என்னை கவனிப்பவர்கள்

திங்கள், 30 ஜூலை, 2012

பாலகுமாரனின் குதிரைக் கவிதைகள் சொல்வது என்ன?

    ஒவ்வொரு  முறை படிக்கும்போதும் விதம் விதமான உணர்வுகளை ஏற்படுத்தும் நாவல் இரும்புக் குதிரைகள். இந்தக் கதையின் நாயகன்  விஸ்வநாதனை அவனது முதலாளி கவிதை எழுதிறவன் எல்லாம் வேலைக்கு வந்து கம்பனியை அழிக்காதீர்கள்  பதில் பேசவேண்டாம் உங்க கவிதைகளை பற்றிப் பேசியது வருத்தமென்றால் வேலையை  ராஜினாமா செய்துவிட்டுப் போய் விடு."
"கிரிக்கெட் ஆடுகிறவனுக்கு சில ஆபீஸ்களில் மரியாதை இருக்கிறது இதற்காகவே வேலை தரப்படுகிறது.விளயாட்டில் வல்லவர்களுக்கு வேலை தருவது உண்டு. ஆனால்  கவிஞனுக்கு கவிதைக்காக எங்காவது  வேலை தருவது உண்டா? கவிதை எழுதுகிறவனை சோம்பேறி என்று சொல்கிறதே?" என்று நினைத்துக் கொண்டிருக்கும்போதே அவன் மனதில் விளைந்த கவிதை 


              உழைப்புக்கே குதிரை என்ற 
              பெரும்போக்கு ஒருநாள் உடையும் 
              குரங்குகள் மனிதர்கள் போல 
              வளர்ந்தது உண்மையாயின் 
              குதிரையின் ரூபம் மாறும் 
              உடல் மட்டும் மனிதர் போல 
              மடி மீது வீணை போட்டு 
              மழைக்கான வேதம் பாடும் 
              இருகாலில்  புவி ஈர்ப்பை 
              ஏந்திய குதிரைப் புத்தி 
              உலகத்தின் மாயை மாற்றும் 
              சகலமும் கவிதையாகும் 
              குதிரைகள் மாறும் ஒருநாள் 
              குரங்குகள் மடியும் அன்று.


        ********************
   மற்றவர்கள் தன்  வேலையில் தவறு செய்தால் அதற்காக கண்டிக்கப் படுவதும் சகஜம்தான். ஆனால் வேலை செய்பவன் கவிஞனாய் இருந்தால் அந்தத் தவறே கவிதையால்தான் வந்தது என்று சாடப் பாடுவான் . 
இதோ அவை பால குமாரனின் வரிகளில் 

               சவுக்கடி பட்ட இடத்தை 
               நீவிடத் தெரியாக் குதிரை  
               கண்மூடி வலியை வாங்கும் 
               இதுவுமோர்  சுகம்தான் என்று  
               கதறிட மறுக்கும் குதிரை 
               கல்லென்று நினைக்க வேண்டாம் 
               கதறிட மேலும் நகைக்கும் 
              உலகத்தை குதிரை  அறியும் 

  நாம் நமது துன்பத்தை வெளிப்படுத்தினால்  ஆறுதல் சொல்லாத உலகம்  நம் நிலை கண்டு சிரிக்கவே செய்யும் என்பதை குதிரை மூலம் சொன்னது எவ்வளவு அழகு!

(குதிரை வேதம் தொடரும்) 
இதையும் படியுங்க 

21 கருத்துகள்:

 1. // கதறிட மறுக்கும் குதிரை
  கல்லென்று நினைக்க வேண்டாம்
  கதறிட மேலும் நகைக்கும்
  குதிரையை உலகம் அறியும் //
  ஆம், இது தான் உலகம்.

  பாலக்குமரன் இரும்புக்குதிரை கதை சிறு வயதில் படித்தது கவிதைகள் நினைவில் இல்லை ,இப்போது பதிவின் மூலம் அருமையான கவிதைகளை படித்தவுடன் மறுபடியும் இரும்புக்குதிரையை படிக்க ஆவல்.
  அருமையான பகிர்வு.


  ’.

  பதிலளிநீக்கு
 2. இரும்பு குதிரைகள் கல்லூரி காலத்தில் படித்தது. நினைவூட்டுது

  பதிலளிநீக்கு
 3. சிந்தனை வரிகளை மறுபடியும் படிக்க வைத்தமைக்கு நன்றி...

  (த.ம. 3)

  பதிலளிநீக்கு
 4. ஆர்தர் ஹேலியின் நாவல்கள் படிக்கும் பொழுது அவர் ஒரு கதைக்கலனைத் தேர்ந்தெடுத்து அதை அக்குவேறு ஆணிவேறாக அலசுவார் (உதா. Airport, Hotel போன்ற நாவல்கள்). பாலகுமாரன் தமிழில் அது போல வெவ்வேறு கதைக்கலன்களை நன்றாகக் கையாள்வார்.

