என்னை கவனிப்பவர்கள்

.உங்கள் மின்னஞ்சல் முகவரியை FOLLOW BY EMAIL பகுதியில் இடவும்.மூங்கில் காற்றின பதிவுகள் உங்கள் மின்னஞ்சலுக்கு வந்து சேரும்.TPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்

Wednesday, December 24, 2014

வைரமுத்து பயன்படுத்திய வார்த்தை சரியா?
நேற்று கவிப் பேரரசு வைரமுத்து எழுதிய எய்ட்ஸ் நோய் பற்றிய விழிப்புணர்வு கவிதையை வெளியிட்டிருந்தேன். ( படிக்க நேற்றைய பதிவு      எய்ட்ஸ் பற்றி வைரமுத்து)
அவை வெண்பா வடிவத்தில் அமைந்திருந்தன. மிக சிறப்பாக எழுதப் பட்டிருந்தது

 இவ்வெண்பாக்கள் ஒன்றில்  ஒரு வார்த்தையை வித்தியாசமாக உணர்ந்தேன் என்று குறிப்பிடேன்.ஆனால் மற்ற எவரும் அதனை குறிப்பிடவில்லை என்பதால்  எனது புரிதலில்தான் தவறு உள்ளது என்றே இப்போது எண்ணுகிறேன். இருந்தாலும் எனது என்ன ஓட்டத்தையும் சொல்லி விடுகிறேன்
அந்த வெண்பா இதுதான்

                      தோகைமார் தந்த சுகநோயோ உன்கட்டை
                      வேகையிலும்   விட்டு விலகாதே-ஆகையினால்
                      விற்பனைப் பெண்டிரொடு வேண்டாம் விளையாட்டு
                      கற்பனையை வீட்டுக்குள் காட்டு

விற்பனைப் பெண்டிர் என்ற வார்த்தைதான் எனக்கு சற்று நெருடலை ஏற்படுத்தியது.

      விற்பனைப் பெண்டிர் என்ற வார்த்தையை Sales women என்றே என்னால் சட்டென்று பொருள் கொள்ள முடிந்தது. ஆனால் விற்பனைப் பெண்டிர் என்ற வார்த்தையை பாலியல் தொழில் செய்யும்  பெண் என கவிஞர் பயன்படுத்தியதை தவிர்த்திருக்கலாம் என்பதே எனது கருத்து.  Sales girls எல்லாம் Call girls அல்ல

       இந்தக் கவிதையில் முதலில் இருந்தே காசுக்காக காம சுகம் தரும் பெண்களைப் பற்றி பேசுவதால் விற்பனைப் பெண்டிர் என்ற வார்த்தை பாலியல் தொழில் செய்யும் பெண்ணையே குறிப்பதாக மனது ஏற்றுக் கொண்டு விடுவதால் அந்த வார்த்தை யாருக்கும் தவறாக தோன்றவில்லை என நினைக்கிறேன்.
     
       எனக்கென்னவோ விற்பனைப் பெண்டிர் என்றதும் சரவணா ஸ்டோர், போதீஸ் போன்றவற்றில் கால்கடுக்க நின்றுகொண்டு கேட்டதை எடுத்துக் கொடுக்கும் பெண்களும், வாசல் கதவை தட்டி ரெண்டு  வாங்கினா ஒண்ணு ப்ரீ விளம்பர ஆஃபர் சார் வாங்கிக்கோங்க   என்று கெஞ்சும்  பெண்களுமே கண்முன் வந்து போனார்கள்.
உங்கள் கருத்து  என்ன?

            ****************************************************

தொடர்புடைய பிற பதிவுகள் 

****************************************************

37 comments:


 1. ///விற்பனைப் பெண்டிர் என்ற வார்த்தையை Sales women என்றே என்னால் சட்டென்று பொருள் கொள்ள முடிந்தது. ஆனால் விற்பனைப் பெண்டிர் என்ற வார்த்தையை பாலியல் தொழில் செய்யும் பெண் என கவிஞர் பயன்படுத்தியதை தவிர்த்திருக்கலாம் என்பதே எனது கருத்து. ///

  மிக சரியான கருத்து

  ReplyDelete

 2. வைரமுத்துவே நீங்கள் உங்கள் நெற்றிக்கண்ணை திறந்து முரளியை உற்று நோக்கினாலும் நீங்கள் அப்படி எழுதியது தவறுதான்

  ReplyDelete
 3. வணக்கம்
  முரளி(அண்ணா)

