என்னை கவனிப்பவர்கள்

திங்கள், 31 மார்ச், 2014

விஷ லட்டு எது? கடினப் புதிர்-விடை


முந்தைய பதிவில் லட்டு புதிர் ஒன்றை வெளியிட்டதை நீங்கள் படித்திருக்கக் கூடும் .பலரும் பல விதமாக பதில்களை கூறி இருந்தனர். திண்டுக்கல் தனபாலன் அதில் மூழ்கி விட்டார். பொதுவாக பொன்சந்தர் இது போன்ற புதிர்களுக்கு விடை சொல்லி விடுவார்.வவ்வாலும் விடைகளை எப்படியாவது தேடிக் கண்டு பிடித்துவிடுவார்.இவர்கள் அனைவரும் சொன்ன விடைகளில் தவறாகப் போவதற்கான சாத்தியங்கள் இருந்தன. பின்னர் இவர்கள் அனைவருமே விடையை கண்டுபிடித்து விட்டனர் என்பதை அறிந்து கொள்ள முடிகிறது. இதற்கான விடை கதையின் இறுதியில்

 புதிரைப் படிக்காதவர்கள் இங்கு செல்க. 

      
    அதை கதை வடிவில் சொல்லி இருந்தேன். கதையை தொடர்கிறேன் 
...........சேவகன்  1, 2  எண்ண  ஆரம்பித்தான்  "
பெரியவர் புன்னைத்துக் கொண்டே யோசிக்க தொடங்கினார் .
புதிரைக் கேட்ட அனைவரும்  திகைத்து நின்றனர். அமைச்சர் நம்பிக்கை இழந்தார். 
பெரியவர் நிதானமாக லட்டுகளை எடை போடத் தொடங்கினார் .
மூன்று முறை எடை போட்டார். ஒவ்வொருமுறை எடைபோடும்போதும் சில வினாடிகள் சிந்தித்து பின்னர் தொடர்ந்தார். இறுதியாக ஒரு லட்டை எடுத்து எல்லோரும் காண்பித்தார். அவர் கம்பீரமாக சொல்ல ஆரம்பித்தார் 

"அவையோரே!இதுதான் 12 லட்டுகளில் எடை வித்தியாசமுள்ள லட்டு என்பதை என்னால் உறுதியாக கூற முடியும். இதை நான் உண்ணப் போகிறேன். உண்பதற்கு முன்பாக வேறு யாரேனும் இந்த உண்மையை உறுதி செய்ய விரும்புகிறேன். ஏனெனில் இது மற்ற 11 லட்டுகளை விட எடையில் வேறுபாடு உள்ளதை என்னால் அறுதியிட்டுக் கூற முடியுமே தவிர இதில் விஷம் இல்லை என்பதை உறுதியாகக் கூறமுடியாது. காரணம் என்னைக் கொல்லும் நோக்கத்தில்  அனைத்து லட்டுகளில் விஷம் கலக்கப்பட்டிருக்கலாம். அப்படி செய்து எனது அறிவாற்றலையும் கேள்விக்குறி ஆக்க முடியும். அதில் விஷம் இருக்கும் என்பதற்காக நான் அஞ்சவில்லை.  
அமைச்சர் அவர்களே! நான் கண்டறிந்தது சரியா என்பதை அனைவரின் முன்னிலையிலும் சோதித்துப் பார்க்கும்படி கேட்டுக் கொள்கிறேன் "
அமைச்சர் அரசனை பார்த்தார். மன்னர் தலையாட்ட அந்த லட்டை மற்றவற்றோடு எடை போட்டுப் பார்த்ததில் பெரியவர் சரியாக கண்டறிந்திருக்கிறார் என்பது தெரிந்தது, அனைவரும் மகிழ்ச்சியுடன் ஆரவாரம் செய்து பெரியவரை பாராட்டினர்.
பெரியவர் லட்டை எடுத்து கையில் வைத்துக் கொண்டு மன்னரைப் பாரத்து

"மன்னா ,  உன்னை நான் அவமதிப்பதாக நினைத்து எனக்கு தண்டனை விதித்தாய்.  நான் ஈடுபட்டிருந்த ஆராய்ச்சியில் தடை ஏற்படுவதை நான் விரும்பவில்லை. மன்னனாக இருந்தாலும் சரி மனைவியாக இருந்தாலும் என் பணியில் குறுக்கிடுவதை விரும்புவதில்லை. என் அத்தனை உழைப்பு வீணாகிப் போகும் என்பதால்தான்  ஆணையை மறுத்தேன்.

