கடந்த வாரம் புதிய தலை முறை இதழில் வெளியான கவர் ஸ்டோரி படித்து அதிர்ச்சி அடைந்தேன். "அரசியல் புயல்களில் சிக்கி அலைக்கழிக்கப்பட்ட ஒர் அப்பாவி இந்தியனின் உண்மைக்கதை" என்ற கவர் ஸ்டோரியை எழுதியவர் திரு மாலன். அதற்கு உதவியவர் திரு.அதிஷா(பதிவர்) என்று குறிப்பிடப் பட்டுள்ளது. இப்படியும் நடக்குமா என்று அச்சத்துடன் நினைக்கும் வகையில் ஒரு திரில்லர் கதை போன்று எழுதப்பட்ட அந்த உண்மை சம்பவம் கண்டு நெஞ்சு கொதித்துப் போனது.
இந்திய விண்வெளி ஆராச்சியில் கிரையோஜெனிக் இயக்குனராகப் பணியாற்றிய தமிழர் நம்பி நாராயணன் மீது பொய்யான வழக்கு புனைந்து அவரை தேசத் துரோகியாக குற்றம் சாட்டப்பட்டு அவமானங்களைச் சந்தித்ததையையும் அதன் பின்னணியில் நடந்த சதி வேலைகள் அரசியல் மற்றும் சொந்த ஈகோ, காழ்ப்புணர்ச்சிகள் கொண்ட மனிதர்களால் சாதாரண அப்பாவிகள் முதல் சிறந்த விஞ்ஞானிகள் வரை சிக்கி வேதனைப்பட்டதையும் விவரிக்கும் கட்டுரையை படித்த போது அதிர்ச்சி ஏற்படுவதை தடுக்க முடியவில்லை.
அமெரிக்காவால் தர மறுக்கப்பட்ட கிரையோஜெனிக் தொழில் நுட்பத்தை இந்தியாவே முயற்சி செய்தது. அதைத் தடுக்கவும் தகர்க்கவும் அமெரிக்கா செய்த தந்திர வேலைகள்,விஞ்ஞானிகள் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடையே ஏற்பட்ட ஈகோ பிரச்சனைகள், தன் விருப்பத்திற்கிணங்காத அயல்நாட்டுப் பெண்மணி மரியம் ரஷீதாவை உளவாளியாக்கி விஞ்ஞானிகளோடு இணைத்த இன்ஸ்பெக்டர் விஜயனின் செயல்கள், ஒரு பத்திரிகையின் வாரிசு உரிமைப் போட்டியில் தனக்கு எதிராக செயல்பட்டதாக ஐ.ஜி.ஸ்ரீவத்சாவோடு பத்திரிகையாளர் கொண்ட குரோதம் சுயநல அரசியல் போன்றவற்றிற்கு பலிகடா ஆக்கப் பட்டார் விஞ்ஞானி நம்பி நாராயணன்.
இவை எப்படி தொடர்பு படுத்தப்பட்டன? என்று இவ்வாறு விவரிக்கப் படுகிறது.
மாலத் தீவிலிருந்து வந்திருந்த மரியம் ரஷீதா இந்தியாவில் தங்க அனுமதி தொடர்பாக அவரது நண்பரான சசிகுமார் ஐ.ஜி ஸ்ரீவத்சாவிடம் சொல்ல அவர் விஜயனை விசாரிக்க அனுப்பி இருக்கிறார். மாலத்தீவுப் பெண்மணி ரஷீதாவால் அவமானப் பட்ட இன்ஸ்பெக்டர் விஜயன் ரஷீதா டெலிபோனில் இஸ்ரோ விஞ்ஞானி சசிகுமாரோடு பேசியதை தோண்டி எடுத்து இந்திய விஞ்ஞான ரகசியங்களை வாங்க வந்த உளவாளி ரஷீதா என்ற வதந்தியைக் கிளப்பி விட்டார்.
ஏற்கனவே ஸ்ரீவத்சாவின் மீது வன்மம் கொண்ட பத்திரிகையாளர் மணி மேற்கண்ட விஷயத்தை தொடர்பு படுத்தி பரபரப்பாக செய்திகளை தன் பத்திரிகையில் வெளியிட, பற்றிக்கொண்டது தீப்பொறி. மற்ற பத்திரிகைகள் அதை ஊதிப்பெரிதாக்கியது. விஞ்ஞானி சசிகுமாருக்கு எதிராக ஐ.ஏ.எஸ்.அதிகாரி ஒருவரின் மனக்கசப்பும் சேர்ந்துகொள்ள விஷயம் பூதாகர வடிவம் எடுத்தது. கிரையோஜெனிக் தொழில் நுட்பத்தில் இந்தியா வளர்வதை விரும்பாத அமெரிக்காவும் தன் பங்குக்கு காய்களை நகர்த்த அநியாயமாக குற்றம் சாட்டப் பட்டனர் இந்திய விஞ்ஞானிகள். இந்த விஷயத்தில் நம்பி நாராயணன் கிரையோஜெனிக் தொழில்நுட்பத்தின் தலைவராக இருந்ததே அவர் செய்த ஒரே குற்றம்.'
