புஷ்பா மாமி ஏதோ வேலை காரணமாக வெளியில் சென்றுவிட்டு களைத்து எங்கள் வீட்டைக் கடந்து செல்கையில் என்னைப் பார்த்துவிட்டார். உடனே நீலம் புயல் போல திசை திரும்பி எங்கள் வீட்டுக்குள் நுழைந்தார்.
"என்னடா!முரளி பாத்துண்டே இருக்க.உங்கப்பாவோ உங்கம்மாவோ இருந்தா என்ன மாமி எப்படி இருக்கேள்? னு விசாரிப்பா?நீ என்னடான்னா கண்டும் காணாத மாதிரி இருக்க. அதெல்லாம் பெரியவாளோட போச்சு. "
"அப்படி எல்லாம் இல்ல மாமி!"
"உன் ஆத்துக்ககாரிய மாவு மிஷன்ல பாத்தேன். தீபாவளி வந்துதுடுத்தே. நீ போய் அரச்சுண்டு வரக் கூடாதா!நான் எங்க போய்ட்டு வரேன் தெரியுமா?"
"தெரியாது"
"அது எப்படிடா எல்லாம் ஒன்வோர்ட்ல யே பதில் சொல்ற! நீ இன்சூரன்ஸ் ஏதாவது போட்டிருக்க யா! இன்சுரன்சே போடக் கூடாது.ஐ.சி.ஐ.சி.ஐ தான் படுத்தறான்ன. நம்ம பணத்த கட்டறதுக்கே LIC காரன் படாத பாடு படுத்தறான். நீ ஏதாவது ஹெல்ப் பண்ணக்கூடாதா!!"
"என்ன ஆச்சு மாமி"
"அட ரெண்டு வார்த்தை பேசிட்டயே" மாமி ஜோக்கடித்துவிட்டு "நீ பேசறதுக்கே யோசிக்கற.ஆனா இன்சூரன்ஸ் ஏஜென்ட்டெல்லாம் பேசியே நம்மை ஏமாத்தி பாலிசியை தலையில கட்டிட்டு போயிடறான்.தெரிஞ்சவா, உறவுக்காரான்னு வந்து கேக்கறப்ப முடியாதுன்னு மூஞ்சில அடிச்சாப்பல சொல்ல முடியல தாட்சன்யத்துக்கு போடவேண்டியதாப் போச்சு. இப்ப அவஸ்தைப் படறேன். ஒரு பாலிசியில ரெண்டு ப்ரீமியம் கட்டாம விட்டுட்டேன். அதையும் சேத்து இப்ப கட்டிடலாம்னு வேளச்சேரி ப்ராஞ்ச்சுக்கு போனா, ட்யூ இருந்தா இங்க கட்ட முடியாது. அந்த பிராஞ்சுக்குத்தான் போகணும் சொல்றான். என்ன கம்ப்யூட்டர் வந்து என்ன பிரயோஜனம்.கட்டரதுக்கே இப்படின்னா திருப்பி குடுக்கறதுக்கு என்னென்ன பண்ணுவானோ. அதுவும் ஏதாவது ஆச்சுன்னா ஒழுங்கா குடுப்பானா? LIC,கவர்ன்மென்ட்டுன்னு நம்பிதான் போடறோம்." மாமி மூச்சு விடாமல் பேசினார்."
"ஆமாம் மாமி,அவங்க ரூல்ஸ் படிதானே நடப்பாங்க!. நெட்ல கூட பழைய ட்யூ எதுவும் இல்லன்னதான் கட்ட முடியும். "
"நீ எப்பவுமே அவங்களைத்தான் சப்போர்ட் பண்ணுவே.!"
"நீங்க டீட்டெயில்ஸ் குடுங்க நான் வேணும்னா அந்த பிராஞ்சில கேட்டுட்டு வரேன்."
"சரிடாப்பா! ரொம்ப தேங்க்ஸ். நீ ICICI ல ஏதாவது பாலிசி போட்டிருக்கயா!"
"ஆமாம் மாமி. ஒரு பாலிசி இருக்கு"
"அப்படின்னா நான் சொல்றதைக் கேட்டுக்கோ. எங்காத்து மாமாவுக்கு தெரிஞ்சு ஒருத்தர் ஏதோ பென்ஷன் பிளான் ன்னு சொல்லி மூணு வருஷம் 10000 ரூபாய் ICICI ல ப்ரீமியம் கட்டி இருக்கார்.அது ஷேர் சம்பந்தப் பட்டதாம். என்னமோ IRD யாமே!?"
