என்னை கவனிப்பவர்கள்

.உங்கள் மின்னஞ்சல் முகவரியை FOLLOW BY EMAIL பகுதியில் இடவும்.மூங்கில் காற்றின பதிவுகள் உங்கள் மின்னஞ்சலுக்கு வந்து சேரும்.TPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்

Saturday, September 1, 2012

இன்ட்லியால் ஒரு இன்னல்
   சாதரணமாக ஒரு பதிவு போட்டு முடித்து தமிழ் மணம், தமிழ்  10 ,இன்ட்லி திரட்டிகளில்  இணைக்கப் பட்டதும் அந்த நாளில் அந்தப் பதிவை மட்டும் ஏறக்குறைய நூறு பேராவது  பார்த்து விடுவார்கள்.  பால குமாரனின் குதிரைக் கவிதைகள் ஓரளவிற்கு வரவேற்பு பெற்ற தொடர்  பதிவாக இருந்து வருகிறது 

    ஆனால்  நேற்று காலை பதிவிடப்பட்ட மன்னன் என்ன சொன்னான்? பாலகுமாரன் கவிதை. பதிவு இப்போது வரை  25  பேர் மட்டுமே படித்திருக்கிறார்கள்.

   அவ்வப்போது இன்ட்லி,தமிழ் 10,தமிழ்மணம் சில மணி நேரங்கள் வேலை செய்யாமல் போதுண்டு. ஆராய்ந்தபோது  கடந்த இரண்டு நாட்களாக எனது வலைப்பக்கம் திறக்க நீண்ட நேரம் பிடித்தது. அதற்கு காரணம் இன்ட்லி என்று தெரிந்து  கொண்டேன். இன்ட்லியை லோட் செய்யும் முயற்சியில் ஈடுபட்டு தோல்வியுற்று பின்னர்  வலைப்பூ திறந்தது. இதற்கு பத்து நிமிடங்கள் கூட ஆனது. இதனால் வர முற்பட்டவர்களும் வெறுத்துப் போய் பின்வாங்கி இருப்பார்கள் என்று கருதுகிறேன். நானும்  பலரது வலைப் பக்கங்களுக்கு செல்ல முடியவில்லை  பிற பதிவர்களுக்கும் இந்த அனுபவம் ஏற்பட்டுள்ளதா என்று தெரியவில்லை.

  பெரும்பாலும் இன்ட்லி சில நேரங்களில் வேலை செய்யாது போனாலும் உடனே சரியாகி விடும்.ஆனால் இரண்டு நாட்களாகியும் சரியாகவில்லை.
   அதனால் இன்ட்லி  பின் தொடர்பவர்   விட்ஜெட்டையும் இன்ட்லி வாக்குப் பாட்டையும் தற்காலிகமாக நீக்கி விட்டேன்.இப்பொழுது கொஞ்சம் வேகமாக பக்கங்கள்  லோட்  ஆகிறது. 

 நான் பின்பற்றிய வழிமுறைகள் 

புதிய இடைமுகப்பில்  சைன் இன் செய்து உள்நுழைந்து  LayOut  பகுதிக்குச் சென்று   இன்டலி  Follower விட்ஜெட்டை எளிதில்நீக்கி  விடலாம் . ஆனால் வாக்குப் பட்டையை நீக்குவதை சற்று  யோசித்து செய்ய வேண்டும். Template பகுதிக்கு கொண்டு Edit HTML பகுதிக்கு சென்று  Expand Widjet Templates box ஐ செக் செய்து கொண்டேன்.

பின்னர் முழுவதையும்  நகலெடுத்து ஒரு நோட் பேட் பைலில் சேமித்து வைத்துக்கொண்டேன்

பின்னர் 

<script type='text/javascript'> button=&quot;hori&quot;; lang=&quot;ta&quot;; submit_url =&quot;<data:post.url/>&quot; </script> <script src='http://ta.indli.com/tools/voteb.php' type='text/javascript'/>
என்ற வரிகளை கண்டு பிடித்து நீக்கி  டெம்ப்ளேட்டை  சேமித்து விட்டேன்.


CTRL +F key ஐப பயன் படுத்தி  indli என்று உள்ளீடு செய்தால் எளிதில் இந்த வரிகளை கண்டு பிடித்த் விடலாம் 

 இன்ட்லி தொடர்பான அனைத்தும் நீக்கப் பட்டுவிட்டதால்  இப்போது  வேகமாக வலைப்பூ திறக்கும்.

இன்ட்லி சரியானதும் மீண்டும் எளிதில் இணைத்துக் கொள்ளலாம்.