விஞ்ஞானிகள் நாராயணன்,சசிகுமார் உள்ளிட்ட 6 பேர் 30.11.2012 அன்று கைது செய்யப்பட்டனர்.
திருவல்லிக்கேணி சம்பத் என்பவர் தனது வலைப்பதிவில் கீழ்க்கண்டவாறு எழுதியுள்ளார்.
but … then came the fall to disgrace, he was
arrested on espionage charges, people spat at him, stones were thrown at his
family and they suffered for years since.
The arrest of this scientist on false charges set our space program back
by many years. It crushed the morale of ISRO scientists.
இந்தக் கைது இந்திய விண்வெளி ஆராய்ச்சியில் பின்னடைவை ஏற்படுத்திவிட்டது
18 ஆண்டுகளுக்குப் பின் நீதி கிடைத்திருக்கிறது
சி.பி.ஐ.இடம் ஒப்படைக்கப் பட்ட இந்த
வழக்கில் கார்த்திகேயன் உட்பட 12 திறமை மிக்க அதிகாரிகள் தனித்தனியாக
விசாரித்தனர். அவர்கள் அளித்த அறிக்கையின்படி இந்த வழக்கு பொய்யானது என்று
உறுதி செய்யப் பட்டது.
கைது செய்யப்பட்டவர்கள் குற்றமற்றவர்கள் என நிரூபிக்கப் பட்டு விடுதலை
ஆனார்கள். உயர் நீதிமன்றத்திலும் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. உச்ச நீதி
மன்றமும் இதை பொய் வழக்கு என்று உறுதி செய்ததோடு கேரள அரசை கண்டித்தது.
நம்பி நாராயணனுக்கு அவர்பட்ட கொடுமைகளுக்காக ஒரு கோடி ரூபாய் தரவேண்டும் என்று மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் தர்மம் மறுபடி வெல்லும் என்பதுநிரூபிக்கப் பட்டாலும் சூது கவ்விய காலங்களில் அந்த விஞ்ஞானி அடைந்த துன்பங்களுக்கு ஈடு செய்ய முடியுமா? இது போன்ற சூழலில் அவர் உறுதி குறைந்து தவறான முடிவுக்கு வந்திருந்தால் என்ன ஆவது? பணம் பதவி செல்வாக்கு உள்ள விஞ்ஞானிகளுக்கே இந்த நிலை என்றால் சாதாரண அப்பாவி மக்களின் கதி என்ன? நினைக்கவே நடுக்கமாய்த்தான் இருக்கிறது.
பொய்வழக்குக் காலத்தில் அவரது குடும்பத்தினருக்கு ஏற்பட்ட அவமானம் கொஞ்ச நஞ்சமல்ல. காரி உமிழப்பட்டது,. ஏளனப்பட்டது,நிர்வாணப் படுத்தப் பட்டு சித்திரவதைப் பட்டது என்று அவர் துன்பப் பட்டதை படித்தபோது கண்ணீர் கண்களில் எட்டிப் பார்த்தது.
கேரளாவின் புகழ் பெற்ற எழுத்தாளர் பால் சக்காரியா உள்ளிட்ட பலர் 07.10.2012 அன்று திருவனந்தபுரத்தில் நடந்த நிகழ்ச்சியில் நம்பி நாராயணனுக்கு இழைக்கப் பட்ட அநீதிகளுக்காக கேரள மக்கள் சார்பாக மனம் திறந்து மன்னிப்பு கேட்டனர்.
மேலும் நாராயணனுக்கு வழங்கப்பட வேண்டிய இழப்பீடு அரசாங்கப் பணத்தில் கொடுக்கப் படக் கூடாது. இந்தப் பொய் வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள அரசியவாதிகள், காவல் துறையினர், பத்திரிகையாளர் களுடைய சொந்தப் பணத்தில் இருந்து வழங்கப் படவேண்டும் என்றும் சக்காரியா கூறி இருப்பது கவனிக்கத் தக்கது..
