தமிழ்நாடு கொரோனா பாதிப்பில் இரண்டாம் இடத்தில் உள்ளது. நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. சுகாதாரத் துறை பம்பரமாக சுழன்று வருகிறது. கொரோனா ஏற்படுத்தும் அச்சம் ஒருபுறம் இருக்க, 21 நாள் ஊரடங்கு உத்தரவு வேறு வித விளைவுகளை ஏற்படுத்தி வருகிறது. உலகப் போர்களின்போது இந்த அளவு பதட்டம் இருந்திருக்குமா என்பது ஐயமே. பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இனிவரும் காலம் இன்னும் மோசமாக இருக்கும் என்று அனைவருக்கும் தெரிந்தே இருக்கிறது. உலகம் முழுதுமே இது பேரிடரை எதிர்கொள்ள தடுமாறி வருகிறது கூட்டம் கூடுவதை தடுப்பது சவாலான பணியாக உள்ளது
இந்நிலையில் மருத்துவ சோதனை செய்யவும் போதுமான மருத்துவ வசதிகளை ஏற்படுத்தவும் மேலும் கொரோனா பரவாமல் தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்தவும் மக்களுக்கு ஏற்பட்டுள்ள இடர்பாடுகளை சமாளிக்கவும் ஏராளமான நிதி தேவைப்படுவதை நாம் அறிவோம்.. தமிழக முதல்வர் அவர்கள் 13000 கோடி ரூபாய் கோரியுள்ளார். எதிர்கட்சிகளும் அதிக நிதி ஒதுக்கக் கோரியுள்ளன
மத்திய அரசு மாநிலங்களுக்கான பேரிடர் மேலாண்மை நிதியை மாநிலங்களுக்கான தன் பங்கில் 50% விடுவித்துள்ளது. தமிழ்நாட்டுக்கு 510 கோடி முதல் தவணையாக விடுவிக்கப் பட்டுள்ளது.
பாதிப்பு நிலையில் இரண்டாவதாக உள்ள தமிழ்நாட்டிற்கு குறைவான நிதி பாதிப்பு குறைவாக உள்ள மாநிலங்களுக்கு அதிகமான நிதி இது எப்படி சரியாகும். என்று கேள்விகள் எழுந்துள்ளன மத்திய அரசு பாரபட்சம் பார்த்து நிதி ஒதுக்கி உள்ளது என்று கோபம் கொள்வதும் இயல்பானதே .
எப்படித்தான் இந்த ஒதுக்கிடு செய்யப்படுகிறது என்பதை அறிய முயற்சி செய்தேன்.விடை கிடைத்தது. நான் இப்போதுதான் தெரிந்து கொண்டேன்.
ஒதுக்கீட்டை நியாயப் படுத்துவதற்காக எழுதுபட்டது அல்ல என்பதை தெரிவித்துகொள்கிறேன். எப்படி செய்யப்படுகிறது என்பதை அறிந்து கொள்ளும் முயற்சியே இந்த பதிவு
இதுபோன்ற ஒதுக்கீடுகள். செய்வதற்கு ஏதாவது ஒரு மூலம் இருக்க வேண்டும் அல்லவா. அது எது?
கடைசியாக அமைக்கப்பட்ட நிதிக்குழுவின் அறிக்கைதான் அது. அதன் பரிந்துரைப்படிதான் மானியங்கள்,வரிப்பங்கீடுகள் உள்ளிட்ட நிதி ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்படுகின்றன மாநிலங்கள் வாரியான ஒதுக்கீடு மாநிலங்களில் பெறப்பட்ட நிதித் தகவல்களின் அடிப்படையில் பல்வேறு காரணிகளைக் கொண்டு முடிவு செய்யப்படுகிறது. நிதிகுழுக்களின் பரிந்துரைகளுக்கும் மாநிலங்கள் ஆட்சேபம் தெரிவிக்கவும் செய்கின்றன.