**************************************************************


25 comments:

 1. அவசியமான பதிவு சார்... ரொம்ப நன்றி

  ReplyDelete

 2. தமிழ்மணம் தவிர எந்த திரட்டியிலும் என் பதிவை
  இணைக்கவில்லை.அதனால் எனக்கு இந்த அனுபவம் இல்லை
  அனைவருக்கும் பயன்படும்படியாக இதைப் பதிவாக்கித்
  தந்தமைக்கு நன்றி

  ReplyDelete
 3. //தமிழ்மணம் தவிர எந்த திரட்டியிலும் என் பதிவை
  இணைக்கவில்லை.அதனால் எனக்கு இந்த அனுபவம் இல்லை
  அனைவருக்கும் பயன்படும்படியாக இதைப் பதிவாக்கித்
  தந்தமைக்கு நன்றி //

  அதே அதே !

  ReplyDelete
 4. நான் செல்லும் தளம் எல்லாம் கீழே உள்ளது போல் சொல்கிறேன்...

  (இன்ட்லி ஒட்டுப்பட்டை மற்றும் இன்ட்லி Widget வேலை செய்யவில்லை... சரியாகும் வரை ப்ளாக்கில் இருந்து எடுத்து விடவும்...
  Caution : Restore/Backup your HTML, before editing :

  (1) Edit html Remove Indli Vote button script

  (2) Remove Indli Follow Widget

  தளம் திறக்க பத்து நிமிடங்களுக்கு மேல் ஆகிறது...)

  ReplyDelete
 5. நான் வாரத்திற்கு ஒரு பதிவு போட்டாலே அபூர்வம், சமீபத்தில நான் ஒரு பதிவு போட்டேன் அந்த பதிவை போட்ட முதல் நாளிளிருந்தான் இந்த இன்டலி பிரச்சனை, இதனால் பதிவு போட்ட அன்று எப்போதும் கிடைக்கும் வருகையை இழந்தேன் என்பது உண்மை!

  பயனுள்ள பகிர்வு!

  ReplyDelete
 6. ஆரம்பத்திலே எனக்கு இது நடந்தது பிழை கண்டு திருத்தி விட்டேன் ஆனால் யாரிடமும் இதனை சொல்லவில்லை..
  காரணம் எல்லோருக்கும் தெரிந்திருக்கும் என நினைத்திருந்தேன் இப்போது தான் புரிகிறது...
  தவறு செய்துவிட்டோமா என்று..

  எல்லோருக்கும் சொல்லியிருக்கலாமே என இப்போது வருத்தப் படுகிறேன்

  ReplyDelete
 7. Thank you very much Murali.
  Vetha.Elangathilakam.

  ReplyDelete
 8. அடடே, இதுதான் பிரச்சினையா? இப்பவே இந்த இன்ட்லியை இட்லியாக்கிவிடுகிறேன். நன்றி.

  ReplyDelete
 9. தமிலிஷ் என்பதிலிருந்து இண்ட்லியாக மாறியதிலிருந்தே பிரச்சனை தான். ஒழுங்காக வேலை செய்வதே இல்லை.

  நான் ஏற்கனவே எடுத்து விட்டேன். இன்று தமிழ்மணம் வேலை செய்யவில்லை... என்ன காரணமோ புரியவில்லை. :(

  தேவையான பகிர்வு - தெரியாதவர்கள் செய்து கொள்ள வசதியாக இருக்கும்.

  ReplyDelete
 10. // தமிலிஷ் என்பதிலிருந்து இண்ட்லியாக மாறியதிலிருந்தே பிரச்சனை தான். ஒழுங்காக வேலை செய்வதே இல்லை. //

  என்ற சகோதரர் வெங்கட் நாகராஜ் கருத்தை அப்படியே நானும் வழிமொழிகிறேன். இந்த அனுபவம் எனக்கும் உண்டு. ஆர்வக் கோளாறு காரணமாக எல்லா திரட்டிகளிலும் எனது பதிவை இணைப்பதை நிறுத்தி விட்டேன். தகவலை வெளியிட்ட தங்களுக்கு நன்றி!

  ReplyDelete
 11. இன்ட்லி தமிழின் நம்பர் 1 திரட்டி. கடந்த சில நாட்களாக இன்ட்லி செயல்படாமல் இருப்பது வருத்தத்திற்குரியதே... விரைவில் இன்ட்லி செயல்படட்டும்.

  ReplyDelete
 12. Ramani said...
  தமிழ்மணம் தவிர எந்த திரட்டியிலும் என் பதிவை
  இணைக்கவில்லை.அதனால் எனக்கு இந்த அனுபவம் இல்லைஅனைவருக்கும் பயன்படும்படியாக இதைப் பதிவாக்கித் தந்தமைக்கு நன்றி//
  நன்றி சார்

  ReplyDelete
 13. இக்பால் செல்வன் said...
  //தமிழ்மணம் தவிர எந்த திரட்டியிலும் என் பதிவை
  இணைக்கவில்லை.அதனால் எனக்கு இந்த அனுபவம் இல்லை
  அனைவருக்கும் பயன்படும்படியாக இதைப் பதிவாக்கித்தந்தமைக்கு நன்றி //
  அதே அதே !//
  நன்றி இக்பால்

