என்னை கவனிப்பவர்கள்

வெள்ளி, 18 ஏப்ரல், 2014

சிரிப்பு வந்தா சிரிக்கலாம்  இதெல்லாம் படிச்சா சிரிப்புவராதுன்னு எனக்கு தெரியும் . ஏன்னா எல்கஷன் நேரத்தில பல கோமாளித் தனங்களை பாத்து சிரிச்சிக்கிட்டு இருக்கிற உங்களுக்கு இதை பாத்து சிரிப்பு வராம போறதில ஆச்சர்யம் இல்ல. சரி பரவாயில்லன்னா கொஞ்சம் சிரிச்சிவைங்க 
'உங்க வீட்டுக்காரர்  தமிழ் வருடப் பிறப்பிற்கு உனக்கு என்ன வாங்கிக் கொடுத்தார்?'


'எனக்கு எங்க வாங்கிக் கொடுத்தார்? அவருக்குத்தான் ஒரு கிரைண்டர் வாங்கிக் கிட்டார்.'


'சார்! கல்யாணம் ஆன நீங்க எப்படி ஓட்டப்பந்தயத்தில முதலாவதா வந்தீங்க?'
'என் மனைவி பின்னாடி துரத்திட்டு வர 
மாதிரி நினச்சிகிட்டேன்.''தலைவரே! நீங்க அந்த நடிகையோட உல்லாசமா இருந்தப்போ வீடியோ புடிச்சவங்களை கையும் களவுமா புடிச்சிட்டீங்களாமே! என்ன பண்ணீங்க!'

'விடுவனா அவங்களை? சி.டி போட்டதும் முதல் காப்பி எனக்குதான் குடுக்கனுன்னு அடிச்சி சொல்லிட்டேன்.'


 
'ஏண்டா! தலைவர்  மீட்டிங்ல பேசறதுக்கு லோக்பால் பத்தி விசாரிச்சிட்டு வரச் சொன்னாரே விசாரிச்சயா
'அண்ணே! எல்லா பால்காரன் களையும் கேட்டுட்டேன். எருமைப்பால் பத்தி சொல்றாங்க பசும்பால் பத்தி  சொல்றாங்க.ஆட்டுப்பால்,  கழுதைப் பால் ஏன் ஒட்டகப் பால் பத்தியும்   சொல்றாங்க. ஆனா லோக்பால் பத்தி யாருக்குமே தெரியலன்னே.''நம்ம தலைவருக்கு விளயாட்டுமேலே ரொம்ப ஆர்வம் அதிகம்.'

'எப்படி சொல்ற?'

'ஃபுட்பால்  வாலிபால் மாதிரி லோக்பாலையும் ஒலிம்பிக்ல சேக்கனும்னு சொல்றாரு'.
"முல்லை பெரியார்  பற்றி எனக்குத் தெரியாதாம். எதிர் கட்சிக்  காரர்கள் என்னிடமே சவால் விடுகிறார்கள். பெரியாரை வம்புக்கிழுத்தால் நான் வாயை மூடிக் கொண்டிருக்க மாட்டேன். அவருக்காக பெரும்                   போராட்டம் நடத்துவேன்  என்றும் எச்சரிக்கிறேன்.""பெரியோர்களே! தாய்மார்களே! நம்முடைய அண்ணன்தான் இரவு 8.00 மணி முதல் காலை 8 மணிவரை  அதிக நேரம் அமைச்சராக இருந்தவர் சாதனை படைத்தவர்  என்பதால் அவருக்கே வாக்களிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.  
  
 "அனு உலையை  மூடவேண்டும் அனு  உலையை  மூடவேண்டும் என்று சொல்பவர்களே! என் உறவினர் அனு வந்து உலையை  மூடவேண்டும் என்று சொல்வதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்."தலைவரோடபழிவாங்கும்உணர்ச்சி ஒவரா போயிடுச்சி?
எப்படி சொல்ற

அமாவாசை அன்னிக்கு எதிர்கட்சி தலைவர்மேல நிலா அபகரிப்பு வழக்கு போடப்போறாராம்

சங்கீதவித்வானை எம்.பி ஆக்கினது
தப்பா  போச்சு?
ஏன்?
லோக்சபாவில கச்சேரி பண்ண சான்ஸ் கேட்டு நச்சரிக்கிறாராம்ஹலோ! டார்லிங் நம்ம காதல் உங்கங்கப்பாவுக்கு தெரிஞ்சு போச்சுங்கிறதுக்காகவா
இவ்வளவு
கவலைப்படற?

