என்னை கவனிப்பவர்கள்

செவ்வாய், 29 டிசம்பர், 2015

பீப் சாங் ஜோக்ஸ்


  பீப் சாங் பற்றி எழுதாவிட்டால் வலைப்பதிவர் என்று எப்படி சொல்லிக் கொள்வது? ஆனால்  பீப் சாங்  புகழ்   இகழ் சிம்பு அனிருத் பற்றி அக்கு வேறு ஆணிவேராக அலசி விட்டனர். இத்தனை வாங்கிக் கட்டிக் கொண்டபின்னாவது திருந்துவார்களா? பார்ப்போம். 
இந்த விவாகரத்தில மக்கள் ரொம்ப டென்ஷன் ஆகிட்டதால கொஞ்சம் ரிலாக்ஸ் செஞ்சுக்கட்டுமேன்னு பீப் சாங் பற்றி வடிவேலுன்னு ஒரு நகைச்சுவை பதிவு போட்டேன்.  அதன் தொடர்ச்சியாக இந்த நகைச்சுவை துணுக்குகளையும் ரசித்து விட்டு பீப் பாடல் விவகாரத்தை மூட்டை கட்டிவிடலாம் என எண்ணுகிறேன். நான் சொன்னாலும் யாருக்கு ஞாபகம் இருக்கப் போகிறது. அதான் நம்ம கேப்டன் வந்துட்டாரே! 
பீப் சாங் ஜோக்ஸ்
இந்த நகைச்சுவை முழுக்க முழுக்க கற்பனையே .சிரித்து விட்டு மறந்து விடவும்.

*************************************************************************

மேடையில நம்ம தலைவர புகழ்ந்து பேசினதாத்தானே சொல்றீங்க!அப்ப ஏன் கட்சிய விட்டு நீக்கிட்டாங்க

நான் புகழ்ந்து பேசறப்ப எவனோ பீப் சவுண்ட் குடுத்துட்டான். நான் திட்டினதா நினைச்சுட்டார் தலைவர்.


  
  உங்க வீட்டில இருந்து அடிக்கடி பீப் சத்தம்   
  கேக்குதே ஏன் ?

நான் கண்ட படி திட்டும்போது வெளிய கேக்காம இருக்கறதுக்காக எங்க வீட்டுக்காரர்தான் பீப் சவுண்ட் குடுப்பார்.


டைரக்டர் சார்! இந்த பாட்டு   பீப் சாங்குன்னு சொல்றீங்களே பிரச்சனை வராதா?

நிச்சயம் வராது பாட்டு முழுசும்  பீப் சவுண்டு குடுத்துடுங்க  லிரிக்சே கிடையாதே! 
அந்த பிரபல பாப் பாடகர் ஏன் கோபமா இருக்கார்?

மேடையில  அவரை பீப் பாடகர்னு அறிமுகப் படுத்திட்டாங்களாம் ஏன்யா நைட் ட்யூட்டி  போக மாட்டேங்கறே?


ரோந்து போகும்போது விசில் ஊதினா 
பீப் சாங்கா பாடறேன்னு அடிக்க வராங்களே 

*********************************************************************************

படித்து விட்டீர்களா?

பீப் சாங் பற்றி வடிவேலு 


24 கருத்துகள்:

 1. பொடிப் பசங்களுக்கு , நாம் ஏன் விளம்பரம் செய்யணும் ,அதான் ,பீப்பை நான் யோசிக்கவே இல்லை :)

  பதிலளிநீக்கு
 2. ஹ்ஹஹ்ஹஹ்ஹஹஹ் செம செம கலக்கல்!!!!செம பீப்!!!!

  ரொம்பவே ரசித்தோம்...நீங்க சொல்லுவதும் சரிதான்..வாலு போச்சு கத்தி வந்துச்சுனு மாதிரி பீப் போயி ராஜா வந்தார் ராஜா போயி விஜயகாந்த் வந்துட்டாரு அடுத்து யாரோ...அட போங்கப்பானு தோணுது பல சமயங்கள்ல...

  பதிலளிநீக்கு
 3. //பீப் சாங் பற்றி எழுதாவிட்டால் வலைப்பதிவர் என்று எப்படி சொல்லிக் கொள்வது?// அதானே! இது தெரியறதுக்கு இத்தனை நாள் ஆச்சா? நானெல்லாம் எப்பவோ எழுதிட்டேன்.