  கற்றோரும் அறிஞர்களுக்கும் மரியாதை இல்லாத நாட்டில் மன்னனுக்கு கீழ்ப் படிந்து சேவகம் செய்து அடிமையாக இன்னமும் தொடர்ந்து நான் வாழ விரும்பவில்லை. எனவே என் கையில் உள்ள விஷமற்ற  லட்டுக்கு பதிலாக விஷமுள்ள மற்ற லட்டுகளில் ஒன்றை எடுத்து உண்டு உயிர்  துறக்கப் போகிறேன் " என்று சொல்லிக் கொண்டே, நல்ல லட்டை தூக்கி எறிந்தார்.
மீதியுள்ள 11 லட்டுகளில் ஒன்றை எடுத்து உண்ணத் தொடங்கினார். 
பதறிப்போன அமைச்சர் பாய்ந்து சென்று தடுக்க முயன்றார். மன்னன் அவரை கையைப் பிடித்து தடுத்துவிட்டார் 

பெரியவர் ஏன் இப்படி செய்கிறார்.அவையில் அனைவரும் வாயடைத்து நின்றனர். மனதில் பதற்றமும் வெளியில் அமைதியும் நிலவியது. 

  லட்டை முழுமையாக உண்டு முடித்தார் பெரியவர். அனைவரும் அவரையே பார்த்துக் கொண்டிருந்தனர்.  நேரம் கரைந்து கொண்டிருந்தது . என்ன ஆச்சர்யம்! பெரியவருக்கு ஒன்றும் ஆகவில்லை. அவருக்கு தெய்வீக சக்தி இருக்கிறதோ? என்று  எல்லோரும் எண்ணத் தொடங்கினர் 
அப்போது அவையின்அமைதியை மன்னனின் உரத்த குரல் கலைத்தது
"ஐயா பெரியவரே!, எந்த லட்டிலும் நான் விஷத்தை கலக்கவில்லை. என்னை அவமதித்தற்காக உங்களை கொன்றுவிடவேண்டும் என்று முதலில் நான் நினைத்தது உண்மைதான் . ஆனால் அமைச்சர் உங்கள் சிறப்பைக் கூறியதும் நான் என் தவறை உணர்ந்து விட்டேன். உங்கள் திறமையை அனைவருக்கும் உணர்த்தவும் நேரில் கண்டு  ரசிக்கவும் இந்த நாடகத்தை நடத்தினேன். இனி என்னாலோ அல்லது வேறு யாராலோ  உங்களுக்கு எந்த இடையூறும் ஏற்படாது. உங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் நானேசெய்வேன். உங்களைப் போன்ற பொக்கிஷங்களை கண்டறிந்து காக்க வேண்டியது அரசன் கடமை  "
என்று சொல்லி பெரியவரை கட்டி அனைத்துக் கொண்டார்.

அவையில் அனைவரது கண்களிலும் ஆனந்தக் கண்ணீர் எட்டிப் பார்த்தது.

( கதை ஒ.கே வா. இந்தக் கதை பதிவர் முனைவர் மு.பரமசிவம் (காமக் கிழத்தன் ) அவர்கள் இட்ட கருத்தின் அடிப்படையில் எழுதப்பட்டது 
நன்றி காமக் கிழத்தன் ஐயா!

**********************************************************************************

இப்போது  புதிருக்கான விடையை பார்க்கலாமா?



12 லட்டுகளுக்கும்   A,B,C,D,E,F,G,H,I,J,K,L என்று பெயர் கொடுத்துக் கொள்வோம். இவற்றை 3  சம பிரிவுகளாக பிரித்துக் கொள்ளலாம். அதாவது 

என்று எடுத்துக் கொள்வோம் .

முதல் முறையில் A,B,C,D   மற்றும் E,F,G,H  எடை போட வேண்டும் 
இதில் மூன்று சாத்தியக் கூறுகள்உள்ளனன. அவ்வாறு எடை போட்டால் கீழ்க்கண்ட ஏதாவது ஒன்றுதான் சரியாக இருக்க முடியும் அல்லாவா?

