குட்டிப் புலம்பல்
பிடுங்குவதற்காகவே ஏகப்பட்ட ஆணிகள் அடிக்கப்பட்டதால் வலைப்பக்கம் கடந்த இரண்டு மாதங்களாக சரியாக வர இயலவில்லை. இக்காலத்தில் தமிழ் வலையுலகம் மிகவும் மகிழ்ச்சியுடன் இருந்ததாக தகவல் கிடைக்க நெஞ்சு பொறுக்கமுடியாமல் மீண்டும் வந்து விட்டேன் .
எந்த நேரத்தில் நான் ரொம்ப நல்லவன் என்ற பதிவை எழுதினேனோ தெரியவில்லை. பணியில் சில மாற்றங்கள்.அருகில் இருந்தும் அரை அடி சுவற்றுக்கு அப்பால் எனக்கு அதிர்ச்சி அளிக்கப் போகும் செய்தி தயாராவதை அறியாதவனாக இருந்தேன்.யாருக்கோ நன்மை செய்ய பாதிப்பு எனக்கு. நல்லவனாய் எப்போதும் இருத்தல் நல்லதல்ல என்பதை இது உணர்த்தினாலும் வேறு வழியில்லை. கொஞ்சம் சீறி இருக்கவேண்டும். ஆனால் முடியவில்லை. மறுப்பு சொல்லாமல் எதையும் செய்வது நமக்கே எதிராக அமைந்து விடுகிறது. முகஸ்துதிகளும் சமாதானங்களும் என் வாயை அடைத்து வைத்திருந்ததது என்ன செய்வது?
எது நடக்கக் கூடாது என்று நினைத்தேனோ அது நன்றாகவே நடந்தது.
சரி விட்டுத் தள்ளுவோம்!
******************************************************************************
சூப்பர் சிங்கர் ஜூனியர் 3
ஹீ மேன்! I am the master of the universe என்று கத்தியபடி கற்பனையில் மிதந்து கொண்டே கேட்டை திறப்பான் முகத்தில் குறும்பு கொப்பளிக்கும் அந்த சிறுவன். அவன் அம்மா தலையில் தட்டி அண்ணாச்சி கடைக்கு கால் கிலோ கருப்பு புளி மஞ்சத்தூள்வாங்கிட்டு வா என்று பை கொடுத்து அனுப்புவார். அவனும் போகும்போது
"கால் கிலோ கருப்பு புளி மன்சாத் தூளுடா! கால் கிலோ கருப்பு புளி மஞ்சாத் தூளுடா! என்று பாடிக் கொண்டே கடைக்காரரிடம் கேட்க என்ன டா வா என்பது போல் பார்க்க டாவுக்கு பதிலாக அண்ணா என்று சொல்லி விடு
" கால் கிலோ கருப்பு புளி மஞ்சாத் தூளுணா" என்று பாடுவான் பொருட்கள் வாங்கிக் கொண்டதும் மீண்டும் டா போட்டு பாட ஹேய் என்று விரட்டுவார். இப்படிப் பட்ட பசங்க உங்க வீட்டில இருந்தா இங்க அனுப்பி விடுங்க என்று சூப்பர் சிங்கர் ஜூனியர் 3 க்கு விஜய் டிவியில் ஒரு விளம்பரம் பார்த்திருப்பீர்கள். என்ன ஒரு ரசனையான விளம்பரம்.குழந்தைகள் மட்டுமல்ல நம்மையும் ஈர்த்து விடுகிறது விளம்பரம்.
விளம்பரத்தின் மூலம் மக்களைக் கவர்வது ஒரு கலை. நல்ல கற்பனை வளமும் படைப்பாற்றல் உள்ளவர்களே நல்ல விளம்பரங்களை உருவாக்குகிறார்கள். அவ்விளம்பரங்கள் நம்மையும அறியாமல் நம் மனதில் இடம் பிடித்து விடுகின்றன அந்த தந்திரத்தில்தான் நாம் ஏமாந்தும் விடுகிறோம்.
இதோ அந்த விளம்பரம்
*********************************************************************************
நடிகையர் திலகம் சாவித்திரி
சிலருடைய முகங்களில் எப்போதும் ஒரு மென்சோகம் இழையோடிக் கொண்டிருக்கும். இதை நாம் அன்றாடம் சந்திக்கும் சிலரிடத்தும் காணமுடியும். தொலைக் காட்சியில் நடிகையர் திலகம் சாவித்ரியைப் பார்க்கும் போதேல்லாம் மகிழ்ச்சியாக (ஆடிப் பாடும் காட்சி என்றாலும்) அவர் முகத்தில் மோனோலிசா ஓவியத்தில் தெரிவது போல மெல்லிய சோகம் படர்ந்திருப்பதுபோல் எனக்கு தோன்றும். ( நடிகை சோனியா அகர்வாலின் முகமும் அப்படியே)
சமீபத்தில் காட்சிப்பிழை திரை என்ற இணைய இதழில் சாவித்திரி பற்றிய கட்டுரை ஒன்று படித்தேன். ராஜநாயகம் என்பவர் எழுதிய இக்கட்டுரை சாவித்ரியின் திரையுலக வாழ்க்கையை சுருக்கமாக உருக்கமாக எடுத்துரைக்கிறது.
