சிறப்பாக பேசிய சுதா |
நான் தினந்தோறும் அலுவலகம் செல்ல மின்சார ரயிலைத்தான் பயன்படுத்துகிறேன். ரயிலில் திருநங்கைகள் நடமாடுவதைக் காண முடியும். அதற்கு முன்னர் அவர்களைப் பற்றி அவ்வளவாக சிந்தித்ததில்லை. இவர்கள் எங்கு தங்குவார்கள்? இவர்கள் எல்லோருமே இப்படித்தான் இரந்து வாழும் சூழ் நிலையில் இருக்கிறார்களா? சமுதாயத்தில் இவர்களை நாம் ஏன் ஏளனமாகப் பார்க்கிறோம். ?ஆண்கள் பெண்கள் என்று தனித்தனியான வசதிகளில் கழிவறை வசதி உட்பட பிற வசதிககள் இவர்களுக்கு கிடைக்கிறதா? என்ற கேள்விகள் எனக்கு இவர்களைப் பார்க்கும்போதெல்லாம் எழுவது உண்டு.
இவற்றில் சிலவற்றிற்கான விடைகள் எனக்கு கடந்த வார(08.07.14) நீயா நானாவில் கிடைத்தது.
விளம்பரத்திற்காகவோ அல்லது வியாபாரத்திற்காவோ இந்த நீயா நானா நிகழ்ச்சியை விஜய் டிவி நடத்தி இருந்தாலும் அதைபார்த்தவர் நெஞ்சில் சின்ன மாற்றத்தை ஏற்படுத்தி இருக்க வாய்ப்பு இருக்கிறது என்றே நினைக்கிறேன். மாற்றுத் திறனாளிகளை விட அரவாணிகளின் எண்ணிக்கை மிகக் குறைவு. அவர்களின் நியாயமான உரிமைகள் பற்றியோ தேவைகள் பற்றியோ யாரும் கவலைப்படுவதில்லை. தமிழ் சினிமாக்களில் அதிகம் கேலி செய்யப்படுபவர்களில் திருநங்கைகளுக்கு இடம் உண்டு.. வடிவேலுவின் "அவனா நீ" என்ற வசனம் மிகப் பிரபலம்..அவர்களை ஏளனமாக பார்த்தே பழக்கப் பட்டவர்களாக நாமும் நமது சமுதாயமும் இருக்கிறது.
அவர்கள் மிரட்டிக் காசு பறிப்பதையும் பாலியல் தொழில் செய்வதையும் பலரும் குறை கூறுவது வழக்கம். அவர்களை ஒட்டு மொத்தமாக விலக்கி வைத்ததே இதற்கு காரணம் என்று நிகழ்ச்சியில் கலந்து கொண்ட திருநங்கைகள் சொன்னதில் உண்மை இருந்தது. திருநங்கைக்குவீ டு வாடகைவிட்ட ஒருவர் ," அவர்களை இந்த சமுதாயம் ஒதுக்கி வைத்திருகிறது அல்லவா அதற்கு தண்டனையாக காசு கொடுங்கள் என்று அவர்கள் கேட்பது நியாம்தான்" என்றார். அதுவும் உண்மைதானே!
திருநங்கைகளுக்கு வாடகை வீடு கிடைப்பது எவ்வளவு கடினம் என்பதை புரிந்து கொள்ள முடிந்தது. "குடிசைப் பகுதிகளை சேர்ந்தவர்கள்தான் எங்களுக்கு வாடைக்கு இடம்
கொடுக்கிறார்கள். அவர்களில் ஒருவராக மதிக்கிறார்கள் மத்திய தரப்பினரோ அல்லது
உயர் தரப்பினரோ எங்களை மனிதர்களாகக் கூட நினைப்பதில்லை என்று மூத்த
திருநங்கை ஒருவர் கூறியது சமுதாயத்தை ஓங்கி அறைந்தது போல் இருந்தது. உண்மையில் வசதியுள்ள உயர் பின்னணயில் உள்ள குடும்பத்தில் பிறந்திருந்தாலும் திருநங்கையாய் இருந்தால் பிரிந்து வந்து இவர்களுடன்தான் வசிக்கிறார்கள்.இங்கே சாதி வேறுபாடு இல்லை என்றார் எழுத்தாளர் மாரி செல்வராஜ்
இவர்கள் பெண்ணாக வாழவே பிரியப் படுபவர்கள். பிறப்பால் ஆண்களாய் இருந்தாலும் பெண்மை உணர்வுகள் இவர்களை ஆட்கொள்ள அதை வெல்ல இயலாமல் சமுதாயத்தின் ஏளனத்தையும் பொருட்படுத்தாது தன்னைப் போன்றவர்களோடு இணைந்து ஆண்களாய் இருப்பதற்கான உடல் அடையாளங்களை இழப்பதற்கு முடிவு செய்து அறுவை சிகிச்சை செய்து கொள்கிறார்கள். அதை ஒருதிருநங்கை விவரித்த விதம் உண்மையில் உருக்கமானது. நிகழ்ச்சியில்திருநங்கை சுதா பிறப்பால் பெண்ணாகப் பிறந்தவர்களுடைய பெண்மை உணர்வுகளுக்கு எங்கள் உணர்வுகள் கொஞ்சமும் குறைந்தது அல்ல என்பதை உணர்த்தவே பிரயத்தனப் படுகிறார்கள்.என்பதை தெளிவாகவும் நகைச்சுவையாகவும் எடுத்துக் கூறினார்.
