என்னை கவனிப்பவர்கள்

.உங்கள் மின்னஞ்சல் முகவரியை FOLLOW BY EMAIL பகுதியில் இடவும்.மூங்கில் காற்றின பதிவுகள் உங்கள் மின்னஞ்சலுக்கு வந்து சேரும்.TPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்

திங்கள், 6 ஏப்ரல், 2015

எழுதியது யார்? கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்


 ஒரு பிரபலமான புத்தகத்தின் மொழி பெயர்ப்பிலிருந்து   கொஞ்சம் எடுத்துக் கொடுத்திருக்கிறேன். மூல நூலின் பெயரையும் இதை எழுதியவர் யாரென்றும் கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.

              எனக்கு மணமான போது   நான் உயர்நிலைப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தேன்  நாங்கள் அண்ணன் தம்பிமார்மூன்று பேரும் ஒரே பள்ளிக்கூடத்தில் படித்துக் கொண்டிருந்தோம்.  மூத்த அண்ணன் மிகவும் மேல் வகுப்பில் படித்தார். என்னோடு   விவாகமான அண்ணனோ எனக்கு ஒரு வகுப்பு மேலே படித்தார். விவாகத்தால்   எங்கள் இருவருக்குமஓர் ஆண்டு வீணாயிற்று. இதன் பலன் தான்    என் அண்ணனுக்கு பின்னும்     மோசமானதாகவே    இருந்தது. அவர் படிப்பையே முற்றும் விட்டு விட்டார்.அவரைப் போல    எத்தனை இளைஞர்கள் இதே கதிக்கு ஆளாகி யிருக்கிறார்கள் என்பதைக் கடவுளே அறிவார். இன்றைய நமது  ஹிந்து சமூகத்தில் மட்டுமே படிப்பும் கல்யாணமும் ஏக காலத்தில் நடைபெறுகின்றன.

     நான் தொடர்ந்து படித்தேன். உயர்நிலைப் பள்ளியில் என்னை மந்தமானவன் என்று யாருமே  எண்ணவில்லை. என் உபாத்தியாயர்கள் என்னிடம்    எப்பொழுதும் அன்போடு இருந்தார்கள். என் படிப்பின்    அபிவிருத்தி, நடத்தை ஆகியவை பற்றி ஆண்டுதோறும் பெற்றோருக்கு நற்சாட்சிப் பத்திரம் அனுப்பப்படும். கெடுதலான       பத்திரம் என்னைக் குறித்து ஒரு தடவையேனும் வந்ததில்லை.  உண்மையில் நான் இரண்டாம் வகுப்புத் தேறிய பிறகு           பரிசுகளையும் பெற்றேன். ஐந்தாம், ஆறாம் வகுப்புக்களில் முறையே  நான்கு ரூபாயும், பத்து ரூபாயும் உபகாரச் சம்பளங்களாகப் பெற்றேன். இவைகளை  நான் அடைந்ததற்கு என் திறமையை விட என்னுடைய  நல்லதிர்ஷ்டமே காரணம். ஏனெனில், இந்த உபகாரச் சம்பளம்   எல்லோருக்கும் உரியதன்று.கத்தியவாரில் சோராத் பகுதியிலிருந்து வரும்  சிறந்த மாணவர்களுக்கு மாத்திரமேஅது உண்டு.அந்த நாட்களில் நாற்பது முதல் ஐம்பது பேர் வரையில்  கொண்ட ஒரு வகுப்பில் சோராத்திலிருந்து வரும் மாணவர்கள் பலர் இருப்பதில்லை.