சாவித்திரி தன் 16 வயதில் திருமணம் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருந்திருக்கிறார்.ஜெமினி தன்32 வயதில் மூன்றாவது மனைவியாக சாவித்ரியை திருமணம் செய்து கொண்டார். ஆனாலும் ரகசிய வாழ்க்கையே வாழ வேண்டி இருந்தாதாம். முதல் மனைவியான பாப்ஜி கண்டுகொள்ளாமல் இருந்தாலும் இன்னொரு மனைவி புஷ்பவல்லி (இவரைப் பற்றி இதுவரை கேள்விப்பட்டதில்லை) கடும் குரோதம் கொண்டதாக தெரிகிறது. சாவித்திரி மீது காரேற்றும் அளவுக்கு சென்றதாக சொல்லப் படுகிறது. இது எந்த அளவுக்கு உண்மையோ?
ஜெமினி சாவித்திரி திருமணம் 4 ஆண்டுகள் வரை ரகசியமாகே இருந்ததாம். இந்த நெருக்கடியான காலக் கட்டத்திலும் நடிப்புத் திறன் இம்மியளவும் குறையவில்லை; பிரமிக்கிற வைக்கிற நேர்த்தியான நடிப்பு என்று ஸ்லாகித்துக் கொண்டு போகும் இந்த கட்டுரையைப் படிக்கும்போது இரக்கமும் பரிதாபமும் கலந்த உணர்வு ஏற்படுவதை தடுக்க முடியவில்லை .புகழ் பெற்ற நடிகைகள் பலரின் வாழ்க்கை இப்படி பரிதாபமாக இருப்பது இன்று வரை தொடர்வது வேதனைதான். சாவித்ரியின் வளர்ச்சிக்கும் வீழ்ச்சிக்கும் அவரும் ஒரு காரணம் என்ற போதிலும் ஏனோ ஜெமினி கணேசன் மீது எரிச்சலும் கோபமும் ஏற்பட்டது.
தொடர்ந்து முழுமையாகப் படிக்க விரும்புவர்கள் இந்த இணைப்பிற்கு செல்லலாம்
நடிகையர் திலகம் சாவித்திரி
நன்றி: காட்சிப்பிழை
*********************************************************************************
வெட்டி வேலை
என் பேரில் எத்தனை பேர் இணையத்தில இருக்கிறார்கள் என்று தெரிந்து கொள்வதற்காக கூகுள் பண்ணிப் பார்த்ததில் ஏகப்பட்ட முரளிதரன்கள் கணினித் திரையில் காட்சி தந்து என் தலையில் குட்டிவிட்டு சென்றார்கள் . அவர்களில் ட்விட்டரில் கலக்கிக் கொண்டிருக்கும் ஒரு முரளிதரன் இந்த முரளிதரனை கவர்ந்துவிட்டார். தன்னை இளையராஜாவின் இசை வெறியன் என்று சொல்லிக் கொள்ளும் அந்த முரளிதரனுடைய டுவீட் பக்கத்தில் 9000 மேற்பட்ட டிவீட்டுகள் கொட்டிக் கிடக்கிறது. இன்னமும் பேச்சிலர் சந்தோஷப் பட்டுக் கொள்ளும் (நியாயம்தானே?) இவரது டுவீட்டுகள் என்னை ஈர்த்தன. நாமும் டுவீட்டலாமோ என்ற ஆர்வத்தை ஏற்படுத்தி விட்டன. சுவாரசியமாக கீச்சுவது ஒரு கலை. முரளிதரனின் சில டுவீட்டுகளை பார்க்கலாம்
- ஜென்ட்ஸ் டாய்லெட்ல அணித்தா ஐ லவ் யூ ன்னு கிறுக்கி வைக்காறானுங்க. அனிதா ஏண்டா அங்க வரப் போறா?
