விழிப்புணர்வு பதிவு: முகநூல் நண்பர் ஒருவர் பகிர்ந்திருந்த எச்சரிக்கை குறிப்புகளை கொஞ்சம் சேர்த்து பகிர்ந்திருக்கிறேன்.
மழை வெள்ளம் நுழைந்து விட்டதால் வீட்டை விட்டு வெளியேறியவர்கள் மீண்டும் இப்போது திரும்பும் சூழல் உள்ளது அவ்வாறு மீண்டும் புகுவதற்கு முன் கீழ்க்கண்ட குறிப்புகளை கவனத்தில் கொள்ளவும்:
1 மெயின் சுவிச் வெளியில் இருந்தால் முதலில் அதனை ஆஃப் செய்து விடு ஒரு டார்ச்சுடன் உள்ளே நுழையவும்
2. எரி வாயு வாசனை ஏதும் வருகிறதா என்று கவனிக்கவும்
3. கதவுகள், ஜன்னல்களைத் திறந்து முடிந்த அளவு இயற்கையான வெளிச்சம், காற்றோட்டத்தை அனுமதியுங்கள்.
4. நுழைந்த உடனேயே மின்சாரம் இருந்தாலும் உடனடியாக விளக்குகளை / மின் விசிறியை இயக்க வேண்டாம். மின்கசிவு இருக்கக் கூடும்.
5. முதலில் ஆண்கள் நுழைந்து ஓரளவு சுத்தப்படுத்தி விட்டுப் பிறகு பெண்களை அழைக்கவும். அடுத்து முதியவர்கள்; கடைசியாகக் குழந்தைகள்.
6. மின்சாரப் பொருட்களை இயக்குவதற்கு முன்பாக வீடு முழுதும் ஒரு முறை எங்காவது மின்கசிவு இருக்கிறதா என்று சோதித்துக் கொள்ளுங்கள். இதை ஒரு எலக்ட்ரிஷியன் கொண்டு செய்வது நல்லது. நீங்களே செய்வதாக இருந்தால் போதிய பாதுகாப்புடன் (காலணி, கையுறை, மரநாற்காலி போன்றவை) மேற்கொள்ளவும்.
7. கையில் டெஸ்டர் வைத்துக் கொண்டு சுவர்களை சோதித்துக் கொள்ளுங்கள்
8 . அருகிலுள்ள சுகாதார நிலையம் அல்லது மருத்துவ மனையில் தேவையான காய்ச்சல்/ பேதி மற்றும் தற்காப்பு மாத்திரைகளை வாங்கிக் கொள்ளுங்கள்; அறிவுறுத்தல்களின்படி தடுப்பூசிகள் தேவையென்றால் தவறாது போட்டுக் கொள்ளுங்கள்.
9. தண்ணீரை காய்ச்சியே பயன்படுத்துங்கள் 10. மளிகைப் பொருட்கள் கெட்டிருக்கிறதா என்று சோதித்து விட்டுப் பயன்படுத்துங்கள். இலேசான ஐயம் இருந்தாலும், அவற்றைப் பயன்படுத்த வேண்டாம். ஃப்ரிஜ்ஜிலேயே விட்டு விட்டுப் போன பொருட்களைப் பயன்படுத்தாதீர்கள். அவை நிச்சயம் கெட்டுத்தான் . போயிருக்கும்.
11. முழுகிக் கிடந்த வாகனங்கள் காப்பீடு செய்யப்பட்டிருந்தால், காப்பீட்டு நிறுவனத்திற்குத் தெரியப்படுத்துங்கள். நீங்கள் இயக்கிய பிறகு பழுதுபட்டதாகத் தெரியவந்தால்,அவற்றிற்கான காப்பீடு கிடைக்காமல் போய்விடலாம்.
12.முடிந்தால் பொருட்கள் வீடுகள் வாகனங்கள் மூழ்கிய நிலையில் புகைப்படம் எடுத்து வைத்திருங்கள்
13.குடும்ப அட்டை, காப்புறுதி ஆவணங்கள்,சான்றிதழ்கள், ஆதார் அட்டை,டிரைவிங் லைசென்ஸ் வீட்டு பத்திரங்கள் போன்ற முக்கிய ஆவணங்கள் நல்ல நிலையில் உள்ளதை உறுதிப் படுத்திக் கொள்ளுங்கள்
14. நல்ல நிலையில் இருந்தாலும் எச்சரிகையுடன் சிறிது காய வைத்து
எடுத்து வையுங்கள்
15.மேல் நிலைத் தொட்டிகளை சுத்தம்செய்த பின்னர் பயன்படுத்துங்கள்
16. இரண்டொரு நாட்களுக்கு மிக எளிமையான உணவை உட்கொள்ளுங்கள். அரை வயிற்றுக்கு மட்டுமே சாப்பிடுங்கள். ஒரு பெரிய அதிர்ச்சியிலிருந்து மீண்டு வந்திருக்கிறீர்கள். உங்கள் மனமும் உடலும் சகஜ நிலைக்குத் திரும்ப அவகாசம் அளியுங்கள். பதற்றத்தை தவிர்த்து விடுங்கள்
17. உங்கள் உறவினர்கள் நண்பர்களை தொடர்பு கொண்டு அவர்கள் நிலையை அறிந்து கொள்ளுங்கள். உதவி தேவைப்பட்டால் முடிந்தவரை செய்ய முயற்சியுங்கள்
18. உங்களையும், உங்கள் குடும்பத்தையும் இந்த அளவுக்குக் காப்பாற்றிய வர்களுக்கும் சிறு உதவி புரிந்தவர்ளாயினும், நலம் விசாரித்தவர் களுக்கும் மறக்காமல் நன்றி சொல்லுங்கள்
19. இந்தப் பேரிடரில் உங்களைக் கைவிடாதிருந்த துணிவும்,நம்பிக்கையும் வாழ்நாள் முழுதும் உங்களுக்கு இருக்க வேண்டும் என்று தீர்மானித்துக் கொள்ளுங்கள். எந்தவொரு இடரையும் சமாளித்து வெல்லும் அறிவும், திறனும் உங்களுக்கு உண்டு என்று அறிந்து அமைதி கொள்ளுங்கள்.
