கவிதை ரசிகர்களுக்கு ஒரு சவால் இந்தக் கவிதை எழுதியது யார்னு சொல்லுங்க பாக்கலாம்? சரியா சொல்றவங்களுக்கு தீபாவளிப் பரிசா என் இதயத்தில 10 G.B இலவச இடம் வழங்கப் படும்.(Google குடுக்குறதைவிட அதிகங்க)
(எழுதிய கவிஞர் மன்னிப்பாராக! பெரிய கவிதையை கொஞ்சம் எடிட் செய்திருக்கிறேன்.)
அழைப்பு
(எழுதிய கவிஞர் மன்னிப்பாராக! பெரிய கவிதையை கொஞ்சம் எடிட் செய்திருக்கிறேன்.)
அழைப்பு
தயவு செய்து
என்னைத் தொல்லை செய்!
தயவு செய்து
என்னைக் கொள்ளையடி!
கழுத்தடியில் ஒரு
செல்லக்கடி கடி
கூந்தல் கலைத்து
பூக்களை உதிர்த்துவிடு
ஓடிப் பிடித்தென்னை
உருக்குலைத்துப் போடு
குளித்துவரும் என்னை
மீண்டும் அழுக்காக்கு
எதிர்பாரா இடத்தில்
என்னைத் தீண்டு
எவ்வளவு இயலுமோ
அவ்வளவு தழுவு
எங்கே என் உயிரென்று
கண்டுபிடி
உன் உதட்டு எச்சிலால்
என் உடல் பூசு
இது ஒன்றும்
ஒருவழிப் பாதையல்ல
என் பங்குசெலுத்த
எனக்கும் இடம் கொடு
மார்பகப் பள்ளத்தில்
முகம் வைத்து மூச்சு விடு
பூனையின் பாதம் பொருத்தி
பொசுக்கென்று வந்து
புடவை இழு!
உன் தீவிரவாதத்தால்
என்னைத் திணற வை
என்னைத் தூண்டிவிட்டு
நித்தமொரு தடவை
அழவை!
வா!வா!
என்னை வலி செய்
உயிர் பெருகி ஒலிசெய்!
உன் நகர்த்தலுக்கு
துடிக்குதென் ஆடை
உன் நகம் கிழிக்க
ஏங்குதென் மார்பு!
எங்கே
மீண்டும் ஒருமுறை
முந்தானைக்குள் புகுந்து
முயல் குட்டியாகு!
தட்டாதே!
தாய் சொல்லைக்கேள்!
பத்து மாதம்
என்வயிறு சுமந்த
பிஞ்சுப் பிரபஞ்சமே!
*****************************************************************************************
நேரம் இருந்தால் இதையும்படியுங்கள்
கற்றுக் குட்டியின் கணினிக் குறிப்புகள்-Font Shortcut-Word 2007 .html

தெரியவில்லை நண்பரே! இறுதியாக தாங்கள் சொல்லும்போது தெரிந்துகொள்கிறேன். அதுவரை காத்திருக்கிறேன்! நன்றி!
பதிலளிநீக்குவைரமுத்து;
பதிலளிநீக்குஎப்புடி ???
உங்க இதயத்தில் இடம் பிடிசிட்டேனா :)
இலவசமா எதுவும் வேண்டாமாம் எங்களுக்கு.
பதிலளிநீக்குவைரமுத்து என்றே நானும் நினைக்கிறேன்.
தாங்களே எழுதியதா !!??
பதிலளிநீக்குயார்...எழுதியது?..தாங்களா?
பதிலளிநீக்குயார் எழுதியிருந்தாலும் அருமையான படைப்பு
என் நெஞ்சத்தைக் கொள்ளை கொண்டுவிட்ட கவிதை.
பதிலளிநீக்குஎழுதியவர்?
வேறு யார்? என் பிரிய நண்பர் டி.என்.முரளிதரன்தான்!
இந்த வைர வரிகளை கவிப்பேரரசு அவர்களால் எழுத பட்டது சார் ...
பதிலளிநீக்குஎன்னை கொள்ளை கொள்ளும் கவிதை ...