- காதல் வாய்த்தவன் அதிர்ஷ்டசாலி.சாப்பிட்டதுக்கு பில்லு கட்டும் காதலி வாய்த்தவன் பாக்கியசாலி
- தயவுசெஞ்சு புகையிலை பொருட்கள் உபயோகப் படுத்தறதை நிறுத்தி தொலைங்கடா இந்த முகேஷ் தம்பி தொல்லை தாங்க முடியல
- கொலைசெஞ்ச பாடிய மறைச்சு வைக்க சரியான இடம் கூகுள் சர்ச் ரிசல்ட்ல ரெண்டாவது பக்கம்தான் யாரும் எட்டி பாக்க மாட்டாங்க
- உசுரைவிட மசுருதான் பெருசுன்னு நினைக்கறவந்தான் ஹெல்மட் போடாம போறான்
- அமெரிக்கா கூட போட்டி போடறதை வலது பக்கம் வண்டி ஒட்டித்தான் நம்மாளுங்க நிருபிக்கறாங்க
- பேச்சிலர் அவஸ்தைகள்: துவைக்க தேவைப்படாத துணி எங்க கிடைக்கும்?
- மனிதனால சையனைட் விஷத்தைக் கூட சாப்பிட முடியும் ஆனா ஒரு தடவைதான்.
- தூங்குவதற்கு முன்னாடி தூங்கப் போறேன்னு சொல்லலாம். எழுந்திருக்கிறதுக்கு முன்னாடி முழிக்கப் போறேன்னு சொல்ல முடியுமா?
- கூட்டினாலும் பெருக்கினாலும் ஒண்ணேதான் வருது-குப்பை
எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க!
நன்றி: முரளிதரன் இணைப்பு :https://twitter.com/thoppi_az
***************************************************
பொருட் பிழையா?
மேலே உள்ள படத்தில் தினமணியில் வெளியான செய்தித் தலைப்பை படித்துப் பாருங்கள். உண்மையில் அந்த வாக்கியம் சரிதானா என்ற ஐயம் எனக்கு ஏற்படுகிறது.
மனைவியோடு சேர்ந்து நண்பர்களையும் கொன்றுவிட்டு நாடகமாடிய கணவன் என்று பொருள்படுவது போன்றும் எனக்கு தோன்றுகிறது. "நண்பர்களுடன் சேர்ந்து கொண்டு மனைவியைக் கொன்று நாடகமாடிய கணவன்" என்று இருப்பது பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன். தமிழாசிரியர்களும், புலமை உள்ளவர்களும் இன்னமும் தெளிவாக சொல்லமுடியும் தினமலர் பத்திரிகையிலும் இது போன்ற சொற்றொடர் பிழைகளை பார்த்திருக்கிறேன். இவற்றை சரிபார்க்க தமிழ் படித்தவர்களை வேலைக்கு வைத்துக் கொண்டால் என்ன?
உங்கள் கருத்து என்ன?
மனதை தொட்ட கவிதை
அறியா மந்திரம்
புயலைப் போல
மேல் மூச்சு வாங்கி
புகை நுகர்ந்து செவி கிழிக்கும்
பம்பை சத்தம் சூழ
கற்பூர சுவாலையை நாவுக்குள் அடக்கி
பரிதாப மொழியால் சப்தித்து
ஆக்ரோஷமாய் காட்சி அளித்து
சுத்துபட்ட எட்டு கிராம சனங்களும்
கன்னம் தொட்டு சேவித்து நிற்க
ஊருக்கெல்லாம் குறி சொல்லும்
கோடி வீட்டு சாமிக்கு
ஏனோ தெரியவில்லை
போலியோவால் முடங்கிய
தன் மகளின் கால்களை
சரி பண்ணும் வித்தை மட்டும்
*****************************
கொசுறு : 1. இதை எழுதியவர் லட்சுமணன் என்பவர்
2. இக்கவிதை வீடு திரும்பல் என்ற கவிதைத்
தொகுப்பில் இடம் பெற்றுள்ளது
3. இப்போது இவர் உயிருடன் இல்லை
4. ஹீமோ பீலியாவால் 25 வயதிலேயே மரணமுற்ற
லட்சுமனன் பிரபல பதிவர் மோகன் குமாரின் நெருங்கிய
நண்பர்
5. லட்சுமணனின் நினைவாகவே தனது வலைப்பூவிற்கு
வீடு திரும்பல் என்று பெயர் வைத்ததோடு
ஒவ்வோராண்டும் நற்பணிகளை செய்து வருகிறார்
6. இக் கவிதை சுஜதாவின் பாராட்டையும் பெற்றிருக்கிறது
********************************************************************************
வலைப்பக்கம் வரவிடாத சோகம் முதலில் என்றால் முடிவிலும் ..வீடு திரும்பல் என்பது காரணப் பெயர் அறிய அதுவும் சோகமே ..
பதிலளிநீக்குதினமணியில் இப்படி செய்தி வருவதே அபூர்வம் ,வந்தாலும் இப்படி தவறுகளா ?
முரளிதரன் என்றாலே ரசிக்கும்படியாகத்தான் எழுதுவார்கள் போலிருக்கே !