தங்களை திருநங்கை என்று அடையாளம் அறியாமல் ஒரு பெண் என்றே நினைத்து தன்
பக்கத்தில் ஒரு பெண் அமர்ந்தால் .மிகுந்த மகிழ்ச்சி அடைவோம் என்றும் பேசினால்
இன்னும் அதிக மகிழ்ச்சி அடைவோம் என்றும் ஒரு ஆண் தங்களை பெண் என்று
நினைத்து விட்டால் அந்த சந்தோஷத்திற்கு அளவே இல்லை என்றும் குறிப்பிட்டது
அவர்களது உணர்வுகளை விளக்கி விட்டது . இந்த சமுதாயம் தங்களை பெண் என்றுதான் நம்பவேண்டும்
நினைக்கவேண்டும் நடத்த வேண்டும் என்பதே அவர்கள் முக்கிய எதிர்பார்ப்பு.முதலில் பெற்றோர் அவர்களைப் புரிந்து கொள்ளவேண்டும். இத்தகைய மன
உணர்வுகளுடன் பிறந்தது அவர்களுடைய தவறு அல்ல.
மாற்றுத் திறனாளிகளைக் கூட பெற்றோரும் குடும்ப உறுப்பினர்கள் வெறுப்பதில்லை.ஆனால் இவர்கள் தங்கள் குடும்பத்தவர்களாலேயே வெறுக்கப் படுகிறார்கள் என்பது வேதனை.. திரு நங்கைகள் தங்கள் குடும்பத்துடன் வசிப்பது அபூர்வம். இப்போது மாற்றம் வந்திருகிறது. சில திருநங்கைகள் தன் குடும்பத்தினருடன் வசித்து வந்ததை நிகழ்ச்சியில் அறிய முடிந்தது. உண்மையில் சமுதாயத்தில் இதுஒரு சிறிய முன்னேற்றம் என்றுதான் கூற வேண்டும்.
இதில் கலந்து கொண்ட திருநங்கைகள் படித்தவர்கள். ஒரளவிற்கு நல்ல நிலையில்
இருப்பதாக தெரிகிறது. இவர்களின் அறிவிலும் ஆற்றலிலும் மற்றவர்களுக்கு சளைத்தவர்கள் இல்லை என்பதை உணர்த்தினார்கள்.ஆனால் பலர் மிக மோசமான நிலையில்தான் இருக்கிறார்கள். அவர்களுக்கு சரியான வழிகாட்டுதல் அமையவேண்டும்
சமீபத்தில் இவர்களை மூன்றாவது பாலினமாக அங்கீகரித்து உத்தரவிட்டுள்ளது உச்ச நீதி மன்றம் .பாலின அடிப்படையில் பாகுபாடுகள் காட்டப்படுவதை உரிமைகள் மறுக்கப்படுவதையும் ஏற்க முடியாது என்று கூறிய நீதிமன்றம் அவர்களை இதர பிற்பட்டவர் பிரிவில் சேர்த்து சலுகைகள் வேலை வாய்ப்புகள் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது . பிரச்சனைகளை கவனிக்க நிபுணர் குழு அமைக்கப்பட்டு அவர்களின் அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் தீர்வுகளை அமுல்படுத்த வேண்டும் என்றும் நீதி மன்றம் கூறியுள்ளது ..
என்னதான் சட்டம் இயற்றப்பட்டாலும் சமூக ரீதியான அங்கீகாரமே இவர்களை மகிழ்விக்கும்வாழ்க்கையை இடையூறின்றி நடத்த வழி வகுக்கும்.
கல்வி உரிமை சட்டத்தில் வாய்ப்பு மறுக்கப்பட்டவர்கள் பிரிவில் இவர்களும்
இணைக்கப் பட்டுள்ளார்கள். இதன் மூலம் தனியார் பள்ளிகளில் சேர்வதற்கு இந்தப்
பிரிவில் வாய்ப்பு அளிக்க வழிவகை செய்யப்படுள்ளது. உண்மையில் இவர்களே தங்களை
அடையாளம் கண்டு கொள்வதே பதின்ம வயதின் பிற்பகுதியில்தான்.இந்த
சூழ்நிலையில் இவை எப்படி இவர்களுக்கு உதவும் என்பது தெரியவில்லை.
