உழவன் பசியால் வீழ்வதை மாற்றி
உணவை அளிக்கும் அவன்தொழில் போற்றி
செயற்கையின் சாயம் வெளுக்கும் முன்னர்
இயற்கை அதனை விளக்கும் முன்னர்
கற்றுத் தேர்ந்த கலைகளைக் கொண்டு
சுற்றுச் சூழலை சுத்தமாய் ஆக்கி,
தீவிர வாத வேர்களை அறுத்து
தீவிர மான முயற்சிகள் எடுத்து
மன ஏடுகளில் மதங்களை அழித்து
பதிவேடுகளிலும் சாதிகள் ஒழித்து
அடுத்த தலைமுறை வாழ்ந்திட நினைத்து
அனைத்து வளங்களும் சுரண்டுதல் தடுத்து
அரிய தலைமை தேடிப் பிடித்து
அரசியல் சாக்கடை தூய்மைப் படுத்து
தேசப் பற்றை கொஞ்சம் நீட்டி
உலகப் பற்றுடன் உயர் வழி காட்டும்
உயர்ந்த தலைவனை உண்மையாய் தேடு
உன்னத பணிசெய் ஓர்முனைப் போடு
ஓட்டை நோட்டாய் மாற்றிட வேண்டாம்
ஓட்டைப் படகில் பயணம் வேண்டாம்
மந்தை ஆடாய் இன்னுமா வாழ்வாய்
சிந்தனை செய்வாய் சீர்பட செய்வாய்
உந்தன் கையில் வாக்குச் சீட்டு
ஊழல் செய்வோர்க் கதுவே வேட்டு
எழுதிய விதியை மாற்றிக் காட்டு
எழுச்சி கொண்டே போடுஉன் ஒட்டு
*************************************************
உயர்ந்த தலைவனை எங்கே தேடுவது? எல்லாம் ஒரே கு. ஒரே ம. ஏதோ நம் ஓட்டை வேறு யாரும் போடாமல் நோட்டா வாவது போட்டு விட்டு வர வேண்டியதுதான்! :)))
பதிலளிநீக்கு+ve ஸ்ரீராமா இப்படி சொல்வது
நீக்கு#உந்தன் கையில் வாக்குச் சீட்டு
பதிலளிநீக்குஊழல் செய்வோர்க் கதுவே வேட்டு #
ஆட்சிக்கு வருபவர்கள் எல்லோருமே ஊழல் செய்யத்தான் போகிறார்கள் ,நம் தலைமுறையில் இவர்கள் திருந்தப் போவதில்லை !
த ம 2
நன்றி
நீக்கும்... நடந்தால் சரி...!
பதிலளிநீக்குநன்றி டிடி
நீக்குசரியான வழிகாட்டும் கவிதை அய்யா.
பதிலளிநீக்கு“ஓட்டை நோட்டாய் மாற்றிட வேண்டாம்
ஓட்டைப் படகில் பயணம் வேண்டாம்” என்பதும்,
“எழுதிய விதியை மாற்றிக் காட்டு
எழுச்சி கொண்டே போடுஉன் ஒட்டு “ என்பதும் என்னைக் கவர்ந்த வரிகள்.
இதை துண்டறிக்கையாக அச்சிட்டு அந்தந்தப் பகுதியில் மக்களிடம் கொண்டுபோய்ச் சேர்த்தால் நல்லது நடக்கலாம்... அப்படி ஒரு நல்லகவிதை அய்யா.
ஹலோ! சார்! நாமளும் அவங்கள நம்பி ஒவ்வொருதடவையும் ஓட்டு போடறோம் ஆனா அவங்க நமக்கு வேட்டுதான் வைக்கிறாங்க! நம்ம கையில வாக்குச் சீட்டு இருந்து என்னங்க பிரயோசனம்? இந்தத் தடவையும் அதாங்க நடக்கப் போவுது!
பதிலளிநீக்கு** உயர்ந்த தலைவனை உண்மையாய் தேடு** நான் அப்படித் தேடித் தேடித்தான் ஒபாமாவுக்கு ஓட்டுப் போட்டேன். என் ஓட்டால்தான் அவரு ஜெயிச்சாருனு நானும் பெருமையா சொல்லிக்கிறது :)) ஓட்டுப்போட நெனச்சாலும் உங்க ஊரில் கள்ள ஓட்டுத்தான் போட முடியும்! :) அட் லீஸ்ட், எனக்கு யாருக்க்கு ஓட்டுப் போடுவதென்ற இந்த ஒரு தொல்லையாவது இல்லை இப்போதைக்கு! :)
பதிலளிநீக்குநாங்க ஒட்டு போட்டுதனே ஆகனும்
நீக்குசோக்காக் சொல்லிக்கினபா...!
பதிலளிநீக்கு//உந்தன் கையில் வாக்குச் சீட்டு // எங்கைல கீறது "நோட்டோ" க்குத்தாம்பா...
அல்லாம் போட்டாச்சு... போட்டாச்சு...!