1.   A+B+C+D க்கு E+F+G+H சமம் 
2.   A+B+C+D இன்எடை E+F+G+H குறைவு 
3.   A+B+C+D இன்எடை E+F+G+Hஅதிகம் 

1. முதலில்  ABCD =EFGH சமமாக இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அப்படி எனில்   I,J,K,L  இவற்றில் ஒன்றுதான்  எடை குறைவாகவோ அதிகமாகவோ இருக்கக் கூடும். A,B,C,D.E,F.G,H லட்டுகளை தூர வைத்துவிடுங்கள் . ஏனெனில் இவை அனைத்தும் சம எடை உள்ளவை  

இரண்டாவது எடை : I,J வுடன் K, H எடை போட வேண்டும் .L  ஐ தனியாக வைக்கவும்.
( நன்கு  கவனிக்க இதில் L இல்லை, L க்கு பதிலாக தூர வைத்துவிட்ட A,B,C,D,E,F,G,H   ஏதாவது ஒன்றை மட்டும் எடுத்துக் கொள்ளவேண்டும். இதில் H ஐ எடுத்துக் கொண்டிருக்கிறேன். இதில் Hன் எடை ஒரு லட்டைத் தவிர மற்ற 10 லட்டுகளின் எடைக்கு சமமாக இருக்கும் 
இதிலும் 3 சாத்தியங்கள் உள்ளன . இவரில் ஏதாவது ஒன்றுதாள் இரண்டாவது எடை போடும்போது கிடைக்கும்.

 1) IJ=KH   2) IJகுறைவு KH அதிகம்  3) IJ அதிகம் KHகுறைவு

முதல் சாத்தியம் எனில் எடை போடப்படாத L விஷமற்ற லட்டு.
இதில் மூன்றாவது எடை வேண்டியதில்லை. ஒருவேளை L மற்ற லட்டுக்களை விட எடை அதிகமா குறைவா என்பதை அறிந்து கொள்ள வேண்டுமென்றால்  3 வது முறை எடை போடலாம் 
 (குறிப்பு  < குறியீட்டிற்கு இடப்புறம்(அதாவது  கூர்முனை) உள்ளது குறைவு வலப்புறம் (வாயகன்ற முனை )அதிகம்
இன்னொரு வாய்ப்பான IJ<KH எனில் K எடை அதிகமாகவோ(அல்லது மற்ற லட்டுகளுக்கு சமமாக)  அல்லது I,J இவற்றில் ஏதாவது ஒன்று எடை குறைவாக இருக்கக் கூடும்


மூன்றாவது முறை எடை   I & J எடை போட வேண்டும் 
இதற்கு 3 சாத்யங்கள் உண்டு
            1) I=J ,  எனில் K தான் வித்தியாசமான எடை உடையது (அதாவது அதிக எடை )
             2)  I<J  - எனில்   I   தான் கண்டறிய வேண்டிய லட்டு
            3)I>J  எனில் J தான் விடை 

இரண்டாவது எடையின்போது இன்னொரு சாத்தியமான IJ > KH 
இதிலும் 3 சாத்தியங்கள் உண்டு 
         
    1) I=J ,  எனில் K தான் வித்தியாசமான எடை உடையது (அதாவது குறைவான எடை )
             2)  I<J  - எனில்  J  தான் கண்டறிய வேண்டிய லட்டு
            3)I>J  எனில் I தான் விடை 

**********************************************************************
2. A+B+C+D இன்எடை E+F+G+H குறைவு  அதாவது
                       A+B+C+D < E+F+G+H(இடப்பக்கம் எடை குறைவு வலப்பக்கம் எடை அதிகம்.இடப்பக்கம் எடை குறைவாக இருப்பதால் ஏதாவது நான்கில் ஒன்று  எடை குறைவாகத்தான் இருக்கவேண்டும் என்ற அவசியமில்லை.ஏனெனில் வலப்பக்கம் ஏதேனும் ஒன்றின் எடை அதிகமாக இருக்கலாம்
   இதன் சாத்தியங்கள்  ABCD எடை குறைவு (அல்லது சமமாக)இருக்கலாம்  அல்லது EFGH எதை அதிகம் அல்லது சமமாக இருக்கலாம் 

இரண்டாவது முறை : A,B,E இவற்றுடன் C,F,I எடையிட வேண்டும் 
( நன்கு கவனிக்க:  முதல் முறையில் E வலப்பக்கம் (எடை அதிக பக்கம் ) இருந்தது இடப்பக்கம் கொண்டு வரப்பட்டுள்ளது .C வலப்புறம் மாற்றப் பட்டுள்ளது.  எனவே ABE, CFI எடை போட, சாத்தியங்கள் 
           1) ABE=CFI                      2)  ABE< CFI          3)  ABE>CFI
          

  1) ABE=CFI 
 இதில் D ,G,H வெளியே எடுக்கப் பட்டுள்ளது முதல் எடை யின்போது D எடை குறைவான பக்கம் இருந்ததால் D குறைவாகவும், G,H வலப்புறம் இருந்ததால் இரண்டில் ஒன்று எடை அதிகமாகவும் இருக்க வாய்ப்பு உள்ளது.

