கற்றுக் குட்டியின் கணினிக் குறிப்புகள்-பகுதி 2
புதிதாக வலைப் பதிவு தொடங்குபவர்கள் சிலர் முன்னதாகவே பல விஷயங்களைத் தெரிந்து கொண்டு வருகிறார்கள்.ஏற்கனவே வலைப்பதிவு வைத்திருப்பவர்களில் சிலர் கொஞ்ச நாட்களாக எழுதி வந்தாலும் ப்ளாக் தொடர்பான பல விஷயங்களை மெதுவாகத் தெரிந்து கொள்கிறார்கள். (என்னைப் போன்றவர்கள்)
புதிதாக வலைப் பதிவு தொடங்கிய நண்பர் ஒருவர் "என் வலைப் பதிவை தினமும் நிறையப் பேர் பார்க்கிறார்கள்" என்றார். இத்தனைக்கும் எந்த திரட்டிகளில் அவர் இணைக்கவில்லை. எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. ஒரு வேளை பதிவின் தரம் அப்படி இருக்கும் போல இருக்கிறது என்று பார்த்தால் எனது பதிவுகளே பரவாயில்லை போலிருந்தது.வேறு ஒரு செட்டிங்க்ஸ் காக எனது உதவியை நாடினார். அதன் காரணமாக அவரது ப்ளாக்கில் நுழைந்து பார்த்தபோதுதான் தெரிந்தது.Stats-Overview பகுதியில் Dont track own your pageviews என்பதற்கு பதிலாக Track my pageviews செலக்ட் செய்யப் பட்டிருந்தது. அப்படி செய்தால் நாம் நமது பதிவுகளை கிளிக் செய்யும்போது அவையும் பார்வைக் கணக்கில் சேர்ந்துவிடும். ஆனால் நாம் அவற்றை பிறர் பார்த்ததாக நினைத்துக் கொண்டிருப்போம்.
இதை அவரிடம் சொனபோது "அப்படியா இதை கவனிக்கத் தவறிட்டேனே" என்றார். "அதை மாற்றிவிடட்டுமா என்று கேட்டேன். "வேண்டாம் கொஞ்ச நாள் அப்படியே இருக்கட்டும் அப்பதான் நிறையப் பேர் பாத்தமாதிரி இருக்கும்" என்றார்
என் கருத்துப் படி பார்வையாளர்களின் சரியான எண்ணிக்கை தெரிந்தால்தான் நமது பதிவுகளை நாம் மதிப்பிட்டுக் கொள்ள முடியும் அதற்கேற்ற வாறு நமது பதிவிடும் விஷயங்களை தேர்ந்தெடுத்துக் கொள்ள முடியும்..
உள்ளவாறு பிறர் பார்க்கும் எண்ணிக்கை மட்டும் வேண்டுமென்றால். Dont track my pageviews செலக்ட் செய்திருக்க வேண்டும். ப்ளாக்கரின் stats பகுதிக்கு சென்றால்
படம் 1 இல் இருப்பது போல Dont track your own pageviewsதான் கண்ணில் படும்.அதைக் கிளிக் செய்தால்தான் 2 வது படத்தில் இருப்பது போல இரண்டு
Option இருப்பது தெரிய வரும்.
| படம் 1 |
| படம்2 |
இதில் Dont track my pageviews என்பதை செலக்ட் செய்திருக்க வேண்டும்.
இதில்கவனிக்கக் வேண்டிய விஷயம் என்னவெனில் உங்கள் ப்ரௌசரில் குக்கிகள்(Cookies) செயல் படுத்தப் பட்டிருக்கவேண்டும். ஒரு வேலை சில காரணங்களுக்காக குக்கிகள் முடக்கப் பட்டிருந்தால் இது வேலை செய்யாது.
பல்வேறு பிரவுசர்களை( Mozilla Firefox, Internet explorer, Goggle Chrome போன்றவை) பயன்படுத்துபவராக இருந்தால் ஒவ்வொரு ப்ரௌசரிலும் இந்த செட்டிங்ஸ்களை மேற்கொள்ளவேண்டும்.
