சுவற்றில் மோதிய மாமரம் |
நண்பர்களே
நினைவு இருக்கிறதா! என்னை மறந்திருக்க மாட்டீர்கள் என்று நினைக்கிறேன். ஆறு
நாட்களாக இன்று வரை வலைப் பக்கம் வரவிடாமல் சதி செய்து கொண்டிருக்கிறது
பி.எஸ்.என்.எல். ஞாயிற்றுக் கிழமை அன்று காலை பிராட் பேண்ட் இணைப்பு எங்கள்
பகுதியில் கிடைக்கவில்லை.ஆனால் Land Line வேலை செய்கிறது.பின்னர்
அனைவருக்கும் சரியாகி விட்டது.எனக்கு மட்டும் வரவில்லை.வேறு ஏதாவது சிக்கல் இருக்கக் கூடும்
அடுத்த நாள் சரியாகி விடும் என்று பார்த்தால் சரியாகவில்லை. BSNL இல் புகார் பதிவு செய்தேன். 24 மணி
நேரத்திற்குள் சரி செய்வதாகச் சொன்னார்கள். எந்த முன்னேற்றமும் இல்லை அடுத்த
நாளும் இதையே சொன்னார்கள். நீலம் புயல் தாக்கி ஓய்ந்து விட்டது.மீண்டும் நேற்று
மீண்டும் BSNL க்கு
நினைவு படுத்த உங்கள் புகார் ஒப்பன்லதான் இருக்கு இன்னும் க்ளோஸ் பண்ணல என்றார்கள்
அலட்சியமாக
ஒருவேளை
மோடம் பழுதாகி இருக்குமோ என்று வேறு இணைப்பில் பொருத்திப் பார்த்தபோது மோடத்தில்
பழுது இல்லை என்பது தெரிய வந்தது. இன்றாவது ஏதாவது செய்கிறார்களா என்று பார்ப்போம்.
வேறு வழி ஏதாவது யோசிக்கவேண்டும்.
நீலம் புயல்
பல
ஆண்டுகளுக்குப் பின் சென்னை பக்கம் கரையைக் கடந்த புயலாக நீலம் விளங்குகிறது.
சென்னைக்கு அருகில் கரையைக் கடக்கப் போகிறது என்ற செய்தி பரபரப்பை ஏற்படுத்தியது.
அவ்வளவு வீரியமான புயல் என்று சொல்ல முடியாவிட்டாலும் நமது மோசமான உள்கட்டமைப்பு
காரணமாக சில பாதிப்புகளை உண்டாக்கியது.ஆங்காங்கு மரங்கள் விழுந்ததால்
பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் பாதிப்பு ஏற்பட்டது. ஒரு நாள் முழுக்க
மின்சாரம் தடை பட்டிருந்தது.(ஏற்கனவே பல இடங்களில் அப்படித்தானே இருக்கிறது.)புதன்
இரவு பலமாக காற்று அடிக்க எங்கள் வீட்டு மரங்கள் பயங்கரமாக ஆடின. வாழைமரங்கள்
அடியோடு சாய்ந்துவிட்டது. மாடியின் சுவரை தொட்டுக்கொண்டிருக்கும் மாமரங்கள்
காற்றில் வேகமாக மோதி டமால் டமால் என்று
சத்தத்தை உண்டாக்கியது. சுவர் இடிந்து விடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியது.
போன வருடம் இதே நிலை ஏற்பட்டபோது மரத்தையே வெட்டவேண்டும் என்று வீட்டம்மா ஆணையிட
கிளையை மட்டும் வெட்டி விடலாம் என்று உறுதி அளித்தேன். ஆனால் ஓராண்டு ஆகியும்
அரசியல்வாதியின் வாக்குறுதி போல நிறைவேற்றப் படாததால் நீலம் புயலின் தாக்குதலைவிட
அதிகமான தாக்குதலுக்கு ஆளானேன்.