மேலோட்டாமாகத் தெரிந்த இந்த செய்தியை விரிவாக வெளியிட்டு உண்மைகளை உணர்த்திய புதிய தலை முறை இதழுக்கு நன்றி சொல்லித் தான் ஆகவேண்டும்.
கொசுறு:
பரபரப்பான இந்தஉண்மை சம்பவங்களை திரைப்படமாக்க இருக்கிறாராம் ஆனந்த் மகாதேவன் என்பவர்.அதில் ஹீரோவாக மோகன்லால் நடிக்க இருக்கிறாராம்.
**************************************************************************************
அரசியலா? இன துவேஷமா? போட்டியா? பொறாமையா?
பதிலளிநீக்குதமிழனுக்கு ஏன் இந்த அவப்பெயர்,ஆனாலும் இறுதியில் இப்படித்தான் ஆகும்
இந்தியா திருந்தாது என்பதற்கு இதுவே உதாரணம்.
பதிலளிநீக்குஇந்தியா, தமிழனை அந்நியனாகவே பார்க்கிறது; இந்தியனாக அல்ல!விளைவு................?
பதிலளிநீக்குமிக அருமையான பதிவு
பதிலளிநீக்குவணக்கம்
எமது சேவைகளின் சிறப்பு அம்சங்கள் வாரம் இரு நட்சத்திரபதிவர்கள்.
தினபதிவு தளத்தின் முகப்பில் தெரியும் இது உங்களுக்கான வாசகர்களை அதிகரிக்கும்.
தினபதிவு திரட்டி
Ivargal thaan indiavin muthal ethirigal. Ivargalai nadu roadil nirka vaithu suda vaendum. Appothaan martravargalukku uraikkum. Pagirvukku mikka nanri Muralidharan.
பதிலளிநீக்குஇழப்பீட்டுக்கான தீர்ப்பு நல்ல தீர்ப்பு.
பதிலளிநீக்குவிஞ்ஞானி மீது பொய் வழக்கு போட்ட காவல்துறை அதிகாரி, பொய்யை பரப்பிய பத்திரிக்கையாளர் ஏன் கைது செய்ய படவில்லை. அவர்கள் மீது சட்டம் தன கடமையை செய்ததா?
பதிலளிநீக்குநம் நாடு என்று தான் மாற போகும் என்றே தெரியவில்லை!!!
பதிலளிநீக்குநன்றி,
மலர்
http://www.tamilcomedyworld.com/
இந்தியனையும் இந்தியனின் வளர்ச்சிகளையும் தடுப்பதற்கு அந்நிய சக்திகள் பயன்படுத்தும் நுட்பங்களில் ஒன்று, இந்தியர்களுக்குள் இருக்கும் பொறாமை உணர்வை, காழ்ப்புணர்ச்சி இவற்றைக்கொண்டு சில நுணுக்கமான சதிவேலைகள் செய்வது. இது அன்றிலிருந்து இன்றுவரை தொடர்கிறது. ஆனால் இந்தியன் திருந்துவதில்லை.
பதிலளிநீக்குசொந்த விருப்பு வெறுப்புகளை அந்நிய சக்திகள் எப்படி பயன்படுத்தும் என்பதற்கு நல்ல உதாரணம் இந்நிகழ்வு. இதிலிருந்து அனைவரும் கற்பதற்கு நல்ல பாடங்கள் பல் உள்ளன.
பதிலளிநீக்குபகிர்வுக்கு நன்றிகள்.
இந்தியாவுல அதுவும் தமிழனா பொறந்தது அவர் குற்றம்.
பதிலளிநீக்குஎவ்வளவிதான் இழப்பீடு கொடுத்தாலும் இழ்ந்த கௌரவத்துக்கும் அனுபவித்த துன்பத்துக்கு அது ஈடாகாது :(
பதிலளிநீக்குஇப்படிப்பட்ட செயல்களைச் செய்பவர்களை என்னவென்று சொல்வது :(
அனைவரும் அறியும் படுயாக செய்த, நல்ல பதிவு! இந்திய நாட்டில் தமிழன் எல்லா வகையிலும் தாழ்த்தப் படுகிறான்!
பதிலளிநீக்குஒரு பொது நிகழ்ச்சியில் அவரிடம் பகிரங்க மன்னிப்புக் கேட்கப்பட்டு, அவரும் தன உரையில் இத்தனை காலம் நடந்த வழக்கினால் மதிப்பிட முடியாத ஆராய்ச்சிக் காலம் வீணானதை நினைத்து வருத்தப் படுவதாகக் கூறினார் என்றும் செய்தித் தாள்களில் படித்தேன்.