     என் திறமையில்     எனக்குப்         பிரமாதமான மதிப்பு இருந்ததில்லை என்பதே ஞாபகம். எனக்குப்    பரிசுகளும் உபகாரச் சம்பளங்களும் கிடைக்கும் போதெல்லாம் நான்   ஆச்சரியப்படுவது வழக்கம். ஆனால், எனது     நன்னடத்தையை      நான் சர்வ ஜாக்கிரதையாகக் காப்பாற்றி வந்தேன். இதில் ஒரு      சிறிது குறை ஏற்பட்டாலும் கண்ணீர்            விட்டு அழுது விடுவேன்.கண்டிக்கப்பட்டாலோ, கண்டிக்கபட வேண்டியவன் நான் என்று உபாத்தியாயர் கருதினாலோ, என்னால்       சகிக்க முடியாது. ஒரு தடவை அடிபட்டதாக   எனக்கு நினைவிருக்கிறது. அடிபட்டதற்காக நான் வருத்தப் படவில்லை ; நான்     அடிபட வேண்டியவன் என்று கருதப்பட்டதே எனக்கு அதிக வருத்தத்தை அளித்தது. அதற்காகப் பரிதாபகரமாக  அழுதேன்.
   முதல் வகுப்பிலோ, இரண்டாம்    வகுப்பிலோ படித்தபோது நடந்தது அது. நான் ஏழாம் வகுப்பில்         படித்துக் கொண்டிருந்த போது அத்தகைய மற்றொரு சம்பவம்     நிகழ்ந்தது. .  எங்கள் தலைமை ஆசிரியர் மீது மாணவர்களுக் கெல்லாம்  அதிகப் பிரியம்.  அதே    சமயத்தில் கட்டுத் திட்டங்களில மிகக் கண்டிப்பானவர்; குறிப்பிட்ட        முறைப்படி காரியங்களைச் செய்பவர்; நன்றாகப் போதிப்பவருங்கூட       அவர் மேல் வகுப்புப் பையன்களுக்குத்    தேகாப்பியாசத்தையும், கிரிக்கெட்டையும் கட்டாயமாக்கி விட்டார்.  இந்த    இரண்டும் எனக்குப் பிடிக்கவில்லை.
       இவை கட்டாயமாக்கப் படுவதற்கு    முன்னால் நான் தேகாப்பியாசம் செய்ததோ, கிரிக்கெட் அல்லது கால்பந்து விளையாடியதோ  இல்லை. ஒன்றிலும்  சேராமல்   நான் ஒதுங்கி இருந்து விட்டதற்கு எனக்கிருந்த கூச்சம் ஒரு காரணம். அப்படி      இருந்து விட்டது தவறு என்பதை இப்போது அறிகிறேன். படிப்புக்கும்  தேகப்பயிற்சிக்கும் சம்பந்தமே இல்லை என்ற தவறான கருத்தும்     அப்பொழுது எனக்கு இருந்தது. ஆனால், இன்று, பாடத் திட்டத்தில்  மனப்பயிற்சிக்கு எவ்வளவு இடம் அளிக்கப்படுகிறதோ, அவ்வளவு உடற்பயிற்சிக்கும் அளிக்கப்பட வேண்டும்  என்பதை அறிவேன். என்றாலும், தேகப் பயிற்சியில்    கலந்து கொள்ளாமல் இருந்து விட்டதனால் எனக்கு அதிகத் தீமை   எதுவும் ஏற்பட்டு விடவில்லை என்றும் கூறுவேன். இதற்கு ஒரு  காரணம் உண்டு. திறந்த வெளியில் நீண்ட தூரம் நடப்பதால் ஏற்படக்   கூடிய நன்மைகளைக் குறித்துப் புத்தகங்களில் படித்திருந்தேன். இந்த         யோசனை எனக்குப் பிடித்ததால் நீண்ட நேரம் நடக்கும்     பழக்கம் எனக்கு ஏற்பட்டது. அப்பழக்கம் இன்னும்     எனக்கு இருக்கிறது. இதன் பயனாக என் உடல் நன்கு வலுப்பெற்றது. 