ஹலோ எஃப்.எம்
மற்ற பண்பலை வரிசைகள் பாடல்களுக்கிடையில் புயல் செய்திகளைத் தெரிவிக்க
ஹலோ முழுக்க முழுக்க புயல் செய்திகளை வெளியிட்டு அசத்தியது.மக்கள்
ஆர்வத்துடன் போன செய்து தங்கள் பகுதி நிலவரங்களை தெரிவித்தனர்.சென்னையில் மின்சாரம், மரம் விழுதல்,இதர நிகழ்வுகளுக்கு எந்தெந்த எண்களுக்கு போன் செய்யவேண்டும் என்று அறிவித்துக்கொண்டே இருந்தனர்.பாடல்களை ஒளிபரப்பாமல் ஆங்காங்கே போக்கு வரத்து எங்கு தடை பட்டிருக்கிறது எந் வழியில் சென்றால் நல்லது, எங்கு மரம் விழுந்து கிடக்கிறது, மின்கம்பிகள் எங்கு அறுந்து கிடக்கின்றன, வீடுகளில் செய்யவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பள்ளி கல்லூரி விடுமுறை,தேர்வுகள் தள்ளிவைப்பு என்று தகவல்களை உறுதிப் படுத்தி சொன்ன விதம் அருமை. இவை வீட்டில் உள்ளவர்களுக்கு மட்டுமல்ல பயணம் செய்து கொண்டிருப்பவர்களுக்கும் வாகன ஒட்டிகளுக்கும் பயனுள்ளதாக இருந்தது.
ஆர்வத்துடன் போன செய்து தங்கள் பகுதி நிலவரங்களை தெரிவித்தனர்.சென்னையில் மின்சாரம், மரம் விழுதல்,இதர நிகழ்வுகளுக்கு எந்தெந்த எண்களுக்கு போன் செய்யவேண்டும் என்று அறிவித்துக்கொண்டே இருந்தனர்.பாடல்களை ஒளிபரப்பாமல் ஆங்காங்கே போக்கு வரத்து எங்கு தடை பட்டிருக்கிறது எந் வழியில் சென்றால் நல்லது, எங்கு மரம் விழுந்து கிடக்கிறது, மின்கம்பிகள் எங்கு அறுந்து கிடக்கின்றன, வீடுகளில் செய்யவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பள்ளி கல்லூரி விடுமுறை,தேர்வுகள் தள்ளிவைப்பு என்று தகவல்களை உறுதிப் படுத்தி சொன்ன விதம் அருமை. இவை வீட்டில் உள்ளவர்களுக்கு மட்டுமல்ல பயணம் செய்து கொண்டிருப்பவர்களுக்கும் வாகன ஒட்டிகளுக்கும் பயனுள்ளதாக இருந்தது.
ஒரு விதத்தில் மின்தடை ஏற்பட்டதற்கு நன்றி சொல்ல
வேண்டும்.இல்லாவிட்டால் அறுவை நிகழ்ச்சிகளையோ உபயோகமற்ற செய்திகளையோ பார்த்துக்
கொண்டிருப்போம். அரசாங்கம் செய்ய வேண்டிய வேலையை
அற்புதமாக செய்து அசத்தியது ஹலோ எஃப்.எம். ஐ தாராளமாகப் பாராட்டலாம்
****************
கொசுறு
இப்புயலுக்கு நீலம் என்று பெயர் வைத்தது பாகிஸ்தான் வானிலை ஆய்வு மையம்.அடுத்தததாக வரப் போகிற புயலின் பெயர் "மகாசன்".
இந்தப் பெயரை வைத்துள்ளது இலங்கை.
புயல்களுக்கு பெயரிடும் வழக்கம் நீண்ட நாட்களாக நடைமுறையில் இருந்தாலும் இந்தியப் பெருங்கடலில் உருவாகும் புயல்களுக்கு பெயர் வைக்கும் வழக்கம் 2004 முதல்தான் தொடங்கியது.
உலக வானிலை மையத்தில் உறுப்பு நாடுகளாக உள்ளவற்றிற்கு மட்டும் ஒவ்வொரு புயலுக்கும் பெயர் வைக்கும் வாய்ப்பு சுழற்சி முறையில் அளிக்கப்படுகிறது.
***********************************
//ஓராண்டு ஆகியும் அரசியல்வாதியின் வாக்குறுதி போல நிறைவேற்றப் படாததால் நீலம் புயலின் தாக்குதலைவிட அதிகமான தாக்குதலுக்கு//
பதிலளிநீக்கும்ம்... வீட்டுக்கு வீடு வாசற்படி!
