என்னை கவனிப்பவர்கள்

வியாழன், 8 நவம்பர், 2012

கற்றுக் குட்டியின் கணினிக் குறிப்புகள்-Font Shortcut-Word 2007


 கணினி இன்று வீட்டில் அதிகமாகப் பயன்படுத்தும் அன்றாடப் பொருட்களில் முக்கியமான ஒன்றாக ஆகி விட்டது. கணினியைப் உபயோகப் படுத்த தெரியாதவர்களை அலுவலகத்தில் கேலியாகப் பார்க்கிறார்கள். நான் கணினியை முறையாகக் கற்றவன் இல்லை.அடிப்படை விஷயங்கள் ஓரளவிற்குத் தெரியும். கணினியில் கற்றுக் குட்டியான நான் அவ்வப்போது படித்தும் பழகியும் கற்றுக்கொண்டவற்றை பகிர்ந்து கொள்ளலாம் என்று இருக்கிறேன். 
   
    வல்லுனர்கள் பலர் இருக்கையில் உனக்கேன் இந்த வேலை என்று உள்மனது கேட்டாலும் தனக்குத் தெரிந்தவற்றை ஒரு மாணவன் இன்னொரு மாணவனுக்கு சொன்னால் எப்படி இருக்குமோ அப்படி நினைத்து கற்றுக் குட்டியின் கணினிக் குறிப்புகள் (இனி சுருக்கமாக க.கு.க.கு) என்ற தலைப்பில் அவ்வப்போது பகிர்ந்து கொள்ளலாம் என்று விரும்புகிறேன். உங்கள் கருத்துகளை வைத்தே தொடர்வதா வேண்டாமா என்று முடிவு செய்ய வேண்டும்

முதல் பகுதியாக இன்று

word 2007 இல் Font களுக்கு Short Cut அமைப்பது எப்படி?
  பணிபுரிபவர்கள்,மாணவர்கள்  ஏன் இல்லத்தரசிகள் கூட வோர்ட் எச்சல் பவர் பாயின்ட் பயன் படுத்துகிறார்கள். கடிதங்கள், கட்டுரைகள், அட்டவணைகள் தயாரிக்க பெரும்பாலும்  மைக்ரோசாப்டின் வோர்ட் ஐத்தான் பெரும்பாலோர் பயன்படுத்துகிறார்கள். வோர்ட் இல் பல்வேறு வசதிகள் இருந்தும் சுற்றி வளைத்து செய்யும் முறையையே பின்பற்றுகிறோம்.

உதாரணத்திற்கு ஒரு ஆவணத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட எழுத்துருக்களை பயன்படுத்த வேண்டி இருக்கும். இவற்றிற்கு ஒவ்வொருமுறையும் Font Box இல இருந்து Font ஐ தேர்ந்தெடுப்பது கஷ்டமாக இருக்கும் . இதற்கு பதிலாக நமக்குத் தேவையான எழுத்துருவிற்கு ஷார்ட் கட் அமைத்துக் கொள்ளமுடியும்

   தமிழையும் ஆங்கிலத்தையும் மாற்றி மாற்றி பயன் பயன்படுத்த வேண்டிய அவசியம் அடிக்கடி எழுவதுண்டு. இரண்டுக்கும் தனித்தனியாக குறுக்கு விசைகள் அமைத்துக் கொண்டால் எளிதில் இரண்டையும் மாற்றி மாற்றி பயன் படுத்த முடியும்.


எடுத்துக் காட்டாக Word 2007 ல் ஆங்கிலத்தில் Arial Font க்கும் தமிழில் Baamini Fontக்கும் Short cut உண்டாக்கும் முறையை பார்ப்போம்
.
(எழுத்துக்கள் தெரியவில்லை எனில் படங்களை கிளிக் செய்து பெரிதாக்கிப் பார்க்கலாம்.)