நன்றி முட்டா நைனா
நீக்குஅருமை.
பதிலளிநீக்குநன்றி.
நன்றி ரத்தினவேல் ஐயா
நீக்குஅரசியல்வாதிகளை தண்டிக்க நம்மிடம் இருக்கும் ஒரே ஆயுதம் - வோட்டு....
பதிலளிநீக்குஅருமை ஐயா
பதிலளிநீக்குத.ம.9
பதிலளிநீக்குஇதெல்லாம் நடந்தா நல்லாத்தான் இருக்கும்.............ம்ம்ம்ம்ம்ம்ம்...... கனவில் கூட நடக்காது போலிருக்கே...........
பதிலளிநீக்குமுதலில் கவிதையாய் நல்ல எழுத்தாய் ரசிக்க முடிகிறது.வாழ்வில் முன்னேற்றம் என்பதே இல்லையோ என்று எண்ணத் தோற்றுவிக்கும் கவிதை. ஆனால் அப்படியல்ல. தேனை எடுப்பவன் முழங்கையை நக்கட்டும். ஆனால் எல்லாவற்றையும் அவன் குடித்து முழங்கையில் வழிவதை மட்டும் நமக்குத் தர விடக் கூடாது.ஏதோ படத்தில் வரும் வசனம் போல ஆளுக்கொரு தலைவன் அவனவனுக்கு ஒரு பட்டினிப் பட்டாளம் என்று மலிந்து விட்ட அரசியல் கட்சிகள் வருவதற்கு நாமே காரணம் சினிமாப் பாடல்களில் வரும் மாதிரி ஒரே பாடலில் ஓங்கி வளர நினைக்கிறோம் THERE IS NO SUBSTITUTE TO HARD WORK அரசாங்கம் ஆயிரம் நல்லது செய்தாலும் செய்யாமல் விட்டதே உறுத்துகிறது. சில்லறைக் கட்சிகளை பகிஷ்கரியுங்கள். மீதி இருக்கும் கட்சிகளில் நமக்கு நல்லது செய்வார்கள் வெறும் வார்த்தைச்சவுடால் மட்டுமல்ல என்று தோன்றும் கட்சிகளுக்கு ஓட்டுப் போடுங்கள். எந்தக் கட்சியானாலும் சந்தர்ப்பம்பார்த்து கட்சி மாறுபவருக்கு ஓட்டுப் போடாதீர்கள்,
பதிலளிநீக்குநல்ல கவிதை! ஆனால் நல்ல வேட்பாளர்களைத்தான் தேடுவது கஷ்டமாக இருக்கிறது! எங்கள் தொகுதியில் முக்கிய கட்சி வேட்பாளர்கள் யாரும் எனக்கு பிடிக்கவில்லை! இதரர்களை தெரியவில்லை! நோட்டாதான் வழி போலிருக்கிறது!
பதிலளிநீக்குஇந்தமுறை எல்லோரும் வோட்டுப் போடுவார்கள் என்று கொஞ்சம் எதிர்பார்க்கலாம். ஊர் மூன்றாகப் பிளந்திருக்கிறதே!
பதிலளிநீக்குஊழல் ஒழியும் நாளில்லை!
பதிலளிநீக்குஉண்மை அதுவே ! வேறில்லை !
ஓட்டை நோட்டாய் மாற்றிட வேண்டாம்
பதிலளிநீக்குஓட்டைப் படகில் பயணம் வேண்டாம்
மந்தை ஆடாய் இன்னுமா வாழ்வாய்
சிந்தனை செய்வாய் சீர்பட செய்வாய்
உந்தன் கையில் வாக்குச் சீட்டு
ஊழல் செய்வோர்க் கதுவே வேட்டு
எழுதிய விதியை மாற்றிக் காட்டு
எழுச்சி கொண்டே போடுஉன் ஒட்டு
மிகவும் இரசித்தேன் நண்பரே. நறுக்கென்று சொன்னீர்கள்.
இரசித்தேன் முரளி.....
பதிலளிநீக்குநல்லதொரு மாற்றம் உண்டாகட்டும். ஒவ்வொரு முறையும் நல்லது செய்வார் என நம்பி வாக்களிக்க, ஒவ்வொரு முறையும் மக்களுக்கு ஏமாற்றம் மட்டுமே :(
"உயர்ந்த தலைவனை உண்மையாய் தேடு
பதிலளிநீக்குஉன்னத பணிசெய் ஓர்முனைப் போடு
ஓட்டை நோட்டாய் மாற்றிட வேண்டாம்
ஓட்டைப் படகில் பயணம் வேண்டாம்" என்ற
வழிகாட்டலை வரவேற்கிறேன்.
நம்மாளுகள் தெளிவு பெற்றால் போதுமே!
எழுதிய விதியை மாற்றிக் காட்டு
பதிலளிநீக்குஎழுச்சி கொண்டே போடுஉன் ஒட்டு
>>>
நல்லா சிந்திச்சு ஓட்டுப் போடச்சொல்லுங்க.