கடைசியாக அமைக்கப்பட்ட நிதிக்குழுவின் அறிக்கைதான் அது. அதன் பரிந்துரைப்படிதான் மானியங்கள்,வரிப்பங்கீடுகள் உள்ளிட்ட நிதி ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்படுகின்றன மாநிலங்கள் வாரியான ஒதுக்கீடு மாநிலங்களில் பெறப்பட்ட நிதித் தகவல்களின் அடிப்படையில் பல்வேறு காரணிகளைக் கொண்டு முடிவு செய்யப்படுகிறது. நிதிகுழுக்களின் பரிந்துரைகளுக்கும் மாநிலங்கள் ஆட்சேபம் தெரிவிக்கவும் செய்கின்றன.
15 வது நிதிக் குழு என்.கே .சிங் அவர்கள் தலைமையில் அமைக்கப்பட்டு முதல் அறிக்கையை நவம்பர் 2019 இல் அளித்துள்ளது.அதில் உள்ள பல்வேறு அம்சங்களில் பேரிடர் நிதி ஒதுக்கீடு மற்றும் பேரிடர் வாய்ப்புக்குறியீட்டு எண் (Disaster Risk Index) அடிப்படையாகக் கொண்டு இரண்டு விதமான பேரிடர் நிதிகளுக்கு நிதி பரிந்துரைக்க்பட்டு உள்ளன
மாநில பேரிடர் வாய்ப்பு நிர்வாக நிதி (State Disaster Risk Management Fund)
தேசிய பேரிடர் வாய்ப்பு நிர்வாக நிதி (National Disaster Risk Management Fund)
மாநில பேரிடர் வாய்ப்பு நிர்வாக நிதி (State Disaster Risk Management Fund)
தேசிய பேரிடர் வாய்ப்பு நிர்வாக நிதி (National Disaster Risk Management Fund)
இவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள கணக்கீட்டின் அடிப்படையில் (SDRMF) நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாநிலத்துக்கும் மத்திய அரசின் நிதி எவ்வளவு மாநில அரசு தன்பங்குக்கு உருவாக்க வேண்டிய நிதி எவ்வளவு என வரையறை செய்துள்ளது இந்நிதிக்குழு.. அது எவ்வாறு கணக்கிடப்பட்டது என விளக்கமும் கொடுக்கப் பட்டுள்ளது.
வெள்ளம் வறட்சி புயல் பூகம்பம், மற்றவை என ஏற்படக் கூடிய பேரிடர்களின் சாத்தியங்கள் மற்றும் ஏழ்மை நிலையின் அடிப்படையில் புள்ளிகள் வழங்கப்பட்டு குறியீட்டு எண் நிர்ணயிக்கப் படுகிறது.
அதன் படி 15 வது நிதிக் குழுவின் Disaster Risk Index கீழே உள்ள அட்டவணையில் காணலாம்
இந்தக் குறியீட்டு எண் வெள்ளம்,வறட்சி,பூகம்பம், புயல் மற்றவற்றால் மாநிலங்களின் நில அமைப்புக்கேற்ப பாதிக்கப் படும் சாத்தியக்கூறுகளின் அடிப்படையில் நிர்ணயம் செய்யப்படுகிறது
மேலுள்ள் குறியீட்டு எண்ணைப் பயன்படுத்தி எப்படி கணக்கிடு செய்யப்படுகிறது என பார்க்கலாம்
முந்தைய ஆண்டுகளில் எவ்வளவு தொகை பேரிடர் சார்ந்து செலவழிக்கப் பட்டுள்ளது , மக்கள் தொகை, பரப்பளவு இதுவரை பாதிக்கப்ட்ட விவரங்கள் முதலியவை கணக்கில் எடுத்துக் கொள்ளப் படுகிறது,
ஃபார்முலா இதுதான்:
ஒதுக்கீட்டுத்தொகை = W * DRI + W
இதில் W = AE70 + A15 + P15
DRI =மேலே பட்டியலில் உள்ள பேரிடர் குறியிட்டு எண்
AE70 = கடந்த 7 ஆண்டுகளில் செலவுசெய்யப்பட்ட சராசரித்
தொகையில் 70%
A15 = பரப்பளவில் 15%
P15 = மக்கள்தொகையில் 15%
மேலுள்ள மூன்றையும் கூட்டி அதனுடன் DRI குறிட்டு எண்னை தமிழகத்துக்கு (0.550) பெருக்கி இதனுடன் மூன்றின் கூடுதலையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்
அதாவது W * DRI + W
இதனுடன் சேர்த்து ஆண்டுக்கு5% சத வீத பண வீக்கமும் சேர்க்கப்பட வேண்டும். இவ்வாறு கணக்கிடப்பட்டு கீழ்க்கண்டவாறு இத்தொகையில் 75% மத்திய அரசு வழங்கும் 25% மாநில அரசு நிதி ஒதுக்க வேண்டும்.தமிழகத்தை பொறுத்தவரை 1020 கோடியில் முதல் தவணையாக தற்போது 510 கோடியை விடுவித்துள்ளது.