  ReplyDelete
 14. திண்டுக்கல் தனபாலன் said...
  நான் செல்லும் தளம் எல்லாம் கீழே உள்ளது போல் சொல்கிறேன்...
  (இன்ட்லி ஒட்டுப்பட்டை மற்றும் இன்ட்லி Widget வேலை செய்யவில்லை... சரியாகும் வரை ப்ளாக்கில் இருந்து எடுத்து விடவும்...
  Caution : Restore/Backup your HTML, before editing :
  (1) Edit html Remove Indli Vote button script
  (2) Remove Indli Follow Widget
  தளம் திறக்க பத்து நிமிடங்களுக்கு மேல் ஆகிறது...)//
  நானும் தாமதமாகத்தான் இதைச் செய்தேன்.
  தேவைபடுபவர் பயன்படுத்திக் கொள்ளட்டுமே என்பர் பகிர்ந்தேன். நன்றி தனபாலன்

  ReplyDelete
 15. //வரலாற்று சுவடுகள் said...
  நான் வாரத்திற்கு ஒரு பதிவு போட்டாலே அபூர்வம், சமீபத்தில நான் ஒரு பதிவு போட்டேன் அந்த பதிவை போட்ட முதல் நாளிளிருந்தான் இந்த இன்டலி பிரச்சனை, இதனால் பதிவு போட்ட அன்று எப்போதும் கிடைக்கும் வருகையை இழந்தேன் என்பது உண்மை!
  பயனுள்ள பகிர்வு!//
  வழக்கமான பார்வையாளர்கள் எப்படியும் டேஷ் போர்டு பார்த்து வதுவிடுவார்கள் ஆனால் புதிய பார்வையாளர்களை இழக்க நேரிடுவதை தவிர்க்கவே இந்தப் பதிவு நன்றி.

  ReplyDelete
 16. சிட்டுக்குருவி said...
  ஆரம்பத்திலே எனக்கு இது நடந்தது பிழை கண்டு திருத்தி விட்டேன் ஆனால் யாரிடமும் இதனை சொல்லவில்லை..
  காரணம் எல்லோருக்கும் தெரிந்திருக்கும் என நினைத்திருந்தேன் இப்போது தான் புரிகிறது...
  தவறு செய்துவிட்டோமா என்று..
  எல்லோருக்கும் சொல்லியிருக்கலாமே என இப்போது வருத்தப் படுகிறேன்//
  நம்மக்கு மட்டுமலா நாம் பிற தளங்களுக்கு நுழைவதையும் தாமதப் படுத்துகிறது. அதனால்தான் மற்றவர்களுக்கும் பயன் படட்டும் என்று பகிர்ந்தேன்.

  ReplyDelete
 17. kovaikkavi said...
  Thank you very much Murali.
  Vetha.Elangathilakam.//
  நன்றி மேடம்.

  ReplyDelete
 18. //பழனி.கந்தசாமி said...
  அடடே, இதுதான் பிரச்சினையா? இப்பவே இந்த இன்ட்லியை இட்லியாக்கிவிடுகிறேன். நன்றி.//

  இல்கரின் வேகம் தெரிகிறது அய்யா!

  ReplyDelete
 19. //வெங்கட் நாகராஜ் said...
  தமிலிஷ் என்பதிலிருந்து இண்ட்லியாக மாறியதிலிருந்தே பிரச்சனை தான். ஒழுங்காக வேலை செய்வதே இல்லை.
  நான் ஏற்கனவே எடுத்து விட்டேன். இன்று தமிழ்மணம் வேலை செய்யவில்லை... என்ன காரணமோ புரியவில்லை. :(
  தேவையான பகிர்வு - தெரியாதவர்கள் செய்து கொள்ள வசதியாக இருக்கும்.//
  பலபேர் தெரிந்திருந்தும் மாற்றங்கள் செய்ய தயங்கு கிறார்கள்.

  ReplyDelete
 20. HOTLINKSIN.COM திரட்டி said...
  இன்ட்லி தமிழின் நம்பர் 1 திரட்டி. கடந்த சில நாட்களாக இன்ட்லி செயல்படாமல் இருப்பது வருத்தத்திற்குரியதே... விரைவில் இன்ட்லி செயல்படட்டும்.//
  HOTLINKSIN.COM திரட்டியில் எனது பதிவுகளை நான் தொடர்ந்து இணைத்து வருகிறேன். நன்றி

  ReplyDelete
 21. பயனுள்ள பகிர்வுக்கு நன்றிகள்..

  ReplyDelete
 22. இண்ட்லி,இன்னலி!

  ReplyDelete
 23. உண்மைதான்! நானும் தற்போது நீக்கி உள்ளேன்! எனக்கும் பேஜ்வியு குறைந்துள்ளது!

  இன்று என் தளத்தில்
  தளிர்ஹைக்கூ கவிதைகள்!
  http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_3.html

  ReplyDelete

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895