பதிலளிநீக்குகவியாழி கண்ணதாசன் said...
பதிலளிநீக்குஅரசியலா? இன துவேஷமா? போட்டியா? பொறாமையா?
தமிழனுக்கு ஏன் இந்த அவப்பெயர்,ஆனாலும் இறுதியில் இப்படித்தான் ஆகும்//
தங்கள் கருத்துக்கு நன்றி ஐயா!
இக்பால் செல்வன் said...
பதிலளிநீக்குஇந்தியா திருந்தாது என்பதற்கு இதுவே உதாரணம்.//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி இக்பால்
நன்றி தமிழ் களஞ்சியம்
பதிலளிநீக்குபசி’ பரமசிவம் said...
பதிலளிநீக்குஇந்தியா, தமிழனை அந்நியனாகவே பார்க்கிறது; இந்தியனாக அல்ல!விளைவு................?//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பரமசிவம்.
தினபதிவு said...
பதிலளிநீக்குமிக அருமையான பதிவு//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
மாசிலா said...
பதிலளிநீக்குIvargal thaan indiavin muthal ethirigal. Ivargalai nadu roadil nirka vaithu suda vaendum. Appothaan martravargalukku uraikkum. Pagirvukku mikka nanri Muralidharan.//
வருகைக்கு நன்றி மாசிலா!
உஷா அன்பரசு said...
பதிலளிநீக்குஇழப்பீட்டுக்கான தீர்ப்பு நல்ல தீர்ப்பு.//
நன்றி உஷா!
mubarak kuwait said...
பதிலளிநீக்குவிஞ்ஞானி மீது பொய் வழக்கு போட்ட காவல்துறை அதிகாரி, பொய்யை பரப்பிய பத்திரிக்கையாளர் ஏன் கைது செய்ய படவில்லை. அவர்கள் மீது சட்டம் தன கடமையை செய்ததா?//
இது தொடர்பாக முரளிதரன் உம்மன் சாண்டிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
தமிழ் காமெடி உலகம் said...
பதிலளிநீக்குநம் நாடு என்று தான் மாற போகும் என்றே தெரியவில்லை!!!
நன்றி,
மலர்//
நன்றி மலர்
வே.சுப்ரமணியன். said...
பதிலளிநீக்குஇந்தியனையும் இந்தியனின் வளர்ச்சிகளையும் தடுப்பதற்கு அந்நிய சக்திகள் பயன்படுத்தும் நுட்பங்களில் ஒன்று, இந்தியர்களுக்குள் இருக்கும் பொறாமை உணர்வை, காழ்ப்புணர்ச்சி இவற்றைக்கொண்டு சில நுணுக்கமான சதிவேலைகள் செய்வது. இது அன்றிலிருந்து இன்றுவரை தொடர்கிறது. ஆனால் இந்தியன் திருந்துவதில்லை.//
உண்மைதான் சுப்ரமணியன். நன்றி.
வேங்கட ஸ்ரீநிவாசன் said...
பதிலளிநீக்குசொந்த விருப்பு வெறுப்புகளை அந்நிய சக்திகள் எப்படி பயன்படுத்தும் என்பதற்கு நல்ல உதாரணம் இந்நிகழ்வு. இதிலிருந்து அனைவரும் கற்பதற்கு நல்ல பாடங்கள் பல் உள்ளன.
பகிர்வுக்கு நன்றிகள்.//
சுயநலத்தோடு நடந்துகொண்டால் கூட பரவாயில்லை.மனசாட்சி உடையவராக இருக்கவேண்டும்
ராஜி said...
பதிலளிநீக்குஇந்தியாவுல அதுவும் தமிழனா பொறந்தது அவர் குற்றம்.//
இந்த விவகாம் தமிழ் நாட்டில் அதிகம் பேசப் படவில்லை என்பதுதான் வேதனை.
சிட்டுக்குருவி said...
பதிலளிநீக்குஎவ்வளவிதான் இழப்பீடு கொடுத்தாலும் இழ்ந்த கௌரவத்துக்கும் அனுபவித்த துன்பத்துக்கு அது ஈடாகாது :(
இப்படிப்பட்ட செயல்களைச் செய்பவர்களை என்னவென்று சொல்வது :(//
உண்மைதான் சிட்டுக் குருவி.
புலவர் சா இராமாநுசம் said...