தேசிய பேரிடர் வாய்ப்பு நிர்வாக நிதி (National Disaster Risk Managent Fund) இந்த நிதி நாடுமுவதும் பொதுவான செலவினத்திற்கானது. இதில் இருந்தும் நிதி வழங்கலாம்.
State-wise Allocation of SDRMF (2020-21 | ||||
State | Total | Central Share |
State share |
|
AndhraPradesh | 1491 | 1119 | 372 | |
Arunachal prades | 278 | 250 | 28 | |
Assam | 858 | 772 | 86 | |
Bihar | 1888 | 1416 | 472 | |
Chhattisgarh | 576 | 432 | 144 | |
Goa | 15 | 12 | 3 | |
Gujarat | 1765 | 1324 | 441 | |
Haryana | 655 | 491 | 164 | |
Himachal | 454 | 409 | 45 | |
Jharkhand | 757 | 568 | 189 | |
Karnataka | 1054 | 791 | 263 | |
Kerala | 419 | 314 | 105 | |
Madhya | 2427 | 1820 | 607 | |
Maharashtra | 4296 | 3222 | 1074 | |
Manipur | 47 | 42 | 5 | |
Meghalaya | 73 | 66 | 7 | |
Mizoram | 52 | 47 | 5 | |
Nagaland | 46 | 41 | 5 | |
Odisha | 2139 | 1604 | 535 | |
Punjab | 660 | 495 | 165 | |
Rajasthan | 1975 | 1481 | 494 | |
Sikkim | 56 | 50 | 6 | |
Tamil | 1360 | 1020 | 340 | |
Telangana | 599 | 449 | 150 | |
Tripura | 76 | 68 | 8 | |
Uttar | 2578 | 1933 | 645 | |
Uttarakhand | 1041 | 937 | 104 | |
West | 1348 | 1011 | 337 | |
All | 28983 | 22184 | 6799 |
இது எப்படிக் கணக்கிடப் படுகிறது என்பதை அறிவதற்காக ஆர்வக் கோளாறால் எழுதப் பட்டது இப்பதிவு என்பதை ஏற்கனவே கூறிவிட்டேன்.
இந்த நிதிக்குழு அறிக்கை மாநிலங்களுக்கு கட்டாயம் தெரிவிக்கப் பட்டு இருக்கும். மாநிலங்களின் பிரதிநிதிகளும் இதில் இடம் பெற்றிருப்பர். மக்கள் பிரதிநிதிகள் இதுபோன்ற அறிக்கைகளை நன்கு அறிந்து விவாதித்து அதன் குறைகளை போக்க முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். எதன் அடிப்படையில் நிதி வழங்கப் படுள்ளது அதன் மூலக் காரணிகளை அறிந்து ஆட்சேபத்தை தெரிவிக்க வேண்டும்., (இன்றுதான் நிதிக் குழு சார்ந்த கோரிக்கைகளை மத்திய அரசிடம் எழுப்பி உள்ளது. (இப்போதுதான் படித்திருப்பார்களோ?))
சில புள்ளி விவர கணக்கீட்டு முறைகள்( இவை அறிவியல் ஏற்றுக் கொண்ட முறைதான்) நடைமுறைகளுக்கு முரணாக இருப்பது வழக்கம்.