த ம ௧1
தினமணியின் செய்தி பிழைதான். மக்கள் தொலைக்காட்சியில் பேராசிரியர் நன்னன் ஊடகங்களின் இது போன்ற தவறுகளைத்தான் கண்டுபிடித்துச் சொல்லிச் சொல்லித் தலையில் குட்டிக் கொண்டிருந்தார்.
பதிலளிநீக்குகுட்டிப் புலம்பல் சிறிது வருத்தமாக இருந்தாலும், ஒரு முன்னேற்றம் வெகு அருகில் உள்ளது என்பதை மட்டும் நம்புங்கள்...
பதிலளிநீக்குநடிகையர் திலகம் முடிவு வேதனை தான்...
தினமணி வாசகம் தவறு தான்...
கொசுறு தகவல் அறியாதவை... வருத்தமான தகவலும்...
அறியாமந்திரம் என்ற கவிதை சூப்பர்.
பதிலளிநீக்குமுரளி,
பதிலளிநீக்குவாங்க,ஆணி அதிகமாயிடுச்சேனு கவலைப்படாதிங்க, ஆனி(ணி) போய் ஆவணி வந்தா டாப்பா வருவீங்க :-))
# ஹி...ஹி நீங்களும் உங்கப்பேரை போட்டு தேடிப்பார்த்துட்டிங்களா? நான் அடிக்கடி வவ்வால்னு யாராவது போட்டிக்கு கிளம்பிட்டாங்களானு கூகிளில் தேடிப்பார்ப்பதுண்டு அவ்வ்!
#//"நண்பர்களுடன் சேர்ந்து கொண்டு மனைவியைக் கொன்று நாடகமாடிய கணவன்" //
இப்படி எழுதி இருக்கலாம் ,ஆனால் அது செய்தித்தாள்களின் தலைப்புக்கான "இலக்கணத்தில்" வரலை . எப்பவுமே செய்தித்தாள்களின் தலைப்பில் "எதுக்கு அழுத்தம் கொடுக்கணுமோ" அதை முன்னிறுத்துவாங்க, ஆனால் இந்த கலையில் " நிறுத்தக்குறிகளை சரியாப்பயன்ப்படுத்தி அமைக்கலைனா, தினமணி போல சொதப்பிக்கும்.
செய்தி தலைப்பு என்பது சொல்ல வரும் செய்தியை பளிச்சுனு சொல்லணும், மேலும் பகீர்னு கவனத்தை ஈர்க்கணும், இப்படி செய்வதில் "தினத்தந்தி" தான் இன்னும் மாஸ்டர் :-))
மணமான 2 மாதத்தில் இளம் மனைவி கொடூரக்கொலை: நண்பர்களுடன் கணவன் பயங்கர சதி அம்பலம்!
என அபாரமாக இத்தலைப்பினை தினத்தந்தி வைத்து "எதிர்ப்பார்த்த இம்பேக்டை" கொடுத்திருக்கும் :-))
முரளி,
பதிலளிநீக்குவாங்க,ஆணி அதிகமாயிடுச்சேனு கவலைப்படாதிங்க, ஆனி(ணி) போய் ஆவணி வந்தா டாப்பா வருவீங்க :-))
# ஹி...ஹி நீங்களும் உங்கப்பேரை போட்டு தேடிப்பார்த்துட்டிங்களா? நான் அடிக்கடி வவ்வால்னு யாராவது போட்டிக்கு கிளம்பிட்டாங்களானு கூகிளில் தேடிப்பார்ப்பதுண்டு அவ்வ்!
#//"நண்பர்களுடன் சேர்ந்து கொண்டு மனைவியைக் கொன்று நாடகமாடிய கணவன்" //
இப்படி எழுதி இருக்கலாம் ,ஆனால் அது செய்தித்தாள்களின் தலைப்புக்கான "இலக்கணத்தில்" வரலை . எப்பவுமே செய்தித்தாள்களின் தலைப்பில் "எதுக்கு அழுத்தம் கொடுக்கணுமோ" அதை முன்னிறுத்துவாங்க, ஆனால் இந்த கலையில் " நிறுத்தக்குறிகளை சரியாப்பயன்ப்படுத்தி அமைக்கலைனா, தினமணி போல சொதப்பிக்கும்.
செய்தி தலைப்பு என்பது சொல்ல வரும் செய்தியை பளிச்சுனு சொல்லணும், மேலும் பகீர்னு கவனத்தை ஈர்க்கணும், இப்படி செய்வதில் "தினத்தந்தி" தான் இன்னும் மாஸ்டர் :-))
மணமான 2 மாதத்தில் இளம் மனைவி கொடூரக்கொலை: நண்பர்களுடன் கணவன் பயங்கர சதி அம்பலம்!
