என்னை கவனிப்பவர்கள்

சனி, 24 நவம்பர், 2012

உங்கள் வலையின் பார்வையாளர் எண்ணிக்கையை அதிகமாக்க வேண்டுமா?


கற்றுக்  குட்டியின் கணினிக் குறிப்புகள்-பகுதி 2

    புதிதாக வலைப் பதிவு தொடங்குபவர்கள் சிலர் முன்னதாகவே பல விஷயங்களைத் தெரிந்து கொண்டு வருகிறார்கள்.ஏற்கனவே வலைப்பதிவு வைத்திருப்பவர்களில் சிலர் கொஞ்ச  நாட்களாக எழுதி வந்தாலும் ப்ளாக் தொடர்பான பல விஷயங்களை மெதுவாகத் தெரிந்து கொள்கிறார்கள். (என்னைப் போன்றவர்கள்)

    புதிதாக வலைப் பதிவு தொடங்கிய நண்பர் ஒருவர் "என் வலைப் பதிவை தினமும் நிறையப் பேர் பார்க்கிறார்கள்" என்றார். இத்தனைக்கும் எந்த திரட்டிகளில் அவர் இணைக்கவில்லை. எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. ஒரு வேளை பதிவின் தரம் அப்படி இருக்கும் போல இருக்கிறது என்று பார்த்தால் எனது பதிவுகளே பரவாயில்லை போலிருந்தது.வேறு ஒரு செட்டிங்க்ஸ் காக எனது உதவியை நாடினார். அதன் காரணமாக அவரது ப்ளாக்கில் நுழைந்து பார்த்தபோதுதான் தெரிந்தது.Stats-Overview பகுதியில் Dont track own your pageviews என்பதற்கு பதிலாக Track my pageviews செலக்ட் செய்யப் பட்டிருந்தது. அப்படி செய்தால் நாம் நமது பதிவுகளை கிளிக் செய்யும்போது அவையும் பார்வைக் கணக்கில் சேர்ந்துவிடும். ஆனால் நாம் அவற்றை பிறர் பார்த்ததாக நினைத்துக் கொண்டிருப்போம்.
   இதை அவரிடம் சொனபோது "அப்படியா இதை கவனிக்கத் தவறிட்டேனே" என்றார். "அதை மாற்றிவிடட்டுமா என்று கேட்டேன். "வேண்டாம் கொஞ்ச நாள் அப்படியே இருக்கட்டும்  அப்பதான் நிறையப் பேர் பாத்தமாதிரி இருக்கும்" என்றார் 

     என் கருத்துப் படி பார்வையாளர்களின்  சரியான எண்ணிக்கை தெரிந்தால்தான் நமது பதிவுகளை நாம் மதிப்பிட்டுக் கொள்ள முடியும் அதற்கேற்ற வாறு நமது பதிவிடும் விஷயங்களை தேர்ந்தெடுத்துக் கொள்ள முடியும்..
  உள்ளவாறு  பிறர் பார்க்கும் எண்ணிக்கை மட்டும் வேண்டுமென்றால். Dont track my pageviews செலக்ட் செய்திருக்க வேண்டும். ப்ளாக்கரின் stats பகுதிக்கு சென்றால் படம் 1 இல் இருப்பது போல  Dont track your own pageviewsதான் கண்ணில் படும்.அதைக் கிளிக் செய்தால்தான் 2 வது படத்தில் இருப்பது போல இரண்டு  Option இருப்பது தெரிய வரும்.

படம் 1


படம்2
இதில் Dont track my pageviews என்பதை செலக்ட் செய்திருக்க வேண்டும்.
இதில்கவனிக்கக் வேண்டிய விஷயம் என்னவெனில் உங்கள் ப்ரௌசரில் குக்கிகள்(Cookies) செயல் படுத்தப் பட்டிருக்கவேண்டும். ஒரு வேலை சில காரணங்களுக்காக குக்கிகள் முடக்கப் பட்டிருந்தால் இது வேலை செய்யாது.
  பல்வேறு பிரவுசர்களை( Mozilla Firefox, Internet explorer, Goggle Chrome போன்றவை) பயன்படுத்துபவராக இருந்தால்  ஒவ்வொரு  ப்ரௌசரிலும் இந்த செட்டிங்ஸ்களை மேற்கொள்ளவேண்டும்.
   மேலும் கணினியை சுத்தப் படுத்த சில ஆண்டி வைரஸ் மென்பொருட்கள், C Cleaner போன்றவை பயன்படுத்தப் படுகிறது. இவை தேவையற்ற கோப்புகள், இணைய இணைப்பின்போது உருவாக்கப் படும் தற்காலிகக் கோப்புகள் போன்றவற்றோடு  குக்கிகளையும் நீக்கி விடும்.  இவை நீக்கப் படுவதால் பயன் படுத்தி முடித்த பின் மீண்டும் செட்டிங்ஸ்களை மாற்ற வேண்டும். இல்லையென்றால் நம் பக்கப் பார்வைகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.

