என்னை கவனிப்பவர்கள்

.உங்கள் மின்னஞ்சல் முகவரியை FOLLOW BY EMAIL பகுதியில் இடவும்.மூங்கில் காற்றின பதிவுகள் உங்கள் மின்னஞ்சலுக்கு வந்து சேரும்.TPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்

Saturday, August 25, 2012

முன்னணிப் பதிவர்களின் அலெக்சா தரவரிசை பின்னிலை ஏன்?

   
          நான் கணினி தொழில் நுட்பம் தெரிந்தவன் அல்ல.ஒருஆசிரியர் போல் அல்லாமல் ஒரு மாணவன் சக மாணவனுக்கு தனக்கு தெரிந்ததை சொல்வது போல் எனக்குத் தெரிந்ததை நான் கற்றுக் கொண்டதை, பயனடைந்ததை இங்கு பகிர்ந்து கொள்ள விரும்பியதால் வந்த விளைவுதான் இந்தப் பதிவு. கணினி  தொழில் நுட்பப் பதிவர்கள் மன்னிப்பார்களாக.

  எனது வலைப்பதிவைவிட அதிகப் பார்வையாளர்கள் வரும் முன்னணி வலைப் பதிவர் சிலரின் அலெக்சா ரேங்கை பார்த்த போது ஆச்சர்யம் அடைந்தேன். சிலர் என்னை விட குறைந்த அளவே முன்னணியில் சிலர் இருந்தனர். ஒரு சிலரோ என்னைவிட பின் தங்கி இருக்கின்றனர். அதற்கான காரணத்தையும் அறிந்து கொண்டேன்.அதனை சொல்ல இங்கே முயற்சி செய்திருக்கிறேன் தவறு இருப்பின் தெரிவிக்கவும்

  தமிழில் பதிவெழுதுபவர்கள் முதலில் குறிக்கோளாய் வைப்பது தமிழ்மண தர வரிசையில் முந்துவதுதான்.அடுத்து அவர்கள் விரும்புவது அலெக்சா தர வரிசை முன்னேற்றத்தையே. அலெக்சா தரவரிசை உலக அளவில் நம்பகத் தன்மை உடையதாகக் கருதப்படுகிறது என்பதெல்லாம் எல்லோருக்கும் தெரிந்ததே. 

   இப்படி இருக்க, கடந்த ஜனவரியில் கூகுள் செய்த திடீர் மாற்றம் தமிழ்ப் பதிவுலகை அதிர்ச்சி அடைய வைத்தது.  இம்மாற்றத்தால் பதிவர்கள் பலர் அலெக்சா தர வரிசையில் பின்னடைவை சந்திக்க நேர்ந்தது.(இவை எதை பற்றியும் கவலைப்பட்டு குழப்பிக் கொள்ளாமல் (தம்பி! டீ இன்னும் வரல! என்று சொல்லிக்கொண்டு) என் கடன் பதிவெழுதிக் கிடப்பதே என்று சிலர் தொடர்ந்து எழுதிக் கொண்டிருந்தனர்). நான் தீவிரமாக பதிவெழுத ஆரம்பித்த மூன்று மாதங்களிலேயே கூகுள் இந்த மாற்றத்தை செய்து விட்டது. (மூன்று மாத மொத்த பார்வையாளர்களைக் கொண்டுதான் அலெக்சா தரம்   கணக்கிடப்படுகிறது) 

  அப்படி என்னதான் செய்தது கூகுள்? நமக்கு வழங்கிய இலவச டொமைன் பெயர்களில் blogspot.com என்று இருக்கும்,உதாரணத்துக்கு  எனது வலைபூ முகவரி tnmurali.blogspot.com. கூகிள் செய்த மாற்றத்தால் திடீரென்று முகவரி tnmurali.blogspot.in ஆக மாறிவிட்டது. அதனால் நமக்கென்ன நஷ்டம்?  இருந்துவிட்டுப் போகட்டுமே! என்கிறீர்களா? அங்குதான் கூகுள் இலவச பிளாக்கர்களுக்கு மட்டும் ஆப்பு அடித்தது. என் வலைப்பூவை இந்தியாவில் பார்ப்பவர்கள் tnmurali.blogspot.in என்று தெரியும்.இதே ப்ளாக் அமெரிக்காவில் பார்பவர்களுக்கு tnmurali.blogspot.us என்று தெரியும். ஆஸ்திரேலியாவில் .
tnmurali.blogspot.au என்று மாறிவிடும். 