என அபாரமாக இத்தலைப்பினை தினத்தந்தி வைத்து "எதிர்ப்பார்த்த இம்பேக்டை" கொடுத்திருக்கும் :-))
டேய் மயிறு என்னோட கமெண்ட் எங்கடா
பதிலளிநீக்குரொம்ப மகிழ்ச்சி நண்பரே! பதிவு பத்தி விமர்சனம் பண்ணி உங்க கருத்தை நாகரீக மாக சொல்லுங்க. இன்னொருத்தரை தரக் குறைவா பதிய வேண்டாம்னுதான் உங்க கம்மென்ட்டை நீக்கினேன்,
நீக்குமுரளி,
நீக்குஉங்களை யாரோ ரொம்ப நல்லவர்னு சொல்லிட்டாங்கனு இப்படியா ரொம்ம்ப நல்லவரா இருப்பது அவ்வ்!
அந்த அனானி முண்டக்கலப்பைய அல்லையில மிதிக்க கூட வேண்டாம், அதுக்குனுடைப்பிடியா அவ்வ்!
# இந்த மாரி ஆளுங்க எல்லாம் உங்கள மாரி ஆளுங்க கிட்டே தான் வீர வசனமே பேசிட்டு வருவானுங்க , மத்த இடத்தில வாயே தொறக்க மாட்டானுங்க, தொறந்தா வாயில குத்திடுவாங்கனு தெரியும்ல :-))
#அனானி ராசாவ நம்ம பக்கமா வரச்சொல்லுங்க , "கவனிச்சு" அனுப்பிடலாம் ,ஏதோ என்னால ஆன சின்ன உதவி :-))
முண்டகலப்பை... எத்தனை வருசமாச்சு இந்த வார்த்தையைக் கேட்டு!
நீக்குஅனானிக்கு நன்றி (?).
வந்திருச்சு கமெண்ட்
பதிலளிநீக்குபெயரிலாப் பெருந்தகையே! ஏனிந்த வன்மம்? காரணம் தெரிந்தால் நல்லது
நீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குதலைப்பை தவறாகப் போட்டாலும் புரிந்து கொள்ளலாம், சில அறிவியல் கட்டுரைகளில் சொல்ல வந்த விஷயத்தையே மாத்தி மாத்தி போட்டிருப்பார்கள். .ஒருமுறை வியாழன் போல பல மடங்கு எடையுள்ள புதிய கிரகம் சூரிய குடும்பத்தில் கண்டுபிடிப்புன்னு போட்டிருந்தாங்க. அதை நம்ப முடியவில்லை. ஏனெனில் அப்படி இருந்திருந்தால் அது இத்தனை வருடங்களாக கண்டுபிடிக்காமல் விட்டிருக்க வாய்ப்பேயில்லை. பின்னர் தேடித் பார்த்ததில் அது தொலைவில் உள்ள வேறு நட்சத்திரத்திலுள்ள கோள் வந்தது. இது போன்ற தவறுகளைச் சுட்டிக் கட்டினாலும் அதை அவர்கள் பிரசுரிப்பதில்லை.
பதிலளிநீக்கு//விஷயத்தையே மாத்தி மாத்தி போட்டிருப்பார்கள். //
நீக்குஆமாம்மாம், விலங்குகளுக்கு சொர்க்கம்,நரகமே இல்லைனு சொல்லுவாங்க, அப்புறம் எப்படி நாராயணன் 'கஜேந்திர மோட்சம்" கொடுத்தார்னு கேட்டால் ஓடிருவாங்க :-))
எல்லாருமே திருடனுங்க தான்!
முரளி,
நீக்குநீங்க டீசண்டானவர். உங்க பிளாக்கில் வந்து சாக்கடையில் கல்லைத் தூக்கிப் போட இஷ்டமில்லை.
விண்ணில் நிறைய சூரியக் குடும்பங்கள் உண்டே jayadeva das?
நீக்குநீங்கள் சொல்வது உண்மைதான். ஆனால் அவர்கள் நமது சூரிய குடும்பத்திலேயே இருப்பதாக போட்டிருந்தார்கள். அந்தச் செய்தி குறித்து பதிவும் போட்டிருக்கிறேன், அதை நீங்களே படித்துப் பாருங்கள் புரியும்.
நீக்குhttp://jayadevdas.blogspot.com/2012/11/blog-post_5120.html
வீடு திரும்பல் மூடுமந்திரம் அறியும் போது சோகம் அதிகம் கடந்து வாங்கோ!