சரியா சொல்றவங்களுக்கு தீபாவளிப் பரிசா என் இதயத்தில 10 G.B இலவச இடம் வழங்கப் படும்
பதிலளிநீக்கு>>
காதை கிட்ட கொண்டு வாங்க . சத்தமா சொன்னா காப்பியடிச்சு உங்க இதயத்துல இடம் பிடிச்சுடுவாங்க.---- சரிதானே நான் சொன்னது?!
நான் காதலி எழுதிய கவிதைன்னு நினைச்சு படிச்சுக்கிட்டே வந்தேன். முடிவுலதான் அம்மா எழுதிய கவிதைன்னு தெரிஞ்சது..., இங்கயும் எனக்கு பல்பா?!
பதிலளிநீக்குகூடுதலாக இடம் தேவைப்படின் எதை அழிப்பீர்கள்
நீக்கு10 GB மட்டும் தானா...?
பதிலளிநீக்குநல்ல வரிகள்... நன்றி...
நல்லதொரு கவிதை! எழுதிய கவிஞருக்கு பாராட்டுக்கள்!
பதிலளிநீக்குஎழுதியது யாராயிருப்பினும் சிறப்பான கவிதையே!
பதிலளிநீக்குதெரியவில்லை முரளி;ஆனால் கவிதை மனசில் நிற்கிறது
பதிலளிநீக்குகவிப்பேரரசு...
பதிலளிநீக்குவைரமுத்துன்னு நிச்சயமா தெரியும்.வைரமுத்து கவிதைகளை நான் பெரும்பாலும் படிச்சிருக்கேன். முன்னாடி கமெண்ட் கொடுத்தவங்க தெரியலைன்னாலும் கூகுள்ள அந்த வரிகளை டைப் பண்ணியாவது கண்டுபிடிச்சிருக்கலாமே.. ம் யாரும் பிட் அடிக்க மாட்டாங்க போல.. ! ஒவ்வொரு விஷயத்தையும் மனம் கவரும்படி சொல்றிங்க. கவிதை படிச்சிட்டு அதை எழுதின கவிஞரையும் தெரிஞ்சிக்க செய்து. புதுமை+ வித்தியாசமான சிந்தனைகள்தான் உங்க வலை.
பதிலளிநீக்குநாளை சொல்லிடறேன் சுப்ரமணியன்.
பதிலளிநீக்குமோகன் குமார் said...
பதிலளிநீக்குவைரமுத்து;
எப்புடி ???
உங்க இதயத்தில் இடம் பிடிசிட்டேனா :)//
நீங்க பதிவுலகில் என்னுடைய முதல் நண்பராயிற்றே.
இதற்கு முன்னாடியே இடம் பிடித்து விட்டீர்கள்.
இன்றைய பதில் சரியா என்பதை நாளை சொல்கிறேன்.
Sasi Kala said...
பதிலளிநீக்குஇலவசமா எதுவும் வேண்டாமாம் எங்களுக்கு.
வைரமுத்து என்றே நானும் நினைக்கிறேன்.//
பதில் கண்டு புடிக்க முடியலன்னா இலவசம் வேண்டாம்னு சொல்லப் படாது.
இராஜராஜேஸ்வரி said...
பதிலளிநீக்குதாங்களே எழுதியதா !!??//
நான் எழுதனும்னுதான் நினச்சேன். எனக்கு முன்னாடி வேற ஒருத்தர் எழுதிட்டார்.
PARITHI MUTHURASAN said...
பதிலளிநீக்குயார்...எழுதியது?..தாங்களா?
யார் எழுதியிருந்தாலும் அருமையான படைப்பு//
நான் இல்ல பார்த்தி,
பசி’ பரமசிவம் said...
பதிலளிநீக்குஎன் நெஞ்சத்தைக் கொள்ளை கொண்டுவிட்ட கவிதை.
எழுதியவர்?
வேறு யார்? என் பிரிய நண்பர் டி.என்.முரளிதரன்தான்!//
ஆஹா!இது உண்மையா இருந்தா எப்படி இருக்கும்.
அரசன் சே said...
பதிலளிநீக்குஇந்த வைர வரிகளை கவிப்பேரரசு அவர்களால் எழுத பட்டது சார் ...