       தேகாப்பியாச  வகுப்புக்குப் போக      நான் விரும்பாததற்குக் காரணம், என்   தந்தைக்குப் பணிவிடை    செய்யவேண்டும் என்று எனக்கு இருந்த ஆர்வமேயாகும். பள்ளிக்கூடம் விட்டதும்,   நேரே அவசரமாக வீட்டுக்குப் போய் அவருக்குப்    பணிவிடை செய்வேன். இந்தச்         சேவை செய்வதற்குக்    கட்டாயத் தேகப்பயிற்சி இடையூறாக இருந்தது. என்      தந்தைக்கு நான் பணிவிடை செய்ய வேண்டும் ஆகையால்      தேகப்பயிற்சி வகுப்புக்குப் போகாதிருக்க அனுமதிக்குமாறு திரு ஜிமியிடம்   கோரினேன். ஆனால், அவர் என் வேண்டுகோளை ஏற்றுக் கொள்ல மறுத்துவிட்டார். ஒரு நாள் சனிக்கிழமைஅன்று   காலையில்  பள்ளிக் கூடத்திற்குப் போக வேண்டும். மாலை 4  மணிக்குத்          தேகப் பயிற்சிக்காக நான் வீட்டிலிருந்து திரும்பவும்   பள்ளிக்கூடம் போக வேண்டும். நான் பள்ளிக் கூடம்    போய்ச்    சேருவதற்கு முன்னால் அங்கிருந்து பிள்ளைகளெல்லாம் போய் விட்டார்கள்.  வந்திருந்தோரின்  கணக்கை திரு ஜிமி மறுநாள் தணிக்கை செய்து பார்த்தபோது நான் வரவில்லை என்று குறித்திருந்ததைக் கண்டார். ஏன் வரவில்லை என்று என்னைக்  கேட்டதற்கு நடந்ததைச் சொன்னேன்.   நான் கூறியதை நம்ப அவர் மறுத்து விட்டார். ஓரணாவோ அல்லது  இரண்டணாவோ (எவ்வளவு என்று எனக்குச்     சரியாக நினைவில்லை)    அபராதம் செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டார்.

     பொய் சொன்னதாக நான்   தண்டிக்கப்பட்டேன்! இது எனக்கு மிகுந்த மன வேதனையாகி விட்டது.   நான் குற்றமற்றவன் என்பதை நிரூபிப்பது எப்படி? அதற்கு வழியே  இல்லை. வேதனை தாங்காமல் கதறி அழுதேன். உண்மை யுள்ளவன்  எச்சரிக்கையுடன்  இருப்பவனாகவும்  இருக்க வேண்டியது  முக்கியம் என்பதை உணர்ந்தேன். பள்ளிக்கூடத்தில் நான் அசட்டையாக நடந்துகொண்ட முதல் சந்தர்ப்பமும், கடைசிச்  சந்தர்ப்பமும் இதுதான். முடிவில் அந்த அபராதம் ரத்து செய்யப்பட்டு  விட்டதில் நான் வெற்றி  அடைந்தேன் என்று   இலேசாக ஞாபகம் இருக்கிறது. பள்ளிக்கூடம் விட்டதும் நேரே வீட்டுக்கு  நான்  வந்துவிட வேண்டும் என்று தாம் விரும்புவதாகத் தலைமையாசிரியருக்கு  என் தந்தையே சொன்னதன் பேரில், தேகாப்பியாசத்திற்குப்    போகவேண்டும் என்பதில் இருந்து  விலக்குப் பெற்றேன்...............................    ************************************************************

கிட்டத்தட்ட அனைவருமே சரியாகக் கூறி விட்டீர்கள்  வாழ்த்துக்கள் .


நேரம் இருந்தால் படியுங்கள் 


42 கருத்துகள்:

ஊமைக்கனவுகள். சொன்னது…

மா.பா. குருசாமி அவர்கள் பதிப்பித்த சத்தியசோதனையா அய்யா?

ஊமைக்கனவுகள். சொன்னது…

தேசப்பிதாவின் சுயசரிதம்.

