சிவப்பு நிற அழகன் நான்
இப்போது அதிகம் கவனிக்கப் படாத
கிழவனாகிப் போனேன்
தெருவோரத்தில்
உங்களுக்காகவே
மழையிலும் வெயிலிலும்
மகிழ்ச்சியுடன் நின்றவன் நான்
இன்று
விஞ்ஞான வளர்ச்சியால்
தூக்கி எறியப்பட்டுக் கொண்டிருக்கும்
துர்பாக்கியசாலி நான்
ஓடாமல்
ஓரிடத்தில் நின்று கொண்டே
உங்களுக்காக தூது சொன்ன
தூயவன் நான் .
துன்பங்களையும் துயரங்களையும்
கண்ணீர்க் கறையோடு
பார்த்தவன் நான்
உங்கள் காதலை தேக்கி வைத்து
அனுப்பியவனும் நான்
சாலை ஓரம் எனது இருப்பிடம்
என்றாலும்
வேலை தேடுபவர்களுக்கு
வாசலாய் இருந்திருக்கிறேன்.
வேலை கிடைத்தாலும்
எனக்குத்தான் முதலில் தெரியும்
வேலை இழந்தாலும்
எனக்குத் தான் தெரியும்
கண்டுகொள்ளாமல்
போகிறீர்களே!கனவான்களே!
உங்கள் மகிழ்ச்சியையும்
வாங்கி இருக்கிறேன்
கோபத்தையும்
தாங்கி இருக்கிறேன்
உங்கள் வீட்டு திருமணம்தான்
ஆனால்
முதல் அழைப்பிதழ் எனக்குத்தான்
எத்தனையோ பேருக்கு
மகிழ்ச்சியை
மனமார பகிர்ந்தளித்திருக்கிறேன்
பாசத்தை பல்லாண்டுகளாய்
சுமந்திருக்கிறேன்
நெருப்பு வார்த்தைகளயும் அறிவேன்
நெகிழ்ச்சி மொழிகளையும் அறிவேன்
ஐயா! மஞ்சள்பை கராரே
உங்களுக்கும் நினைவில்லையா?
நான் யாரென்று
இளைஞர்கள்தான் என்னை
இகழ்ச்சியுடன் பார்க்கிறார்கள்
நீங்களுமா?
இனிவரும்
காலங்களில்
அருங்காட்சியகத்தில்தான்
அழகாய் அமர்ந்திருப்பேன்.
உங்கள் முன்
ஆச்சர்யக் குறியாய் நிற்கும்
என்னை தெரிகிறதா?
வாயும் வயிறும் இருந்தும்
வாழ்விழக்கப் போகும் என்னை
கவனிக்கவா போகிறீர்கள்
பரவாயில்லை!
கடந்து போகுமுன்
உங்கள் கணினி சுட்டியை
கீழுள்ள கேள்விக்குறிமீது
வைத்துப் பாருங்கள்
நான் யாரென்பதை
அறிந்து கொள்வீர்கள்
அப்போதாவது
பரிதாபப் படுகிறீர்களா
பார்ப்போம்!
**************************************
மவுசை கேள்விக் குறிப் படத்தின் மீது வைத்தால் கவிதையின் விடைக்கான படம் தெரிகிறதா? புதிய முயற்சி செய்துள்ளேன். அதுவேலை செய்கிறதா என்பதை தெரிந்து கொள்ளவே இந்தக் கேள்வி
*******************************************************************************
இது போன்ற இன்னொரு கவிதை
இது யாருடைய கண்ணீர்க் கதை
இப்போது அதிகம் கவனிக்கப் படாத
கிழவனாகிப் போனேன்
தெருவோரத்தில்
உங்களுக்காகவே
மழையிலும் வெயிலிலும்
மகிழ்ச்சியுடன் நின்றவன் நான்
இன்று
விஞ்ஞான வளர்ச்சியால்
தூக்கி எறியப்பட்டுக் கொண்டிருக்கும்
துர்பாக்கியசாலி நான்
ஓடாமல்
ஓரிடத்தில் நின்று கொண்டே
உங்களுக்காக தூது சொன்ன
தூயவன் நான் .