20. உங்களை விட பாதிக்கப் பட்டோர் ஆயிரக் கணக்கானோர் உள்ளனர் முடிந்தால் அவர்களுக்கு இயன்ற அளவுக்கு எந்த வகையிலேனும் உதவுங்கள்.
சேதமுற்ற மற்றும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட முக்கிய ஆவணங்கள் திரும்பப் பெறுவதற்கான இலவச ஆலோசனைகளும் உதவிகளும் செய்ய
சட்ட பஞ்சாயத்து என்றஅமைப்பு செயல்படுகிறது. தேவைப் படின் அவர்கள் உதவியை நாடலாம் .
தொடர்பு எண் ; 7667100100
முகநூல் முகவரி: https://www.facebook.com/sattapanchayath
அனைத்தும் சிறப்பான யோசனைகள் ஐந்தாவது மிகவும் நன்று நண்பரே
பதிலளிநீக்குதமிழ் மணம் 1
இன்றைய துயர சூழலுக்கு ஏற்ற அற்புதமான அறிவுரைகள். நானும் பகிர்ந்து கொள்ளகிறேன்.
பதிலளிநீக்குத ம 2
சிறப்பான அறிவுரைகள்.
பதிலளிநீக்குதேள். பாம்பு. மற்றும் சில மணித விஷ ஜந்துக்களின் நடமாட்டமும் அதிகம் இருக்கும். டிதையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.
பதிலளிநீக்குதேள். பாம்பு. மற்றும் சில மணித விஷ ஜந்துக்களின் நடமாட்டமும் அதிகம் இருக்கும். கையில் சிறு குச்சி அல்லது துடைப்பம் வைத்திருக்கவும் இதையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.
பதிலளிநீக்குமிக உபயோகமான பதிவு. கார் போன்றவற்றை என்ஜினை இயக்குமுன் காப்பீட்டு நிறுவன முகவரை அழைத்துக் காட்டிவிட்டு இயக்க வேண்டுமாம். அவசரப்பட்டு இயக்கி விட்டு அவர்களை அழைத்தால் இழப்பீடு கிடைக்காது என்று வாட்சப் மெசேஜில் பார்த்தேன்.
பதிலளிநீக்குதம +1
முன்னெச்செரிக்கையுடன் இருப்பது நல்லது. பயனுள்ள பதிவு.
பதிலளிநீக்குசரியான தருணத்தில் ஏற்ற விழிப்புணர்வுப் பதிவு! நன்றி !
பதிலளிநீக்குபயனுள்ள பதிவு ஐயா
பதிலளிநீக்குதாங்கள் மற்றும் தங்களின் குடும்பத்தினர் நலம்தானே
அருமையான அறிவுரைகள், பரிந்துரைகள். நிச்சயமாகப்பகிர்ந்து கொள்கின்றோம். வீட்டில் விஷ ஜந்துக்களும் நுழைந்திருக்க வாய்ப்புண்டு. அதையும் கருத்தில் கொண்டால் நல்லதே...
பதிலளிநீக்குதேவையான விழிப்புணர்வு பதிவு.
பதிலளிநீக்குபடத்தில் உள்ள வீடு உங்களது என்று நினைக்கிறேன் வீட்டில் நீர் வந்த போது எப்படி சமாளித்தீர்கள் என்று விரிவாக ஒரு பதிவு எழுதலாமே உங்கள் அனுபவங்கள் பிறருக்குப் பாடமாகலாம்
பதிலளிநீக்குதேவையான யோசனைகள்....நன்றி
பதிலளிநீக்குமிகவும் நல்ல யோசனைகள். நன்றி.
பதிலளிநீக்குகாப்பீட்டுக்கு காசு மட்டும் வாங்குவதும் பிரச்சினை வரும் போது நொள்ளை சொல்வது உலகளாவிய காப்பீட்டு நிறுவனங்களின் பிராடுத்தனம். சென்னை ரிஜிஸ்ட்ரேசன்,கார் நிலையில் இருந்தால் காப்பீடு கட்டாயம் வற்புறுத்தப் பட வேண்டும்.இயக்கி பார்க்காமல் வண்டி ஓடுகிறதா என்று எப்படி கண்டு பிடிப்பது? கூப்பிட்ட உடனே வந்து காப்பீட்டாளர்கள் வந்து பார்ப்பதற்கு ராணுவமா வைத்திருக்கிறது.சேதம் மதிப்பீடு செய்யும் தனியார்கள் தமிழகத்தில் இயங்குகிறார்களா இல்லையா?
பதிலளிநீக்குஇந்த மாதிரி இடர் நேரங்களில் காப்பீட்டுத் தொகை கட்டாயம் வசூலிக்கப்பட வேண்டும். இது காரணம் கொண்டே காப்பீட்டாளர்கள் மீதான மரியாதையே வரமாட்டேன்கிறது.
சட்ட பஞ்சாயத்து என்றாலே எதிர்மறையான வார்த்தை போல் தோன்றுவதைப் தவிர்க்க முடியவில்லை :)
பதிலளிநீக்குசிறந்த உளநல வழிகாட்டல்
பதிலளிநீக்குதொடருங்கள்