"ஆமாம் IRDA ன்னா Insurance Regulatory and Development Authority "
"அங்கிருந்துதான் ஒருத்தன் போன் பண்றேன்னு பேசினானாம்.பேர், பாலிசி நம்பர்.எவ்வளவு ரூபா கட்டி இருக்கீங்கன்னு கரெக்டா சொல்லிட்டு. இப்ப இந்த பாலிசியோட மார்க்கட் வேல்யூ ரொம்ப குறைவாப் போகுது. நீங்க கட்டின பணத்தில 35% தான் கிடைக்கும்.அதுவும் ஒழுங்கா தரமாட்டான்.IRDA கண்ட்ரோல் ல எல்லா இன்சுரன்சும் இருக்கறதால எங்களுக்கு கம்ப்ளைன்ட் வந்துக்கிட்டு இருக்கு. நாங்க இப்ப வாங்கி குடுத்துக்கிட்டு இருக்கோம்.நீங்களும் சொன்னீங்கன்னா உங்க பாலிசி அமவுண்டும் வாங்கி குடுக்கறோம், 600 ரூபா மட்டும் நாங்க சார்ஜ் பண்ணுவோம்.நேர்ல வரவான்னு கேட்டு பீதியைக் கிளப்பிட்டானாம்."
"அப்புறம்"
"அவரும் பயந்து போய் அடுத்த நாளே லீவு போட்டுட்டு .அங்க போய் இந்த விவரத்த சொல்லாம இப்ப க்ளோஸ் பண்ணா எவ்வளவு வரும்னு கேட்டிருக்கார். கட்டின பணத்தைவிட கூட கொஞ்சம் வரும்னு சொன்னதும் சந்தோஷமா பாலிசிய சரண்டர் பண்ணிட்டார்.
அப்புறம் மெதுவா அவன்கிட்ட போன் விவரத்தை சொல்ல, நல்ல காலம் ஏமாறாம இருந்தீங்களே அதெல்லாம் unauthorised Call. IRDA இலிருந்து நிச்சயமா யாரும் போன் பண்ண மாட்டாங்கன்னு சொன்னானாம். எப்படியெல்லாம் ஏமாத்தறா பாரு. நீயும் ஜாக்கிரதையா இரு. அவனுக்கெல்லாம் எப்படிதான் போன் நம்பர் கிடைக்குதோ தெரியல. இது இல்லாம கண்ட இன்சூரன்ஸ் காரனுங்ககிட்ட இருந்து வேற ஒரே போன் தொல்லையாம். "
"ஆமாம் மாமி விஷயம் சொன்னதுக்கு ரொம்ப தேங்க்ஸ்.இவ்வளோ விஷயம் தெரிஞ்சு வச்சிருக்கீங்களே.அதுவும் விளக்கமா சொல்றீங்களே! ஆச்சர்யமா இருக்கு."
"நான் அந்தக் காலத்து PUC யாக்கும்.உனக்கு ஒண்ணு தெரியுமா எங்காத்து மாமாவே SSLC தான் ." என்றார் பெருமையாக!
****************************************
இதைப் படிச்சிருக்கீங்களா?
ஏமாறுகிறவர்கள் இருந்தால் ஏமாற்றுகிறவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.......
பதிலளிநீக்குநாமதான் எச்சரிகையாக இருக்கனும் சார்
நல்ல பகிர்வு
உண்மைதான்.நன்கு விவரம் தெரிந்தவர்களும் ஏமாந்து விடுகிறார்கள்
நீக்குUnauthorised Call-ஆக வேண்டுமாலும் இருக்கலாம்... ஆனால் தகவல் உண்மை... (உண்மையும் ஆனதுண்டு... என் அனுபவத்தில்...) கவனமாக இருக்க வேண்டும்...
பதிலளிநீக்குநன்றி...
நீங்கள் சொல்வது சரிதான்.தானாக வந்து ஏன் உதவ வேண்டும் என்பதான் புரியவில்லை.
நீக்குஎன்னோட மின்னஞ்சல் முகவரியெல்லாம் எப்படித்தான் போகுதுன்னு தெரியல. மிகச்சரியா எனக்கு என்ன தேவையோ அதை கேட்டு மின்னஞ்சல் வந்திடுது. இதுக்குன்னே ஒரு க்ரூப் உலாவுதுன்னு நெனைக்கிறேன்.
பதிலளிநீக்குஆம்.இந்த தகவல்களைதிரட்டித் தருவதற்கென்றே சிலர் இருக்கிறார்கள்.
நீக்குஜோரா இருக்கு போங்கோ!
பதிலளிநீக்குவருகைக்கு நன்றி சார்!
