தூரத்தில்
நகர இயலாத அளவு
கூட்டத்தோடு வரும்
நகரப் பேருந்தைக்கண்டு
உள்ளதை சொன்னார்கள்
'இந்த பஸ்
ரொம்ப மோசம்'
எப்படியோ உள்ளே ஏறி
உன்னைப் பார்த்ததும்
உள்ளத்தைச் சொன்னார்கள்!
'இந்த பஸ்
ரொம்ப வாசம்'
நீ ஏறியதில்
பேருந்துக்கும்
பேரின்பம் போலும்!.
மேடு பள்ளங்களில்
ஏறி இறங்கி குதித்தாட
எங்கள் இதயமும் சேர்ந்தே...
அண்ணல்கள் அனைவரும்
உன்னையே நோக்க
நீ யாரை
நோக்கப் போகிறாய்?
உன் பார்வைக் கதிர்வீச்சால்
எந்த இதயத்தை
தாக்கப் போகிறாய்?
உன் சுட்டு விரல் நீட்டி
எங்களில்
ஒருவரைக் காட்டு!
உன்னிடம்
இதயப் பரிமாற்றம் செய்ய!
அந்தப் பேரின்பப் பேரிடரில்
சிக்கித் தவிக்கப் போகிறவர்
யார்?
அது
தெரியும்வரை
எங்கள் மாரத்தான் ஒட்டமும்
படிக்கட்டு சாகசங்களும்
தொடரும்.
*********************************************************