என்னை கவனிப்பவர்கள்

ஞாயிறு, 23 மார்ச், 2014

புஷ்பா மாமியின் புலம்பல்கள்-ஓட்டர் லிஸ்ட்ல பேர் இல்ல.சேர்க்க முடியுமா?

புஷ்பாமாமி கொஞ்ச நாளா காணோமே என்று நினைத்துக் கொண்டிருக்கும்போதே  வாசலில் புஷ்பாமாமி கூடவே அவர்கள் வீட்டில் குடித்தனம் இருக்கும் பெண்மணி

"முரளி! இவங்க எங்காத்துல குடித்தனம் இருக்கா .ஒட்டர் லிஸ்ட்ல சேக்கறதுக்காக அப்ளிகேஷன் குடுத்து இருந்தா. வந்துடுத்தான்னு போய் பாத்திருக்கா . பாத்தா எங்களோட பேரே இல்லன்னு சொல்றா. நான் போய் பாக்கறதுக்குள்ள குளோஸ் பண்ணிட்டா. இத்தனை வருஷம் எத்தனை வருஷமா இங்க இருக்கேன் எப்படி பேர் எப்படி விட்டுப் போகும். ஏன் இப்படி பொறுப்பில்லாம வேலை செய்யறா?மிக்சி,கிரைண்டர் கொடுக்கறப்ப எங்க பேரை விட்டுட்டான் இதுலயுமா? "

"அதெல்லாம்  கொடுக்காததால  வோட்டு போடமாட்டேன்ன்னு சொன்னீங்களே. வோட்டர் லிஸ்ட்ல பேர் இருந்தா என்ன இல்லன்னா என்ன மாமி?
"நல்ல கதையா இருக்கே.ரேஷன் கார்டையும் இதயும்தானே எதுக்கெடுத்தாலும் கேட்டு தொலைக்கறான்.? ஒட்டு போடலன்னா என்ன பேர் இருக்கத்தானே வேணும்.எனக்குபிடிக்கலன்னா நோட்டா ஒட்டு போட்டுவேன்.

அது சரி ஆன் லைன்ல வோட்டர் லிஸ்ட் இருக்காமே பாத்து சொல்லு. புதுசா சேக்கறதா இருந்தா கூட சேக்கலாம்னு பேப்பர்ல போட்டிருந்தானே."

"மாமி பேர் நிச்சயமா இருக்கும். இடம் மாறி இருக்கும் நம்மோட தெரு 2 வது குறுக்கு தெரு . 2 வது தெருன்னு கூட இங்க இருக்கு  ஒரு வேளை அதுல இருக்கலாம்?

"சரி கம்ப்யூட்டர்ல பாத்து சொல்லு. நெட் ஒர்க்பண்ணலன்னுசொல்லாதே
இனி தப்பிக்க முடியாது என்பதால்
http://www.elections.tn.gov.in என்ற தமிழ்நாடு தலைமை தேர்தல் ஆணைய இணைய தள முகவரிக்கு சென்று பெயரைவைத்து தேடியதில் பெயர் இடம் பெற்றிருப்பதை அறிய முடிந்தது. அவர்கள் வீட்டில் வாடகைக்கு இருந்தவர்களின் பெயரும் இருந்தது.  அடிக்கடி திருத்தம் செய்வதால் பாகம் எண்ணும் வரிசை எண்ணும் மாறிவிட வாய்ப்பு இருக்கிறது 
மாமி மகிழ்ச்சியுடன் போனார்.புஷ்பா மாமிக்கு சொன்னவிவரங்கள் நாளைக்குள் பலருக்கு போய்விடும். நல்லதுதானே!

நீங்களும் உங்கள் பெயர் இருகிறதா என்பதை உறுதி செய்து கொள்ள கீழ்க்கண்ட வழிமுறைகளை பின்பற்றவும். புதிதாக பட்டியலில் பெயர் சேர்க்கவும் ஆன்லைன் மூலம் பதிவு செய்யவும் வசதி செய்துள்ளது தேர்தல் கமிஷன் 

1. http://www.elections.tn.gov.in க்ளிக் செய்யவும்
 Search Electoral Role என்பதை தேர்வு செய்ய  பின்னர் கீழுள்ளவாறு  Search Electoral Rolls inTamil க்ளிக் செய்யலாம்

 வாக்காளர் அடையாள அட்டை உள்ளவர்கள் அந்த எண்ணை குறிப்பிட்டும் எளிதில் தேடலாம். அட்டை  இருந்தும் பெயர் இல்லை எனில் வாக்களிக்க முடியாது .