நாங்களும் ஹலோ எஃப் எம் மில் தான் கேட்டு கொண்டிருந்தோம்.
பதிலளிநீக்குஇப்போ பதிவை எங்கிருந்து வெளியிட்டீர்கள்? இன்டர்நெட் செண்டரா?
நாலஞ்சு நாள் பதிவு போடாட்டி மறந்துட மாட்டாங்க சார். கவலைப்படதீங்க
பதிலளிநீக்குபி.எஸ் என்.எல் எங்கள் பகுதியில் பத்து மாதங்களாக அதாவது ஜனவரி முதலே வேலை செய்யவில்லை! பொறுத்து பார்த்து ரிலையன்சுக்கு மாறிட்டேன்! நீங்க எப்ப மாறப்போறீங்க? சும்மா ஒரு பேச்சுக்குத்தான்! புயல் பற்றிய செய்திகள் சுவையாக இருந்தது! நன்றி!
பதிலளிநீக்குஅடுத்தும் எதிர்பார்க்கிறார்களா புயலை நல்ல மனுசங்க.
பதிலளிநீக்குஇரமணன் சொல்வது நடப்பதே இல்லை!ஏதோ ஓரளவு இந்த தடவை......!
பதிலளிநீக்குபுயலுக்கு என்னமா பேர் வைக்கிறாங்க.. அடுத்த ப(பு)யல் வர்ற வரைக்கும்தான் அந்த பேரையும் சொல்லிகிட்டிருப்போம்...!
பதிலளிநீக்கு#உலக வானிலை மையத்தில் உறுப்பு நாடுகளாக உள்ளவற்றிற்கு மட்டும் ஒவ்வொரு புயலுக்கும் பெயர் வைக்கும் வாய்ப்பு சுழற்சி முறையில் அளிக்கப்படுகிறது.#
பதிலளிநீக்குதகவலுக்கு நன்றி
நல்ல தகவல்களை பகிர்ந்திருக்கிறீர்கள் அருமை!
பதிலளிநீக்கு//மாக்கள் ஆர்வத்துடன்//?..
பதிலளிநீக்கு"மகாசன்" வேறயா...? மகாராசா, அப்படியே காணாமப் போயிடு...
பதிலளிநீக்குபுயல் பற்றிய தகவல்களுக்கு நன்றி...
நல்லாத்தான் சொன்னீங்க நாலு வார்த்தை!
பதிலளிநீக்குஎப்போதும் BSNL அலட்சியமாகத்தான் இருப்பார்கள். இப்போது புயல், மழை வேறு., சுத்தம்.
பதிலளிநீக்குஎப்போதும் இந்த bsnl இப்படி தான் சார் ,..
பதிலளிநீக்குஅட நெட் வேலை செய்யலைன்னாலும் பதிவு போடறீங்களே.... என்னே உங்கள் கடமை உணர்வு!
பதிலளிநீக்குஹலோ எஃப்.எம். நல்ல விஷயம் தான் செய்து இருக்காங்க.
புயலுக்கு முன்பே உங்களுக்குப் புயல்!
பதிலளிநீக்கு//.மாக்கள் ஆர்வத்துடன் போன செய்து தங்கள் பகுதி நிலவரங்களை தெரிவித்தனர்
பதிலளிநீக்கு//
மக்கள் மாக்கள் ஆனது வேண்டுமென்றேவா.. இல்லை எழுத்துப்பிழையா சார் :).. நல்ல பகிர்வு.
புயல்னாவே அடிவயிறு கலங்குது.இதுக்குப் பெயரெல்லாம் தேவையா?
பதிலளிநீக்குநீலத்துக்கு பெரிய பெரிய மரங்களெல்லாம் விழுந்திருக்கு உங்க வீட்டு வாழை மரம் விழாமலா இருக்கும்...:)
பதிலளிநீக்குஹலோ எப் எம் விற்கு பாராட்டுக்கள்
நீலத்தில அகப்பட்ட சென்னையின் நிலை ரொம்பவே மோசம்....
பதிலளிநீக்குமாக்கள் என்று எழுதியுள்ளீர்கள், மாக்கள் என்றால் விலங்கு என்று பொருள்... மக்கள் என்று மாற்றலாமே!!!
வாழ்த்துகள்...