ஏற்கனவே அரவாணிகள் நல வாரியம் ஒன்று இருப்பதாக ஞாபகம். அது என்ன செய்தது அல்லது செய்து கொண்டிருக்கிறது என்பது தெரியவில்லை..
தற்போது சென்னை மாநகராட்சி இவர்களுக்கென காப்பகங்கள் அமைக்க இருப்பதாக ஒரு செய்தியை படித்தேன். அவை ஓரளவிற்கு இவர்களுக்கு உதவக் கூடும்.
பெற்றோர்களுக்கும் சமுதயத்திற்கும் இவர்களை எப்படி கையாள்வது என்ற விழிப்புணர்வை அரசுதான் ஏற்படுத்த வேண்டும்.. மருத்துவ ரீதியான ஆலோசனைகளும் பாதுகாப்பும் வழங்க முன் வரவேண்டும்
இவற்றைப் பற்றியும் நீயா நானாவில் விவாதித்திருந்தால் நிகழ்ச்சி இன்னும் பயனுடையதாக இருந்திருக்கும் .
***************************************************************************
திருநங்கைகளின் பரிதாப நிலை ஏற்படுத்திய பாதிப்பில் விளைந்த என்னுடைய கவிதை .
நாங்கள் யார்?
நாங்கள் யார்?
எங்களுக்கே ஐயமுண்டு!
நாங்கள்
பாலினம் அறியாத
படைப்புப் பழுதுகள்!
வேராய் மாற முடியாத
வெற்று விழுதுகள்!
ஆணாய்ப் பிறந்தாலும்
பெண்மை உணர்வுகளால்
பேதப் பட்டுப்போனவர்கள்!
பெற்ற அன்னையும்
வெறுத்ததொதுக்கும்
பெரும்பாவம் செய்தவர்கள்!
அலிகள் என்று
உங்களால் கேலி செய்யப்படும்
கேள்விக் குறிகள்!
கடுங்குரலும் கடுமுடியும்
காட்டிக் கொடுக்க
கழிப்பறைக்குள் கூட
அனுமதிக்கப்படாத
அருவெறுப்பு பிண்டங்கள்
எங்களுக்கும் ஆசைதான்!
கூடப் பிறந்தவர்களுடன் கூடி வாழ,
அன்னையின் மடியில்
அழுதபடி தலை சாய்க்க,
தங்கையின் பூப்பெய்தலில்
பூரிப்படைய,
அண்ணனின் திருமணத்திற்கு
அலங்காரமாய்ச் செல்ல!
என்ன செய்ய?
தெருவோரம் நின்றால்கூட
துரத்தப்படும்
தெருநங்கைகளான
திருநங்கைகள் ஆகிவிட்டோமே!
கடவுளாய் இருந்தால்
கை கூப்பி தொழுகிறீர்கள்!
மனிதராய்ப் பிறந்தால்
கைகொட்டி சிரிக்கிறீர்கள்!
ஆனாலும்
நீங்களெல்லாம் பெருந்தன்மை
கொண்டவர்கள்தான்!
ஒரிலக்க எண்களில்
மிகப்பெரியதை எங்களுக்கே
சொந்தமாக்கி இருக்கிறீர்களே!
*******************************************
தொடர்புடைய கவிதை
காகிதப் பூக்கள்
.
இப்போதுதான் விழிப்புணர்வு வளர ஆரம்பித்திருக்கிறது....
பதிலளிநீக்குமுன்பைவிட இப்போது பரவாயில்லை
நீக்குவணக்கம்
பதிலளிநீக்குமுரளி (அண்ணா)
நல்ல தொகுப்பாக உள்ளது தங்களுக்கு பார்க்கும் நேரம் இருந்து பார்த்து விட்டு பதிவு எழுதியுள்ளீர்கள் அதற்கு எனது பாராட்டுக்கள் அண்ணா.
இவர்கள் அர்தநாதேஸ்வரவடிம் என்று சொல்லாம் இவர்களை ஒரு இழிவான பார்வையாக பார்ப்பது எமது சமுகந்தான் . இவர்களின் வாழ்க்கையில் பல போராட்டங்களை சந்தித்து வாழும் ஒரு இனம் என்றுதான் சொல்லவேண்டும் இதற்கு விழிப்புணர்வு முக்கியம் சிறப்பான பகிர்வுக்கு எனது வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வேராய் மாற்ற முடியாத வெற்று விழுதுகள்//// அருமையான வரிகள். உங்களின் கவிதை மனசைத் தொட்டது முரளி. திருநங்கைகளின் நிலை மாற இன்னும் பல காலமாகும். ஆனால் நிச்சயம் மாற்றம் வரும்.