  இரும்புக்குதிரையின் இந்தக் கவிதைகள் ஏற்கனவே படித்திருந்தாலும் அதற்கான உங்களின் விளக்கங்கள் நன்றாக உள்ளன.

  வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 5. நாம் நமது துன்பத்தை வெளிப்படுத்தினால் ஆறுதல் சொல்லாத உலகம் நம் நிலை கண்டு சிரிக்கவே செய்யும் என்பதை குதிரை மூலம் சொன்னது எவ்வளவு அழகு!
  இந்த விளக்கத்தை நான் கவிதையைப் படிக்கும் போது அறியவில்லை ஐயா.
  அருமையாக விளக்கியுள்ளீர்கள்.
  நன்றிங்க முரளிதரன் ஐயா.

  பதிலளிநீக்கு
 6. வரிகளும் தாங்கள் தந்த விளக்கமும் அருமை.

  பதிலளிநீக்கு
 7. அருமையான கவிதையை எங்களிடம் பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி நண்பரே!

  பதிலளிநீக்கு
 8. முதன் முதலாய் அறிந்து கொள்ளும் வாய்ப்பு.. என் நன்றிகள் சார்

  பதிலளிநீக்கு
 9. குதிரைகளுக்கும் வலிக்கும்..அருமையான கவிதைகள் கொண்ட பதிவு அருமை !

  பதிலளிநீக்கு
 10. ஆஹா அருமையான கவிதையும் விளக்கங்களும்....!

  பதிலளிநீக்கு
 11. பாலகுமாரின் கவிதைக்கு மேலும் சிறப்பு சேர்க்குது உங்கள் வலைப்பூ..... படிக்காமல் விட்ட நிறைய கவிதைகள் உங்கள் தளத்தில் கிடைக்குது ...அருமை பாஸ்....

  பதிலளிநீக்கு
 12. தங்கள் தொடர் பதிவு
  அந்த நாவலை வாங்கிப் படிக்கும்
  ஆவலைத் தூண்டிப் போகிறது
  இந்த வாரம் படித்துவிடுவேன்
  மனம் கவர்ந்த பதிவு
  தொடர வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 13. சவுக்கடி பட்ட இடத்தை
  நீவிடத் தெரியாக் குதிரை
  கண்மூடி வலியை வாங்கும்
  இதுவுமோர் சுகம்தான் என்று
  கதறிட மறுக்கும் குதிரை
  கல்லென்று நினைக்க வேண்டாம்//கவர்ந்த பதிவு
  தொடர வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 14. குதிரைகளின் அசைவு எப்பொதுமே பார்க்க நன்றாக யிருந்திருக்கிறது.உங்களது பதிவு அதை படித்ததும் உறுதிசெய்கிறது.

  பதிலளிநீக்கு
 15. //கோமதி அரசு said...
  // ,இப்போது பதிவின் மூலம் அருமையான கவிதைகளை படித்தவுடன் மறுபடியும் இரும்புக்குதிரையை படிக்க ஆவல்.
  அருமையான பகிர்வு.//
  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

  பதிலளிநீக்கு
 16. //மோகன் குமார் said...
  இரும்பு குதிரைகள் கல்லூரி காலத்தில் படித்தது. நினைவூட்டுது//
  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

  பதிலளிநீக்கு
 17. //chezhiyan said...
  வணக்கம்
  தங்கள் வலைப்பதிவு மிக அருமை//
  நன்றி செழியன்!

  பதிலளிநீக்கு
 18. //திண்டுக்கல் தனபாலன் said...
  சிந்தனை வரிகளை மறுபடியும் படிக்க வைத்தமைக்கு நன்றி.//
  தங்களின் தவறாத வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

  பதிலளிநீக்கு
 19. "சவுக்கடி பட்ட இடத்தை
  நீவிடத் தெரியாக் குதிரை
  கண்மூடி வலியை வாங்கும்
  இதுவுமோர் சுகம்தான் என்று
  கதறிட மறுக்கும் குதிரை"

  அருமையான வரிகள்..... கண்முன்னே காட்சியாய் விரிகிறது குதிரை மட்டுமல்ல பல ஊமை உள்ளங்களும்தான்

  பதிலளிநீக்கு
 20. ''..இருகாலில் புவி ஈர்ப்பை
  ஏந்திய குதிரைப் புத்தி
  உலகத்தின் மாயை மாற்றும்..''
  எவ்வளவு உண்மையான வரிகள்!!!!!
  நன்றி
  வேதா. இலங்காதிலகம்.
  http://kovaikkavi.wordpress.com

  பதிலளிநீக்கு

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895