக திருக்குறளுக்கு உரை எழுதியிருக்கிறார்.நான் வாங்க வேண்டும் என்று நினைத்திருக்கும் புத்தகங்களுள் அதுவும் ஒன்று.நல்ல பகிர்வு சார்
பதிலளிநீக்கு