மூன்றாவது முறையாக G மற்றும் H எடை போட 3 சாத்தியங்கள்
  
             G=Hஎனில்              D தான் விடை 
             G<H   எனில்  H தான் கண்டறிய வேண்டிய லட்டு                 
             G>H எனில் G தான் சரியானது 

 2)  ABE< CFI   C,F இடம் வலம் மாறிய பின்னும் முதல் எடை நிலை போலவே அதாவது இடப்பக்கம் குறைவாகவும் வலப்பக்கம் அதிகமாகவும் இருப்பதால் E,C இரண்டும் வித்தியாச லட்டாக இருக்க முடியாது .  
இதில் A (அ) B குறை எடையாகவோ அல்லது F கூடுதல் எடையாக வோ இருக்க வாய்ப்பு உள்ளது 
சாத்தியங்கள்

     மூன்றாவது எடை :  A & B ஐ எடையிட வேண்டும் 
   1) A=B எனில்  F தான் வித்தியாசமானதாக இருக்கும்(எடை       
      அதிகம்)
    2) A<B  எனில்  A 
    3) A>B எனில்  B

3) இரண்டாம் எடையின் 3 ஆம் சாய்ஸ்  ABE>CFI , 
   C,E இட வல மாற்றம் செய்ததில் முதல் எடை யின்  நிலையின் எதிர் நிலையில் இருப்பதால் . C அல்லது E மாற்று எடை கொண்டதாக இருக்கவேண்டும் . C எடை குறைவாகவோ E அதிகமாகவோ இருக்கும். Cஐயும் E யும் எடையிடுவதால் பயனில்லை ஏனெனில் C, நார்மலாக இருந்தாலும் குறைவாக இருந்தாலும்  எடை நிலை ஒரே மாதிரியாகத்தான் இருக்கும் எனவே C யுடன் I,J,K,L இவற்றில் ஒன்றை எடுத்து எடை போடவேண்டும் 
இங்கு  C & I  எடுத்துக் கொள்வோம் /
இதன் சாத்தியங்களும்  விடையும் 

    1) C = I   எனில் E தான் சரி என கணித்து விட முடியும் 
     2) C<I  எனில்   C தான் சரி 

******************************************************************************
3.  A+B+C+D இன்எடை E+F+G+Hஅதிகம் 
  அதாவது  A+B+C+D > E+F+G+H 

 2 வது எடை : ABE &CFI எடை பொடுக 
சாத்தியங்கள்  1) ABE = CFI    2) ABE<CFI   3) ABE>CFI
1) ABE = CFI எனில் D எடை அதிகன் அல்லது GH எடை குறைவு 

மூன்றாவது முறையாக  G& H எடை போட விடைகள் 

   1) G=H எனில் விடை D  2) G<H எனில்  G விடை 3)G>H எனில் H        விடை 

2 வது  எடையின் 2 வது சாத்தியம் 2) ABE<CFI  . இப்போது C அதிக  எடை அல்லது E  குறை எடை 

மூன்றாவதாக C & i எடையிட  C= I எனில்  E விடை  2) C>I எனில் C சரியான விடை  

2  எடையின் 3 வது சாத்தியம் ABE>CFI  இதன் வாய்ப்புகள் F குறை எடை அல்லது  A அல்லது B அதிக எடை 

மூன்றாவது முறையாக A & B ஐ எடை யிட வேண்டும் 

சாத்தியங்களும் விடைகளும் 

1) A=B எனில் F தான் விடை 
2) A<B  எனில்  B  விடை 
3)A>B   எனில் A சரியான விடையாக இருக்கும் 

*****************************************************************************************
அனைத்து சாத்தியங்களையும் தீர்வுகளையும்  சரியாக சொல்லி இருக்கிறேன் என்று நம்புகிறேன்.
இவற்றை சோதித்துப் பார்க்கExcel பைலை உருவாக்கி இருக்கிறேன். நீங்களும் விரும்பினால் அதை டவுன்லோட் செய்து எடை அளவுகளை உள்ளிடு செய்தால் அதன் விடை இறுதியில் காண முடியும் .

