நான் கணினி தொழில் நுட்பம் தெரிந்தவன் அல்ல.ஒருஆசிரியர் போல் அல்லாமல் ஒரு மாணவன் சக மாணவனுக்கு தனக்கு தெரிந்ததை சொல்வது போல் எனக்குத் தெரிந்ததை நான் கற்றுக் கொண்டதை, பயனடைந்ததை இங்கு பகிர்ந்து கொள்ள விரும்பியதால் வந்த விளைவுதான் இந்தப் பதிவு. கணினி தொழில் நுட்பப் பதிவர்கள் மன்னிப்பார்களாக.
எனது வலைப்பதிவைவிட அதிகப் பார்வையாளர்கள் வரும் முன்னணி வலைப் பதிவர் சிலரின் அலெக்சா ரேங்கை பார்த்த போது ஆச்சர்யம் அடைந்தேன். சிலர் என்னை விட குறைந்த அளவே முன்னணியில் சிலர் இருந்தனர். ஒரு சிலரோ என்னைவிட பின் தங்கி இருக்கின்றனர். அதற்கான காரணத்தையும் அறிந்து கொண்டேன்.அதனை சொல்ல இங்கே முயற்சி செய்திருக்கிறேன் தவறு இருப்பின் தெரிவிக்கவும்
தமிழில் பதிவெழுதுபவர்கள் முதலில் குறிக்கோளாய் வைப்பது தமிழ்மண தர வரிசையில் முந்துவதுதான்.அடுத்து அவர்கள் விரும்புவது அலெக்சா தர வரிசை முன்னேற்றத்தையே. அலெக்சா தரவரிசை உலக அளவில் நம்பகத் தன்மை உடையதாகக் கருதப்படுகிறது என்பதெல்லாம் எல்லோருக்கும் தெரிந்ததே.
இப்படி இருக்க, கடந்த ஜனவரியில் கூகுள் செய்த திடீர் மாற்றம் தமிழ்ப் பதிவுலகை அதிர்ச்சி அடைய வைத்தது. இம்மாற்றத்தால் பதிவர்கள் பலர் அலெக்சா தர வரிசையில் பின்னடைவை சந்திக்க நேர்ந்தது.(இவை எதை பற்றியும் கவலைப்பட்டு குழப்பிக் கொள்ளாமல் (தம்பி! டீ இன்னும் வரல! என்று சொல்லிக்கொண்டு) என் கடன் பதிவெழுதிக் கிடப்பதே என்று சிலர் தொடர்ந்து எழுதிக் கொண்டிருந்தனர்). நான் தீவிரமாக பதிவெழுத ஆரம்பித்த மூன்று மாதங்களிலேயே கூகுள் இந்த மாற்றத்தை செய்து விட்டது. (மூன்று மாத மொத்த பார்வையாளர்களைக் கொண்டுதான் அலெக்சா தரம் கணக்கிடப்படுகிறது)
அப்படி என்னதான் செய்தது கூகுள்? நமக்கு வழங்கிய இலவச டொமைன் பெயர்களில் blogspot.com என்று இருக்கும்,உதாரணத்துக்கு எனது வலைபூ முகவரி tnmurali.blogspot.com. கூகிள் செய்த மாற்றத்தால் திடீரென்று முகவரி tnmurali.blogspot.in ஆக மாறிவிட்டது. அதனால் நமக்கென்ன நஷ்டம்? இருந்துவிட்டுப் போகட்டுமே! என்கிறீர்களா? அங்குதான் கூகுள் இலவச பிளாக்கர்களுக்கு மட்டும் ஆப்பு அடித்தது. என் வலைப்பூவை இந்தியாவில் பார்ப்பவர்கள் tnmurali.blogspot.in என்று தெரியும்.இதே ப்ளாக் அமெரிக்காவில் பார்பவர்களுக்கு tnmurali.blogspot.us என்று தெரியும். ஆஸ்திரேலியாவில் .
tnmurali.blogspot.au என்று மாறிவிடும்.
தரவரிசை கணக்கிடும் அலெக்சாவோ இவற்றை தனித்தனி வலைப்பதிவாக எடுத்துக்கொள்ளும்.இந்தியாவைத் தவிர பிற நாடுகளில் பார்ப்பவர்களின் எண்ணிக்கையை எடுத்துக் கொள்ளாமல் .in முகவரிக்கே தரவரிசை கணக்கிடும் .இந்தியாவைத் தவிர அமரிக்கா,கனடா,அரபு நாடுகளில் அதிக அளவு தமிழ்ப் பதிவுகள் பார்க்கப் பட்டாலும் அவை கணக்கில் வருவதில்லை.
பலருக்கும் தர வரிசை பின்னடைவுடன். தமிழில் வந்தே மாதரம் சசிகுமார்,பொன்மலர் போன்றவர்கள் இதற்கான தீர்வுகளைக் கூறினார்கள்.
இந்த மாற்றம் இலவச ப்ளாக் முகவரிக்கே என்பதால் காசு கொடுத்து ப்ளாக் முகவரி பெற்றால் அவர்களுடைய ப்ளாக் எல்லா நாடுகளிலும் ஒரே மாதிரி முகவரியுடன் தோன்றும். இதனால் தரவரிசையில் மாற்றம் ஏற்படாது.அதனால் புதியதாக பணம் கொடுத்து முகவரி பெற்றுக் கொள்வது.