 கீழ்க்கண்டவாறு தோன்றும்அமைப்பில் வாக்காளர் பெயர், வாக்கு சாவடி ,தெரு பெயர் போன்ற ஏதேனும் ஒன்றை தேர்வு செய்ய வேண்டும்

மேலும் நமது மாவட்டம் மற்றும் சட்டமன்றத் தொகுதியை சரியாக தேர்வு செய்து சமர்ப்பிக்கவேண்டும் . வாக்காளர் பெயர் மூலம் தேடினால் கீழ்க்கண்டவாறு காட்சி அளிக்கும் 

தேட வேண்டிய பெயர் தந்தை பெயர்/கணவர் பெயர்/  இவற்றை சரியாக உள்ளீடு செய்துசமர்ப்பித்தால் பட்டியலில் இருந்தால் நமது விவரங்களை காட்டும்

பட்டியலில் பெயர்களில் எழுத்துப் பிழைகள் இருக்க வாய்ப்பு உண்டு.  அதனால் என்ன பிழை இருக்கும் என்று ஓரளவுக்கு ஊகித்து தேடினால் கிடைப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது
புதிதாக சேர்க்க  ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க
கீழ்க்கண்ட இணைப்பிற்கு சென்றால் பல்வேறு படிவங்கள் காட்டப்படும் 


இதில் Form 6 க்ளிக் செய்ய வேண்டும்  படிவம் 6 இப்படிக் காட்சி அளிக்கும் . அதை அப்படியே நிரப்பி சமர்ப்பிக்கலாம்.

 

நமது பாஸ் போர்ட் சைஸ் போட்டோவயும் JPEG பைலாக தராக வைத்துக் கொண்டால் அப்லோட் செய்து விடலாம் . பைலின் அளவு 350 kb க்கு மிகாமல் இருக்கவேண்டும் .
பதிவு செய்யப்பட விவரம் SMS மூலம் தெரிவிக்கப்படும் .  பின்னர் ஆய்வு செய்து பட்டியலில் சேர்ப்பார்கள். பெயர் சேர்க்க விரும்புபவர்கள் விரைந்து சேர்க்க முயற்சி செய்யுங்கள் .

 கூடுதல் தகவல்கள்
1.அநேகமாக 25.03.2014 பிறகு புதிய பெயர்களை சேர்க்க முடியாது.

2. படிவம் 7 சேர்க்கப்பட்ட  ஒரு வாக்காளருக்கு எதிராக மறுப்பு  தெரிவிப்பதற்காக . ,படிவம் 8- வாக்காளர் பட்டியலில் விவரங்கள் தொடர்பாக திருத்தம் செய்வதற்கு. தேர்தல் நெருங்கி விட்டதால் இப்படிவங்கள் இப்போது ஏற்றுக்கொள்ளப் பட மாட்டாது என தெரிவிக்கப் பட்டுள்ளது

3. தமிழ் நாடு முழுதும் உள்ள அனைத்து தொகுதி வாக்காளர் பட்டியல்களும் உள்ளன.

4. அவை அனைத்தும் தமிழில் மட்டுமே உள்ளன

5. சென்னை மாநகராட்சி வாக்காளர் பட்டியல் ஆங்கிலத்திலும் உள்ளது
.
6. ஒரே இடத்தில் பல வாக்கு சாவடிகள் அமைந்திருக்கும். அவற்றில் நம்முடையது எது என்பதை எளிதில் தெரிந்து கொள்ள EPIC என்று டைப் செய்து ஒரு இடைவெளி விட்டு அடையாள அட்டைஎன்னையும் டைப் செய்து 9444123456 என்ற எண்ணுக்கு SMS செய்தால் விவரங்கள் தெரிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

7.இப்போது மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள், தாசில்தார் அலுவலகங்கள்,கிராம நிர்வாக அலுவலகம் போன்றவற்றிற்குசெல்வதை தவிர்ப்பது நல்லது. இவர்கள் அனைவரும் தேர்தல் பணியில் ஈடுபட்டிருப்பதால் நமக்கு வீண் அலைச்சலே ஏற்படும் 