எடை
10
10
10
10
10
10
8
10
10
10
10
10
பெயர்
A
B
C
D
E
F
G
H
I
J
K
L

குறிப்பு: 11 ஒரே எடை அளவுகளை உள்ளீடு செய்ய வேண்டும் 
             ஒரு அளவு மட்டுமே மற்றவற்றை குறைந்தோ                                       அதிகமாகவோ இருக்கலாம் 
              அனைத்தும் சமமாக இல்லை  என்பதை உறுதி செய்து                        கொண்டு சோதித்துப் பார்த்து கருத்துக்களைக் கூறவும் 

டவுன்லோட் செய்ய கீழுள்ள இணைப்புக்கு செல்லவும் அல்லது preview இன் வலது  மேல் மூலையில் உள்ள அம்புக் குறியீட்டை அழுத்தி டவுன்லோட் செய்யவும் 
https://app.box.com/s/c1zuv7te3pz235ch1vpa





உங்கள் கணினியில் மாதிரி கோப்பு தெரிகிறதா / டவுன் லோட் செய்ய முடிகிறதா என்பதை தெரிவிக்கவும்

*********************************************************************

இரண்டு ஆண்டுகளுக்கு முந்தைய உகாதி தினப் பதிவு 

34 கருத்துகள்:

  1. புதிருக்கான விடையைப் படிக்கும் போது தலை சுற்றல் தொடங்கியது. நின்றபின் மீண் டும்வரவேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் ஐயா! இது போன்ற புதிர்கள் நம் பொறுமையை சோதிக்கும். பின்னர் பொறுமையாக வாருங்கள் ஐயா!

      நீக்கு
  2. முத்துவின் புதிர்கள் (http://muthuputhir.blogspot.com/) தளத்தில முத்து ஐயா தரும் புதிர்களைக் கண்டாலே காயச்சல் வரும். நீங்களோ அவரை விடச் சிறப்பாகப் புதிரைப் போட்டு ஓர் ஏழல் திணற வைத்தீர்கள். இன்று உங்கள் பதிலைக் கண்டதும் இத்தனை சிக்கல் இருந்திருக்கே என அறிந்ததும் தலையிடி அதிகமாயிற்றே! இவ்வாறான பதிவுகள் சிறந்த மூளைச் சலவை செய்கிறது. தொடருங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இது பலரும் அறிந்ததுதான். விடையை மறந்திருப்பார்கள்,அவ்வளவே.
      நன்றி ஐயா

      நீக்கு
  3. முதல் முறை பதில் சொன்னவுடன் உடனே வெளியிட்ட உடனே தெரிந்து விட்டது தவறு என்று... பொன்சந்தர் அவர்கள் பதிலையும் எனது முறையிலேயே விளக்கமும் சொன்னேன்... அதுவும் தவறு என்று தெரிந்தது... ஆனால் அவர் முறையில் தான் இருக்க வேண்டும் என்று மட்டும் நம்பினேன்... பிறகும் அதைப் போல் தான் யோசித்தேன்...

    இணையத்தில் தேடினேன் கிடைத்தது... இந்தக் கணக்கை தேடித் பாருங்கள்... பலபல உள்ளது... அதை சிலவற்றைத் தான் "இங்கே உள்ளது" என்று 2 கருத்துரையில் சொன்னேன்... 1) நாமே யோசிக்காமல் இணைப்பு கொடுப்பது தவறு என்று தோன்றியது... 2) இந்தப் பதிவில் மூன்றாவது முறையில் நீங்கள் சொன்னது தான் முடிவாக யூகித்த முறை... அது சரியா...? என்று தேடிய போது - அதுவும் இணையத்தில் உள்ளது...!

    இதே போல் தான் எனது தந்தையும் பல புதிர்களைப் போடுவார்... சில புதிர்களே புரியாத போது எப்படி பதில் சொல்வது...? ஹிஹி... சிலவற்றிக்கு விடை தெரியும், ஆனால் கேள்வியை விளக்கத்தான் தகராறு... இப்படியும் உண்டு...!