எங்கப்பாவைப் பத்தி உங்களுக்கு தெரியாது? அவர் எப்படியாவது நம்ம ரெண்டு பேருக்கும்  கல்யாணம் பண்ணி வச்சுடுவார்.

' உன் சமையல் அறையில் நான் உப்பா? சர்க்கரையா?'.

சமையல் காரரே நீங்கதானே!என்கிட்டே கருப்பு பணம் எதுவும் இல்ல. வேணும்னா வந்து செக் பண்ணிக்க சொல்லுங்கன்னு  தலைவர் சவால் விடராரே?

கறுப்புப் பணம் கறுப்பு கலர்ல
இருக்கும்னு நினைச்சிக்கிட்டு
இருக்காரு.


*************************************************************************************

படித்து விட்டீர்களா?
நிறம் வெளுத்துப் போகும் நிஜம்

45 கருத்துகள்:

 1. வடிவேலின் ஜாமீன் ஜோக் பாணியில் வாசிக்க வாசிக்க லோக்பால் ஜோக் செம!!
  ஆனாலும் விஜயகாந்த் பிரசாரத்துக்கு ஈடு கொடுக்கமுடியுமா!??
  ஹா...ஹா..ஹா,,,

  பதிலளிநீக்கு
 2. ஜோக்கும் ,படமும் அருமை !
  த ம +1

  பதிலளிநீக்கு
 3. ரசனை மிகுந்த நகைச்சுவைத் துணுக்குகள் :))))வாழ்த்துக்கள் சகோ
  மிக்க நன்றி பகிர்வுக்கு .

  பதிலளிநீக்கு
 4. சிரிப்புவரத்தான் செய்கிறது ஆனால் சிரிக்கத் தான் முடியவில்லை ஏன்னா பல்லுவலி.
  ஹா ஹா நான் சும்மா..... தான் ரசித்தேன் சிரித்தேன். தொடர வாழ்த்துக்கள் ...!

  பதிலளிநீக்கு
 5. உண்மையிலேயே பொங்கும் நகைச்சுவைத் துணுக்குகள் தான்! அட! உங்களுக்குள் ஒரு உ.ராஜாஜியும் ஒளிந்திருப்பதைக் காட்டிவிட்டீர்களே! நல்ல மனிதரின் உடலும் உள்ளமும் நல்லா இருப்பதன் அடையாளமே அவரது நகைச்சுவை உணர்வுதானே? அருமை முரளி அய்யா. பொருத்தமான படங்களையும் சேர்த்தது சிறப்பு. (எனக்கு ஒரே ஒரு குறை பெண்களைக் கிண்டல் செய்யும் ஜோக்ஸ்.. யூ டு முரளி?)

  பதிலளிநீக்கு
 6. அருமையான நகைச்சுவைத் துணுக்குகள்
  படித்து ரசித்துச் சிரித்தேன்
  குறிப்பாக கிரைண்டர்,மற்றும் கறுப்புப் பணம்
  பகிர்வுக்கும் தொடரவும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 7. நிறைய ஜோக்குகள் புன்னகைக்க வைத்தன. நில அபகரிப்பு-நிலா அபகரிப்பு... ஹாஹாஹா

  பதிலளிநீக்கு
 8. அருமையான நகைச்சுவைத் துணுக்குகள்.....ஆமாம் புதுவருடத்தில் கிரைண்டர் உங்களுக்காக வாங்கிட்டீங்களா? கொடுத்து வைச்ச ஆளுங்க நீங்க...அப்ப உங்களுக்கு நிறைய நேரம் பதிவு போட கிடைக்கும்

  பதிலளிநீக்கு
 9. வாழ்த்துக்கள் சகோதரா இன்றைய வலைச்சர அறிமுகத்திற்கு .

  பதிலளிநீக்கு
 10. நகைச்சுவைகளுக்குத் தோதாக படமும் தேடிப் போட்டிருக்கும் உங்கள் சிரத்தை ரசிக்க வைக்கிறது. உத்தரவாதமான புன்னகைக்கு கியாரண்டி உங்களின் ஜோக் பூங்கா.

  பதிலளிநீக்கு
 11. நகைச்சுவையில் இன்னும் நல்லா கலக்குங்க

  பதிலளிநீக்கு
 12. நல்ல நகைச்சுவை துணுக்குகள்....