என்னை கொள்ளை கொள்ளும் கவிதை ...//
நீங்க சொன்னது சரியான்னு நாளைக்கு சொல்லிடறேன்.
ராஜி said...
பதிலளிநீக்குசரியா சொல்றவங்களுக்கு தீபாவளிப் பரிசா என் இதயத்தில 10 G.B இலவச இடம் வழங்கப் படும்
காதை கிட்ட கொண்டு வாங்க . சத்தமா சொன்னா காப்பியடிச்சு உங்க இதயத்துல இடம் பிடிச்சுடுவாங்க.---- சரிதானே நான் சொன்னது?!//
நீங்க சொன்னது சரிதான்.அவரேதான்.
திண்டுக்கல் தனபாலன் said...
பதிலளிநீக்கு10 GB மட்டும் தானா...?
நல்ல வரிகள்... நன்றி...//
அதுக்கென்ன சார் எவ்வளவு இடம்வேனும்னாலும் இருக்கு
s suresh said...
பதிலளிநீக்குநல்லதொரு கவிதை! எழுதிய கவிஞருக்கு பாராட்டுக்கள்!//
உங்க பாராட்டை அப்படியே பார்சல் பண்ணிடறேன்.
நன்றி சுரேஷ்
சென்னை பித்தன் said...
பதிலளிநீக்குதெரியவில்லை முரளி;ஆனால் கவிதை மனசில் நிற்கிறது//
கருத்துக்கு நன்றி சார்!
ரெவெரி said...
பதிலளிநீக்குகவிப்பேரரசு..//
நன்றி சார்!நாளை சொல்லிடறேன்..
உஷா அன்பரசு said...
பதிலளிநீக்குவைரமுத்துன்னு நிச்சயமா தெரியும்.வைரமுத்து கவிதைகளை நான் பெரும்பாலும் படிச்சிருக்கேன். முன்னாடி கமெண்ட் கொடுத்தவங்க தெரியலைன்னாலும் கூகுள்ள அந்த வரிகளை டைப் பண்ணியாவது கண்டுபிடிச்சிருக்கலாமே.. ம் யாரும் பிட் அடிக்க மாட்டாங்க போல.. ! ஒவ்வொரு விஷயத்தையும் மனம் கவரும்படி சொல்றிங்க. கவிதை படிச்சிட்டு அதை எழுதின கவிஞரையும் தெரிஞ்சிக்க செய்து. புதுமை+ வித்தியாசமான சிந்தனைகள்தான் உங்க வலை.//
உங்க பதில் சரியான்னு தெரிஞ்சுக்க நாளை வலைப் பக்கம் வாருங்கள்
குட்டன் said...
பதிலளிநீக்குஎழுதியது யாராயிருப்பினும் சிறப்பான கவிதையே!//
நன்றி குட்டன்
வணக்கம் நாளை சந்திப்போம்
பதிலளிநீக்குவரிகளைப் படிக்கும் பொது வைரவர் தான் நினைவுக்கு வருகிறார் அவராத்தான் இருப்பார் என நினைக்கிறேன் அவர் தொனியிலும் படித்து விட்டேன்
பதிலளிநீக்குகருவாச்சி காவியம்....
பதிலளிநீக்குகவிப்பேரரசு என்றே நினைக்கிறேன்...
பதிலளிநீக்குதீபாவளி வாழ்த்துக்கள் அய்யா
பதிலளிநீக்குநல்லதொரு கவிதை தந்தமைக்கு நன்றி முரளி !
பதிலளிநீக்குபாலகுமாரன்
பதிலளிநீக்குகவிதை எழுதியவருக்கும்
பதிலளிநீக்குஅதை வலையில் பிரசுவித்தவருக்கும்
என் பாராட்டுக்கள்.
3240DC73
பதிலளிநீக்குŞırnak
Trabzon
Bolu
Zonguldak
Niğde
Bartın
Gümüşhane
Adıyaman
Bilecik
5D0AC438
பதிலளிநீக்குKartepe
Kemer
Nilüfer
Adapazarı
Bandırma
Erbaa
İskenderun
Talas
Beydağ
B788D05C
பதிலளிநீக்குKızıltepe
Keşan
Ömerli
Kumluca
Erbaa
Erdemli
Bornova
Narlıdere
Ağva