  உண்மையில் பாரக்கப்போனால் தாங்கள் சொன்ன பிரதிபலிப்புத்தான் என் மனதிலும் தோன்றுகிறது..
  Sales women ஒரு சொல் பல பொருள் என்பது போலதான்..என் கருத்து மற்றவர்களின் கருத்தையும் எதிர்பார்க்கிறேன் த.ம1

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 4. கவிஞர் வைரமுத்து அவர்கள் பயன்படுத்திய இந்த வார்த்தை நீங்கள் சொன்னதுபோல் சற்று நெருடலாகத்தான் இருக்கிறது. அவருக்கு யாரேனும் இது பற்றி சொன்னால் அதை மாற்றிவிடுவார் என எண்ணுகிறேன்.

  ReplyDelete
 5. அவர்கள் பணத்துக்காக உடலைத் தருவதால் வாடகைப் பெண்டிர் என்று வேண்டுமானால் குறிப்பிடலாம் என்று நினைக்கிறேன் நான். மற்றபடிக்கு விற்பனைப் பெண்டிர் என்றால் நீங்கள் குறிப்பிடும் பெண்கள்தான் எனக்கு மனதில் வருகிறார்கள். (சென்ற பதிவைத் தவறவிட்டு விட்டதால் இதைப் படித்ததும் தோன்றிய கருத்தைச் சொல்கிறேன்.)

  ReplyDelete
 6. சரியான கருத்து
  Vetha.Langathilakam.

  ReplyDelete
 7. ம்.....

  நீங்கள் சொன்னதும் சரி என்றுதான் படுகிறது.

  ReplyDelete
 8. சரி தான்... யார் சொல்லி மாற்றுவது...?

  ReplyDelete
  Replies
  1. யாரும் மாற்ற முடியாது இது எழுதி பல ஆண்டுகள் ஆகின்றன

   Delete
 9. எனக்கு ஒரு சந்தேகம்!
  விபசாரி விடுதியில் கற்பு விற்கும் பெண்ணிடம், கற்பு வாங்கும் ஆண்களை எப்படி அழைப்பது.?
  "விற்பனைப் பெண்டிரொடு வேண்டாம் விளையாட்டு
  கற்பனையை வீட்டுக்குள் காட்டு"
  என்பதைக் கவிஞர் "உடல் விற்பனைப் பெண்டிரொடு வேண்டாமே விளையாட்டு
  உன் கற்பனையை வீட்டுக்குள் காட்டு

  இப்படிப் போட்டிருந்தால் தெளிவாக இருக்குமோ?


  ReplyDelete
 10. எனக்கொன்றும் நெருடலாய் தெரியவில்லை சார். வேறெங்கோ , எங்களை விற்பனை பொருளாய் பார்க்காதீர் என்று படித்ததாய் நினைவு... ஆகவே இது பெரிதாய் எனக்கு தோன்றவில்லை.

  ReplyDelete
 11. // இந்தக் கவிதையில் முதலில் இருந்தே காசுக்காக காம சுகம் தரும் பெண்களைப் பற்றி பேசுவதால் விற்பனைப் பெண்டிர் என்ற வார்த்தை பாலியல் தொழில் செய்யும் பெண்ணையே குறிப்பதாக மனது ஏற்றுக் கொண்டு விடுவதால் // அதே! அதே!அந்த இடத்தில் அந்த சொல்லுக்கு அந்த பொருள் தான் என எனக்கும் தோன்றியது

  ReplyDelete
 12. ///Sales girls எல்லாம் Call girls அல்ல////
  நானும் உங்களோடு ஒத்துப் போகின்றேன் ஐயா

  ReplyDelete
 13. என்னவோ தெரியவில்லை. இரண்டு மூன்று நாட்களாக அவசரகதியில் பதிவு எழுதுகிறேன். பின்னூட்டம் இடுகிறேன்.

  உங்கள் பதிவை இரண்டாம் முறையாகப் [பொறுமையுடன்] படித்தபோது, உங்கள் கருத்தில் நியாயம் இருப்பது புரிந்தது.

  சிறிது காலம் பதிவுலகிலிருந்து ஒதுங்கியிருக்க வேண்டும் போல் தோன்றுகிறது.