'கேபிள் சங்கர்' 'அட்ரா சக்க' போன்றவர்கள் இந்த முறையில் தனி முகவரி பெற்று விட்டார்கள்.இவர்களுடைய வலைப்பூ பார்வையாளர்கள் மிக அதிகம் என்பதால் மூன்றே மாதங்களில் இவர்கள் பழைய நிலையை எட்டிவிட்டனர். ட்ராஃபிக் சற்றுக் குறைவாக உள்ளவர்கள் இம்முறையை பின்பற்றத் தயங்கினர். காரணம் இதனால் எந்த லாபமும் இல்லை என்பதே! புலவர் ராமானுசம் ஐயா அவர்களும் புது முகவரி பெற்றுள்ளார்.
இரண்டாவது தீர்வு .in, us என்று திருப்பப்படுவைதை தவிர்த்து பழைய ..com முகவரிக்கே செல்வதற்கான HTML நிரல்களை உரிய இடத்தில் இணைப்பது.
சகோதரி பொன்மலர் (பார்க்க:http://ponmalars.blogspot.com/2012/03/stop-blogger-redirecting-country-wise.html) வெளியிட்ட நிரல்களைக் கொண்டு நான் என் வலைப்பக்கத்தில் இணைத்துக்கொண்டேன்.
இதனால் என் வலைப்பக்கம் tnmurali.blogspot.com என்றே லோட் ஆனது. எனது இன்றைய அலக்சா ரேங்க் 470807. தமிழ் மணத்தின் தர வரிசையில் முதல் 20 இல் உள்ளவர்களை மட்டும் எடுத்துக்கொண்டு பார்த்ததில் ஒரு சிலர் மட்டுமே .com க்கு மாறும்படி செய்துள்ளனர்.அவர்களுடைய அலக்சா தரம் நல்ல முறையில் உள்ளது. ஒரு இன்னும் சிலருடைய .in என்றே உள்ளது. இவர்களது அலக்சா வரிசை இந்தியாவில் பார்க்கப்படும் பார்வையாளர்களை வைத்து கணக்கிடப்படுவதால் சற்று பின்னடைவில் உள்ளது.
இவர்களில் இருவரைத் தவிர வேறு யாரும் அலெக்சா விட்ஜெட் இணைக்கவில்லை. கூகிள் செய்த மாற்றத்திற்கு முன் இணைக்கப்பட்ட அலெக்சா ரேங்கிங் விட்ஜெட்டை மாற்றாமல் வைத்திருந்தால் .in க்கான பார்வைகளை எடுத்துக்கொள்ளாமல் ரேங்க் கணக்கிடப்படும்.
நமது வலைப்பக்கத்துக்கு வரும் எந்த நாட்டுப் பார்வையாளர்களாக இருந்தாலும் அனைவரின் பார்வைகளையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றால் கட்டாயம் நிரலில் மாற்றம் செய்ய வேண்டும். நான் பொன்மலர் பக்கங்கள் என்ற வலைப்பதிவில் தொழில் நுட்பப் பதிவுகள் எழுதி வரும் சகோதரி பொன்மலரின். நிரலை நான் பயன்படுத்தினேன். அந்தப் பதிவில் உள்ள கோடிங்கை காப்பி செய்து அந்தப் பதிவில் கூறியுள்ள வழி முறைப்படி ஒட்டவும்.உங்களுக்குப் பரிச்சியமான வேறு சில தொழில் நுட்பப் பதிவர்களின் நிரல்களையும் பயன் படுத்தலாம். நிரல்களை குறிப்பிட்ட இடங்களில் நுழைக்குமுன் டெம்ப்ளேட்டை பேக் அப் எடுக்கவும்.ஐயமின்றி தெரிந்தால் மட்டுமே இதை செய்ய வேண்டும்.முடியவில்லை எனில் நண்பர்களின் உதவியை நாடுவது நல்லது
இதனால் உங்கள் அலெக்சா தர வரிசை உயர வாய்ப்பிருக்கிறது.
யான் பெற்ற பயனை பெருக இப் பதிவுலகம்.
இதோ வழி முறைகள்:
step 1 பழைய பிளாக்கர் இன்டர்பேஸ் ஆக இருந்தால் Design-பகுதிக்கு செல்லவும் .
step 2
Edit HTML ஐ கிளிக் செய்யவும்
step 3
கீழ்க்கண்டவாறு தோற்றமளிக்கும். அந்த பெட்டிக்குள் உள்ள நிரலில்
<b:include data='blog' name='all-head-content'/> என்ற வரிகளை தேடிக் கண்டு பிடிக்கவும்
step 4
<script type="text/javascript">
var str= window.location.href.toString();
if ((str.indexOf('.com/'))=='-1') {
var str1=str.substring(str.lastIndexOf(".blogspot."));
if (str1.indexOf('/')=='-1') {
var str2=str1;
}
else {
var str2=str1.substring(0,str1.indexOf('/')+1);
}
window.location.href =window.location.href.toString().replace(str2,'.blogspot.com/ncr/');
}
</script>
இந்த நிரலை copy செய்து
<b:include data='blog' name='all-head-content'/>
என்ற வரியை கண்டுபிடித்து அதன் கீழே மேலுள்ள பேஸ்ட் செய்யவும்
Save Temmlate கொடுத்து வெளியேறவும்
இனி அடுத்த முறை உங்கள் ப்ளாக் .in ஆக இருந்தாலும் .com ஆக மாறிவிடும்
நன்றி பொன்மலர் பக்கங்கள்
*******************************************

அலெக்சா விட்ஜெட் இணைக்கப் படாத நம்முடைய நண்பர்களின்(அல்லது எதிரிகளின்?) அலெக்சா ரேங்கை எளிய முறையில் அறிந்து கொள்வது எப்படி?
அடுத்த பதிவில்