படி  1
Microsoft Office Word 2007 ஐ open செய்து கொள்ளவும்.இடது பக்க  மூலையில் உள்ள Office Button கிளிக் செய்யவும்.



படி 2
கீழ்க் கண்டவாறு தோன்றும் மெனுவில் Word options ஐ கிளிக் செய்யவும்.



படி 3
கீழே  உள்ள படத்தில் உள்ளபடி தோன்றும் word option Box இல் Customize ஐ கிளிக் செய்க



படி 4
பின்னர்  படத்தில் உள்ளவாறு தோற்றமளிக்கும்.கீழ்ப்பகுதியில்  Keyboard Shorcuts பக்கத்தில் உள்ள Customizeஐ கிளிக் செய்து பின்னர் தோன்றும் இன்னொரு பெட்டியில்categories இல உள்ள Font ஐ தேர்ந்தெடுத்து தொடர்ந்து வலது பக்கத்தில் தோன்றும் எழுத்துருக்களில் உங்களுக்கு தேவையான எழுத்துருவை தேர்ந்தெடுக்கவும் .இங்கு ஆங்கில எழுத்துரு Arial தேர்வு செய்யப் பட்டிருக்கிறது. Pres New Shortcut key பாக்ஸ் காலியாக உள்ளதைக் காணலாம்.


படி5
Pres New Shortcut key  பாக்சில் நமக்கு விருப்பான key யை Alt அல்லது Ctrl கீயுடன் சேர்த்துப் பிடித்துக்கொண்டு டைப் செய்யவும். பின்னர் Assign பட்டனை அழுத்தவும். O.K கொடுக்கவும். இங்கு நான் Alt ம் A உம் பயன் படுத்தி இருக்கிறேன். பாக்சில் Alt+A என்று இருப்பதைக் காணலாம்.

 படி6
இதே  போன்று இன்னொரு எழுத்துரு(தமிழ்)  baamini க்கும் கீழுள்ளவாறு  Alt+B என்ற ஷார்ட் கட்டை உருவாக்கியுள்ளேன்.


  இனி வோர்ட் டாக்குமேண்டைத் திறந்து Alt+A கீயை அழுத்தி Arial இல் டைப் அடிக்கலாம்.தமிழ் பாமினியில் எழுத்துருவில் டைப் அடிக்க Alt+B பயன் படுத்தலாம். இரண்டையும் தேவையான போது மாற்றி மாற்றி உபயோகிக்கலாம்.

விரும்பினால் இரண்டுக்கும் மேற்பட்ட எழுத்துருக்களுக்கும் ஷார்கட் அமைத்துக் கொள்ளலாம்.


  இந்த ஷார்ட் கட்கள் தேவை இல்லை எனில் முதலில் சொன்னது போல் சென்று பார்த்தால் நாம் செலக்ட் செய்த எழுத்துருக்கான ஷர்ட்  கீ Current keys  பகுதியில்காணலாம்.அதை செலக்ட் செய்து Remove பட்டனை அழுத்தினால் Short Cut நீக்கப் பட்டுவிடும்.

கொசுறு 
Word 2003 இல் இன்னும் எளிமையாக எழுத்துருக்களுக்கு பட்டன் அமைத்துக் கொள்ளலாம். அந்த வசதி எனக்குத் தெரிந்து Word 2007 இல் இல்லை.

உங்கள் கருத்துக்களுக்கு காத்திருக்கிறேன்.
***************************************************************************************************************
இதையும் படியுங்கள் 

********************

24 கருத்துகள்:

  1. நிறையத் தெரிந்துகொண்டேன்.

    பதிவுக்குப் பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  2. அதிகமாக தட்டச்சு செய்பவர்களுக்கு பயன்படும் குறிப்புகள். பகிர்வுக்கு நன்றி நண்பரே!

    பதிலளிநீக்கு
  3. அன்பு நண்பரே இன்று தங்கள் பதிவை நன்றியோடு வலைச்சரத்தில் பகிர்ந்துள்ளேன்

    http://blogintamil.blogspot.in/2012/11/blog-post_8.html

    நன்றி.