நீக்குபளனுள்ள தகவல் கொடுக்கிறீங்க.
பதிலளிநீக்குரெம்ப புண்ணியம் கிடைக்கும்.
வேதா. இலங்காதிலகம்.
நன்றி மேடம்
நீக்குமிகவும் பயனுள்ள தகவல் நண்பரே...
பதிலளிநீக்குவருகைக்கு நன்றி மகேந்திரன்.
நீக்குஅருமை அய்யா. தங்களுக்கும் தங்களின் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் இனிய தீபாவளித் திருநாள் வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குநன்றி அய்யா! தங்களுக்கும் என் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.
நீக்குவிழிப்புணர்வை உண்டுபண்ணும் ஒரு தகவலைச் சுவையான கதையாக்கியிருக்கிறீர்கள்.
பதிலளிநீக்குபாராட்டுகள்.
நன்றி பரமசிவம்.
நீக்குமிகவும் உபயோகமான விழிப்புணர்வு பதிவு! நன்றி!
பதிலளிநீக்குநன்றி சுரேஷ்
நீக்குபயனுள்ள விஷயமாக இருந்தாலும் ஊர் கதையாட்டம் சொன்னாதான் நம்ம ஆளுங்க இன்ட்ஸ்ட்டா கேட்பாங்க. உங்க தகவலை பரப்பற புஷ்பா மாமிக்கு சொல்லுங்க அவங்களுக்கு followers எல்லாம் சேர்ந்து டாக்டர் பட்டம் தர்றோம்னு. (புஷ்பா மாமி PUC யிலிருந்து டாக்டேரட் வரை.. ஆஹா புது தலைப்பு கிடைச்சிருச்சே...!)
பதிலளிநீக்குஉண்மையாகவே பல தகவல்களை விரல் நுனியில் வைத்திருப்பவர்கள் உண்டு நன்றி உஷா
நீக்குபயனுள்ள விஷயத்தை மிக எளியமையாக சொல்லி செல்லும் விதம் மிக அருமை. இப்படி சொல்லுவதால் விஷயம் மனதில் மிக அழமாக பதிகிறது. பகிர்வுக்கு நன்றி
பதிலளிநீக்குநன்றி மதுரைத் தமிழன்.
நீக்குநல்ல எச்சரிக்கைப் பதிவு
பதிலளிநீக்குஏற்கெனவே ஏமந்தவர்களுக்குத்தான்
இந்தப் பதிவைப் படிக்க சங்கடமாயிருக்கும்
பகிர்வுக்கு நன்றி
இனிய தீபாவளித் திரு நாள் நல் வாழ்த்துக்கள்
நன்றி ரமணி சார். சிறிது நாட்களாக வலைப பக்கம் காணவில்லையே.உடல் நலம் ஏதேனும் சரி இல்லையோ? உடல் நலத்தை கவனித்துக் கொள்ளுங்கள் சார்.
நீக்குtha.ma 8
பதிலளிநீக்குவாக்கிற்கு நன்றி சார்!
நீக்குபயனுள்ள விஷயம் சொன்னதுக்கு ரொம்ப தேங்க்ஸ்.
பதிலளிநீக்குவருகைக்கு நன்றி இராஜேஸ்வரி
நீக்குஅவதானத்தை வலியுறுத்தியுள்ள பதிவு நன்றி முரளி !
பதிலளிநீக்குநன்றி ஹேமா!
நீக்குஉங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குநன்றி மதுரைத் தமிழன்
நீக்குஎன்னது... உங்க மனைவிய மாவு மிஷின்ல புஷ்பா மாமி பாத்தாங்களா...? எங்க வீட்லல்லாம் மாவு மில்லுல தான் பாப்பாங்க. மிஷீன் உள்ளயே போற அளவுக்கு என்ன அவசரமோ? ஹி... ஹி.... புஷ்பா மாமி மூலம் நீங்கள் பகிர்ந்த தகவல் பயனுள்ளது. இந்தக் காலத்துல எல்லாத்துலயும் விழிப்பா இருக்கத்தான் வேண்டியிருக்கு. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் இதயம் நிறைந்த இனிய தீபஒளித் திருநாள் நல்வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குநன்றி கணேஷ் சார்
நீக்குநல்ல தகவல்கள்...
பதிலளிநீக்குபகிர்வுக்கு நன்றி.
நன்றி நாகராஜ் சார்!
நீக்குஎப்படியெல்லாம் ஏமாத்தலாம்னு ரெடியா இருப்பாங்களோ?
பதிலளிநீக்குவிதம் விதமா யோசிக்கறாங்க
நீக்குநன்றி எழில் மேடம்.