முன்பு ஒருமுறை திட்டக்குழு துணைத் தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியா ஒரு இந்தியனின் தனி நபர் நுகர்வு சராசரியாக நாளொன்றுக்கு ரூ 32-க்கு குறைவாக இருந்தால் அவர் வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ளவராகக் கருதப்படுவார். என்று கூறியது நினைவிருக்கலாம்.
கிரிக்கெட் விளையாட்டில் டக் ஒர்த் லூயிஸ் முறையில் 13 பந்துகள் 22 ரன்கள் வெற்றிபெறத் தேவை என்ற நிலையில் மழையால் ஆட்டம் தடைபட மீண்டும் ஆட்டம் தொடங்க, பந்துகள் குறைக்கப்பட்டு 1 பந்து 21 ரன்கள் என்று இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது கிரிக்கெட் ரசிகர்களுக்கு நினைவிருக்கலாம், இந்தக் கணக்கீட்டு முறை சிக்கலானது.
பாபி பிரேகன் என்பவர் சொன்னபடி
ஒரு கால் நெருப்பிலும் இன்னொரு கால் ஐஸ் கட்டியின் மீதும் இருந்தால் சராசரி வெப்ப நிலைப்படி உங்களுக்கு பிரச்சனை ஏது மில்லை என்று சொல்வதுதான் புள்ளி இயல்
எப்படி இருப்பினும் எல்லாப் பேரிடரையும் ஒன்றாகக் கருதாமல் இதனை தனிப்பட்டதாகக் கருதி கூடுதல் நிதி ஒதுக்கப் படவேண்டும் என்பதே எனது கோரிக்கையும் விருப்பமும் ஆகும். பிஎம் கேர்ஸ் இதை நிறைவேற்றுமா எனப் பார்ப்போம்
---------------------------------------------------------------------------------------------------
நன்றி:https://fincomindia.nic.in/
15 வது நிதிக்குழு அறிக்கை
https://fincomindia.nic.in/ShowContent.aspx?uid1=3&uid2=0&uid3=0&uid4=0
புரிந்தது ஐயா
பதிலளிநீக்குஇருப்பினும் கூடுதல் நிதி ஒதுக்கப்பட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்
நல்லதே நடக்கும் என நம்புவோம்
நீங்கள் சொல்லும் தகவல்கள் சரியாகத்தான் இருக்கிறது பயனுள்ள பதிவாகத்தான் உள்ளது... ஆனால் எது எப்படியோ எங்களுக்கு மோடியை குரை சொல்லியே பழகிவிட்டது......... இப்ப நான் என்ன செய்ய? உங்கள் பதிவு சரி என்றால் மத்திய அரசு செய்தது சரி என்றாகிவிடும்... இல்லை இல்லை மத்திய அரசு செய்வது தவறு என்றால் உங்கள் பதிவும் தவறாகிவிடும்....... அதனால் ஒரு முடிவுக்கு வந்துட்டேன் மத்திய அரசு செய்வது சரியோ தவ்றோ ஆனால் முரளி எழுதிய பதிவு சரி என்று சொல்லி செல்லுகிறேன். ஏனென்றால் முரளியிடம் வரும் செய்திகளில் நம்பகத்தன்மை அதிகம்
பதிலளிநீக்குஅறிக்கையின் படி சரி என்றாலும் நடைமுறை நிலவரப்படி தவறு என்றுதான் சுட்டிக் காட்டி இருக்கிறேன். நிதிக்குழுவில் மாநிலங்களின் பிரதிநிதிகள் இருப்பார்கள்.அவர்கள் தங்கள் மாநிலத்திற்கான பங்கீட்டை தக்க தரவுகளுடன் கோரவேண்டும். மேலும் மக்கள் எம்பிக்கள் இதுபோன்ற நிதிக்குழு பரிந்துரைகளை ஆராய்ந்து அதில் உள்ள முரண்பாடுகளை சுட்டிக் காட்டி விவாதிக்கத் தெரிந்திருக்க வேண்டும். அடுத்தடுத்த ஆண்டுக்கான பரிந்துரைகளையும் இதே குழுதான் வழங்க உள்ளது முன்னமேயே விழித்துக் கொண்டு உரிய ஒதுக்கீடுக்ள் அறிக்கையில் இடம்பெற முயற்சி மேற்கொள்ள வேண்டும். எல்லா கட்சிகளுக்கு ராஜ்யசபா எம்பிக்களை கட்சியனருக்கு வாய்ப்பு தரும் களமாக வைத்திருக்கிறது. உண்மையில் வல்லுநர்களை சமூக ஆர்வம் கொண்ட அறிவியல் பொருளாதார் அறிஞர்களை எம்பியாக தேர்ந்தெடுத்து அனுப்ப வேண்டும்.