//வேங்கட ஸ்ரீநிவாசன் said...
பதிலளிநீக்கு//ஓராண்டு ஆகியும் அரசியல்வாதியின் வாக்குறுதி போல நிறைவேற்றப் படாததால் நீலம் புயலின் தாக்குதலைவிட அதிகமான தாக்குதலுக்கு//
ம்ம்... வீட்டுக்கு வீடு வாசற்படி!//
ஆமாம் ஸ்ரீநிவாசன்.
தொழிர்களம் குழுவிற்கு நன்றி.ஒட்டியில் இணைத்திருக்கிறேன்.
பதிலளிநீக்கு//மோகன் குமார் said...
பதிலளிநீக்குநாங்களும் ஹலோ எஃப் எம் மில் தான் கேட்டு கொண்டிருந்தோம்.
இப்போ பதிவை எங்கிருந்து வெளியிட்டீர்கள்? இன்டர்நெட் செண்டரா?//
ஆப் லைனில் டைப் அடித்து நண்பர் ஒருவரின் டேட்டா கார்டின் உதவியுடன் வெளியிட்டேன்.
ஆனாலும் இணையம் நம்மை ரொம்ப அடிமை ஆகித்தான் வச்சுருக்கு
//s suresh said...
பதிலளிநீக்குபி.எஸ் என்.எல் எங்கள் பகுதியில் பத்து மாதங்களாக அதாவது ஜனவரி முதலே வேலை செய்யவில்லை! பொறுத்து பார்த்து ரிலையன்சுக்கு மாறிட்டேன்! நீங்க எப்ப மாறப்போறீங்க? சும்மா ஒரு பேச்சுக்குத்தான்! புயல் பற்றிய செய்திகள் சுவையாக இருந்தது! நன்றி!//
மாறலாம் என்று இருந்த வேலையில் ஒரு வார காலத்திற்குப் பிறகு இன்று சரி செய்து விட்டார்கள் சுரேஷ்.
Sasi Kala said...
பதிலளிநீக்குஅடுத்தும் எதிர்பார்க்கிறார்களா புயலை நல்ல மனுசங்க.//
அடுத்தது மட்டும் இல்ல அதுக்கு அடுத்த புயலுக்கும் பேர் வச்சாச்சு.
//புலவர் சா இராமாநுசம் said...
பதிலளிநீக்குஇரமணன் சொல்வது நடப்பதே இல்லை!ஏதோ ஓரளவு இந்த தடவை......//
என்னதான் கருவிகள் இருந்தாலும் இயற்கையை துல்லியமா கணிக்கமுடியாது என்பதை அடிக்கை இயற்கை நமக்கு நினைவு படுத்தும்.
உஷா அன்பரசு said...
பதிலளிநீக்குபுயலுக்கு என்னமா பேர் வைக்கிறாங்க.. அடுத்த ப(பு)யல் வர்ற வரைக்கும்தான் அந்த பேரையும் சொல்லிகிட்டிருப்போம்...//
அடுத்த புயலுக்கும் பேர் வச்சுட்டாங்க உஷா!
ezhil said...
பதிலளிநீக்கு#உலக வானிலை மையத்தில் உறுப்பு நாடுகளாக உள்ளவற்றிற்கு மட்டும் ஒவ்வொரு புயலுக்கும் பெயர் வைக்கும் வாய்ப்பு சுழற்சி முறையில் அளிக்கப்படுகிறது.#
தகவலுக்கு நன்றி//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி எழில் மேடம்!
வே.சுப்ரமணியன். said...
பதிலளிநீக்கு//மாக்கள் ஆர்வத்துடன்//?..
தவறுதான் சுப்ரமணியன்.வேறு ஒருவரின் உதவியுடன் வெளியிட்டாதால்.மீண்டும் எனது பதிவை படிக்க இயலவில்லை.படித்திருந்தால் திருத்தம் செய்திருப்பேன்,இன்றுதான் இரண்டாம் முறையாகப் படித்திருக்கிறேன்.Google Transliteration இல சிறிது கவனக் குறைவாக இருந்தாலும் பிழை ஏற்பட்டு விடுகிறது. சுட்டிக் காட்டியமைக்கு நன்றி சுப்பிரமணியன்.
//திண்டுக்கல் தனபாலன் said...