    பதில் தெரிந்த புதிர்கள் கேட்க ரொம்பவே ஜாலி... ஹிஹி... எளிதான புதிர்களை முன்பு மில்களிலும், ISO பாடம் எடுக்கும் போதும் பயன்படுத்தியதுண்டு... மூழ்கினதற்கு காரணம் என்னவென்று புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்...

    நன்றி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி தனபாலன்.நீங்கள் சொல்வது போல் புதிரின் விடைகூட சொல்லிவிட முடியும் அதை விளக்குவது கடினம். ஏனெனில் நாம் சொல்வது எந்த அளவுக்கு புரியும் என்று உறுதியாக கூற முடியும் . இந்த புதிருக்கான விடையை எக்சலில் வடிவமைத்திருக்கிறேன். அதை பார்த்து தங்கள் கருத்தை தெரிவிக்கவும்

      அனிமேஷன் முறையில் இதற்கான விடை தயாரிக்க நினைத்தேன். கூடுதல் தொழில் நுட்ப அறிவு தேவைப் பட்டதால் பாதியில் கைவிட்டு எக்சலுக்கு மாறினேன்.
      ஆர்வத்திற்கும் முயற்சிக்கும் நன்றி DD

      நீக்கு
  4. முரளி,

    போனப்பதிவிலேயே ஒரு தளத்தின் சுட்டிப்போட்டேன் ,கவனிக்க பொறுமை இல்லையோ? odd ball logic /puzzle என இணயத்தில் ரொம்ப ஃபேமசான புதிர்.

    அதில் நீங்க சொல்லும் வழியை விட எளிதாக விடைக்கொடுத்திருக்கிறார்களே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என் பதிலோடு அவற்றை குழப்பிக் கொள்ளக் கூடாது என்பதால் அவற்றை பார்க்கவில்லை. இனி சென்று பார்க்கிறேன். ஆனால் இத்தனை சாத்தியக் கூறுகளை தவிர்க்க முடியாது என்றே நினைக்கிறேன். படித்துவிட்டு சொல்கிறேன்.

      நீக்கு
    2. இந்தப்புதிருக்கான அனிமேஷன்,

      இங்கே இருக்கு

      http://gwydir.demon.co.uk/jo/games/puzzles/solution9.htm

      நீக்கு
  5. அய்யா, உங்கள் கணக்கைப் பார்த்தவுடனே தெரிந்தது ஒன்று -
    இதெல்லாம் நமக்குச் சரிப்பட்டு வராது என்பதுதான்.
    இருந்தாலும் “ஈகோ“ விடவில்லை. முயற்சியும் செய்து பார்த்தேன்.
    சத்தியமாய்த் தெரியவில்லை என்பது முடிவானது.
    நீங்கள் எக்ஸெல் எல்லாம் போய் விளக்கியும் நொந்துபோனதைத் தவிர வேறொன்றும் செய்ய இயலாத என்போன்றோரை என்னசெய்வதாக உத்தேசம் அய்யா? அரசரிடமோ அந்த அறிஞரிடமோ கேட்டுச் சொல்லும்படி கேட்டுக்கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கதையை ரசித்து விட்டு தாண்டி சென்றுவிடலாம். ஐயா!
      எழுத்தின் மூலம் விளக்குவது எளிதல்ல.என்பதை புரிந்து கொண்டேன். நான் ஒன்று விளக்க அதற்கு வேறு பொருளாக புரிந்து கொள்வதற்கு வாய்ப்பு இருக்கிறது. இதற்காக அணிமஷன் முறையைபயன்படுத்த நினைத்தேன். அதற்கு போதிய நேரமும் கூடுதல் நுட்ப அறிவும் தேவை. அடுத்த புதிரில் முயற்சி செய்வேன். நன்றி ஐயா!

      நீக்கு
    2. அட ஆமாங்கண்ணா ! படிக்கப்படிக்க கண்ணுல பூச்சி பறக்குது?:((((

      நீக்கு
  6. இதே போல் G அதிகமாக இருந்தால் எப்படி என்பதையும் Excel பைலை உருவாக்கி இதில் இணைக்கவும்...