பதிலளிநீக்குநன்றி கணேஷ் சார்
நீக்குவணக்கம்
பதிலளிநீக்குத.ம 3வது வாக்கு
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
entha neeya nana sir ninga sollurathu netra illai pona varam program aa sir? matru thiranalaikalai etrukkollum petrorkal ivarkalaiyum etru kondu avarkalaiyum nal vaziyil valarthal pathi piracanai avarkalukku thirnthathe sir. nichaiyam varum nadkal ivarkalukku nalla naadkalaka samukathil varum entru nampukiren.
பதிலளிநீக்குகருத்துக்கு நன்றி மகேஷ்
நீக்குதங்கள் குடும்பத்திலேயே வெறுப்பது... பேசாமல் இருப்பது... ஒதுக்கி வைப்பது... - இவைகள் தான் துயரத்தின் உச்சம்...
பதிலளிநீக்குஅனைத்தும் மாறும் காலம் விரைவில் வரும்... வர வேண்டும்...
நம்புவோம். நன்றி தனபாலன்
நீக்குதந்தையர் தினத்திற்கு வந்த பதிவுகளையும் ஸ்டேடஸையும் படித்த எந்தவொரு அப்பனும் ஏலேழு ஜென்மத்திற்ககும் அப்பாவாக பிறக்க ஆசைப்படமாட்டான்
பதிலளிநீக்குதந்தையர் தினத்திற்கு வந்த பதிவுகளையும் ஸ்டேடஸையும் படித்த பின் புரிந்து கொண்டது எல்லா அப்பாக்களும் நல்லவங்களாகவே இருக்கிறார்கள் ஆனால் அவர்களின் மனைவிகள்தாம் குறை கூறித்திரிகின்றனர்
அடேய் பசங்களா இந்த நீயா நானா பொண்ணுகள குரூப் போட்டோ எடுத்து வச்சுக்குங்க # பொண்ணு தேடும்போது கவனமா இருக்க உதவும்
தாக்குதல் நடத்துவதை நிறுத்தினால்தான் பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை: அருண் ஜெட்லி
நல்ல அண்டை நாட்டை பெற்றிராத ஒரு நாடு மகிழ்ச்சியாக இருக்க முடியாது: மோடி
வாத்தியரய்யா இப்ப கவிஞரய்யாவா மாறிக் கிட்டே வருகிறார் பாரட்டுக்கள் கவிஞரய்யா..
முரளி சார் அந்த கவிதை நீங்கள் எழுதியதா அற்புதம். பதிவு அருமை
பதிலளிநீக்குஎல்லாருமே இந்த நீயாநானா பகுதியை பற்றி பேசுகிறீர்கள்.. தேடிபிடித்தாவது பார்க்க வேண்டும்
சீனுவுக்கு ஏன் இந்த சந்தேகம். .என்னுடைய சொந்தக் கவிதைதான் சீனு. வேறு யாருடைய கவிதையாக இருப்பின் நிச்சயம் எழுதியவர் பெயரை குறிப்பிட்டிருப்பேன்
நீக்குசட்ட அங்கீகாரத்தைவிட, சமூக அங்கீகாரமே அவர்கள் விரும்புவது. உண்மைதான். ஆண் குழந்தையா பெண் குழந்தையா என்று ஸ்கேன் செய்து பார்ப்பது போல எக்ஸ் குரோமோசோம் வொய் குரோமோசோம் கணக்கெடு வைத்து முன்னரே அறிந்து இந்தக் குறைகளை பிறக்கும் முன்னரே சரி செய்ய முடியுமா என்று பார்க்க வேண்டும். ஆனாலும் மின் தொடர் வண்டிகளில் இவர்களால் வரும் தொல்லை முடிவதில்லைதான்.
பதிலளிநீக்குஇதற்கான மருத்துவ ஆலோசனைகளை அதிகம் காண முடிவதில்லை
நீக்குநான் அந்த நிகழ்வைப் பார்க்க முடியவில்லை. அழகாகத் தொகுத்து வழங்கியமைக்கு நன்றி முரளி அய்யா. 'என்னதான் சட்டம் இயற்றப்பட்டாலும் சமூக ரீதியான அங்கீகாரமே இவர்களை மகிழ்விக்கும்' - இதுதான் உண்மையிலும் உண்மை. கடைசியில் உ ள்ள கவிதை நெஞ்சைத் தொட்டது. அருமை. அதிலும் கடவுளாய் இருந்தால் கைகூப்பித் தொழுகிறீர்கள்.. மனிதராய் வந்தால்..வரி அற்புதம்.. தமிழ்மணத்தில் இன்று முதலிடத்தைப் பிடித்துவி்ட்டீர்கள். வாழ்த்துகள்
பதிலளிநீக்குநன்றி ஐயா!