மேலும் கணினியை சுத்தப் படுத்த சில ஆண்டி வைரஸ் மென்பொருட்கள், C Cleaner போன்றவை பயன்படுத்தப் படுகிறது. இவை தேவையற்ற கோப்புகள், இணைய இணைப்பின்போது உருவாக்கப் படும் தற்காலிகக் கோப்புகள் போன்றவற்றோடு குக்கிகளையும் நீக்கி விடும். இவை நீக்கப் படுவதால் பயன் படுத்தி முடித்த பின் மீண்டும் செட்டிங்ஸ்களை மாற்ற வேண்டும். இல்லையென்றால் நம் பக்கப் பார்வைகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.
ப்ளாக்கர் வழங்கும் பார்வைக் கணக்குகள் தவிர அதிகம் பேர் பயன்படுத்துவது Histats.com இன் பார்வை விவரங்கள் தான். இதுவும் பிளாக் வைத்திருப்பவர்களின் சொந்தப் பார்வைகளை கணக்கில் எடுத்துக் கொள்ளும். இருந்தாலும் இதில் காட்டப்படும் பக்கப் பார்வைகளின் எண்ணிக்கை பிளாக்கர் காட்டும் பக்கப் பார்வைகளைவிட குறைவாக இருக்கும். இதற்கு காரணம் என்ன?இதில் எப்படி நமது சொந்தப் பக்கப் பார்வைகளை கணக்கில் எடுக்காமல் இருக்கச் செய்வது? இதை எல்லாம் இந்தப் பதிவிலேயே சொல்லலாம் என்றுதான் இருந்தேன். உங்கள் பொறுமையை சோதிக்க விரும்பவில்லை. அடுத்த கற்றுக் குட்டியின் கணினிக் குறிப்புகளில் பார்க்கலாம்
(உங்கள் வலையின் பார்வையாளர் எண்ணிக்கையை அதிகமாக வேண்டுமா? கேட்டுட்டு அதிகமாறதுக்கு வழி சொல்லுவீங்கன்னு பாத்தா குறையறதுக்கு வழி சொல்லறீங்களே. இதை யாரு உங்களை கேட்டது அப்படின்னு யாரோ சொல்றது கேக்குது..
அதுக்கு பதில் "ஹி ஹி ஹி"
கொசுறு : குக்கீஸ் என்றால் என்ன?
கொசுறு : குக்கீஸ் என்றால் என்ன?
மைக்ரோ சாப்ட் என்ன சொல்லுதுன்னா
A Cookie is a small text based file given to you by a visited website
that helps identify you to that site. Cookies are used to maintain state
information as you navigate different pages on a Web site or return to
the Web site at a later time.
குக்கீஸ் பேரைக் கேட்டு பயப்பட வேண்டாம்னு இப்படி சொல்லுது.
Important: Cookies cannot be used to run code (run programs) or to deliver viruses to your computer.
(அப்புறமா ஒரு எச்சரிக்கை என்னோட வலைப்பக்கப் பார்வைகள் கிட்டத்தட்ட அடிச்சி புடிச்சி ஒரு லட்சத்தை தொடப் போகுதுன்னு ப்ளாக்கர் கணக்கு காட்டுது. இன்னைக்குள்ள அதை தொடலன்னா இன்னைக்கே இன்னொரு பதிவு போட்டுடுவேன். ஜாக்கிரதை)
**************************************************************************************************************
நேரம் இருந்தால் இதையும் படியுங்கள்
கற்றுக் குட்டியின் கணினிக் குறிப்புகள்-Font Shortcut-Word 20072007.html
குக்கீஸ் பேரைக் கேட்டு பயப்பட வேண்டாம்னு இப்படி சொல்லுது.
Important: Cookies cannot be used to run code (run programs) or to deliver viruses to your computer.
(அப்புறமா ஒரு எச்சரிக்கை என்னோட வலைப்பக்கப் பார்வைகள் கிட்டத்தட்ட அடிச்சி புடிச்சி ஒரு லட்சத்தை தொடப் போகுதுன்னு ப்ளாக்கர் கணக்கு காட்டுது. இன்னைக்குள்ள அதை தொடலன்னா இன்னைக்கே இன்னொரு பதிவு போட்டுடுவேன். ஜாக்கிரதை)
**************************************************************************************************************
நேரம் இருந்தால் இதையும் படியுங்கள்
கற்றுக் குட்டியின் கணினிக் குறிப்புகள்-Font Shortcut-Word 20072007.html