  தரவரிசை கணக்கிடும் அலெக்சாவோ இவற்றை தனித்தனி வலைப்பதிவாக எடுத்துக்கொள்ளும்.இந்தியாவைத் தவிர பிற நாடுகளில் பார்ப்பவர்களின் எண்ணிக்கையை  எடுத்துக் கொள்ளாமல் .in முகவரிக்கே தரவரிசை கணக்கிடும் .இந்தியாவைத் தவிர அமரிக்கா,கனடா,அரபு நாடுகளில் அதிக அளவு தமிழ்ப் பதிவுகள் பார்க்கப் பட்டாலும் அவை கணக்கில் வருவதில்லை.
பலருக்கும் தர வரிசை பின்னடைவுடன். தமிழில் வந்தே மாதரம் சசிகுமார்,பொன்மலர் போன்றவர்கள் இதற்கான தீர்வுகளைக் கூறினார்கள்.

    இந்த  மாற்றம் இலவச ப்ளாக் முகவரிக்கே என்பதால் காசு கொடுத்து ப்ளாக் முகவரி பெற்றால் அவர்களுடைய ப்ளாக் எல்லா நாடுகளிலும் ஒரே மாதிரி முகவரியுடன் தோன்றும். இதனால் தரவரிசையில் மாற்றம் ஏற்படாது.அதனால் புதியதாக பணம் கொடுத்து முகவரி பெற்றுக் கொள்வது.

  'கேபிள்  சங்கர்' 'அட்ரா சக்க' போன்றவர்கள் இந்த முறையில் தனி முகவரி பெற்று விட்டார்கள்.இவர்களுடைய வலைப்பூ பார்வையாளர்கள் மிக அதிகம் என்பதால் மூன்றே மாதங்களில் இவர்கள் பழைய நிலையை எட்டிவிட்டனர். ட்ராஃபிக் சற்றுக் குறைவாக உள்ளவர்கள் இம்முறையை பின்பற்றத் தயங்கினர். காரணம் இதனால் எந்த லாபமும் இல்லை என்பதே! புலவர் ராமானுசம் ஐயா அவர்களும் புது முகவரி பெற்றுள்ளார்.

  இரண்டாவது தீர்வு  .in, us என்று திருப்பப்படுவைதை தவிர்த்து பழைய ..com முகவரிக்கே செல்வதற்கான  HTML நிரல்களை உரிய இடத்தில் இணைப்பது. 

  சகோதரி பொன்மலர் (பார்க்க:http://ponmalars.blogspot.com/2012/03/stop-blogger-redirecting-country-wise.html) வெளியிட்ட நிரல்களைக் கொண்டு நான் என் வலைப்பக்கத்தில் இணைத்துக்கொண்டேன்.

 இதனால் என் வலைப்பக்கம் tnmurali.blogspot.com என்றே லோட் ஆனது. எனது இன்றைய அலக்சா ரேங்க் 470807. தமிழ் மணத்தின்  தர வரிசையில் முதல் 20  இல் உள்ளவர்களை மட்டும் எடுத்துக்கொண்டு பார்த்ததில்  ஒரு சிலர் மட்டுமே .com க்கு மாறும்படி  செய்துள்ளனர்.அவர்களுடைய அலக்சா தரம் நல்ல முறையில் உள்ளது. ஒரு  இன்னும் சிலருடைய .in என்றே உள்ளது. இவர்களது அலக்சா வரிசை இந்தியாவில் பார்க்கப்படும் பார்வையாளர்களை வைத்து கணக்கிடப்படுவதால் சற்று பின்னடைவில் உள்ளது. 

  இவர்களில் இருவரைத் தவிர வேறு யாரும் அலெக்சா விட்ஜெட் இணைக்கவில்லை.  கூகிள் செய்த மாற்றத்திற்கு முன் இணைக்கப்பட்ட அலெக்சா ரேங்கிங் விட்ஜெட்டை மாற்றாமல் வைத்திருந்தால்  .in க்கான பார்வைகளை  எடுத்துக்கொள்ளாமல் ரேங்க் கணக்கிடப்படும். 