துன்பங்களையும் துயரங்களையும்
கண்ணீர்க் கறையோடு
பார்த்தவன் நான்
உங்கள் காதலை தேக்கி வைத்து
அனுப்பியவனும் நான்
சாலை ஓரம் எனது இருப்பிடம்
என்றாலும்
வேலை தேடுபவர்களுக்கு
வாசலாய் இருந்திருக்கிறேன்.
வேலை கிடைத்தாலும்
எனக்குத்தான் முதலில் தெரியும்
வேலை இழந்தாலும்
எனக்குத் தான் தெரியும்
கண்டுகொள்ளாமல்
போகிறீர்களே!கனவான்களே!
உங்கள் மகிழ்ச்சியையும்
வாங்கி இருக்கிறேன்
கோபத்தையும்
தாங்கி இருக்கிறேன்
உங்கள் வீட்டு திருமணம்தான்
ஆனால்
முதல் அழைப்பிதழ் எனக்குத்தான்
எத்தனையோ பேருக்கு
மகிழ்ச்சியை
மனமார பகிர்ந்தளித்திருக்கிறேன்
பாசத்தை பல்லாண்டுகளாய்
சுமந்திருக்கிறேன்
நெருப்பு வார்த்தைகளயும் அறிவேன்
நெகிழ்ச்சி மொழிகளையும் அறிவேன்
ஐயா! மஞ்சள்பை கராரே
உங்களுக்கும் நினைவில்லையா?
நான் யாரென்று
இளைஞர்கள்தான் என்னை
இகழ்ச்சியுடன் பார்க்கிறார்கள்
நீங்களுமா?
இனிவரும்
காலங்களில்
அருங்காட்சியகத்தில்தான்
அழகாய் அமர்ந்திருப்பேன்.
உங்கள் முன்
ஆச்சர்யக் குறியாய் நிற்கும்
என்னை தெரிகிறதா?
வாயும் வயிறும் இருந்தும்
வாழ்விழக்கப் போகும் என்னை
கவனிக்கவா போகிறீர்கள்
பரவாயில்லை!
கடந்து போகுமுன்
உங்கள் கணினி சுட்டியை
கீழுள்ள கேள்விக்குறிமீது
வைத்துப் பாருங்கள்
நான் யாரென்பதை
அறிந்து கொள்வீர்கள்
அப்போதாவது
பரிதாபப் படுகிறீர்களா
பார்ப்போம்!
**************************************
மவுசை கேள்விக் குறிப் படத்தின் மீது வைத்தால் கவிதையின் விடைக்கான படம் தெரிகிறதா? புதிய முயற்சி செய்துள்ளேன். அதுவேலை செய்கிறதா என்பதை தெரிந்து கொள்ளவே இந்தக் கேள்வி
*******************************************************************************
இது போன்ற இன்னொரு கவிதை
இது யாருடைய கண்ணீர்க் கதை
முதல் இரண்டு பத்திகளிலேயே புரிந்து விட்டது நீங்கள் சொன்னது யாரென....
பதிலளிநீக்குமறந்து போன தபால் பெட்டியை கவிதைகள் மூலம் நினைவு படுத்தியது நன்று.
முதல் கருத்துக்கு நன்றி
நீக்குமிகவும் ரசித்தேன்
பதிலளிநீக்குவெங்கட் நாகராஜ் அவர்கள் சொன்னது போல
முதல் இரண்டு பத்தியிலேயே புரிந்து போனாலும்
தொடரத் தொடர உள்ளே ஒரு சோக உணர்வுப் பரவுவதைத்
தவிர்க்க இயலவில்லை
மனம் கவர்ந்த கவிதை
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
நன்றி ஐயா
நீக்குகடந்து செல்லும் போது கேள்வி குறியில் வையுங்கள் பார்ப்போம். அதுவும் நன்றாகவே உள்ளது. பாவம் தான் பரிதாபம் தான். என்ன செய்வது காலம் செய்த கோலம் அல்லவா? நல்ல கற்பனை அருமை அருமை ! வாழ்த்துக்கள்...!
பதிலளிநீக்குசுவை பட சொல்லிச் சென்று இருக்கிறீங்க முரளி பதிலை மறைத்து வைத்த விதம் அருமை & புதிய முயற்சிக்கு பாராட்டுகள்
பதிலளிநீக்குநன்றி மதுரை தமிழன்
நீக்குஅட...! சூப்பர்...! இது போல் பல முயற்சிகள் செய்யவும்...