  பதிலளிநீக்கு
 13. ஒவ்வொரு துணுக்கும் இதழ்களை விரிய வைத்தது.

  பதிலளிநீக்கு
 14. சிரிப்பு வெடிதான் அதுவும் அம்மாவாசை நிலா அபகரிப்பு சூப்பர்!

  பதிலளிநீக்கு
 15. முரளி,

  எல்லாம் சொந்த சரக்கா?

  சில நகைச்சுவை துணுக்குகள் படிச்சா போல இருக்கு,லோக்சபாவில் கச்சேரி செய்றது நியாபகம் இருக்கு,ஒரு வேளை நீங்களே பத்திரிக்கையில எழுதினதோ?

  # சிரிப்பு வரலைனு சொன்னா அழ சொல்லிடுவீங்களோ , ஹி...ஹி எனக்கும் சிரிப்பு வந்துச்சு!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இந்த நகைச்சுவை துணுக்குகள் ரெண்டு ஆண்டுகளுக்கு முன் நான் பதிவு எழுத ஆரம்பித்தபோது வெளியிட்டவை . அப்போ அதை அவ்வளவா யாரும் படிக்கல.
   உப்பா சர்க்கரையா மட்டும் வீட்டம்மா சொன்ன ஜோக்கை கொஞ்சம் மாத்தி இருக்கேன். மத்தது எல்லாம் என் சொந்த சரக்கே.
   இவற்றில் சிலவற்றை விகடன் குமுதம் போன்றவற்றிற்கு அனுப்பி இருந்தேன். பல நாட்கள் பார்த்தபின்னும் வெளி வந்ததாகத் தெரியவில்லை .. பின்னர் வந்ததா என்பதும் தெரியாது
   ஒரு முறை ராணி வார இதழுக்கு கவிதைகள் சிலவற்றை அனுப்பி இருந்தேன். ஆறு மாதம் வரை வெளியாகாததால் புத்தகம் வாங்குவதையே நிறுத்தி விட்டேன். ஓராண்டுக்கு பின் அவற்றில் ஒன்று வெளிவந்ததை அதன் பின் ஆறுமாதம் கழித்து நண்பர் ஒருவர் மூலம் தெரிந்து கொண்டேன்.

   நீக்கு
 16. நீங்க ஆரம்பத்தில் சொன்னது சரி தான் சார் சமீபத்திய அரசியல் காமெடி அந்த அளவுக்கு இருக்கிறது. நகைச்சுவைகளை ரசித்தேன்

  பதிலளிநீக்கு
 17. நகைச்சுவை துணுக்குகள் சிரிக்க வைத்தன! அருமை! தொடர்ந்து எழுதுங்கள்! நன்றி!

  பதிலளிநீக்கு
 18. நகைச்சுவைகள் அனைத்தும் சுவை ஐயா...

  பதிலளிநீக்கு
 19. உப்பா சர்க்கரையா? :))))

  அனைத்துமே அருமை முரளி... ரசித்தேன்.

  பதிலளிநீக்கு
 20. அனைத்தும் அருமை, குறிப்பாக நிலா அபகரிப்பு... ஹாஹா....

  பதிலளிநீக்கு
 21. அல்லாமே புச்சா கீதுபா...! படங்கள்லாம் சோக்கா கீதுபா...!

  அல்லாம் போட்டாச்சு... போட்டாச்சு...!

  பதிலளிநீக்கு
 22. குமுதத்திலும் தங்கள் படைப்பை
  மீண்டும் ஒருமுறைப் படித்தேன்
  மிக்க மகிழ்ச்சி
  படைப்புகள் தொடர
  மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உடனே வாழ்த்தியமைக்கு நன்றி சார். தொடக்கத்தில் இருந்து இன்று வரை என்னை ஊக்கப் படுத்தி வருகிறீர்கள். உங்களைப்போன்றவர்களின் அறிமுகம் வலையுலகம் தந்த வரப் பிரசாதம்
   மிக்க நன்றி

   நீக்கு
 23. குமுதத்தில் கதை படைத்ததற்கு வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
 24. வணக்கம்
  முரளி(அண்ணா)

  வாய் விட்டுச்சிரித்தால் நோய் விட்டுப்போகும் என்பர்கள்..... அதற்கு அமைவாக உள்ளது நகைச்சுவை துளிகள்... அருமையாக உள்ளது வாழ்த்துக்கள் அண்ணா.

  சில நாட்கள் இணையம்வர முடியாமல் போனது.இனி தொடரும் வருகை..

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895