த ம 1

S.P. Senthil Kumar சொன்னது…

சத்திய சோதனை என்று நினைக்கிறேன்.
த ம 3

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

மகாத்மா காந்தியின் சுய சரிதை - சத்திய சோதனை - ரா. வேங்கடராஜுலு அவர்களின் தமிழாக்கம்...

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

மகாத்மாவின் சுயசரிதைதான் ஐயா
நன்றி
தம +1

manavai james சொன்னது…

அன்புள்ள அய்யா,

‘மகாத்மா காந்தியின் சுய சரிதை சத்திய சோதனை ’நூலின் தமிழாக்கம் திரு.ரா.வேங்கடராஜுலு செய்தது.

முதல் பாகம் 5. உயர்நிலைப் பள்ளியில்... பக்கம் 15 முதல் 17 ஆவது பக்கத்தில் பாதிவரை.

பிரதான விநியோகஸ்தர்" காந்திய இலக்கியச் சங்கம், காந்தி மியூஸியம், மதுரை 625 020.

Printed & Published by Jitendra T.Desai, Navajivan Publishing House, Ahmedabad, 380 014.

அனைவரும் படிக்க வேண்டிய நூல்.!

நன்றி.
த.ம.5.

G.M Balasubramaniam சொன்னது…

AN EXPERIMENT WITH TRUTH காந்திஜியின் சுயசரிதை நான் ஆங்கிலத்தில்படித்தது. விஷயங்கள் அதை நினைவு படுத்துகின்றன. தமிழில் யாருடைய மொழி பெயர்ப்பையும் படித்தது கிடையாது காந்திஜி அதை குஜராத்தியில்தான் எழுதியதாகவும் திரு மஹாதேவ் தேசாய் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்ததாகவும் படித்த நினைவு. .

KILLERGEE Devakottai சொன்னது…

தகவல் அருமை நண்பரே...
தமிழ் மணம் 6

தனிமரம் சொன்னது…

காந்தியின் வாழ்க்கையில். கண்ணதாசன் பதிப்பகம் என்பது என் கருத்து.

வருண் சொன்னது…

*** பொய் சொன்னதாக நான் தண்டிக்கப்பட்டேன்! இது எனக்கு மிகுந்த மன வேதனையாகி விட்டது. நான் குற்றமற்றவன் என்பதை நிரூபிப்பது எப்படி? அதற்கு வழியே இல்லை. வேதனை தாங்காமல் கதறி அழுதேன். உண்மையுள்ளவன் எச்சரிக்கையுடன் இருப்பவனாகவும் இருக்க வேண்டியது முக்கியம் என்பதை உணர்ந்தேன். ****

சத்தியசோதனை படிச்சது இல்லை. "எப்போதும் உண்மை பேசணும்"னு சொல்லிக்கொடுத்தது என் தாயார்தான். பள்ளியில் மாரல் க்ளாஸ்ல சொல்லிக்கொடுத்தாலும் அதை டெய்லி வாழ்க்கையில் வலியுறுத்துவது நம் பெற்றோர்கள்தாம்.

பெற்றோர்கள் சரியாக அமையவில்லை என்றால்? அவர்களே அப்படி எதுவும் சொல்ல்க்கொடுத்து வலர்க்கவில்லை என்றால்??
------------------------
மேலும் ஒருவர் உண்மை பேசிட்டுப்போறது எளிது. உங்க மனசாட்சியை மட்டும்தான் நீங்க கண்வின்ஸ் பண்ணனும். உங்க உண்மையை ஊருக்கு நிரூபிக்கணும்னா, காந்திமாரி உக்காந்து அப்பப்போ அழவேண்டியதுதான். :) It gets complicated here! உண்மை பேசுபவன் "கவனமாக இருக்கணும்" என்பது எதுக்குனா நீங்க ஊர் உலகத்தை "சரிக் கட்ட"த்தான். அப்படி சரிக்கட்ட முயலும்போதுதான் உங்க "புனிதம்" தரம் குறைய ஆரம்பிப்பதும்.."அரசியல்" ஆரம்பிப்பது இங்கேதான்..