பதிலளிநீக்குவிஜய் டிவியில விளம்பரம் மக்களை மிக கவர்வதாக இருக்கும் எந்த சிரியலையும் ஆரம்பிக்கும் போதும் மிக இன்ரெஸ்டிங்காக இருக்கும் ஆனால் போகப் போகப் அதை நன்றாக சுதப்பி விடுவார்கள்
பதிலளிநீக்குவிஜய் தீவியின் அந்த விளம்பரம் பார்த்து பார்த்து புளித்து விட்டது, முதல் சீசனில் தொடங்கியது போலும் இன்னும் அதே மாவை அரைக்கின்றனர். புதிய விளம்பரங்களை முயற்சிக்கலாமே, அதனால் விளம்பர கம்பெனி நடத்தும் சிலருக்காவது வேலைக் கிடைக்கும்.
பதிலளிநீக்குசாவித்திரி அழகிய திறமையுள்ள நடிகை. எல்லா அழகான திறமையுள்ள பெண்கள் போலவே இவரும் தவறான வாழ்க்கைத்துணையை தேர்ந்தெடுத்ததன் மூலம் வாழ்வை இழந்தவர். இவரும் ஜெமினியும் தனுஷ்கோடி போன சமயத்தில் அங்கு புயல் தாக்கிவிடவே சில நாள் அங்கேயே தங்கிவிடும் சூழல் ஏற்பட்டதாம், அந்த நிலையில் அவரை மணந்தும் கொண்டார் என வாசித்த ஞாபகம்.
தமிழ்க் கொலை பற்றி சொல்லவே வேண்டாம். தமிழின் முன்னணி பத்திரிக்கைகள், இதழ்கள் அனைத்தும் நன்றாகவே தமிழை கற்பழித்து கொன்று வீசி வருகின்றன. சமயங்களில் என்ன சொல்ல வருகின்றார்கள் என்பதே புரியாமல் போய்விடுவதால், அதன் மூல செய்திகளை ஆங்கிலத்தில் போய் வாசிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதில் பாரம்பரியம் மிக்க ஆனந்த விகடன், முதல் புதிதாக வந்த தி இந்து வரை ஒரே எழவு தான்.
அதுவும் போக தமிழ் விளம்பரங்கள் இருக்கே தீவிக்களில், கொடுமை பலதும் ஜூனுன் தமிழ் தான் பேசுதுகள். இவற்றை எல்லாம் கட்டுப்படுத்த ஒழுங்குபடுத்த எந்த தமிழ் போராளிகளும் கத்தி கபடாக்களை எடுத்ததாக ஞாபகம் இல்லை.
எல்லோரும் சிரத்தையோடு குலுக்கி கொண்டிருக்கின்றார்கள். ஐய ! உண்டியலைச் சொன்னேனாக்கும். அவ்வ்வ்.
அந்த வெயம்பரம் சோக்கா இர்க்கும்பா...!
பதிலளிநீக்குஅல்லாம் போட்டாச்சு... போட்டாச்சு...!
பல நாட்களுக்குப் பிறகு பெட்டிகடையை திறந்திருக்கிறீர்கள். இருப்பினும் அனைத்தும் ருசிக்கும்படி இருந்தது.
பதிலளிநீக்கு//இன்னொரு மனைவி புஷ்பவல்லி (இவரைப் பற்றி இதுவரை கேள்விப்பட்டதில்லை)//
இவர்தான் இந்தி நடிகை ரேகா வின் தாயார்.
///எது நடக்கக் கூடாது என்று நினைத்தேனோ அது நன்றாகவே நடந்தது.////
பதிலளிநீக்குதங்களின் வருத்தம் புரிகிறது ஐயா. இன்றைய உலகம் இப்பாதையில்தர்ன் பயணித்துக் கொண்டிருக்கிறது.
ஏர்டெல் விளம்பரம் அருமை ஐயா.
தினமணி செய்தியின் தலைப்பு தவறுதான்.
உலகின் முதல் மொழி என்று நாமெல்லாம் பெருமைப் படுகின்ற தமிழ் மொழியின் இன்றைய நிலையை நினைத்தால் வருத்தம்தான் மேலிடுகிறது.
யாதும் ஊரே யாவரும் கேளிர்
என உலகத்தினர் அனைவரையும் உறவினர்களாகப் பார்த்த தமிழன் கரைந்து காணாமல போய்கொண்டே இருக்கிறான். நமது கல்வி முறை அப்படி ஐயா.
மேடையேறி தமிழ் மொழியிலே, எதுகைமோனையுடன் பேசி கைத் தட்டு வாங்குகிறார்கள் , ஆனால், தமிழை ஒரு மொழியாகப் படிக்காமலேயே கல்லூரிப் படிப்பு வரை படிக்க இயலுகிறதே, நம் தமிழகத்தில்.
இந்தியாவின் வேறு எந்த மாநிலத்திலாவது, அவர்கள் தாய் மொழியினை ஒரு பாடமாக படிக்காமல் படிக்க முடியுமா, தமிழகத்தில் மட்டும் ஏன் இந்த இழி நிலை?