  பதிலளிநீக்கு
 4. அட, எல்லாமே சூப்பர். பொருத்தமாய்ப் படங்கள் எப்படி செலக்ட் செய்தீர்கள்? உங்கள் கை வண்ணமோ!
  தம +1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஜோக் எழுதறத விட படம் உருவாக்கறதுதான் கஷ்டமா இருந்தது. பல படங்கள்ல இருந்து வெட்டி எடுத்து ஓட்ட வச்சு கிடைக்க படங்கள்ல சில பெயின்ட், மூலம் கொஞ்சம் மாற்றம் செஞ்சு போடறதுக்குள்ள ரெண்டு நாள் ஆகிடுச்சு. இன்னும் கொஞ்சம் நேரம் செலவழிச்சா இன்னும் பொருத்தமாக படங்களை உருவாக்கலாம்

   நீக்கு
  2. வெட்டி, ஒட்டி, வண்ணம் தீட்டி உருமாற்றி...

   சபாஷ்.

   நீக்கு
  3. வெட்டி ஒட்டி செய்தாலும் மிக அருமையாக செய்து இருக்கீங்க. இப்படி டைம் செலவழித்து சரியான படங்களை செலக்ட் செய்து போடுவது பதிவிற்கு மேலும் சிறப்பைதரும் . நல்ல பதிவு அதற்கு பொருத்தமான படம் உங்கள் முயற்சி இதுதான் பதிவிற்கு வெற்றி தரும் பாராட்டுக்கள்.

   நீக்கு
  4. அடேயப்பா!!!! படம் போட இவ்ளோ மெனக்கெட்டு!!! கிரேட்!!! சூப்பர் அண்ணா!

   நீக்கு
 5. ஹா.. ஹா.. மனதை லேசாக்கி விட்டீர்கள்!

  பதிலளிநீக்கு
 6. எனக்கும் ஸ்ரீராமின் சந்தேகம் இருந்தது. உங்கள் மறு மொழியில் தெளிவு ஏற்பட்டது

  பதிலளிநீக்கு
 7. எல்லாமே சூப்பர்! அதிலும் first ஜோக்!!! செம!!

  பதிலளிநீக்கு
 8. ஹாஹா! பீப் எனில் இனி நாதஸ்வரத்தில் சத்தம் நினைவுக்கு வரவே வராதுன்னு முடிவு கட்டியே விட்டீர்களா?

  பதிலளிநீக்கு
 9. அன்பு நண்பரே,வணக்கம்.

  "இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள் - 2016"

  நட்புடன்,
  புதுவை வேலு
  www.kuzhalinnisai.blogspot.com

  பதிலளிநீக்கு
 10. இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்!
  இனிய 2016 இல் எல்லாம் சிறப்பாக அமைய எனது வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
 11. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 12. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
 13. பதில்கள்
  1. ஏனிந்த சந்தேகம்?.அனைத்தும் என் சொந்தக் கற்பனையே.எங்கிருந்தாவது எடுத்திருந்தால் நிச்சயம் எழுதியவர் பெயரைக் குறிப்பிடுவேன்.இணைப்பு இருந்தால் அதையும் கொடுப்பேன்.பத்திரிகைகளில் கூட இது சம்பந்தமாக ஜோக்ஸ் எதுவும் வெளியானதாக தெரியவில்லை
   பீப் சாங் பற்றி வடிவேலுவை வைத்து எழுதியதை படித்தீர்களா? நேரம் இருந்தால் படிக்கவும்

   நீக்கு
 14. அனைத்தும் சூப்பரா வந்திருக்கு. தங்கள் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் சகோ ...!

  பதிலளிநீக்கு
 15. //பீப் சாங் பற்றி எழுதாவிட்டால் வலைப்பதிவர் என்று எப்படி சொல்லிக் கொள்வது?//

  ஓஹோ! அப்படியா சங்கதி? சந்திக்கும்போது கவனிச்சுக்கிறேன். :-))

  இனிய புத்தாண்டு வாழ்த்துகள்! :-)

  பதிலளிநீக்கு
 16. எங்கோயே பீப் சத்தம் கேட்குதே!

  பதிலளிநீக்கு

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895