    ப்ளாக்கர்   வழங்கும் பார்வைக் கணக்குகள் தவிர அதிகம் பேர் பயன்படுத்துவது Histats.com இன் பார்வை விவரங்கள் தான். இதுவும் பிளாக் வைத்திருப்பவர்களின்  சொந்தப் பார்வைகளை கணக்கில் எடுத்துக் கொள்ளும். இருந்தாலும் இதில் காட்டப்படும் பக்கப் பார்வைகளின் எண்ணிக்கை பிளாக்கர் காட்டும் பக்கப் பார்வைகளைவிட குறைவாக இருக்கும். இதற்கு காரணம் என்ன?இதில் எப்படி நமது சொந்தப் பக்கப் பார்வைகளை கணக்கில் எடுக்காமல் இருக்கச் செய்வது? இதை எல்லாம் இந்தப் பதிவிலேயே சொல்லலாம் என்றுதான் இருந்தேன். உங்கள் பொறுமையை சோதிக்க விரும்பவில்லை. அடுத்த கற்றுக் குட்டியின் கணினிக் குறிப்புகளில் பார்க்கலாம் 

(உங்கள் வலையின் பார்வையாளர் எண்ணிக்கையை அதிகமாக வேண்டுமா? கேட்டுட்டு அதிகமாறதுக்கு வழி சொல்லுவீங்கன்னு பாத்தா குறையறதுக்கு வழி சொல்லறீங்களே. இதை யாரு உங்களை கேட்டது அப்படின்னு யாரோ சொல்றது  கேக்குது..
அதுக்கு பதில் "ஹி ஹி ஹி" 

கொசுறு : குக்கீஸ் என்றால் என்ன?
மைக்ரோ சாப்ட் என்ன சொல்லுதுன்னா
  A Cookie is a small text based file given to you by a visited website that helps identify you to that site. Cookies are used to maintain state information as you navigate different pages on a Web site or return to the Web site at a later time.

குக்கீஸ்  பேரைக் கேட்டு பயப்பட வேண்டாம்னு இப்படி சொல்லுது.
Important: Cookies cannot be used to run code (run programs) or to deliver viruses to your computer.

  (அப்புறமா ஒரு எச்சரிக்கை  என்னோட வலைப்பக்கப் பார்வைகள் கிட்டத்தட்ட அடிச்சி புடிச்சி ஒரு லட்சத்தை தொடப் போகுதுன்னு ப்ளாக்கர்  கணக்கு காட்டுது. இன்னைக்குள்ள அதை தொடலன்னா இன்னைக்கே இன்னொரு பதிவு போட்டுடுவேன். ஜாக்கிரதை)
**************************************************************************************************************

நேரம் இருந்தால் இதையும் படியுங்கள் 
கற்றுக் குட்டியின் கணினிக் குறிப்புகள்-Font Shortcut-Word 20072007.html

57 கருத்துகள்:

  1. ஒரு இலட்சத்துக்கு முற்கூட்டிய வாழ்த்துக்கள்...

    சொந்தப் பக்க பார்வைகள் பற்றி எந்த தளத்திலயும் நான் படிக்க வில்லை ஆனால் தளம் ஆரம்பித்த உடனேயே அந்த செட்டிங்கை மாற்றிவிட்டேன்..

    இதுவெல்லாம் அடிப்படை செட்டிங்குள் என்று அன்றே அறிந்து கொண்டேன்..

    உண்மையில் எமது பதிவின் தரத்தை அறிய மிக முக்கியமானது இது..

    என்றோ ஒரு நாள் நான் பதிவிட்ட பதிவொன்று இன்றுவரையும் அதிக பார்வையாளர்களால் பார்க்கப்பட்டுக் கொண்டிருக்கிறது...

    அது இக்காலத்துக்கு அவசியமானதாகவும் இருக்கிறது என்பதால் என்றே நினைக்கிறேன்

    பகிர்வுக்கு நன்றி சார்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான் நல்ல பதிவுகள் பல நாட்கள் கழித்தும் தேடிப் பிடித்துப் பார்க்கப்படும்.
      நன்றி சகோ சிட்டுக் குருவி.

      நீக்கு
  2. நானும் என் செட்டிங்சை மாற்றி விட்டேன் நண்பா. நன்றி.

    பதிலளிநீக்கு
  3. வலைப் பதிவு குறித்த தங்கள் கட்டுரைகள் தொடரட்டும். எல்லோருக்கும் பயன்படும்.

    பதிலளிநீக்கு
  4. எந்த பலனும் எதிர்பாராத அருமையான உழைப்பு ...வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  5. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  6. விளக்கங்களுக்கு நன்றி...

    நீங்கள் சொன்னது போல் (Dont track your own pageviews) C Cleaner அல்லது வேறு Cleaner பயன்படுத்திய பிறகு settings மாற்ற வேண்டும்...

    tm3

    பதிலளிநீக்கு
  7. தொழில்நுட்ப பதிவராகவும் பரிணாமித்து விட்டீர் போங்கள்! அருமை!

    பதிலளிநீக்கு
  8. ஒரு லட்சத்தை தொடப் போகும் வலைப்பக்கப் பார்வைக்கு வாழ்த்துகள் .. பாராட்டுக்கள்....

