சாதனைகள் பல புரிந்தவர் சச்சின்.இந்தியாவுக்குப் பெருமை தேடித் தந்தவர்.பல இளைஞர்களுக்கு முன்மாதிரியாகத் திகழ்பவர்.அவர் ஓய்வெடுக்க வேண்டிய. தருணம் வந்து விட்டது என்பதை அவரது ஆட்டம் உணர்த்துகிறது. அதை உணர்ந்து கொண்டு புகழின் உச்சியில் இருக்கும்போதே ஒய்வு முடிவை அறிவிக்க வேண்டும் என்பது என் போன்ற ரசிகர்களின் விருப்பம். அதன் விளைவாக எழுந்ததே இந்தக் கவிதை
சச்சினுக்கு ஒரு வேண்டு கோள்!
விலகி விடு
சச்சின்!
அன்பு சச்சின்!
வாழ்த்தும் வாய்கள்
வசை பாடுமுன் வழிவிடு!
கடவுள் என்று போற்றுபவர்கள்
கண்டபடி தூற்றுவதற்குள்
சத்தமின்றி விலகி விடு
பதாகை காட்டுபவர்
பாதுகைகளையும்
காட்டத் தாயாராகுமுன்
பதுங்கிவிடு!
பூக்களை தூவுபவர்கள்
கற்களை எறிவதற்குள்
கழன்றுகொள்!
வாய்ப்பு கொடுத்ததற்காக
நாட்டுக்கு
நன்றி சொல்லிவிட்டு
நகர்ந்து கொள்!
யாரும் அடைய முடியாத
உயரத்தில் இருக்கிறாய்
தடுமாறி விழுவதற்குள்
தானாக இறங்கிவிடு!
நீ
ஆடிச் சாதித்து விட்டாய்!
பிறரையும்
சாதனை செய்ய விடு!
அதில் சந்தோஷப்படு!
உண்மையில் நீ
விளையாட்டை
விரும்புகிறாயா?
ஒரு சச்சின் போதாது
ஓராயிரம் சச்சின்கள்
உருவாக நீ கொஞ்சம்
உழைத்துப் பார்
உனது சாதனைகளின்போது
ஏற்பட்ட சந்தோஷத்தை விட
இது உயர்ந்தது
என்பதை உணர்வாய்!
மக்கள் பிரதிநிதியாய் மட்டும்
சிக்கல் இன்றி செயல்படு!
இளைஞர் களுக்கு
ஊக்கம் கொடு!
எள்ளி நகையாடுமுன்
நல்லதோர் முடிவெடு!
இப்படிக்கு
உன்
நன்மையை நாடும் ரசிகர்கள்
******************************************************************
******************************************************************
37 கருத்துகள்:
நல்ல வரிகள்...
ஒரே ஒரு பிரச்சனை என்னவென்றால் அவரைப்பற்றிய செய்திகள் எதுவுமே அவர் பார்ப்பதில்லை, கேட்பதில்லை என்பது தான்... வெற்றியின் ரகசியம் அது தானே...!
நல்ல முடிவு எடுப்பார்... நம்புவோம்...
நன்றி...
tm1
காலத்துக்கு ஏற்ற கவிதை.
தேவையான கவிதை.... விலகி, பிறகு பல இளைஞர்களை உருவாக்கலாம்!....
ஆனால் புரியவேண்டுமே..
உண்மைதான்! காலம்தான் அவருக்கு உணர்த்த வேண்டும்!
நன்றி சொல்லிவிட்டு நகர்ந்து கொள்!///
வரவேற்கிறேன் உங்களது விருப்பத்தை
சச்சினின் தீவிர ரசிகனான நானே இந்த தலைப்பை தான் சொல்லிட்டு இருக்கேன்
இந்திய வீரர்கள் ஒவ்வொரும் எதிர்கால சச்சின்களே...
நீங்கள் இன்னும் எதிர்கால சச்சின்களுக்கு இடங்கொடுக்காமல் அவர்களுக்கு தடையாக இருப்பது கவலைக்குறியதே
அருமையான கவிதை, அனைத்து ரசிகர்களின் மனதிலும் இதே எண்ணம்தான் உங்கள் மூலம் வெளிப்படுகிறது.