ட்வீட்ஸ் அருமை!! காணொளியில் அந்த சிறுவனின் நடிப்பு பிரமாதம்! பகிர்வுக்கு நன்றி..
பதிலளிநீக்குபெட்டிக்கடை.... சிறப்பாக இருந்தது....
பதிலளிநீக்குஅனைத்தும் சிறப்பே காணொளி அருமை! அந்த விளம்பரம் மறக்கவே முடியாதது. மறுபடியும் எழுதுவதற்கு வாழ்த்துக்கள்....!
பதிலளிநீக்குநல்ல பெட்டி .
பதிலளிநீக்குஅனைத்துப் பகுதிகளும்( பின்னூட்டங்கள் உட்பட) ரசித்தேன் வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குரொம்ப நாளாக ஆளைக் காணவில்லையே என்று யோசித்தேன்! மீண்டு(ம்) வந்தததிற்கு முதலில் வாழ்த்துக்கள். வீடுதிரும்பல் கவிதையை மோகன் குமாரின் தளத்தில் வாசித்ததாக நினைவு. விளம்பரம் அருமை, சாவித்திரி- சோனியா ஒப்பீடு சிறப்பு. முரளிதரனின் கீச்சுக்கள் ரசிக்க வைத்தன. நன்றி!
பதிலளிநீக்கு1. அனானி என்ற வசதியை எடுத்து விடுங்க. வருகின்றவர்கள் ஒரு அடையாளத்தோடு வருவது அவர்கள் கடமை என்பதை நாம் உணர வைக்க வேண்டும்.
பதிலளிநீக்கு2. காட்சிப்பிழை சாவித்திரி குறித்து இணைப்பு வேலை செய்ய வில்லை.
3. முதலில் குறிப்பிட்ட உங்கள் தனிப்பட்ட விசயங்களினால் உருவான தாக்கத்தை தனியாக எழுதியிருக்கலாமே?
ஒன்றிரண்டு முறை தவிர அனானிகள் தொல்லை அதிகம் வந்ததில்லை. அதனால் நீக்காமல் வைத்திருந்தேன்.இப்போது நீக்கிவிட்டேன்
நீக்கு2.நேற்றுபதிவிடும்போது வேலை செய்தது . தளம் நேரடியாகவும் திறக்கவில்லை. அந்த தளத்தில் திடீர் தொழில் நுட்ப சிக்கல் ஏதேனும் இருக்கலாம் என்று நினைக்கிறேன். சிறிது நேரம் கழித்து முயற்சித்துப் பார்க்கிறேன்.
3. பணி சார்ந்து இருப்பதால் விரிவாக எழுதுவது உசிதமல்ல என்ற உடன் பணியாற்றுபவர் சொன்ன காரணத்தால் கோடிட்டுக் காட்டிவிட்டு நிறுத்திவிட்டேன்.
தக்க சூழல் வாய்க்கும்போது நிச்சயம் எழுதுவேன்.
கருத்துக்கு நன்றி
அனானிகளை கருத்துச் சொல்லவிடாமல் இருக்கதுதான் நல்லதுங்க, முரளி. உங்களை மாதிரி வம்புக்குப் போகாதவர்களிடமே வந்து வம்பு பண்ணுறானுக பாருங்க. இதில் வேடிக்கை என்னனா அனானியா பல பெரிய மனுஷனுககூட திரிகிறார்கள். ஏதாவது ஏடாகூடமா அல்லது எதிர் கருத்து அல்லது அநாகரிகக் கருத்துச் சொல்லணும்னா தன் கருத்துச் 'அனானி" முகமூடி மாட்டிட்டு வந்திருவாணுக! நாகரிகமா தன் ஒரிஜினல் ஐ டில கருத்தைச் சொல்லுவாணுக. "அனானி" வசதியை எடுத்துவிட்டால் என்ன பண்ணுவாணுகனா ஏதாவது "சூனா" "புதிய கோடாங்கி" னு ஏதாவது ஒரு ஐ டி யை இதுக்குனே வச்சுட்டு வந்து "இதுமாரி அனானியா" வந்து வீர வசனம் பேசிட்டுத் திரிவாணுக. இவனுகளே வேற ஐ டி ஒண்ணுல ஒரு "தரமான" ப்ளாகரா நடிச்சுக்கிட்டு இருப்பாணுக. இதெல்லாம் பதிவுலக "வேசித்தனம்"னு சொல்லுவேன் நான். இவனுகளும் தமிழர்கள்தான். சில ஈனத்தமிழர்களும் நம்முடனே இருந்துகொண்டு நம்முடனே கலந்து வாழ்ந்துக்கிட்டுத்தான் இருக்காணுக, என்ன பண்ணுறது?