    இப்போது நேரம் கிடைக்கும் போது எல்லாம் தொழில் நுட்ப பதிவுகளை சிறிதுசிறிதாக எழுதுகிறேன்... அவைகள் முடிந்த பின், நேரம் கிடைக்கும் போது இதையும் செய்து பார்க்கிறேன் ---> G-யை குறைவாக நினைத்து Excel-ல் சொல்லி உள்ளீர்கள்... A முதல் L வரை செய்து பார்க்கிறேன்... அதுவும் தானாக உள்ளீடு செய்வது போல் - Macro மூலம்... முதலில் Lotus 123-ல் Macro மூலம் கால்குலேட்டர் ப்ரோக்ராம் செய்ததை தேட வேண்டும்... கிடைத்தால் எளிதில் முடியும் என்று நினைக்கிறேன்... ம்... பார்ப்போம்...

    உங்களையும் விட மாட்டேன்... ஹிஹி... இதுவும் எனது சிறுவயதில் தந்தை கேட்ட எளிதான கணக்கு தான்...! பதில் சொல்லும் வரை அடுத்த புதிர் கிடையாது என்பதே அவரின் க்ளு...!

    // பால்காரன்கிட்டே இரண்டு அளவுப் பாத்திரம் தான் இருக்கு. 3 லிட்டர் ஒன்னு. 5 லிட்டர் ஒன்னு. நீ 4 லிட்டர் பால் வாங்கணும் என்று வைத்துக் கொள். அவன்கிட்டே இருக்கிற இரண்டு அளவுப் பாத்திரத்தை மட்டும் வைச்சிக்கிட்டு ஏதோ பண்ணி, அவனது அண்டாவில் உள்ள பாலிருந்து உன்னோட பாத்திரத்தில் ஒரே தடவையாக 4 லிட்டர் ஊத்திட்டுப் போயிட்டான். அது எப்படி ஒரே தடவையா 4 லிட்டரா ஊத்தினான்...?

    "அண்ணே! கொஞ்சம் இருங்க! டீ கொண்டு வந்துறேன்"

    "என்ன பதிலையே காணோம்? உன் பொண்ணுகிட்டே போன வாரமே கேட்டேன். இரண்டு முறைகள் சொன்னா. அதிலே எது ஈஸி-ன்னு என்கிட்டே கேட்குறா...! //


    இது கிட்டத்தட்ட இரு வருடங்கள் முன்பு (http://dindiguldhanabalan.blogspot.com/2011/12/blog-post_23.html) உங்களின் மந்திரச் சொல் என்ன...? பதிவில் பகிர்ந்து கொண்டது... நீங்கள் வாசிக்கவில்லை என்பது கருத்துரையில் பார்த்து விட்டேன்... மந்திரச் சொற்களை நீங்கள் வைத்துக் கொண்டு, இரண்டு பதில்களை இரண்டு நாட்கள் சென்ற பின் சொல்லவும்...! எப்பூடி...! ஹிஹி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இது எனது எக்செல் பைலில் இருந்து காப்பி செய்யப் பட்டதே. அதில் g மதிப்பை 10 க்கு மேல் இட்டுப் பார்த்தால் கடைச்யில் G விடையாக வருவதை அறிய முடியும்.
      பயன்படுத்திப் பார்த்துவிட்டு ஏதேனும் தவறு இருப்பின் கூறவும்

      நீக்கு
    2. //http://dindiguldhanabalan.blogspot.com/2011/12/blog-post_23.html) உங்களின் மந்திரச் சொல் என்ன...? பதிவில் பகிர்ந்து கொண்டது... நீங்கள் வாசிக்கவில்லை என்பது கருத்துரையில் பார்த்து விட்டேன்..//
      அப்போது உங்கள அறிமுகம் இல்லை. மார்ச் 2012இல் நீங்கள் முதல் முறையாக என்பதிவுக்கு வந்திருக்கிறீர்கள்.அதன் பின்னரே உங்களை நன்கு அறிவேன். அதனைத் தொடர்ந்து அனைத்து பதிவுகளையும் படித்துள்ளேன்.

      நீக்கு
    3. //பால்காரன்கிட்டே இரண்டு அளவுப் பாத்திரம் தான் இருக்கு. 3 லிட்டர் ஒன்னு. 5 லிட்டர் ஒன்னு. நீ 4 லிட்டர் பால் வாங்கணும் என்று வைத்துக் கொள். அவன்கிட்டே இருக்கிற இரண்டு அளவுப் பாத்திரத்தை மட்டும் வைச்சிக்கிட்டு ஏதோ பண்ணி, அவனது அண்டாவில் உள்ள பாலிருந்து உன்னோட பாத்திரத்தில் ஒரே தடவையாக 4 லிட்டர் ஊத்திட்டுப் போயிட்டான். அது எப்படி ஒரே தடவையா 4 லிட்டரா ஊத்தினான்...?//
      விடை கண்டுபிடித்து விட்டேன். இரண்டு நாட்கள் காத்திருக்கிறேன்.