  நமது வலைப்பக்கத்துக்கு வரும் எந்த நாட்டுப் பார்வையாளர்களாக இருந்தாலும்  அனைவரின் பார்வைகளையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றால் கட்டாயம் நிரலில் மாற்றம் செய்ய வேண்டும். நான் பொன்மலர் பக்கங்கள் என்ற வலைப்பதிவில் தொழில் நுட்பப் பதிவுகள் எழுதி வரும் சகோதரி பொன்மலரின். நிரலை நான் பயன்படுத்தினேன். அந்தப் பதிவில் உள்ள கோடிங்கை காப்பி செய்து அந்தப் பதிவில் கூறியுள்ள வழி முறைப்படி ஒட்டவும்.உங்களுக்குப் பரிச்சியமான வேறு சில தொழில் நுட்பப் பதிவர்களின் நிரல்களையும் பயன் படுத்தலாம். நிரல்களை குறிப்பிட்ட இடங்களில் நுழைக்குமுன் டெம்ப்ளேட்டை பேக் அப் எடுக்கவும்.ஐயமின்றி தெரிந்தால் மட்டுமே இதை செய்ய வேண்டும்.முடியவில்லை எனில் நண்பர்களின் உதவியை நாடுவது நல்லது

இதனால்  உங்கள் அலெக்சா தர வரிசை உயர வாய்ப்பிருக்கிறது.
யான் பெற்ற பயனை பெருக இப் பதிவுலகம். 

இதோ  வழி முறைகள்:

step 1 பழைய பிளாக்கர் இன்டர்பேஸ் ஆக இருந்தால் Design-பகுதிக்கு செல்லவும் .
step 2 
Edit HTML ஐ கிளிக் செய்யவும்step 3

கீழ்க்கண்டவாறு  தோற்றமளிக்கும். அந்த பெட்டிக்குள் உள்ள நிரலில் 
 <b:include data='blog' name='all-head-content'/> என்ற வரிகளை தேடிக் கண்டு பிடிக்கவும்

step 4

<script type="text/javascript">
var str= window.location.href.toString();
if ((str.indexOf('.com/'))=='-1') {
var str1=str.substring(str.lastIndexOf(".blogspot."));
if (str1.indexOf('/')=='-1') {
var str2=str1;
}
else {
var str2=str1.substring(0,str1.indexOf('/')+1);
}
window.location.href =window.location.href.toString().replace(str2,'.blogspot.com/ncr/');
}
</script>

 இந்த நிரலை copy   செய்து
<b:include data='blog' name='all-head-content'/>
என்ற  வரியை கண்டுபிடித்து அதன் கீழே மேலுள்ள பேஸ்ட் செய்யவும்


Save Temmlate கொடுத்து வெளியேறவும்

இனி அடுத்த முறை உங்கள் ப்ளாக் .in ஆக இருந்தாலும் .com ஆக மாறிவிடும் 

நன்றி பொன்மலர் பக்கங்கள்

                      *******************************************


   அலெக்சா விட்ஜெட் இணைக்கப் படாத நம்முடைய நண்பர்களின்(அல்லது எதிரிகளின்?) அலெக்சா ரேங்கை எளிய முறையில் அறிந்து கொள்வது எப்படி?
அடுத்த பதிவில்

37 comments:

 1. என் கடன் பதிவு எழுதிக்கிடப்பதே. எது முன்னால போனா என்ன? பின்னால போனா என்ன? ஆனாலும் நல்லதொரு விழிப்புணர்வு பதிவுதான். நானும் மாற்றியிருக்கிறேன்.