நீக்குஅவர்களும் மனிதர்கள்தானே
பதிலளிநீக்குமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படவேண்டும் ஐயா
தமிழ் மணத்தில் முதலிடம் வாழ்த்துக்கள் ஐயா
தம 7
பதிலளிநீக்குஅந்த நிகழ்ச்சியில் பங்கு பெற்ற திருநங்கைகளால் வெளிப்படுத்தப்பட்ட உணர்வுகளோடு மொத்தத் திருநங்கைகளுடைய குணாதிசயங்கள் ஒத்துப்போகிறதா என்பதே கேள்வி. திருநங்கைகளாய் இருப்பது ஒரு குறை என்றால் அதையே பலமாகப் பார்க்கும் பல திருநங்கைகள்தான் சமூகத்தின் கண்ணோட்டதுக்கு காரணம் என்பதும் மறுக்க முடியாது. தங்களைத் திருநங்கைகள் என்று வேறுபடுத்திக் காட்ட கூடவே மெனக்கெடுகிறார்கள் என்பதும் மறுக்க முடியாது.
பதிலளிநீக்குஉடலும் உள்ளமும் அதனதன் தன்மைக்கு எதிராக அமைந்திருப்பதும் சமூகப் புறக்கணிப்பும் அவர்கள் செயல்பாடுகளுக்குக் காரணம். மாற்றுத் திறனாளிகளைக் கையாள்வதற்கு ஏராளமான வழிமுறைகள் உள்ளன .
நீக்குஆனால் இவர்களுக்கான மருத்துவ உளவியல் ஆலோசனைகள் உள்ளனவா? என்பது தெரியவில்லை.
உண்மையில் திருநங்கைகளின் நிலை மோசமாகவே உள்ளது. ஆனாலும் அதில் அவர்களுக்கும் பங்கு உண்டு என்பதை மறுக்க முடியாது. நான் பார்த்த பெரும்பாலான திருநங்கைகள் தவறாகவே இருக்கின்றனர். அதற்கு சமூகமும் ஒரு காரணம் என்றாலும் இப்போதய வளர்ச்சியில் குறைந்தபட்சம் இளைஞர்களிடத்திலாவது அவ்வாறு நடந்து கொள்ளாமல் இருந்தால் தான் அவர்களின் மேல் ஒரு நல்ல அபிப்ராயம் பிறக்கும் ? ஆனால் முன்னரை விட இப்போது கொஞ்சம் பரவாயில்லை என்றுதான் கூற வேண்டும். பதிவும் அலசலும் அருமை. கவிதை சூப்பர். இனி தொடருவேன்.
பதிலளிநீக்குவணக்கம் ஐயா
பதிலளிநீக்குஅழகாக நிகழ்ச்சியைத் தொகுத்தும் அரசுக்கு ஆலோசனைகளையும் கூறியிருக்கிறீர்கள். இந்த நிகழ்ச்சியை நானும் பார்த்தேன். பதிவாக இட நேரம் அனுமதிக்கவில்லை. தோழி கீதா வெகு எதார்த்தமாக பேசினார். அந்நிகழ்ச்சிக்கு பிறது அவர்கள் பற்றிய புரிதல் தெளிவாகியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும். சிறப்பான பகிர்வுக்கு நன்றிகள் ஐயா,. கவிதை மிக சிறப்பு.
****அவர்கள் மிரட்டிக் காசு பறிப்பதையும் பாலியல் தொழில் செய்வதையும் பலரும் குறை கூறுவது வழக்கம்.****
பதிலளிநீக்குஇதுபோல் தவறுகள் செய்தால் அது தப்புத்தானே? இல்லையா?
**அவர்களை ஒட்டு மொத்தமாக விலக்கி வைத்ததே இதற்கு காரணம் என்று நிகழ்ச்சியில் கலந்து கொண்ட திருநங்கைகள் சொன்னதில் உண்மை இருந்தது. ***
உண்மைதான். இவர்களை எப்படி ட்ரீட் பண்ணுவது என்று பலருக்கும் தெரியவில்லை. அதற்காக பாலியல் தொழில் செய்வது மற்றவர்களை ஒரு மாதிரி மிரட்டி காசு கேட்பது எல்லாம் சரி என்றாகிவிடாது.
In US, they are treated fairly these days. It might take another 20 years for them get their rights in INDIA. We are always 20-30 yeast behind in "civilizing" when you compare us with west like USA
மிக சிறப்பான கவிதை! நீயா நானா இப்போதெல்லாம் பார்ப்பது இல்லை! நல்ல நிகழ்ச்சியை மிஸ் பண்ணிவிட்டேன் போல! இப்போதுதான் திருநங்கைகள் குறித்த விழிப்புணர்வு ஏற்பட ஆரம்பித்துள்ளது என்று நினைக்கிறேன்! விரைவில் நல்லது நடக்கட்டும்!
