பொதுவாக மற்ற பதிவுகளுக்கு கிடைக்கும் ஹிட்ஸ்களின் எண்ணிக்கை யை விட எனது கவிதைகளுக்கான ஹிட்ஸ்கள் குறைவாகத் தான் இருக்கும் அதற்கு விதிவிலக்காக ஒரே ஒரு கவிதை அமைந்திருக்கிறது .
அதவும் 2013 செபடம்பர் 5 அன்று நான் "உண்மையான ஆசிரியர் இப்படித்தான் இருப்பாரோ என்ற கவிதையை பதிவிட்டேன். கவிதைகளுக்கு ஆயிரம் ஹிட்ஸ் கிடைப்பதே அரிதாக இருக்கும் நிலையில் இந்தக் கவிதை இன்று வரை 7312 முறை பார்க்கப் பட்டுள்ளது ஆச்சர்யம் அளிக்கிறது. அதுவும் கடந்த சில நாட்களாக ஆசிரியர் பற்றி தேடுவோர் கண்ணில் சிக்கி படிக்கப் படுவதாக tynt publishing tool இன் புள்ளி விவரம் தெரிவிக்கிறது கடந்த வாரத்தில் மட்டும் கிட்டத்தட்ட 2000 ஹிட்ஸ் கிடைத்துள்ளதோடு கிட்டத் தட்ட 90 முறைக்கு மேல் இதன் டெக்ஸ்ட் காப்பி செய்யப் பட்டதாகவும் தெரிவிக்கிறது. ஒரு பழைய பதிவு இத்தனை முறை பார்க்கப்படுவது ஆச்சர்யம் அளிக்கிறது. புதிய பதிவுகளை பின்தள்ளி முன் நிற்பதற்குக் காரணம் ஆசிரியர்கள்தான் என்பதில் ஐயமில்லை.
இக்கவிதையை செல்போனில் நானே வாசித்து ஆடியோவாக பதிவு செய்து படக் காட்சி உருவாக்கி ஆடியோ இணைத்து யூ ட்யூபிலும் வெளியிட்டுள்ளேன். குறைவான தரமுடைய வீடியோ என்ற போதிலும் அதனையும் 4,479 பேர் பார்த்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.
பலமணி நேரம் போதித்து தூக்கத்தை வரவழைப்பவர் அல்ல ஆசிரியர்
சில மணித்துளிகள் பேசினாலும் தாக்கத்தை ஏற்படுத்துபவர்தான் உண்மையான ஆசிரியர்
தனது அறிவால் கற்பிப்பவரை விட நடத்தையால் கற்பிப்பவரே சிறந்த ஆசிரியர்.
காலம் கடந்தும் மாணவர் மனதில் நிலைத்திருப்பவரே உன்னத ஆசிரியர்.
ஆசிரியப் பணியை உண்மையான ஈடுபாட்டோடு செய்துகொண்டிருக்கும் ஆசிரியர்களும் செய்த ஆசிரியர்களுக்கும் மனமார்ந்த ஆசிரியர் தின வாழ்த்துகள். ஏற்றிய ஏணியை எப்போதும் நினைத்துப்பார்ப்போருக்கும் வாழ்த்துகள்
இரண்டு நாட்களுக்கு முன்னர் விகடன்.காம் இல் வாசகர் பக்கத்தில் எனது (கு)லுங்கி அழுது கேட்கிறேன் என்னை ஏன் கைவிட்டீர்? என்ற பதிவு வெளியாகி இருக்கிறது .புகைப்படத்துடன் வெளியிட்ட விகடனுக்கு நன்றி
விகடனில் படிக்க
http://www.vikatan.com/news/article.php?aid=51914
(கு)லுங்கி அழுது கேட்கிறேன் "ஏன் என்னை கைவிட்டீர்?"
என்வலைப்பதிவில் படிக்க
(கு)லுங்கி அழுது கேட்கிறேன் "ஏன் என்னை கைவிட்டீர்?"
"என்னை ஏன் கைவிட்டீர் என்ற தலைப்புக்கு சற்று பயந்தேன் ,.யாரும் தவறாக எடுத்துக் கொண்டுவிடக் கூடாது என்ற அச்சம் இருந்தது.நல்ல வேளை யாரும் அதனை கண்டு கொள்ளவில்லை. நகைச்சுவையாக எடுத்துக் கொண்டமைக்கு நன்றி