  ReplyDelete
  Replies
  1. நிச்சயம் ஒதுங்கி இருக்க வேண்டாம்.. அதிக பட்சமான அறிவும் சிந்தனயும் அனுபவமும் உடையவர் தாங்கள். .எங்களைப் போன்றவர்கள் தங்களிடம் இருந்து கற்றுக் கொள்ளவேண்டியவை ஏராளமாக உள்ளன. தொடர்ந்து எழுதுங்கள்

   Delete
 14. யோகன் பாரிஸ்ஜி சொன்ன "உடல் விற்பனைப் பெண்டிரொடு '' என்பதே எனக்கும் சரியாக படுகிறது !
  த ம 4

  ReplyDelete
 15. கவிதையோட்டத்தில் கவிஞர் பாடுபொருள் உடல் விற்பனை பெண்டிர் என்பது சரியானதே என்பது என் கருத்து அண்ணாச்சி.

  ReplyDelete
 16. Sales women - விற்பனை பெண்கள் என்றுதானே வரும் அண்ணாச்சி பெண்டிர் என்று வராதே !

  ReplyDelete
  Replies
  1. பெண்டிர் என்பதும் பெண்கள் என்பதும் ஒன்றே. ஆடவர் பெண்டிர் என கூறுவது வழக்கம்

   Delete
 17. எனக்கென்னவோ விற்பனைப் பெண்டிர் என்றதும் சரவணா ஸ்டோர், போதீஸ் போன்றவற்றில் கால்கடுக்க நின்றுகொண்டு கேட்டதை எடுத்துக் கொடுக்கும் பெண்களும், வாசல் கதவை தட்டி ரெண்டு வாங்கினா ஒண்ணு ப்ரீ விளம்பர ஆஃபர் சார் வாங்கிக்கோங்க என்று கெஞ்சும் பெண்களுமே கண்முன் வந்து போனார்கள்.
  // அப்படியானவர்கள் விற்பனை பிரதிநிதிகள் என்றே நம்நாட்டில் அழைப்போம் சேல்ஸ் ரெப்பரென்செற்றீஈ!புரிதல் தவறு எனில் என்னை மன்னிக்கவும்.

  ReplyDelete
  Replies
  1. நேசன்! இங்கெல்லாம் விற்பனைப் பிரதிநிதிகள் விறபனை செய்ய மாட்டார்கள் கடைகளுக்கு சென்று தங்கள் பொருட்களின் சிறப்புகளை எடுத்துக் கூறி கடையில் விற்க சொல்வார்கள்.
   உதாரணமாக மெடிகல் ரெப் கள் டாகடரிடம் சென்று தங்கள் மருந்துகளை சலுகைகள் மற்றும் சிறப்புகளைக் கூறி பரிந்துரைக்கும்படி கேட்டுக் கொள்வார்க

   Delete
 18. அடுத்தவர் கவிதையில் குற்றம் கண்டுபிடித்தே பெயர் வாங்கிய பெரும் புலவர்களும் இருக்கிறார்கள்...
  ஹ ஹ ஹ
  உண்மையில் தவறான வார்த்தைப் பிரயோகம் தான் இருப்பினும் இடம் கருதுகையில் தன்னை விற்கிற பெண்கள் என்று தான் வருகிறது அய்யா...
  Click here.. My Wishes!

  ReplyDelete
 19. வாக்கு எழுமைக்கும் ஏமாப்பு ... ஹ ஹ
  Click here.. My Wishes!

  ReplyDelete
 20. வைரமுத்து, எதுகை மோனைக்காக எதையாவது எழுதி வைப்பார். அதையெல்லாம், திருக்குறள் ரேஞ்சுக்கு ஆராய்ச்சி செய்வது தவறு நண்பரே! ‘ஆட்டுப்பால் குடித்தால், அறிவழிந்து போகுமென்று’ என்ற வரியை போகிற போக்கில் எழுதி விட்டார் வைரமுத்து. இதை யாராவது ஏற்றுக் கொள்வார்களா? ஆட்டுப்பாலில் கிடைக்கும் நன்மைகள் பல என்று, மருத்துவ உலகம் சொல்கிறது. வைரமுத்து ஒரு சினிமா பாடலாசிரியர். நல்ல பாடல்கள், கவிதைகள் எழுதியிருக்கிறார்; கூடவே, மோசமான, தவறான அர்த்தம் தரும் பாடல்களும் எழுதியிருக்கிறார் என்று புரிந்து கொள்ள வேண்டியதுதான்!

  ReplyDelete
 21. தங்களது ஆதங்கம் புரிகிறது. தவறான புரிதல்களை உண்டாக்கும் சொற்களைப் பயன்படுத்தும்போது கவனமாக இருப்பது நல்லது.