      நீக்கு
  7. எனக்குப் புரிந்து கொள்ளும் அளவிற்கு பொறுமை இல்லை!

    பதிலளிநீக்கு
  8. கதை மிக அருமை! கணக்கு!!!!!????,,,,,ஸஅப்ப்பாஆஆஆ.......நமக்கு பில்டிங்க் ஸ்ட்ராங்கு.....பேஸ்மென்டு வீக்குங்கோ!!!!

    ஆனால், விளக்கம் கண்டு கொஞ்சம் மூளையக் கசக்கி புரிந்து கொண்டோம்! நன்றி முரளி! கொஞ்சம் எங்கள் மூளைக்கு வேலை கொடுத்ததற்கு.....அடுத்த பதிவு நாங்க போடறதுக்கு கொஞ்சம் ஒட்ட வைச்சுக்கணும்!!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா! நம்மள மாதிரி நெறையபேர் இருக்காங்க போலவே!:)))

      நீக்கு
  9. என் கருத்தின் அடிப்படையில் உருவாக்கிய கதை நன்று. நன்றி முரளி.

    பதிலளிநீக்கு
  10. கதை அருமை! புதிரை விட விடை குழப்பமா இருக்கு? ரொம்ப பொறுமை வேணுமோ? மீண்டும் படித்து பார்க்கிறேன்! நன்றி!

    பதிலளிநீக்கு
  11. ஒரு லட்டு 100 கிராம் என்று வைத்துக் கணக்குப் பண்ணினேன்.
    சரி வரலை.
    லட்டு எதிலும் விஷமில்லை என்று தெரிந்து விட்டதால்...கடைசியில் அனைத்தையும் சாப்பிட்டு விட்டேன்.

    பதிலளிநீக்கு
  12. கிஸ்மிஸ் உள்ள லட்டுன்னா எனக்கு உயிர் ,இவ்வளவு வில்லங்கம் இருக்கிற இந்த லட்டு எனக்கு வேண்டவே வேண்டாம் ..சீசீ இந்த லட்டு புளிக்கும் !
    த ம 8

    பதிலளிநீக்கு
  13. புதிர் விடை ஓக்கேதான்!
    புதிரை விடுவிக்க, சிறிது நேரம் முயன்று பார்த்தேன்.
    அப்புறம் விட்டுவிட்டேன்.

    பதிலளிநீக்கு
  14. ஸப்பா.... கொஞ்சம் சோடா கிடைக்குமா? மயக்கமா இருக்கு! :)

    பதிலளிநீக்கு
  15. நான் இரண்டாவதாக மீண்டும் ஒரு விடை அனுப்பி இருந்தேன். ஆனால் உங்களது பின்னூட்டத்தில் வரவில்லையே ஏன்?. இரண்டாம் வாய்ய்பு கிடையாதோ..?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒரு வேலை spam பட்டியலில் இருகிறதா என்று பார்த்தேன். அங்கும் இல்லையே. இப்போது Comment moderation ஐ நீக்கி விட்டேன். அதனால் எல்லா கருத்துக்களும் தானாக வெளியாகி விடுமே.

      நீக்கு
    2. புதிர்ப் பதிவில் உங்கள் இரண்டு கம்மேன்ட்களும் உள்ளனவே

      நீக்கு
    3. மன்னிக்கவும். உங்க பதில் பார்த்த பிறகுதான் அதை கவனித்தேன். அப்படியென்றால் எனது இரண்டாவது பதில் சரிதான்.

      நீக்கு
  16. எனக்குப் புரிந்து கொள்ளும் அளவிற்கு பொறுமை இல்லை!

    நானும் அய்யாவோட கூட்டாளி.

    மாடிப்படி மாது

    இந்தப் பேரு நல்லாயிருக்கு.

    அப்புறம்

    உங்கள் கணினியில் மாதிரி கோப்பு தெரிகிறதா / டவுன் லோட் செய்ய முடிகிறதா என்பதை தெரிவிக்கவும்

    முடிகின்றது.



    பதிலளிநீக்கு

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895