பதிலளிநீக்குஅனைவரும் அறியும் படுயாக செய்த, நல்ல பதிவு! இந்திய நாட்டில் தமிழன் எல்லா வகையிலும் தாழ்த்தப் படுகிறான்!//
உண்மைதான் ஐயா! நன்றி
ஸ்ரீராம். said...
பதிலளிநீக்குஒரு பொது நிகழ்ச்சியில் அவரிடம் பகிரங்க மன்னிப்புக் கேட்கப்பட்டு, அவரும் தன உரையில் இத்தனை காலம் நடந்த வழக்கினால் மதிப்பிட முடியாத ஆராய்ச்சிக் காலம் வீணானதை நினைத்து வருத்தப் படுவதாகக் கூறினார் என்றும் செய்தித் தாள்களில் படித்தேன்.//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஸ்ரீராம்
இந்தியாவுல பொறந்தது அவர் குற்றம்...
பதிலளிநீக்குஇது வெளியே தெரிந்தது ...இன்னும் நிறைய நடந்துக்கொண்டிருக்கிறது வெளியே தெரியாமல்..இது தான் உலகம்
பதிலளிநீக்குசட்டம் சரியாக செயல்படுத்தப்படவில்லை என்பது புலனாகிறது.
பதிலளிநீக்கு//ரெவெரி said...
பதிலளிநீக்குஇந்தியாவுல பொறந்தது அவர் குற்றம்...//
இதனாலதான் திறமை மிக்கவர்கள் வெளி நாட்டுக்குப் போயிடறாங்க!
PARITHI MUTHURASAN said...
பதிலளிநீக்குஇது வெளியே தெரிந்தது ...இன்னும் நிறைய நடந்துக்கொண்டிருக்கிறது வெளியே தெரியாமல்..இது தான் உலகம்//
உண்மைதான் பார்த்தி
Sasi Kala said...
பதிலளிநீக்குசட்டம் சரியாக செயல்படுத்தப்படவில்லை என்பது புலனாகிறது.//
இந்த விஷயம் தமிழ் நாட்டில நிறையப் பேருக்கு தெரியக் கூட இல்ல.
இந்த அரசியல் வியாதிகள் திருந்தவே மாட்டாங்களோ? அதிர்ச்சியான செய்திதான்!பகிர்வுக்கு நன்றி!
பதிலளிநீக்குs suresh said...
பதிலளிநீக்குஇந்த அரசியல் வியாதிகள் திருந்தவே மாட்டாங்களோ? அதிர்ச்சியான செய்திதான்!பகிர்வுக்கு நன்றி!//
ஆம் சுரேஷ்
மிக்க நன்றி முரளி ஒரு உண்மைக் கதையைத் தந்ததற்கு.
பதிலளிநீக்குவேதா. இலங்காதிலகம்.
kovaikkavi said...
பதிலளிநீக்குமிக்க நன்றி முரளி ஒரு உண்மைக் கதையைத் தந்ததற்கு.
வேதா. இலங்காதிலகம்.//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மேடம்
இந்த விவகாரங்களெல்லாம் வெளிச்சத்திற்கு வருவதற்கு முன்பு - சில வருஷங்களுக்கு முன்பு நானொரு சிறுகதை எழுதினேன்.ஒரு தமிழ் விஞ்ஞானி வஞ்சிக்கப் படுவதான கற்பனையில் எழுதப்பட்ட அந்தச் சிறுகதை தினமணிக் கதிரில் பிரசுரமானது. கதையின் தலைப்பு சக்கர வியூகம். என்னுடைய பிளாக்கில் இருக்கிறது. முடிந்தால் வாசித்துப் பாருங்கள்.
பதிலளிநீக்குwww.silviamary.blogspot.com
****எழுதியவர் திரு மாலன். அதற்கு உதவியவர் திரு.அதிஷா(பதிவர்) என்று குறிப்பிடப் பட்டுள்ளது.***
பதிலளிநீக்குஇவங்க ரெண்டு பேரும் நாராயண் நம்பி கூட வேலை செஞ்சவங்களா?
அமெரிக்காக்காரன் இவ்ளோ வெலை கொடுத்தான்.. பிராண்ஸ்க் காரன் இவ்ளோ கொடுத்தான்.. கொறைஞ்ச வெலைக்கு ரஷ்யாக்காரனுக்கு கொடுத்துப்புட்டோம்..
Science is not as beautiful as it looks from outside. There is lot of ugliness in scientific community too. I would be careful believing anybody's story esp one who hardly has any information like these two authors you mention!
உண்மைகள் வெளிச்சத்திற்கு வரவேண்டும். நன்றி
பதிலளிநீக்கு