பதிலளிநீக்கு"மகாசன்" வேறயா...? மகாராசா, அப்படியே காணாமப் போயிடு...
புயல் பற்றிய தகவல்களுக்கு நன்றி...//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தனபாலன் சார்!
//தி.தமிழ் இளங்கோ said...
பதிலளிநீக்குநல்லாத்தான் சொன்னீங்க நாலு வார்த்தை!//
வருகைக்கு நன்றி ஐயா!
ரஹீம் கஸாலி said...
பதிலளிநீக்குஎப்போதும் BSNL அலட்சியமாகத்தான் இருப்பார்கள். இப்போது புயல், மழை வேறு., சுத்தம்.//
சரி செய்ய ஒரு வாரம் ஆகிவிட்டது.முறையான தகவல் தெரிவிப்பதும் இல்லை.
அரசன் சே said...
பதிலளிநீக்குஎப்போதும் இந்த bsnl இப்படி தான் சார் ,..//
புகார் பதிவு செய்யாப் பட்டபோதும் ஒவ்வொரு முறை மீண்டும் கேகும்போதும் புதியதாகக் கேட்பதுபோலவே கேட்கிறார்கள்.
வெங்கட் நாகராஜ் said...
பதிலளிநீக்குஅட நெட் வேலை செய்யலைன்னாலும் பதிவு போடறீங்களே.... என்னே உங்கள் கடமை உணர்வு!
ஹலோ எஃப்.எம். நல்ல விஷயம் தான் செய்து இருக்காங்க.//
பதிவு போடா முடியலங்கரத விட கம்மென்ட் கூட போட முடியல என்பதுதான் கவலை
குட்டன் said...
பதிலளிநீக்குபுயலுக்கு முன்பே உங்களுக்குப் புயல்!//
இந்தப் புயலுக்கு என்ன பேர் வைக்கிறதுன்னு தெரியல
அகல் said...
பதிலளிநீக்குமக்கள் மாக்கள் ஆனது வேண்டுமென்றேவா.. இல்லை எழுத்துப்பிழையா சார் :).. நல்ல பகிர்வு.//
எழுத்துப் பிழைதான்.கவனக் குறைவால் ஏற்பட்டதுதான்.
மீண்டும் படித்து சரி செய்து விடுவேன்.இணைய இணைப்பு கிடைக்காததால் காரணமாக மீண்டும் படித்து திருத்தம் செய்ய இயலவில்லை
சுட்டிக் காட்டியமைக்கு நன்றி.
Tamil Kalanchiyam said...
பதிலளிநீக்குதங்களின் பதிப்பு மிகவும் அருமை. தங்களின் இந்த அருமையான பதிப்பை இன்னும் பல நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள நமது தமிழ் களஞ்சியத்தில் பகிருங்கள். வாழ்க தமிழ் வளர்க தமிழ் பற்று.//
நன்றி தமிழ் களஞ்சியம்
பசி’பரமசிவம் said...
பதிலளிநீக்குபுயல்னாவே அடிவயிறு கலங்குது.இதுக்குப் பெயரெல்லாம் தேவையா?//
பெயர் வைப்பது புள்ளி விவரங்களுக்கு தேவைப்படும் பரமசிவம் சார்.
சிட்டுக்குருவி said...
பதிலளிநீக்குநீலத்துக்கு பெரிய பெரிய மரங்களெல்லாம் விழுந்திருக்கு உங்க வீட்டு வாழை மரம் விழாமலா இருக்கும்...:)
ஹலோ எப் எம் விற்கு பாராட்டுக்கள்//
வருகைக்கு நன்றி சிட்டுக்குருவி
இரவின் புன்னகை said...
பதிலளிநீக்குநீலத்தில அகப்பட்ட சென்னையின் நிலை ரொம்பவே மோசம்....
மாக்கள் என்று எழுதியுள்ளீர்கள், மாக்கள் என்றால் விலங்கு என்று பொருள்... மக்கள் என்று மாற்றலாமே!!!
வாழ்த்துகள்...//
தவறுதான் கண்ணில் படவில்லை. இனி கவனமாக இருக்கிறேன்.
ஹலோ எஃப்.எம். ஐ தாராளமாகப் பாராட்டலாம்
பதிலளிநீக்கு