பதிலளிநீக்குபதிவைத் தொடர்ந்து வந்துள்ள கவிதை மனதில் பதிந்துவிட்டது. அழகிரி விசுவநாதன் அவர்கள் தன்னுடைய கமலி என்கிற புதினத்தில் திருநங்கைகளை கடவுளின் குழந்தைகள் என்று கூறுகிறார். சமுதாயம் தற்போது இவர்களைப் பார்க்கும் கண்ணோட்டம் முன்பைவிட சற்று மேம்பட்ட நிலையில் உள்ளது என்பதை மறுக்கமுடியாது.
பதிலளிநீக்குஎன்ன செய்ய தொலைக்காட்சிகளைப்பார்த்து விட்டு சமூக உணர்வு கொப்பளிக்கிறது சமூக வலைதள மக்களூக்கு அவ்வ்வ்!
பதிலளிநீக்குஇதே தொ.காவில் முன்னர் ஒரு நிகழ்ச்சி நடத்தினார் ஒரு திருநங்கை ,பின்னர் அவரே நிகழ்ச்சி இயக்குனர் மீது காவல் துறையில் புகாரும் கொடுத்தார் , அதே தொ.கா இப்போ அடுத்தவங்களூக்கு விழிப்புணர்வு சொல்லுது ,அதையும் பதிவாக்கினால் "நல்ல செயல்" தான் அவ்வ்!
சமுதாயமும் பெற்றோர்களும் புரிந்துகொண்டு சரியான வழிகாட்டலோடு பழகவேண்டும்..
பதிலளிநீக்குஉங்கள் உணர்வுக்கு மதிப்பளிக்கிறேன்..
திருநங்கைகள் பாவம் தான்.
பதிலளிநீக்குஅவர்களின் உணர்வுகளுக்கும் மதிப்பளிப்போம்.
த.ம. 7
அந்த ஒளிபரப்பினைக் காண முடியாமல்
பதிலளிநீக்குபோனவர்களும் அதனை உணர்வுப்பூர்வமாக
உணரும்படியாகச் சொல்லிப்போனவிதம் அருமை
குறிப்பாக கவிதை தங்கக் கட்டி
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
வடிவேலுவின் "அவனா நீ" does not mean திருநங்கை. It points to homosexuals.
பதிலளிநீக்குதிருநங்கை, அரவாணி அல்லது அலி (no offense) என்னும் வகை ஹோமோசெக்ஸுவல்களில் ஒரு வகைனு சொல்லலாம்.
பதிலளிநீக்குLGBT
L- Lesbian : இவர்கள் சாதாரணமான பெண்கள்தான். பெண்கள் போல்தான் உடையுடுத்த விரும்புவாங்க.பெண்கள் பாத்ரூம்தான் பயன்படுத்த விரும்புவாங்க ஆனால் இவர்களுக்கு பெண்கள் மேல் ஈர்ப்பு உண்டு. ஆண்கள் மேல் ஈர்ப்பு இருக்காது. அதாவது ஒரு ஆண், கவர்ச்சியான பெண்ணைப் பார்க்கும்போது அவளை அணைக்கணும், அவளுக்கு முத்தம் கொடுக்கணும்னு தோன்றுவது இயற்கை. அதேபோல் ஒரு பெண்ணைப் பார்த்து இன்னொரு பெண்ணுக்கு தோன்றியதென்றால் அவர் ஒரு லெஸ்பியன்.
நம்ம ஊரில் அப்படி உணர்வுவுள்ள பெண்களும் இன்னொரு ஆணை மணந்துதான் வாழ்ந்துகொண்டு இருக்காங்க- தலை எழுத்துனு.
எப்படி இவர்கள் வாழணும்? தன்னைப்போல் பெண்கள்மேல் ஈர்ப்புள்ள இன்னொரு பெண்ணை மணந்து அவளோட குடும்பம் நடத்துவதுதான் முறை.
G- Gay: சாதாரண ஆண்கள்தான். ஆண்கள் போலதான் ஆடை அணிய விரும்புவாங்க. ஆண்கள் பாத்ரூம்தான் பயன்படுத்த விரும்புவாங்க. ஆனால் இவர்கள் ..ஒரு ஆண் இன்னொரு ஆணின்மேல் ஈர்ப்புடன் இருப்பது. இவர்களுக்கு ஒரு கவர்ச்சியான பெண்ணை நிர்வான்மாகப் பார்த்தாலும் உண்ரச்சிகள் பொங்காது. பிற ஆண்கள் மேல்தான் ஈர்ப்பு இருக்கும்.
