என்னை கவனிப்பவர்கள்

புதன், 7 நவம்பர், 2012

பாலகுமாரனின் முதலைக் கவிதைகள்-பகுதி 2


  பால குமாரனின் நாவல்களில் இயல்பான நடை இருக்கும். கதாநாயகர்கள் மென்மையானவர்களாகவும் கதாநாயகிகள் புத்திசாலிகளாகவும், உணர்ச்சி வசப்படுபவர்களாகவும் இருப்பார்கள். இவரது கதைகளில் ஆங்காங்கே கவிதைகளையும் சினிமாப் பாடல்களையும் குறிப்பிடுவார். 

  அவரது நாவல்களில் கரையோர முதலைகள் எனக்குப் பிடித்தமான ஒன்று. இரும்புக் குதிரைகளில் குதிரைகளின் தன்மையை மனிதனோடு  ஒப்பிட்ட பாலகுமாரன் கரையோர முதலைகள் என்ற நாவலில் முதலையின் குணாதிசியங்களை ராமநாதன் என்ற பாத்திரத்தின் வாயிலாக கவிதைகள் படைத்திருப்பது அருமை.
இதோ  இந்த சுவையான கவிதையைப் படியுங்கள்.

                      முதலைக் கவிதை  2                     
                    மரம் செடி இலைகள் போல
                    மண் வாழும் உயிர்கள் போல 
                    மூச்சுவிடத் தெரிந்த முதலை 
                    நீருக்குள் எதற்காய் போச்சு?
                    கூடுகள் குகைகள் இன்றி 
                    நீரடியில்  உறங்கலாச்சு 
                    நரிக் குகையில் சிங்கம்போகும்;
                    குயில்  முட்டை காக்கை கூட்டில்;
                    காக்கைகள்  மனிதர் வீட்டில்;
                    புற்று மண் எறும்பு கட்ட,
                    பாம்புக்கு அதுவே கட்டில்;
                    உன்சுவர் எனது வீட்டில் 
                    என் கலப்பை உனது வரப்பில்
                    அடுத்தவர் உழைப்பில் சுகிக்கும் 
                    எண்ணமே முதலைக் கில்லை
                    நீரடி எல்லாம் இங்கே 
                    பூமித் தாய் கருப்பை போல 
                    எல்லைகள் இல்லா தேசம் 
                    திசைகூட அழியும் ஆங்கே 
                    மனிதர்கள் பிரித்துப் போட்ட 
                    நிலம் பார்த்து சோகத்தோடு 
                    அழுவதே முதலைக் கண்ணீர் 
                    தெரிந்தபின் குறை சொல்லாதீர் 

*****************************************************************************************



*************************************************************************************************************

  இதைப் படித்தீர்களா?
பாலகுமாரனின் கவிதைகள்!l
பாலகுமாரனின் இரும்பு குதிரைகள்-நிறைவுக் கவிதை




17 கருத்துகள்:

  1. முதலை கண்ணீர் வடிக்கிறாங்க பாருங்க..ன்னு குறை சொல்றவங்க உங்க பதிவை படிச்சி இனிமே சொல்லமாட்டாங்க.. ! நல்ல சிந்தனைகளை அழகான நடையில் சொல்கிறீர்கள். நல்ல விமர்சகர்.

    பதிலளிநீக்கு
  2. முத்தாய்ப் பான வரிகள் சிறந்த பகிர்வு.

    பதிலளிநீக்கு
  3. அருமையான படைப்பை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி நண்பரே!

    பதிலளிநீக்கு
  4. ரசனையான பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..

    பதிலளிநீக்கு
  5. உஷா அன்பரசு said...
    முதலை கண்ணீர் வடிக்கிறாங்க பாருங்க..ன்னு குறை சொல்றவங்க உங்க பதிவை படிச்சி இனிமே சொல்லமாட்டாங்க.. ! நல்ல சிந்தனைகளை அழகான நடையில் சொல்கிறீர்கள். நல்ல விமர்சகர்.//
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி உஷா!

    பதிலளிநீக்கு
  6. Sasi Kala said...
    முத்தாய்ப் பான வரிகள் சிறந்த பகிர்வு.//
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சசிகலா!

    பதிலளிநீக்கு
  7. வே.சுப்ரமணியன். said...
    அருமையான படைப்பை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி நண்பரே!//
    நன்றி சுப்ரமணியன்

    பதிலளிநீக்கு
  8. மாலதி said...
    நல்ல சிந்தனை நன்றி//

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மாலதி

    பதிலளிநீக்கு
  9. மாற்றுப்பார்வை said...
    சூப்பர்//
    மாற்றுப் பார்வைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  10. இராஜராஜேஸ்வரி said...
    ரசனையான பகிர்வுகள்.. பாராட்டுக்கள்.//
    நன்றி இராஜேஸ்வரி .

    பதிலளிநீக்கு
  11. அருமையான பகிர்வு...

    பதிலளிநீக்கு
  12. அருமையான ஒரு கதாசிரியருக்குள் இருக்கும்
    கவிமனம் புலனாயிற்று ...'
    அருமை அருமை..
    பகிர்வுக்கு நன்றி நண்பரே...

    பதிலளிநீக்கு
  13. பாலகுமாரனின் புத்தகங்கள் படித்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டன. மீண்டும் தூசி தட்ட வேண்டிய ஆர்வத்தைத் தங்கள் பதிவுகள் தருகின்றன.

    நன்றிகள் முரளி!

    பதிலளிநீக்கு
  14. நான் முன்புபடித்து ரசித்ததை மீண்டும்படிக்கவாய்ப்பு.பகிர்வுக்கு நன்றி

    பதிலளிநீக்கு

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895