---------------------------
கற்பு, கடவுள், காதல் எல்லாமே புனிதமாவது "100% உண்மை" அவைகளில் கலந்து இருப்பதால்தான். புனிதம் என்கிற வார்த்தைக்கு அர்த்தம் தெரியாமல் பலரும் முழிப்பதைப் பார்க்கலாம். 100% உண்மை கலந்துள்ள எல்லாமே புனிதமானதுதான். ஆக புனிதத்திற்கு ஏன் "கடவுளுக்கே" அடிப்படை உண்மை ஒன்றுதான். காந்தியுடைய மனவுறுதிக்குக் காரணம், he believed in TRUTH all his life.

பகவத்கீதையில் வரும் கிருஷ்ண பரமாத்வைவிட காந்தி உயர்ந்தவர்தாம் because he believed TRUTH is the most important of all. Of course Jesus believed and preached the same. They both got killed for preaching "truth". Budda was left alive because he ran away to forest . He did not try preach laymen as much as Jesus and Gandhi did. :)

ஸ்ரீராம். சொன்னது…

//அடிபட்டதற்காக நான் வருத்தப் படவில்லை ; நான் அடிபட வேண்டியவன் என்று கருதப்பட்டதே எனக்கு அதிக வருத்தத்தை அளித்தது//

என்ன ஒரு எண்ணச்சுத்தம் இல்லை?

அ. பாண்டியன் சொன்னது…

வணக்கம் ஐயா
படித்தவுடன் கண்டு கொண்டேன். இருந்தாலும் நண்பர்களின் பின்னூட்டத்தால் தான் உறுதி செய்தேன். சிறப்பான பகிர்வோடு வினாவும் எழுப்பி கண்டுபிடிக்கச் சொன்னது சிறப்பு. பகிர்ந்தமைக்கு நன்றிகள் ஐயா..

அன்பே சிவம் சொன்னது…

அது உங்களை நோக்கி வருது?
எல்லாரும் தாழ்வான இடத்துக்கு ஒடுங்க!

வருண் சொன்னது…

****அன்பே சிவம்April 6, 2015 at 8:44 PM

அது உங்களை நோக்கி வருது?
எல்லாரும் தாழ்வான இடத்துக்கு ஒடுங்க!***

"எது" வருகிறது?

முடிந்தால் சொல்லிவிட்டு பள்ளத்திற்கு ஓடவும், ஐயா!

Iniya சொன்னது…

சத்திய சோதனை படிச்சது இல்லை படிக்கணும் என்று தோன்றுகிறது பதிவுக்கு நன்றி !

சோழ நாட்டில் பௌத்தம் Buddhism In Chola Country சொன்னது…

சத்தியசோதனையே. இவ்வாறான ஒரு சஸ்பென்ஸ் வைத்து படிக்கும் பொருண்மையில் அதிகம் ஈடுபட வைத்த தங்களின் முயற்சி பாராட்டத்தக்கது.

களப்பணியில் நாட்டாணி சென்ற அனுபவத்தைக் காண அழைக்கிறேன்.வருக. http://ponnibuddha.blogspot.com/2015/04/blog-post.html

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று சொன்னது…

மிக சரியாக சொல்லி விட்டீர்கள் வாழ்த்துக்கள்.