நீக்குGood to see you, Maruli, after short break! :)
பதிலளிநீக்குபெட்டிக்கடை அலசலை வரவேற்கிறேன்.
சிறந்த பகிர்வு
சுவாரஸ்யமான தகவல்களுடன்
பதிலளிநீக்குபெட்டிக்கடை சரக்குகள் அருமை
ஓடுகிற வெள்ளத்தில் முன்னேறமுடியாவிட்ட்டாலும்
இருக்கிற இடத்தில் இருக்கவாவது \
வேகமாக நீந்த வேண்டி இருக்கிறது
இது நல்லவர்களுக்கான காலமில்லை
வல்லவர்களுக்கான காலம்
tha.ma 14
பதிலளிநீக்குபெட்டிக் கடை! வெகு கெட்டிக்கடை!
பதிலளிநீக்குஆனால் முடியவில்லை. மறுப்பு சொல்லாமல் எதையும் செய்வது நமக்கே எதிராக அமைந்து விடுகிறது. //
பதிலளிநீக்குஆங்கிலத்தில் you should know how to say NO என்பார்கள். அதை diplomaticகாக சொல்ல முடியாதவர்களுக்கெல்லாம் சிக்கல்தான்.
மிக சரியாக சொன்னீர்கள் ஜிசப் சார்
நீக்குஅய்யா, என் கணினி உலக அனுபவம், மற்றும் அறிவு பற்றி உங்களைவிட யாருக்கும் அதிகம் தெரிய வாய்ப்பில்லை. உங்களின் இந்த பதிவிலிருந்து கற்றுக்கொண்டது, மனிதர்கள்தான் தேவையின்றி முகமற்று, வெட்கமற்று, மற்றவர்களை தாக்க முற்படுகிறார்கள். மற்றவர்களை காயப்படுதுவதில் மனிதரை தவிர யாரும் மகிழ்வதில்லை. தங்களை காயப்படுத்துவதன் மூலம் அவர் தன்னைத்தானே சிறுமை படுத்த முயல்கிறார். அப்படியாவது அவர் மனம் குளிர நீங்கள் உபயோகப்பட்டிருக்கிறீர்கள். என மகிழ்வோம். நான் படித்ததில் பதிந்துவிட்ட ஒன்றை சொல்கிறேன்.
பதிலளிநீக்கு"உன் கவலைகளை மற்றவறிடத்தில் சொல்லாதே,
பாதி பேருக்கு!
அது சந்தோஷம்.
மற்றவர்களுக்கு?
அதில் அக்கறை இல்லை.
மற்றபடி உங்கள் (அ)லுவல் (அ) அக கவலைகள் நிச்சயம் மாறும்...
பெட்டிக்கடைச் சரக்கு அத்தனையும் அருமை அய்யா. அதனால்தான் உடனுக்குடன் விற்று முதலிடத்தில் நிற்கிறது. தினமணி பரவாயில்லை, மற்றவற்றைத் தினமணியுடன் ஒப்பிட முடியாத அளவிற்குத் தமிழ்க்கொலையெல்லாம் நடக்கிறது. இதற்கென்று ஒரு துறை (தமிழ்வளர்ச்சித் துறை) இருக்கிறது, அதற்கு இவற்றையும் பார்க்கும் பணியை -வேறு நோக்கில் அல்லாமல் -அரசு ஒதுக்க வேண்டும். அண்மையில் கூட “சுடப்பட்ட மாவோயிஸ்டின் மனைவி கைது” என... சுடப்பட்டது மாவோயிஸ்டா மனைவியா என்னும் குழப்பம் வருகிறதா இல்லையா?
பதிலளிநீக்குஉங்களின் குட்டிப்புலம்பல் எனக்கும் பொருந்தும் முரளி அய்யா. அடுத்த மாதம் ஓய்வு பெறவுள்ள என்மேல் மொட்டைக் கடிதாசி போட்ட புண்ணியவான்கள் எங்கள் ஊரிலும் இருக்கிறார்கள். உங்களைப் போலவே, எனக்கும் “நடந்தது நன்றாக நடக்கவில்லை” ஆனால், “தனக்கென முயலா நோன்தாள் பிறர்க்கென முயலுநர் உண்மையானே, உண்டால் அம்ம இவ்வுலகம்” (புறநானூறு ) சிலருக்கு வீடும் அலுவலகமுமே உலகம், நம் உலகம் பெரிது அய்யா - இது எங்கள் முதன்மைக் கல்வி அலுவலர் முனைவர் நா.அருள்முருகன் அய்யா எனக்குச் சொன்னது! நானும் உங்களுக்குச் சொல்கிறேன். உங்கள் பணி தொடர வேண்டும் தொடரட்டும் நன்றி.
பதிலளிநீக்கு