இவர்கள் எப்படி வாழணும்? த்ன்னைப்போல் ஆண்கள்மேல் ஈர்ப்புள்ள இன்னொரு ஆணை மணந்து வாழணும். அதுதான் சரியான வாழக்கை முறை.
B- Bisexual : இவர்கள் ஆணாகவும் இருக்கலாம் அல்லது பெண்ணாகவும் இருக்கலாம். இவர்களுக்கு ஆண்கள் மீதும் பெண்கள்மீதும் ஈர்ப்பு இருக்கும்.
இவர்கள் ஒரு பெண்ணாக இருந்தால் ஒரு ஆணையும் மணந்து வாழலாம். இல்லைனா பெண்ணையும் மணந்து வாழலாம். ஆணாக இருந்தால் ஒரு பெண்ணை மணந்து வாழலாம் இல்லைனா ஒரு ஆணையும் மணந்து வாழலாம், இல்லைனா கொஞ்ச நாள் ஒரு ஆணை மணந்து வாழ்ந்துவிட்டு அப்புறம் டைவோர்ஸ் பண்ணிட்ட்டு ஒரு பெண்ணை மணந்து வாழலாம். :)
T-Transgender; இவங்கதான் திருநங்கை.
முதல்வகை: இவர்களுக்கு பிறப்புறுப்பு ஆண் என காட்டும். ஆனால் இவர்களுக்கு ஆண்கள் மேல்தான் ஈர்ப்பு இருக்கும். அது மட்டுமல்ல, இவர்கள் ஆண்களாக இருந்தாலும் பெண்கள் போல் ஆடை உடுத்த விரும்புவாங்க. பெண்கள் போல பேசுவாங்க, பூவைக்க ஆசைப் படுவாங்க. நடை உடை பாவனை எல்லாம் பெண்கள் போல செய்வாங்க. இவர்கள் சர்ஜரி செய்து பெண்ணாக மாறவும் விரும்புவாங்க, மாறிக்கொண்டு இருக்காங்க. எச்ட்ரோஜன் எடுத்து மார்பகம் வளர்த்துக்குவாங்க.
இன்னொரு வகை: இவர்கள் ஒரு பெண்ணாக பிறந்து பெண் பிறப்புறுப்புடன் இருந்தாலும், ஆணாக உணருவார்கள். ஆண்கள் போல் உடை அணிய விரும்புவாங்க. இவர்களுக்கு மார்பகம் பெண்களுக்குப் போல் இருக்காது. இவர்கள் "கே"யைவிட வேறு வகை. ஏன் என்றால் இவர்களுக்கு பெண் பிறப்புறுப்பு இருக்கும்
இவர்கள் முதல் வகையைவிட குறைவுனு நெனைக்கிறேன்.
இதுபோக, ஒரு சிலர் கெனெட்டிக் குறைபாடால், ஆண் பெண் இரண்டு பிறப்றுப்புடன் பிறப்பார்கள். இவர்கள் விரும்பாத ஒண்ணை அருவை சிகிச்சை செய்து அகற்றிவிட்டு ஆணாகவோ இல்லை பெண்ணாகவோ மாறி வாழ முயல்வார்கள்.
இதுதான் என்னுடைய புரிதல்.
----------
9 million (pop: 300 million) americans identify themselves as LGBT.
இதிலும் அரவாணிகள் மைனாரிட்டிதான் (03%) . மற்றவர்கள்தான் அதிகம் (3.5 % கே, லெஸ்பியன் பைசெக்ஸுவல் எல்லாம் சேர்த்து.
இதேபோல் இந்தியாவிலும் இருக்கணும். (100 மில்லியன் இந்தியர்கள்) ஆனால் இவர்கள் தைரியமாக தன் உணர்வுகளை சொல்லாமல் எப்படியோ வாழ்ந்து செத்துக்கொண்டு இருக்காங்க.
விரிவான தகவலுக்கு நன்றி
நீக்குபடைப்பு பழுதில்லாது உங்கள் கவிதை..
பதிலளிநீக்குரொம்ப அருமை அய்யா
தொடர்க
http://www.malartharu.org/2014/06/time-management-part-one.html
த.ம ஒன்பது
பதிலளிநீக்குhttp://www.malartharu.org/2014/06/time-management-part-one.html
Sorry.. I miscalculated in my estimate of LGBT in India..
பதிலளிநீக்குcorrection...
US population 300 million.. LGBT- 3.8% (9 million)
Indian population 1100 million. LBGT should be 36 million. Not 100 million as I claimed above!
நீயா?! நானாவில் மொக்கை நிகழ்ச்சிலாம் பார்த்திருக்கேன். இப்படி ஒரு ந்ல்ல நிகழ்ச்சியை மிஸ் பண்ணிட்டேன்.
பதிலளிநீக்குகவிதை அருமை! மற்றபடி எதுவும் சொல்ல எனக்கு தகுதி யில்லை!