இணைப்புக்கள் 
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க-

Application for inclusion of name in Electoral Roll

பட்டியலில் பெயர் தேட  Search Electoral Rolls in Tamil

****************************************************************************************************
படித்து விட்டீர்களா?
கேள்விக் குறியாய் நிற்கும் நான் யார்? சொல்லுங்கள் பார்க்கலாம்

http://tnmurali.blogspot.com/2014/03/kavithai-with-puzzle.html

18 கருத்துகள்:

  1. மாமி ஒரு உதவி கேட்டதால எங்களுக்கும் நல்ல தகவல் கிடைத்தது!

    பதிலளிநீக்கு
  2. படத்துடன் விளக்கம் + இணைப்புகள் வெகு ஜோர்... பலருக்கும் உதவும்... நன்றி...

    பதிலளிநீக்கு
  3. எல்லோருக்கும் உதவும் ஒரு மிக நல்ல பதிவு! விளக்கங்களும் மிக அருமை!

    பகிர்வுக்கு மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
  4. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  5. நீங்கள் சொல்வதெல்லாம் சரி, முரளி. நான் ஆன்லைனில் அக்டோபர் 10ம் தேதி விண்ணப்பித்தேன். போன வாரம் வரை data entry not completed என்றே அதில் வருகிறது. திருப்போரூர் தாசில்தார் அலுவலகத்தில் சென்று பார்த்ததில், 'ஆன்லைனாவது மண்ணாவது! அந்த சிஸ்டம் வேலை செய்யவில்லை. எனவே நீங்கள் புதியதாக இன்னொரு விண்ணப்பம் கொடுங்கள்' என்று கேட்டார்கள். அதன்படி புதிய அப்ளிகேஷன் கொடுத்திருக்கிறேன். நேற்று சென்று மீண்டும் பார்த்ததில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஒரு லட்சம் புதிய அப்ளிகேஷன்கள் வந்துவிட்டதால், இந்த அப்ளிகேஷன்கள் மீது ஆக் ஷன் எடுக்கவேண்டாம் என்று மேல் அதிகாரிகளின் உத்தரவு என்று சொன்னார்கள். இன்னும் சில நாட்கள் போருத்துவிட்டு, அதன்பிறகும் வராவிட்டால், ஹிந்துவிற்கு 'ஆசிரியடுர்க்குக் கடிதங்கள்' பகுதிக்கு எழுதாலாம் என்றிருக்கிறேன். Moral of the Story: The online application facility for the voter's card is simply a fraud!

    பதிலளிநீக்கு
  6. புஷ்பா மாமியின் புலம்பல்கள்-ஓட்டர் லிஸ்ட்ல பேர் இல்ல.சேர்க்க முடியுமா?
    டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று
    அவர்களின் பயனுள்ள் பதிவு. நண்பர்கள் பயன்படுத்திக் கொள்ள. எனது பக்கத்தில் பகிர்கிறேன்.
    நன்றி திரு டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று

    பதிலளிநீக்கு
  7. பயனுள்ள தகவல்கள்.
    பகிர்வுக்கு நன்றி .
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  8. புஷ்பாமாமியால் எங்களுக்கும் பயனுள்ள பதிவு கிடைத்துவிட்டது.
    இருவருக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  9. இந்தமாதிரி லோகல் அரசியல்வாதிகள் உதவினால் நல்ல பெயர் சம்பாதித்துக் கொள்ளலாம்

    பதிலளிநீக்கு
  10. மிக அவசியமான நேரத்தில் நல்லதொரு பதிவு! விரிவான தகவல்களும், இணைப்புக்களும் கொடுத்தது அனைவருக்கும் பயனளிக்கும்! பகிர்வுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  11. தக்க சமயத்தில் அனைவருக்கும்
    பயன்படும்படியான அருமையான பதிவினைத்
    தந்தமைக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  12. Useful info . ஆனா எம் பேரக் காணுங்கோ ....!

    எம் பேர எப்டி எல்லாம் தப்பா எழுத முடியும்னு முயற்சி பண்றேன் .... :(

    பதிலளிநீக்கு

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895