திருப்பூர் என்றதுமே நினைவுக்கு வருவது பனியன் கம்பெனிகள் மட்டுமல்ல நண்பர் ஜோதிஜியும்தான். தேவியர் இல்லம் வலைப்பூ மூலமாக எனக்குஅறிமுகமானவர். அவர் சமூக ஆர்வலரும்கூட என்பதை அவரது பதிவுகள் புலப்படுத்தும். தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப டிஜிடல் வடிவம் அனைத்திலும் தனது படைப்புகளை நகர்த்தி தன்னை மேம்படுத்திக் கொண்டே வருகிறார். தற்போதைய ட்ரெண்டான கிண்டிலுக்குள் நுழைந்து கலக்கிக் கொண்டிருக்கிறார். அவரது 5 முதலாளிகளின் கதை நேற்று கிண்டிலில் தரவிறக்கம் செய்து படித்தேன். திருப்பூர் ஏராளமான அன்னியச் செலாவணியை ஈட்டித் தந்தாலும் ஒரு முறைக்குள் கட்டுப்படாத தொழில் நகரமாகவே விளங்குவதாகவே அதனை விவரிக்கிறார். வசதிக்குறைபாடுகள் இருப்பினும் அதனைப் பொருட்படுத்தாத திருப்பூரின் வளர்ச்சியை ஆச்சர்யத்துடன்தான் இன்னமும் பார்க்கிறார்.. முதல் தலைமுறை முதலாளிகளின் மனப்பான்மையை புட்டுப்புட்டு வைக்கிறார்.. அவர்களின் வளர்ச்சி வீழ்ச்சிக்கான காரணங்களை நேர்த்தியாக அலசுகிறார். தொழில் தர்மம்,நாணயம், தொழிலாளர் சட்டங்கள் இவற்றிற்கான மதிப்பின்மையும் ஆங்காங்கே எடுத்துவைக்கிறார். தொழில் வெற்றிக்கான சூத்திரம் என்று எதுவும் இல்லை என்று கூறும் ஜோதிஜி அதனை தக்க வைக்க நேர்மை நாணயம் அவசியம் என்பதை கடைசியாக ஒருமுதலாளியைக் உதாரணமாகக் காட்டி முடிக்கிறார். கிண்டில் போட்டிக்கான இந்நூல் நல்ல வேற்பைப் பெற்றுள்ளது என அறிய முடிகிறது.
முதலில் இலவசமாக இருந்தது. இப்போது 59 ரூபாய் செலுத்திப் படிக்க வேண்டும். படித்து முடித்ததும் ரெவ்யூ எழுதலாம் என்று பார்த்தால் You Sorry, you do not yet meet the minimum eligibility requirements to write a review on Amazon. For more information, please reference our Community Guidelines. என்று கூறி விட்டது
அமேசான் ரெவியூ எழுத அனுமதிக்க வில்லை. இவ்வளவு அமேசானில் 1500 மதிப்பிற்கான ட்ரான்சாக்ஷன் செய்திருக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்துள்ளது. எப்படியோ வேறொரு அக்கவுண்ட் மூலம் ரெவ்யூ எழுதிவிட்டேன்.வாழ்த்துகள் ஜோதிஜி .
https://www.amazon.in/dp/B07ZXJQH4T/ref=cm_sw_r_tw_dp_U_x_LEf9Db1K9EZN0?fbclid=IwAR188mZ9fA7eAETmjV8NVF9J8VLuQhFI0HBKiv5pdXnGVKoLEO-s0ssGHLI-
ஆகா,
பதிலளிநீக்குநீண்ட காலத்திற்குப் பிறகு தங்கள் பதிவைப் பார்த்ததில் மகிழ்ச்சி
அருமை...
பதிலளிநீக்குநெடுநாள் கண்டபின், கண்டதில் மகிழ்ச்சி. ஜோதியின் நூல் விமர்சனங்கள் தொடர்பாக அமேசான் தளத்தில் சென்று பதிய முயற்சித்தபோது You Sorry, you do not yet meet the minimum eligibility requirements to write a review on Amazon. For more information, please reference our Community Guidelines. என்றவாறு வந்தது. ஒரு மாதத்திற்கும் மேலாக விக்கிபீடியா போட்டிகளில் கவனம் செலுத்துவதால் சில பணிகள் தள்ளிப்போகின்றன.
பதிலளிநீக்குஜோதிஜியை நாம் அறிவோம். ஆகவே விமர்சனங்களை எதிர்நோக்காமல் ஒரு புத்தகத்திற்கு ஆர்டர் கொடுக்க உள்ளேன்.
பதிலளிநீக்குநல்லது. நீண்ட நாட்களுக்குப் பிறகு உங்கள் வலைத்தளத்தில். தொடர்ந்து எழுதுங்கள். வலைத்தளத்தில் சந்திப்போம்.
பதிலளிநீக்குநமது வலைத்தளம் : சிகரம்
இலக்கியம் | அரசியல் | விளையாட்டு | பல்சுவை | வெள்ளித்திரை | தொழிநுட்பம் -அனைத்துத் தகவல்களையும் அழகு தமிழில் தாங்கி வரும் உங்கள் இணையத்தளம் - #சிகரம்
ஆஹா ... அட்டையே அமர்க்களமா இருக்குதே .... வாங்கி படிச்சுட வேண்டியதுதான் ... >> சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட் <<
பதிலளிநீக்கு