பதிலளிநீக்குபல விடயங்களை உணர வைத்த நிகழ்ச்சி அது மிக்க நன்றி
பதிலளிநீக்குஅன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
WWW.mathisutha.COM
இந்த கேள்விக்கு பதில் மவுனம் என்றே கருதுகிறேன்.
பதிலளிநீக்கு4 லட்சத்து 90 ஆயிரம் திருநங்கைகள் வீட்டை விட்டு ஓடிப்போய் இருக்காங்க ஆனால் சம்பந்தப் பட்டவர்களால் எவ்வித காணவில்லை என்ற அறிவிப்புகள் கொடுக்கப் படவே இல்லை ஏன் ? என்ற வாதத்திற்கு முன் வைக்கப் பட்ட கேள்வி
#நீயா_நானா
கவிதை மிக அருமை. கண்டிப்பாக முன்பை விட இப்போது இவர்களை பற்றின விழிப்புணர்வு அதிகரித்துள்ளது
பதிலளிநீக்கு
பதிலளிநீக்குவணக்கம்!
பிறப்பொக்கும் என்றகுறள் பேணுகின்ற சட்டம்
பிறப்பித்தால் பெற்றிடுவார் பீடு!
அடடா பார்க்காமல் போனோமே என்ற நினைவை அழித்த பகிர்வு.
பதிலளிநீக்குமுரளி அவர்களே, நான் நீயா-நானா- வில் இந்த எபிசோடை பார்க்கவில்லை.... ஆனால் உங்கள் உங்கள் பதிவு மிக அருமை...... நல்லதொரு விழிப்புணர்வு பதிவு..
பதிலளிநீக்குபொதுவாகவே நீயா நானா பார்ப்பதில்லை. ஆனால் இந்த நிகழ்ச்சி பார்த்தேன். தங்களது உணர்வுகளை அவர்கள் வெளிப்படுத்தியது நல்ல விஷயம். ஒரு சிலரின் தவறுகளால் அவர்கள் அனைவருமே தவறாகப் பார்க்கப் படுகிறார்கள்.....
பதிலளிநீக்குஉங்கள் கவிதை மிகவும் சிறப்பு.
நிகழ்ச்சி பார்க்கவில்லை.
பதிலளிநீக்குஇதைப் பார்த்து உணர்வு தருகிறது பதிவு.
நன்றி.
வேதா. இலங்காதிலகம்.
கடைசி இரண்டு வரிகளில் கன்னத்தில் அறைவாங்கியிருகிறது எண் கொடுத்த சமுதாயம், வலி சொல்லும் வரிகள்.
பதிலளிநீக்குகவிதை என்றாலோ காத தூரம் ஓடுவேன். ஆனால் சமூகம் சார்ந்த கவிதைகளை அதன் வலிகளை தெளிவான முறையில் எழுதிய கவிதைகள் நம் மனதை பாதிப்படையச் செய்யும். உங்கள் கவிதையும் அஃதே. நன்றி.
பதிலளிநீக்குதிருநங்கைகளின் வலி தங்கள் கவிதையின் மூலம் எதிரொலிக்கின்றது! அருமையான பதிவு!..கவிதையும்தான்! சமூகம் ஏனோ அவர்களைப் புறம்தள்ளுகின்றது! அவர்களும் மனிதர்கள்தானே!
பதிலளிநீக்குதாங்கள் அந்த 10 கேள்விகளின் வலையில் சிக்க வில்லையா? தாங்களும் பதில் உரைக்கலாமே! அறிய ஆவல்!
நான் மதுரைத் தமிழனின் வலையிலேயே சிக்கிக் கொண்டேன் . விரைவில் எழுதுகிறேன்
நீக்குவணக்கம்
பதிலளிநீக்குஇன்று தங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகம்மாகியுள்ளது வாழ்த்துக்கள் சென்று பார்வையிட இதோ முகவரி
http://blogintamil.blogspot.com/2014/06/teachers-in-web-world.html?showComment=1403974193240#c6401072316413391899
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
அன்பின் முரளிதரன் - வருணின் தகவல்கள் அடங்கிய மறுமொழி உள்ளிட்ட மற்ற மற்மொழிகளையும் படித்தேன் - தங்களுடைய பதிவும் நன்று -தகவலகள் அடங்கிய பதிவு - வலைச்சர அறிமுகம் மூலமாக வந்தேன் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா.
பதிலளிநீக்குநீயா?நானா?திருநங்கைகளும் பொதுமக்களும் - திரு
பதிலளிநீக்குடி.என்.முரளிதரன் அவர்களின் அருமையான பதிவு. எனது பக்கத்தில் பகிர்கிறேன்.
நன்றி சார் திரு
டி.என்.முரளிதரன்
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்கு