    பதிலளிநீக்கு
  4. படித்து எழுதும் எழுத்துக்களை விடவும் பழகி எழுதும் எழுத்துக்கள் சிறப்புடையதே. (எழுத்து வகையல்ல உங்கள் எழுத்துக்களை சொன்னேன் !)
    க.கு.க.கு இது கு.க என்றே படிக்க தோன்றுகிறது :-)

    பதிலளிநீக்கு
  5. குட்மார்னிங் ஸார்..! கம்ப்யூட்டர் க்ளாஸை நீங்க கண்டினியூ பண்ணலாம்..! டௌட் கேக்கறவங்கள்லாம் ஒவ்வொருத்தரா கேளுங்க..

    பதிலளிநீக்கு
  6. நல்ல தகவல் பகிர்வு! படங்களில் எழுத்துருக்கள் தெளிவாக இல்லை அதை மட்டும் தெளிவாக தெரியும் படி பதிவிட்டால் சிறப்பாக இருக்கும்! அல்லது விளக்கமாக எழுதினாலும் ஓக்கே! நன்றி!

    பதிலளிநீக்கு
  7. ’பசி’ பரமசிவம் said...
    நிறையத் தெரிந்துகொண்டேன்.
    பதிவுக்குப் பாராட்டுகள்.//
    நன்றி பரமசிவம்

    பதிலளிநீக்கு
  8. Avargal Unmaigal said...
    பதிவுக்குப் பாராட்டுகள்.//
    நன்று மதுரைத் தமிழன்

    பதிலளிநீக்கு
  9. வே.சுப்ரமணியன். said...
    அதிகமாக தட்டச்சு செய்பவர்களுக்கு பயன்படும் குறிப்புகள். பகிர்வுக்கு நன்றி நண்பரே!//
    வருகைக்கு நன்றி சுப்ரமணியன்

    பதிலளிநீக்கு
  10. முனைவர்.இரா.குணசீலன் said...
    அன்பு நண்பரே இன்று தங்கள் பதிவை நன்றியோடு வலைச்சரத்தில் பகிர்ந்துள்ளேன்//
    என் கவிதையை அறிமுகப் படுத்தியதற்கு நன்றி ஐயா!

    பதிலளிநீக்கு
  11. கலாகுமரன் said...
    படித்து எழுதும் எழுத்துக்களை விடவும் பழகி எழுதும் எழுத்துக்கள் சிறப்புடையதே. (எழுத்து வகையல்ல உங்கள் எழுத்துக்களை சொன்னேன் !)
    க.கு.க.கு இது கு.க என்றே படிக்க தோன்றுகிறது :-)//
    வருகைக்கு நன்றி கலாகுமாரன்

    பதிலளிநீக்கு
  12. உஷா அன்பரசு said...

    குட்மார்னிங் ஸார்..! கம்ப்யூட்டர் க்ளாஸை நீங்க கண்டினியூ பண்ணலாம்..! டௌட் கேக்கறவங்கள்லாம் ஒவ்வொருத்தரா கேளுங்க..//
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி உஷா!

    பதிலளிநீக்கு
  13. விமலன் said...
    நல்ல தகவல் நன்றி.//
    நன்றி விமலன் சார்!

    பதிலளிநீக்கு
  14. s suresh said...
    நல்ல தகவல் பகிர்வு! படங்களில் எழுத்துருக்கள் தெளிவாக இல்லை அதை மட்டும் தெளிவாக தெரியும் படி பதிவிட்டால் சிறப்பாக இருக்கும்! அல்லது விளக்கமாக எழுதினாலும் ஓக்கே! நன்றி!//
    நன்றி சுரேஷ் சார்!

    பதிலளிநீக்கு
  15. அறிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்...

    விளக்கத்திற்கு நன்றி...

    பதிலளிநீக்கு

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895