  ReplyDelete
 2. நல்ல பதிவு அண்ணா ட்ரை பண்ணி பார்கிறேன்

  ReplyDelete
 3. அட நல்லாவே வேலை செய்து நன்றி முரளி அண்ணா நன்றி பொன்மலர்.. நட்சத்திர பதிவர் உண்மையிலே ஜொலித்து விட்டீர்கள்

  ReplyDelete
 4. விச்சு அவர்கள் சொல்வது போல் என் எண்ணங்களை பதிவாக்குகிறேன். அதை வளமாக்கவும் எண்ணுகிறேன்.வரிசை பற்றி இன்னம் யோசிக்கவில்லை.ஆனால் கவனத்தில் கொள்ள வேண்டிய பதிவு. இது குறித்து கோவை பதிவர்கள் சந்திப்பில் எங்களுக்கு அறிவுறுத்தினார்கள் நன்றி

  ReplyDelete
 5. அழகான விழிப்புணர்வுப்பதிவு ! சிறப்பான நட்சத்திர வாரம் வாழ்த்துக்கள்.சகோ!

  ReplyDelete
 6. குடியால் அழியுமா பதிவுலகம்?
  பதிவுலக சண்டைக் குறித்து ஒரு நடுநிலை ஆய்வு!

  http://arulgreen.blogspot.com/2012/08/blog-post_25.html

  ReplyDelete
 7. நல்ல பகிர்வு. நானும் உங்கள் பதிவு பார்த்துவிட்டு இப்போது தான் நிரலை மாற்றினேன். மிக்க நன்றி.

  ReplyDelete
 8. நல்ல பயனுள்ள தகவல்! நன்றி!

  இன்று என் தளத்தில்
  சித்துண்ணி கதை!
  http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_25.html
  பிறந்த குழந்தை பேசியது! பரவிய வதந்தி!
  http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_1427.html

  ReplyDelete
 9. நல்ல விஷயம் சொல்லியிருக்கிறீங்க முரளி !

  ReplyDelete
 10. எனக்கு ஒன்றுமே புரியவில்லை...முரளி.
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete
 11. அருமையான பதிவு.பயனுள்ள தகவல்கள். அறிந்து கொண்டேன். பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி நண்பரே.

  in இருந்து com மாறுவது எப்படி? இப்படி நிரலை மாற்றம் செய்தானா?

  அலெக்சா விட்ஜெட் இணைப்பது எப்படி? முடிந்தால் கூறுங்கள்.

  ReplyDelete
 12. அலெக்சாவில் முன்னனியில் வர விரும்புபவர்களுக்கு பலன் உள்ள இடுகை. குறிப்பாக அதிக இடுகைகள் இடுபவர்கள் நிரலை இணைப்பது நல்லது.

  இடுகைக்கு தொடர்பில்லாத வேண்டுகோள்:
  T.N.MURALIDHARAN சரி. தமிழிலும் டி.என். முரளிதரன் என்று எழுதாமல் தமிழில் முன்னெட்டு கொண்டு பெயரைக்குறிப்பிடலாமே.

  ReplyDelete
 13. தகவலுக்கு நன்றி முரளிதரன்!

  ReplyDelete
 14. பயனுள்ள தகவல் நண்பரே

  நட்சத்திர வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 15. நன்றி நண்பரே. இப்பொழுது பயன்படுத்தி பார்த்தேன் என்னுடைய தளம் இப்பொழுது rasarasan.blogspot.com என்று மாறியுள்ளது. மேலும் rasarasan.blogspot.in என்று கொடுத்தால் rasarasan.blogspot.com மாறி விட்டது. மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். நன்றி நண்பரே.

  ReplyDelete
 16. ஆஹா நீங்களும் தொழில்நுட்பப் பதிவா...? பிரயோசனமான பதிவு சார்

  ReplyDelete
 17. திரு.முரளி அவர்களே நீங்கள் சொல்வது பகுதியாக சரி.ஆனாலும் முழுமையும் சரியல்ல..!!!
  தமிழ்மணமும் சரி அலெக்சாவும் சரி இரண்டுமே மிகவும் பொய்யானவை.தவறான தரவரிசையத்தான் காட்டும்.காரணம் இவை இரண்டிற்குமே தனிப்பட்ட முறையில் சில கொள்கைகள் உள்ளது அது அந்த தளத்திற்கு சாதகமாக அமைய வேண்டும்.உதாரணமாக அலெக்சாவில் முன்னேற அலெக்சா டூல் பார் இணைக்க வேண்டும்.

  அலெக்ஸா,தமிழ்மனம் இரண்டுமே கடந்த மூன்று மாதத்தை கணக்கில் எடுத்து ட்ராஃபிக் படி தரவரிசை வழங்குவதாக பொய்யான தகவலை தெரிவிக்கிறது.