  ReplyDelete
 22. நீங்கள் சொல்லும் கோணத்தில் பார்த்தால் தவறாகத்தான் படுகிறது முரளி. ஆனால், சொற்களுக்கான பொருள் பெரும்பாலும் அந்தந்தச் சூழல் கொண்டே அறியப்படும். அந்தவகையில் இந்தச் சொல்லாட்சி தவறு என்று தோன்றவில்லை. அதைவிட,
  “பெண்மட்டுமே விற்கிறாள்“ (ஆண் வாங்குகிறான்) எனும் கருத்தூட்டம்தான் எனக்குத் தவறாகப் படுகிறது. விபச்சாரன்கள் கிடையாதா என்ன? (இன்றைய நடைமுறையில் மட்டுமல்ல, குறள் 1311இல் “பரத்தன்“ எனும் ஒரு சொல் இருப்பது பார்க்க) அதாவது முரளி... சொல்லில் பிழையில்லை இருந்தாலும் மன்னிக்கப் படலாம்... பொருளில்தான்! எனவே பாண்டிய மன்னா.. (தாமதத்திற்கு மன்னிக்க)

  ReplyDelete
  Replies
  1. ஆம் ஐயா! நீங்கள் சொல்வது சரிதான் அந்த வார்த்தை எனக்கு மட்டும்தான் தவறாகத் தோன்றியுள்ளது மற்றவர்கள் அதை சரியாகப் புரிந்து கொண்டிருக்கிறார்கள் என்றுதானே அர்த்தம்,

   பரத்தன் என்று இருப்பதை உங்கள் ஒருபதிவில் படித்திருக்கிறேன்.
   பரத்தனை தேடி செல்லும் பெண்கள் ஒப்பீட்டளவில் மிகக் குறைவாகவே இருக்கக் கூடும்

   Delete
 23. எனினும் உங்கள் விவாத நுட்பத்திற்காகப் பிடியுங்கள்..த.ம.9

  ReplyDelete
  Replies
  1. அந்தக் குறளிலும் எனக்கு ஒரு ஐயம் உண்டு அதை நானே சரிபார்க்க முயற்சிக்கிறேன் . அல்லது பின்னர் உங்களிடம் கேட்டு தெளிவுபெறுகிறேன்

   Delete
 24. எனக்கும் தவறாகவே தோன்றுகிறது! பகிர்வுக்கு நன்றி!

  ReplyDelete
 25. மிகவும் சரியான கருத்து....

  ReplyDelete
 26. ஊமைக்கனவுகள் தளம் மூலம் உங்கள் தளம் கண்டேன்....

  "விற்பனைப் பெண்டிரொடு ... "

  கவிதை அறிந்தவனில்லை நான் என்றாலும் சமூகம் புரிந்து கருத்து சொல்ல விழைந்தால்... தவறான சொற்பிரயோகம்தான் !

  இதன் மேல் கீழ் வரிகளுக்கு ஈடுகொடுக்கும் எதுகை மோனை வசதிக்காக பயன்படுத்திய சொல்லாகவே தெரிகிறது...

  ஆனாலும் வைரமுத்து வேறு விளக்கம் வைத்திருப்பார்... வல்லான் வகுத்ததே வாய்க்கால் !

  நன்றி
  சாமானியன்
  saamaaniyan.blogspot.fr

  எனது புதிய பதிவு : விடாது துரத்திய விஷ்ணுபுரம் !
  http://saamaaniyan.blogspot.fr/2014/12/blog-post_15.html
  தங்களுக்கு நேரமிருப்பின் படித்துவிட்டு உங்கள் கருத்தினை பதியுங்கள்.


  ReplyDelete
 27. எங்களுக்கும் உங்கள் கருத்து சரியே என்று படுகின்றது. உங்கள் கருத்திற்கே எங்கள் ஓட்டு! அஹ்ஹாஹஹ் அப்படியே பழகிப் போனதால்...சரி சரி...விஜு ஆசான் இதைச் சரியாகச் சொல்லுவார்....முத்துனிலவன் ஐயாவும் சொல்லி விட்டாரே ! அப்போ அதுவும் சரியாகத்தான் இருக்கும்

  அது சரி நண்பரே ஊமைக்கனவுகள் விஜு ஆசான் எதுவும் சொல்ல வில்லையா?

  ReplyDelete
 28. பொருட் பெண்டிர் பொய்ம்மை முயக்க மிருட்டறையி
  லேதில் பிணந்தழீஇ யற்று.
  பொருட் பெண்டிர் என்ற சொல் இலக்கியத்திலே பயன் படுத்தப் பட்டுள்ளது

  ReplyDelete

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895