    பதிலளிநீக்கு
  9. //உங்கள் வலையின் பார்வையாளர் எண்ணிக்கையை அதிகமாக வேண்டுமா? கேட்டுட்டு அதிகமாறதுக்கு வழி சொல்லுவீங்கன்னு பாத்தா குறையறதுக்கு வழி சொல்லறீங்களே. இதை யாரு உங்களை கேட்டது அப்படின்னு யாரோ சொல்றது கேக்குது..
    அதுக்கு பதில் "ஹி ஹி ஹி" //

    லட்சம் தொட வாழ்த்துக்கள்...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி! விஜயன்.லட்சம் தொடுவது சாதனை இல்லை என்றாலும் ஒரு அல்ப சந்தோஷம்.

      நீக்கு
  10. உங்கள் பகிர்வுக்கு நன்றி.ஒரு லட்சத்தை எட்டிப்பிடிக்கும் உங்களுக்கு எங்களின் வாழ்த்துக்கள்.இன்னும் தொடரட்டும்

    பதிலளிநீக்கு
  11. நல்ல குறிப்புகள்! பகிர்வுக்கு நன்றி! ஒரு லட்சத்துக்கு வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  12. இந்த குறிப்பு ஏற்கெனவே நான் அறிந்தது. மேலும் தகவல்கள் எதிர்பார்க்கிறேன்.
    ஒரு இலட்சத்திற்கு இன்னம் நான்குதான் உள்ளது. நானே திரும்ப வந்து இலட்சத்தை தொட்டுவிடட்டுமா?.நன்றி வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிறையப் பேர் அறிந்ததுதான். ஒரு சிலர்க்கு உதவக் கூடும் நன்றி எழில் மேடம்.

      நீக்கு
  13. பெரும்பாலானா பிளாக்கர்களுக்கு தேவைப்படும் பதிவு... மிக தெளிவாக விபரமாக எழுதி உளீர்கள்....

    பதிலளிநீக்கு
  14. ஆஹா..இதுவா விஷயம். நானும் மாற்றி விட்டேன்.நன்றி.

    பதிலளிநீக்கு
  15. அதான் தொட்டுவிட்டீர்களே! வாழ்த்துகள்.

    எனது வலைப்பதிவில் Dont track my pageviews இப்படிதான் இருக்கிறது அதனால் மாற்றம் தேவையில்லை என்று நினைக்கிறேன். இந்த அருமையான தகவலை பகிர்ந்ததற்கு மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இருந்தால் மாற்றம் செய்யத் தேவை இல்லை.ஒரே பிரவுசர் பயன்படுத்துபவர்களுக்கும் கணினியை தான் மட்டும் பயன்படுத்துபவர்களுக்கும் பிரச்சனை இல்லை

      நீக்கு
  16. //உங்கள் வலையின் பார்வையாளர் எண்ணிக்கையை அதிகமாக வேண்டுமா? கேட்டுட்டு அதிகமாறதுக்கு வழி சொல்லுவீங்கன்னு பாத்தா குறையறதுக்கு வழி சொல்லறீங்களே. //

    :))

    பதிலளிநீக்கு
  17. 90 க்கும் மேற்பட்ட பதிவிட்டு எந்த திரட்டியிலும் இணைக்காமல் இருந்த எனக்கு நீங்கதான் தமிழ்மணத்தில் இணைத்து உதவினீர்கள். என் எழுத்துக்களை பலரும் வாசிக்க வழிகாட்டிய ஆசிரியர் நீங்கள். கற்று குட்டியாக இருந்த எனக்கு நீங்கள் செய்த உதவி என்றும் மறக்க முடியாது.

    பதிலளிநீக்கு
  18. தகவல்கள் அடங்கிய பதிவு...

    அனைவருக்கும், பயன்படும்...

    பதிலளிநீக்கு
  19. நானெல்லாம் ஒரு ஒரு படியாக ஏறி வரும் பொழுது
    சிலர் பிளைட்டுல பறக்கிற மாதிரி கடகடன்னு பறக்கிறாங்களே...
    எப்படின்னு யோசிச்சிகொண்டே இருக்கும் பொழுது...
    உங்கள் பதிவின் தலைப்பு இழுத்தது.

    வந்து பார்த்தால் நீங்கள் எப்படி மேலே பறக்கிறீர்கள் என்பதை
    அழகாகச் சொல்லி இருக்கிறீர்கள்.
    நன்றியுடன் வாழ்த்துக்கள் முரளிதரன் ஐயா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் பார்க்கும் எனது பக்கப் பார்வைகளை கணக்கில் எடுத்துக் கொள்ளத வகையில் எப்போதோ செட செய்துவிட்டேன்.

      நீக்கு
  20. உங்கள் விளக்கங்கள் பார்த்தேன் மற்றவையும் பார்க்க வேண்டும்.
    மிக்கநன்றி.

    பதிலளிநீக்கு

  21. “We are urgently in need of A , B , O blood group (kidnney) 0RGANS, Contact For more
    details.
    Whats-App: 917204167030
    No : 917204167030
    Help Line: 917204167030”

    பதிலளிநீக்கு

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895