  எடுத்துக்காட்டாக எனது தளத்தில் வெறும் 70 பதிவுகளில் ஒரு வருடத்தில் இன்றைய கனக்குப்படி 368885 பக்கங்கள் பார்க்கப்பட்டுள்ளன.

  அலெக்ஸா தமிழ்மனம் கனக்குப்படி எடுத்துக்கொண்டால் கடந்த இரண்டு மாதத்தில் உங்கள் தளம் 17217 பார்வைகள் பெற்றுள்ளது.என் தளம் 58000 பார்வைகளை பெற்றுள்ளது.

  உங்கள் தமிழ்மன தரவரிசை 43 என்று இருக்கிறது.அதுவே எனது 752 என தமிழ்மனம் காட்டுகிறது.

  அலெக்ஸாவில் எனது 338720 நீங்கள் 455744 ஹிஹி இது எப்படி சரி?

  அதைவிட இன்னும் நிறைய பக்கங்கள் கடந்த இரண்டு மாதத்தில் 80000 பார்வைகள் மட்டுமே பெற்று அலெக்ஸாவில் 70000ல் இருக்கிறது.உதாரணமாக muruganantham.in ஐ கூட சொல்லலாம்.அதே சமயம் கடந்த இரண்டு மாதத்தில் 5லட்சம் பார்வைகள் பெற்ற தளங்கள் அலெக்ஸாவில் 1லட்சத்திற்கும் மேல் உள்ளது.உதாரனம் eegarai.net .

  இவை எல்லாவற்றிற்கும் முக்கிய காரணம் அலெக்ஸா டூல்பார்.அதோடு இன்னும் சில தந்திரங்கள் உள்ளது.இந்த தந்திரங்கள் எனக்கும் தெரியும்!!!இருந்த போதும் அது எனக்கு தேவையில்லை என்றே கருதுகிறேன்.

  அடுத்து .in பிரச்சினை.அதாவது வெளி நாடுகளில் .au அல்லது ..sg என முகவரி மாறும் போது அந்த பக்கத்தை பார்க்க இயலாது.அது refresh ஆகிக்கொண்டே இருக்கும்.அது பக்க எண்ணிக்கையை கூட சில சமயம் அதிகரிக்கும்.அதற்கு பதிலாக .au அல்ல வேறு எதாவது இருக்கும் இடத்தில் .in ஐ மாற்றினால் பக்கம் தோன்றும். நீங்கள் சொன்ன முறையும் ஏற்புடையதுதான்.இருந்தபோதும் கூகிள் இதை விரைவில் சரிசெய்யும் என நம்புவோம்.

  நன்றி.

  ReplyDelete
 18. அலெக்சாண்டர் பற்றியெல்லாம் கவலைப்படாதவர்களுக்கும் ஒரு பதிவு போடுங்க:)

  ReplyDelete
 19. நிச்சயமாக பயனுள்ள பதிவு.நல்ல செய்தி...எனக்கு கூட .sg என்றுதான் வருகிறது.தமிழ்மண ஓட்டுப்பட்டையும் வேலைசெய்யவில்லை.நானும் முயற்சிக்கிறேன் ..

  ReplyDelete
 20. மிக பயனுள்ள பதிவு நன்றி

  ReplyDelete
 21. பலருக்கும் பயன் தரும் தகவல்கள்... நன்றி... (TM 8)

  ReplyDelete
 22. காலத்தில் செய்த உதவி என்று கூறுவார்கள். தங்களின் இந்தப் பதிவு என்னைப் பொறுத்தவரை அதுதான்.

  கடந்த இரண்டு வாரங்களாகத் தமிழ்மணத்தில் பதிவுகளை இணைக்க முடியாமல் போய்விட்டது. source code மாற்றி மாற்றி போட்டும் சரியாகவில்லை. இப்பொழுது தங்கள் பதிவால் .in இலிருந்து .com மாற்றி source code-ஐ மீண்டும் புதிபித்ததும் தமிழ்மணப் பட்டை வேலை செய்ய ஆரம்பித்து விட்டது.

  நன்றிகள்.