விளம்பர ஒப்பந்தமெல்லாம் முடியறப்ப அவராவே பேட்டைத் தூக்கி அந்தால போட்டுருவார். தைரியமா இருங்க .. என்ன ஒன்னு...தூங்கும்போது கெட்ட கெட்ட கனவா வருது..... வயதான பெரியவர் என்பதால் அவரை இனிமேல் 'ன்' னு
போட்டெல்லாம் கூப்பிடக்கூடாது ...'சச்சிர் ' அப்படின்னு தான் கூப்பிடனும்னு அவரு ரசிகரெல்லாம் கோஷம் போடறா மாதிரி ஒரு பயங்கரமான கனா ...
சச்சிர் வாழ்க
Thank you for your Comments
Thank you for your comment
அதை செய்தால் நல்லது பார்ப்போம்
நன்றி சுரேஷ்
நன்றி கண்ணதாசன் சார்
ஆம் பெரும்பாலான ரசிகர்கள் அவர் புகழோடு செல்வதையே விரும்புகிறார்கள்
Unmaidhaan
Thank you Akash
ஹி ஹி
அதுவே சரியென்றே எண்ணுகிறேன்
படிக்கும்போதும் நினைக்கும்போதும் கேட்கும்போதும் மனதுக்குக் கஷ்டமாக இருந்தாலும் அதுதான் நிதர்சனம். இனிமேல் டெண்டுல்கர் அணியில் இருப்பார், பேட் செய்ய வரமாட்டார், அவர் விக்கெட் விழுந்ததாகக் கணக்கிலெடுக்கப்படும் என்று சொல்லி விடலாம்! அவர் அணியில் இருந்தால்தான் ஏதோ ஹார்லிக்ஸாமே... சீ பூஸ்டாமே!! :))
இளைஞர்களுக்கு வழி விட வேண்டும்
உண்மைதான். இளைஞர்கள் அணியில் இடம் கிடைப்பதற்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள். சச்சின் ஓய்வு பெற்று அவர்களுக்கு வழிவிடவேண்டும்.
இந்தாளு ரிடையர் அறிவிச்சா எல்லாரும் பட்டாசு வெடிச்சு கொண்டாடும் நிலைக்கு தள்ளப் பட்டுவிட்டனர்.
இதை சொலலவும் துணிவு வேண்டும். வாழ்த்துடன்
வேதா. இலங்காதிலகம்.
இப்படியும் கவிதைகள் எழுதலாமோ !
இனி அவரே விருப்பப்பட்டாலும்
விளையாட முடியாது.... என்பது நமக்கெல்லாம்
தெரியுது... அவருக்குத் தெரியாமலா போய்விடும்.
கவிதையில் கருத்துக்கோர்வை சூப்பர் முரளிதரன் ஐயா.
புகழின் உச்சியில் இருக்கும்போதே ஒய்வு முடிவை அறிவிக்க வேண்டும் என்பது என் போன்ற ரசிகர்களின் விருப்பம். - அப்பதான் அவர் புகழ் அப்படியே மறக்க முடியாம மனசில நிற்கும். நிஜம்தான். கவிதை அருமை. சச்சின் பிரிவு உபசாரத்துக்கு முதல் வாழ்த்துப்பா நீங்கதான்.
Thank you Kuttan
கருத்துக்கு நன்றி ஸ்ரீராம்
கருத்துக்கு நன்றி Sir
கருத்துக்கு நன்றி தமிழ் பிரியன்
கருத்துக்கு நன்றி Jayadev Das Sir
கருத்துக்கு நன்றி Madam
அவ்வளவு மோசமாவா இருக்கு
சச்சின் நிதர்சனத்தை உணர்ந்தால் நல்லது
நன்றி உஷா அன்பரசு
மிகவும் அருமையான பதிவு தொடருங்கள் நன்றி சகோ!
கருத்துரையிடுக