நீக்குஅருமை.
பதிலளிநீக்குபலரும் அறியும் வண்ணம் விவரித்தமைக்கு நன்றி நண்பரே...
பதிலளிநீக்குவிளக்கம் சரி... ஆனால்...
பதிலளிநீக்கு// எதன் அடிப்படையில் நிதி வழங்கப் படுள்ளது அதன் மூலக் காரணிகளை அறிந்து ஆட்சேபத்தை தெரிவிக்க வேண்டும்... //
ஹா... ஹா...
மத்தியக் குழுவும் மற்ற பேரிடர்களைப் போல இதையும் கணக்கில் எடுத்து ஒதுக்கீட்டை நிர்ணயம் செய்யக்கூடாது என்கிற உங்கள் கருத்து வலிமையானது. அவர்களுக்கு பொறுப்பு இருக்கிறது.
பதிலளிநீக்குபுள்ளியியல், தொல்லியல் எல்லாம் பார்ப்பது தனியாக பார்த்து கொள்ளட்டும்... பசி எனும் இயற்பியலை தீர்திடவே அறிவியல். தவறிடின் தவறிடும் உயிர் இயல். அதன் பிறகே கை கட்டவும், தட்டவும், விளக்கதை ஏற்றவும், ஏந்தவும் ஆள் தேட இயலும்.
பதிலளிநீக்குநல்ல பகிர்வு. விளக்கமாகச் சொன்னது நல்ல விஷயம்.
பதிலளிநீக்குநல்ல விளக்கமான பதிவு ஆனால் எனக்கு கொஞ்சம் இல்ல நிறையவே தலை சுத்துது புள்ளியியல் கணக்கு எல்லாம்...ஹா ஹா ஹா ஹா..நிறைய முறை வாசித்தால்தான் மண்டைக்குள் பதியும் போல..
பதிலளிநீக்குஎன்றாலும் அடிப்படை புரிந்தது. நமக்குத் தேவையானதை எடுத்துச் சொல்லி விவாதித்துக் கேட்க நல்ல வல்லுநர்கள் வேண்டும். மற்றும் இந்தப் பேரிடர் கொஞ்சம் அதிகம் நிதி தேவைப்படும் ஒன்று அதுவும் மாதக் கணக்கில் என்பதால் அதைப் போல இதற்கும் கால்குலேட் செஞ்சு கொடுக்கக் கூடாது என்பது நியாயமான கருத்து.
கீதா
சிறப்பாக தொகுத்து விபரித்து உள்ளீர்கள்
பதிலளிநீக்குபாராட்டுகள்
மகாராஷ்டரத்திற்கு வழங்கிய நிதியை எவ்வாறு கணக்கு செய்வது
பதிலளிநீக்குமகாராஷ்டிரா மாநில விவரங்களை கணக்கிட்டு சரிபார்த்து தான் இந்த பதிவை எழுதினேன்
நீக்குநானு ஏற்கனவே கணக்குல வீக்கு ... இதுல நமக்கு புள்ளியல் எங்கே புரியபோகுது... கணக்கெல்லாம் அப்புறமா பாத்துக்கலாம்... இப்போதைக்கு தமிழ்நாடு மேல கொஞ்சம் பரிதாபப்பட்டு மீட்டருக்கும் மேல கொஞ்சம் போட்டு கொடுங்க சாமியோவ் ... >> சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட் <<
பதிலளிநீக்கு