  ReplyDelete
 23. //விச்சு said...
  என் கடன் பதிவு எழுதிக்கிடப்பதே. எது முன்னால போனா என்ன? பின்னால போனா என்ன? ஆனாலும் நல்லதொரு விழிப்புணர்வு பதிவுதான். நானும் மாற்றியிருக்கிறேன்.//
  நன்றி விச்சு

  ReplyDelete
 24. //வரலாற்று சுவடுகள் said...
  நல்ல அலசல்! (TM 1)//
  நன்றி வரலாற்றுச் சுவடுகள்.

  ReplyDelete
 25. ஹாரி பாட்டர் said...
  நல்ல பதிவு அண்ணா ட்ரை பண்ணி பார்கிறேன்//
  நன்றி ஹாரி பாட்டர்

  ReplyDelete
 26. //ezhil said...
  விச்சு அவர்கள் சொல்வது போல் என் எண்ணங்களை பதிவாக்குகிறேன். அதை வளமாக்கவும் எண்ணுகிறேன்.வரிசை பற்றி இன்னம் யோசிக்கவில்லை.ஆனால் கவனத்தில் கொள்ள வேண்டிய பதிவு. இது குறித்து கோவை பதிவர்கள் சந்திப்பில் எங்களுக்கு அறிவுறுத்தினார்கள் நன்றி//
  நன்றி எழில்

  ReplyDelete
 27. தனிமரம் said...
  அழகான விழிப்புணர்வுப்பதிவு ! சிறப்பான நட்சத்திர வாரம் வாழ்த்துக்கள்.சகோ!//
  நன்றி தனிமரம்

  ReplyDelete
 28. வெங்கட் நாகராஜ் said...
  நல்ல பகிர்வு. நானும் உங்கள் பதிவு பார்த்துவிட்டு இப்போது தான் நிரலை மாற்றினேன். மிக்க நன்றி.//
  நன்றி நாகராஜ் சார்!

  ReplyDelete
 29. //s suresh said...
  நல்ல பயனுள்ள தகவல்! நன்றி//
  நன்றி சுரேஷ்

  ReplyDelete
 30. ஹேமா said...
  நல்ல விஷயம் சொல்லியிருக்கிறீங்க முரளி !//
  நன்றி ஹேமா
  நன்றி கோவைக்கவி

  ReplyDelete
 31. Rasan said...
  அருமையான பதிவு.பயனுள்ள தகவல்கள். அறிந்து கொண்டேன். பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி நண்பரே.
  in இருந்து com மாறுவது எப்படி? இப்படி நிரலை மாற்றம் செய்தானா?
  அலெக்சா விட்ஜெட் இணைப்பது எப்படி? முடிந்தால் கூறுங்கள்.//
  நன்றி ராசன்

  Read more: http://tnmurali.blogspot.com/2012/08/alexa-ranking.html#ixzz28L0Spnq8

  ReplyDelete
 32. குறும்பன் said...
  அலெக்சாவில் முன்னனியில் வர விரும்புபவர்களுக்கு பலன் உள்ள இடுகை. குறிப்பாக அதிக இடுகைகள் இடுபவர்கள் நிரலை இணைப்பது நல்லது.//
  நன்றி குறும்பன,

  ReplyDelete
 33. ரொம்ப ஆராய்ச்சி செய்திருக்கீங்க.. இது என்னான்னே தெரியாதவனுக்கு இதெல்லாம் ராகெட் சயன்ஸ் போலிருக்கு.

  ReplyDelete
 34. அப்பாதுரை நீங்க என் கட்சி

  ReplyDelete
 35. நான்கூட ஏதோ ஒரு பொழுது போக்காகத்தான் எழுதுகிறேனே தவிர இதில் இவ்வளவு விஷயங்கள் உள்ளது என்பது தெரியாது.
  நானும் கூட நினைத்தேன் நான் கனாடா வந்தபோது என் பிளாக்கின் பின் .CA என்று வந்தது. பிறகு லண்டன் வந்த பின் .UK என்று வருகிறது .நீங்கள் சொல்வது போல் .காம் என்று மாற்ற முயற்சிக்க வேண்டும் .Information
  க்கு நன்றி .

  ReplyDelete

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895