இன்றுடன் (15.07.2012) கல்விக்கண் திறந்த காமராசர் பிறந்த 109 ஆண்டுகள் நிறைவடைந்து 110 வது ஆண்டு தொடங்குகிறது. அவரது பிறந்த நாள் இன்று கல்வி வளர்ச்சி நாளாக ஜூலை 15 அன்று பள்ளிகளில் கொண்டாடப்படுகிறது. காமராஜர் பிறந்த நாளை பள்ளிகளில் கொண்டாடவேண்டும். மாணவர்கள் அவரை நினைவு கூற வேண்டும் என்ற நோக்கத்தோடு ஒரு உருப்படியான அரசாணை பிறப்பித்தார் கலைஞர். அதுவரை காங்கிரஸார் மற்றும் நாடார் சமூகத்தினர் மட்டுமே காமராஜர் பிறந்த நாளைக் கொண்டாடி வந்தனர்.
கல்விக்காக காமராஜர் ஆற்றிய பணி மகத்தானது. இன்று வோட்டுக்காக பல இலவச அறிவிப்புகள் ஒவ்வொரு ஆட்சியினராலும் அறிவிக்கப் படுகின்றன. ஆனால் உண்மையாகவே ஏழை மக்கள் கல்வி கற்க தடையாக இருப்பது அவர்கள் வறுமையே என்பதை அறிந்தார் காமராசர். பசி வயிற்றை வாட்டும்போது படிப்பு எப்படி வரும் என்ற எண்ணமே இலவச மதிய உணவு திட்டத்தை அவர் அறிமுகப் படுத்துவதற்கு அடிப்படையாக அமைந்தது. சாத்தியமில்லை என்று கருதப்பட்டதை சாதித்துக் காட்டினார் அந்தப் பெருமகன். அப்போதைய பள்ளிக் கல்வி இயக்குனரும் அறிஞருமான நெ.து.சுந்தர வடிவேலு காமராசரின் திட்டத்தை நிறைவேற்ற பெருமுயற்சி மேற்கொண்டார். இன்று அது சத்துணவு திட்டமாக உருமாற்றம் அடைந்துள்ளது.
மாணவர்களிடையே ஏழை பணக்காரர் என்ற வேறுபாடு இருக்கக் கூடாது என்ற எண்ணத்தால் சீருடைத் திட்டத்தை கொண்டுவந்தார்.
தமிழகத்தின் முதல் அமைச்சராகப் பணியாற்றியாதோடு அகில இந்திய அளவிலும் திறமையை நிரூபித்தவர் காமராசர். படிக்காத மேதை அவரை இந்நாளில் நினைத்துப் போற்றுவது நமது கடமை யாகும்.
**********************************
இன்று சன் தொலைக்காட்சியில் பாட்டு தர்பார் என்ற நிகழ்ச்சியில் காமராஜ்- கண்ணதாசன் பற்றி மதன் பாப் சொன்ன செய்தி சுவாரசியமாக இருந்தது.
கவியரசு கண்ணதாசன் காங்கிரசில் இருந்து விலகி இருந்த நேரம் அது. மீண்டும் காங்கிரசில் கண்ணதாசனை சேர்க்க தூதுவர் ஒருவரை அனுப்பினாராம் காமராசர். நேரில் காமராசரே பேசாமல் தூது அனுப்பியது கவிஞருக்கு வருத்தத்தை ஏற்படுத்தியது. அந்த ஆதங்கத்தை அப்போது 'பட்டணத்தில் பூதம்' என்ற படத்தில் வரும் பாடலில் சேர்த்து வெளியிட்டாராம்.
அந்தப் பாடல் வரிகள்
அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி!
என்னை சேரும் நாள் பார்க்கச் சொல்லடி!
வேறு யாரோடும் நான் பேச வார்த்தை ஏதடி!
வேலன் இல்லாமல் தோகை ஏதடி!
என்ன அருமையான பாடல்! தன் சொந்த அனுபவங்களை பாடலில் சேர்ப்பதில் கவிஞர் வல்லவர் என்பது அனைவைரும் அறிந்ததுதானே!
காமராசரின் தாயார் பெயர் சிவகாமியாம். இந்த செய்தி எனக்கு வியப்பை ஏற்படுத்தியது.
பின்னர் காங்கிரசில் காமராஜ் முன்னிலையில் இணைந்தாராம் கண்ணதாசன். காலத்தை வென்றவர்கள் அல்லவா இருவரும்!.
************************************************
இதைப் படித்து விட்டீர்களா?
இதைப் படித்து விட்டீர்களா?
கல்விக்கண் திறந்த காமராசர் பிறந்த இன்று, அவரைப் பற்றி சுவாரசியமான நிகழ்ச்சியை குறிப்பிட்டது அருமை.... நன்றி...
பதிலளிநீக்குஅருமையான தகவல் நண்பரே!
பதிலளிநீக்குஅருமையான தகவல்
பதிலளிநீக்குபதிவாக்கித் தந்தமைக்கு நன்றி
தொடர வாழ்த்துக்கள்
நல்லதொரு தகவலை பகிர்ந்துகொண்டமைக்கு மிக்க நன்றி நண்பரே!