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று சொன்னது…

ஆம் . பாராட்டுகள்

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று சொன்னது…

சத்திய சோதனை சரி பாராட்டுகள் தமிழ் வழி மா.பா. குருசாமி

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று சொன்னது…

ஆம் சரியாக சொல்லி விட்டீர்கள்

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று சொன்னது…

காந்தியடிகளின் சுய சரிதை என்பதை அனைவருமே கணித்து விட்டனர். பாரட்டுகள் ஐயா

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று சொன்னது…

சரிதான் ஐயா

பெயரில்லா சொன்னது…

நல்ல ரோசக்கார மகன்.
எனக்கோரு நினைவு வருகிறது.
திருக்குறள் பேச்சுப் போட்டி.நன்றாகப் பேசிப் பயின்றேன்.
எல்லாரும் புகழ்ந்தார்கள். பேச்சுப் போட்டிப் பரீட்சை வந்தது.
எனக்கு 2ம் இடம் கிடைத்தது. 3 காலில் நிற்கும் கரும்பலகைக்குப்
பின்னால் சென்று விக்கி விக்கி அழுதேன். முதலாமவர் வந்து
ஆறுதல் கூறினார் நீர் தோல்வியடையவில்லை 2ம் இடம் கிடைத்துள்ளது தானே என்று.
நான் அழுதது எல்லாரும் கூறியது போல நான் நன்றாகப் பேசினேன் எனக்கு முதலிடம் கிடைக்கவில்லை என்று.

வலிப்போக்கன் - சொன்னது…

முன்பு படித்தது. ..தங்கள் பதிவை படித்த போது....அது சத்திய சோதனைதான் என்று தெரியவில்லை... கருத்துரையை படித்தப்பின்தான் ஊர்ஜிதமானது அய்யா..த.ம.1

ஜோதிஜி திருப்பூர் சொன்னது…

எட்டாம் வகுப்பு விடுமுறையில் ஊரில் இருந்த நூலகத்தில் எடுத்து படித்த சத்திய சோதனை.

ரூபன் சொன்னது…

வணக்கம்
முரளி அண்ணா.

காந்தியின் சுயசரிதை படிக்க தந்தமைக்கு நன்றி அண்ணா.. தாமதமாகிவிட்டது கருத்து எழுத.
இரண்டு நாட்கள் வெளியிடம் சென்றாதால் வலைப்பக்கம் வர வில்லை.. த.ம14

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்--

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

காந்திஜி! சத்திய சோதனை புத்தகம்! கல்லூரியில் சத்தியசோதனை வாசித்துள்ளோம்.

Bagawanjee KA சொன்னது…

உங்களின் கேள்வி ,யாரையும் கஷ்டப் படுத்த வில்லையே ,இதுவும் அஹிம்சைதானோ :)

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று சொன்னது…

நன்றி கில்லர்ஜி

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று சொன்னது…

காந்தி சரியான விடைதான்

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று சொன்னது…

வருகைக்கும் சிந்திக்க வைக்கும் கருத்துக்கும் நன்றி வருண்

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று சொன்னது…

உண்மைதான்

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று சொன்னது…

நிச்சயம் படிக்க வேண்டிய நூல்

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று சொன்னது…

நன்றி ஐயா . நிச்சயம் படிப்பேன்

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று சொன்னது…

சில நேரங்களில் அப்படித்தான்

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று சொன்னது…

கருத்துக்கும் வாக்கிற்கும் நட்ன்ரி வலிப்போக்கன் சார்

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று சொன்னது…

சமீபத்தில்தான் முழுமையாகப் படித்தேன்.

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று சொன்னது…

நன்றி ரூபன்

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று சொன்னது…

அட ! அப்படியும் வச்சுக்கலாம்

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று சொன்னது…

நன்றி துளசி சார்

தேன்மதுரத்தமிழ் கிரேஸ் சொன்னது…

My Experiment with truth படித்திருந்ததால் பதிவைப் படிக்கும்போது நினைவு வந்துவிட்டது..
என்ன ஒரு நல்ல உள்ளம் இல்லையா சகோ? பகிர்விற்கு நன்றி

mageswari balachandran சொன்னது…

அருமை. வித்தியாசமான தேடல், நான் பேச்சு போட்டிக்காக படித்து முதல் இடம் பெற்ற காந்தியின் சத்திய சோதனை. நன்றி.