என்னை கவனிப்பவர்கள்

வாக்குப்பட்டை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வாக்குப்பட்டை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 1 செப்டம்பர், 2012

இன்ட்லியால் ஒரு இன்னல்




   சாதரணமாக ஒரு பதிவு போட்டு முடித்து தமிழ் மணம், தமிழ்  10 ,இன்ட்லி திரட்டிகளில்  இணைக்கப் பட்டதும் அந்த நாளில் அந்தப் பதிவை மட்டும் ஏறக்குறைய நூறு பேராவது  பார்த்து விடுவார்கள்.  பால குமாரனின் குதிரைக் கவிதைகள் ஓரளவிற்கு வரவேற்பு பெற்ற தொடர்  பதிவாக இருந்து வருகிறது 

    ஆனால்  நேற்று காலை பதிவிடப்பட்ட மன்னன் என்ன சொன்னான்? பாலகுமாரன் கவிதை. பதிவு இப்போது வரை  25  பேர் மட்டுமே படித்திருக்கிறார்கள்.

   அவ்வப்போது இன்ட்லி,தமிழ் 10,தமிழ்மணம் சில மணி நேரங்கள் வேலை செய்யாமல் போதுண்டு. ஆராய்ந்தபோது  கடந்த இரண்டு நாட்களாக எனது வலைப்பக்கம் திறக்க நீண்ட நேரம் பிடித்தது. அதற்கு காரணம் இன்ட்லி என்று தெரிந்து  கொண்டேன். இன்ட்லியை லோட் செய்யும் முயற்சியில் ஈடுபட்டு தோல்வியுற்று பின்னர்  வலைப்பூ திறந்தது. இதற்கு பத்து நிமிடங்கள் கூட ஆனது. இதனால் வர முற்பட்டவர்களும் வெறுத்துப் போய் பின்வாங்கி இருப்பார்கள் என்று கருதுகிறேன். நானும்  பலரது வலைப் பக்கங்களுக்கு செல்ல முடியவில்லை  பிற பதிவர்களுக்கும் இந்த அனுபவம் ஏற்பட்டுள்ளதா என்று தெரியவில்லை.

  பெரும்பாலும் இன்ட்லி சில நேரங்களில் வேலை செய்யாது போனாலும் உடனே சரியாகி விடும்.ஆனால் இரண்டு நாட்களாகியும் சரியாகவில்லை.
   அதனால் இன்ட்லி  பின் தொடர்பவர்   விட்ஜெட்டையும் இன்ட்லி வாக்குப் பாட்டையும் தற்காலிகமாக நீக்கி விட்டேன்.இப்பொழுது கொஞ்சம் வேகமாக பக்கங்கள்  லோட்  ஆகிறது. 

 நான் பின்பற்றிய வழிமுறைகள் 

புதிய இடைமுகப்பில்  சைன் இன் செய்து உள்நுழைந்து  LayOut  பகுதிக்குச் சென்று   இன்டலி  Follower விட்ஜெட்டை எளிதில்நீக்கி  விடலாம் . ஆனால் வாக்குப் பட்டையை நீக்குவதை சற்று  யோசித்து செய்ய வேண்டும். Template பகுதிக்கு கொண்டு Edit HTML பகுதிக்கு சென்று  Expand Widjet Templates box ஐ செக் செய்து கொண்டேன்.

பின்னர் முழுவதையும்  நகலெடுத்து ஒரு நோட் பேட் பைலில் சேமித்து வைத்துக்கொண்டேன்

பின்னர் 

<script type='text/javascript'> button=&quot;hori&quot;; lang=&quot;ta&quot;; submit_url =&quot;<data:post.url/>&quot; </script> <script src='http://ta.indli.com/tools/voteb.php' type='text/javascript'/>
என்ற வரிகளை கண்டு பிடித்து நீக்கி  டெம்ப்ளேட்டை  சேமித்து விட்டேன்.


CTRL +F key ஐப பயன் படுத்தி  indli என்று உள்ளீடு செய்தால் எளிதில் இந்த வரிகளை கண்டு பிடித்த் விடலாம் 

 இன்ட்லி தொடர்பான அனைத்தும் நீக்கப் பட்டுவிட்டதால்  இப்போது  வேகமாக வலைப்பூ திறக்கும்.

இன்ட்லி சரியானதும் மீண்டும் எளிதில் இணைத்துக் கொள்ளலாம்.

**************************************************************