பதிலளிநீக்குமிக்க நன்றி!தனபாலன் சாருக்கு.
பதிலளிநீக்குவிரைவாக கருத்திடுவதில் வரலாறு படைத்துக்கொண்டிருக்கும் வரலாற்று சுவடுகளுக்கு நன்றி.
//அருமையான தகவல்
பதிலளிநீக்குபதிவாக்கித் தந்தமைக்கு நன்றி
தொடர வாழ்த்துக்கள்//
தவறாமல் வாக்கும் கருத்த்தும் அளிக்க்ம் ரமணி சாருக்கு என்றென்றும் நன்றி.
எனை கவர்ந்த இருவர் பற்றி ஒரே பதிவில் வாசித்தேன் நன்றி
பதிலளிநீக்குநல்ல தகவல்....
பதிலளிநீக்குகண்ணதாசனும் காமராஜரும் காலத்தை வென்றவர்கள் அவர்களை பற்றிய பதிவு பார்த்ததும் தேடி வந்து படித்து விட்டேன் அருமை
பதிலளிநீக்குஅருமையான தகவல்
பதிலளிநீக்குபதிவாக்கித் தந்தமைக்கு நன்றி
இரண்டு இனியவர்களைப் பற்றிய செய்தி அறிந்து மகிழ்ச்சி....
பதிலளிநீக்குவாழ்த்துகள்.
Wonderful information
பதிலளிநீக்குரமணி சாருக்கு நன்றி..
பதிலளிநீக்கு.//சுப்ரமணியன். said...
பதிலளிநீக்குநல்லதொரு தகவலை பகிர்ந்துகொண்டமைக்கு மிக்க நன்றி நண்பரே!//
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சுப்ரமணியன்.
நன்றி மோகன் குமார்.
பதிலளிநீக்கு//Avargal Unmaigal said...
பதிலளிநீக்குநல்ல தகவல்....//
நன்றி நன்றி
//சீனு said...
பதிலளிநீக்குகண்ணதாசனும் காமராஜரும் காலத்தை வென்றவர்கள் அவர்களை பற்றிய பதிவு பார்த்ததும் தேடி வந்து படித்து விட்டேன் அருமை//
நன்றி சீனு!
//மாலதி said...
பதிலளிநீக்குஅருமையான தகவல்
பதிவாக்கித் தந்தமைக்கு நன்றி//
தங்கள் முதல் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.
நல்ல தகவல்! வாழ்க காமராசர்!
பதிலளிநீக்குசா இராமாநுசம்
//வெங்கட் நாகராஜ் said...
பதிலளிநீக்குஇரண்டு இனியவர்களைப் பற்றிய செய்தி அறிந்து மகிழ்ச்சி../
வருகைக்கும் கருத்திற்கும் மனமார்ந்த நன்றி.
//புலவர் சா இராமாநுசம் said...
பதிலளிநீக்குநல்ல தகவல்! வாழ்க காமராசர்!//
புலவர் அவர்களுக்கு நன்றி.
//lightgreen said...
பதிலளிநீக்குWonderful information//
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.
படிக்காத மேதை அவரை இந்நாளில் நினைத்துப் போற்றுவது நமது கடமை யாகும்.
பதிலளிநீக்குபகிர்ந்துகொண்டமைக்கு மிக்க நன்றி
நல்ல தலைவர்களின் அரிய தகவல்களைக் கொடுத்தமைக்கு மிக்க நன்றிங்க ஐயா.
பதிலளிநீக்குநல்லதொரு தகவலை பகிர்ந்துகொண்டமைக்கு மிக்க நன்றி...
பதிலளிநீக்குவாழ்க காமராசர்...(It hurts when people add Nadar to his name..He belongs to everyone...)
ஈழத்திலும் புகழாட்சி செய்யும் இருவரைப்பற்றி ஒரே பதிவில் தந்திருக்கிறீர்கள். அருமையான சம்பவப்பதிவு. கண்ணதாசன் கூடுதலாக தனது நிஜ வாழ்க்கை சம்பவங்களை வைத்தே பாடல் இயற்றுவதாக கேள்விப்பட்டிருக்கிறேன். அது உண்மைதான் போல...
பதிலளிநீக்குசுவாரஸ்யமான தகவல்! பகிர்வுக்கு நன்றி!
பதிலளிநீக்குகண்னதாசன் அவர்கள், சிவாஜி அவர்கள் நடித்த பட்டிகாடா பட்டணமாவிலும் காமாரஜர் தாயை குறிப்பிட்டு பாடி இருப்பார் சிவாஜிக்காக.
பதிலளிநீக்குபெருந்தலைவர், கவியரசு இருவரைப் பற்றிய
நல்ல பகிர்வுக்கு நன்றி.
'சிவகாமியின் செல்வன்' - ஆராதனா ஹிந்தி படத்தை தமிழில் எடுத்தார்கள் .
பதிலளிநீக்குஅதில் வரும் பாடல் வரிகள் " சிவகாமி பெற்றெடுத்த செல்வனல்லவோ நாளை உலகை ஆளப் போகும் மன்னனல்லவோ"
கண்ணதாசனுக்கு இணை கண்ணதாசன்தான்.
மிகவும் அருமையான செய்தி
பதிலளிநீக்கு