பதிலளிநீக்குரசிக்க வைக்கும் வரிகளுக்கும் வாழ்த்துக்கள்...
உங்கள் அளவுக்கு முடியாது. என்றாலும் சிறுமுயற்சியே . இதற்கு நீங்களும் ஒரு காரணம் நன்றி DD சார்
நீக்குஇந்த டெக்னிக் புதுசாத்தான் இருக்கு முரளி.நல்லாவும் இருக்குது. யாரைக் குறிப்பிடுகிறீர்கள் என்பதை படத்தை க்ளிக்காமலேயே அறிய முடிந்தது. மனம் தொட்ட கவிதை. கலக்குறீங்க முரளி.
பதிலளிநீக்குஇந்த விஷயத்துல தனபாலன், பரிதி முத்துராசன் போன்றவர்களை மிஞ்ச முடியாது
நீக்குமுதல் நான்கு வரிகளிலேயே கண்டுபிடித்துவிட்டேன். இது ஒரு பழங்கால சின்னமாகவே இன்று மாறிப்போனது.
பதிலளிநீக்குதபால்பெட்டிகளைப் பார்க்கையில் எனக்கும் கேள்வி குறிதான் கண்ணில் தெரிகிறது .அடுத்த டெக்னிகல் அசத்தல் எதிர்ப் பார்க்கிறேன் !
பதிலளிநீக்குத ம +1
இந்த மின்னஞ்சல் வந்ததாலே
பதிலளிநீக்குஅந்த அஞ்சல்பெட்டியை மறந்தேன்
உங்கள் கவிதை - அதை
மீட்டுப் பார்க்க வைத்திருக்கிறதே!
எழுதிப் போட்டால் மூணு நாளாகும், சில சமயம் போஸ்ட் மேனே எங்கேயாச்சும் போட்டுவிடுவான் தகவல் போய்ச் சேராது. அடுத்த வினாடியே தொடர்புகொண்டு தகவலைத் தெரிவிக்க முடியும் என்றான பின்னர் காத்திருத்தல் எதற்கு? பேப்பர் செலவும் மிச்சம். தலை கீழாக நின்றாலும் கடிதம் மட்டும் எழுத மாட்டேன், வந்தாலும் பதிலே போடா மாட்டேன் என்று சொல்லித் திரியும் சோம்பேறிகள் கொள்ளை பேரு நாட்டில சுத்திகிட்டு இருக்கானுவ................அவனுங்களுக்கு எதுக்கு கடிதாசி???
பதிலளிநீக்குதபால் பெட்டின்னு கண்டுபிடிச்சுட்டாலும் மவுஸ் க்ளிக் அசத்திட்டிங்க.. தப்பித்தவறி இப்ப லெட்டர்லாம் போட்டா பாக்ஸ் க்ளியர் பண்றாங்களான்னே தெரியலை... முன்பெல்லாம் கட்டாயமாக இரண்டு வேளை க்ளியர் பண்ணுவாங்க... இப்ப அப்படி தெரியலை...
பதிலளிநீக்குகவிதையைப் படித்து விட்டு , வீதியிலே எட்டிப் பார்தேன்! எதிரிலே, தபால் பெட்டி!
பதிலளிநீக்குஒர்வரேனும் கவனித்தாரே என்று தபால் பெட்டி மகிழ்ன்ஹ்டிருக்கும் ஐயா கருத்துக்கு மிக்க நன்றி ஐயா
நீக்குபடிக்கத் துவங்கியதுமே அவிழ்ந்து விடுகிறது புதிர். கேள்விக்குறியைச் சொடுக்கினால் எனக்கு அது தெரிய அனுமதி இல்லை என்று வருகிறது,
பதிலளிநீக்குதபால் பெட்டி கவிதையும், புதிய உத்தியும் அருமை! வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குபடிக்கத் துவங்கியதுமே புரிந்து விட்டது. மவுஸ் க்ளிக் அருமை.
பதிலளிநீக்குஅருமையான முயற்சி சகோதரா இதன் செய்முறை விளக்கத்தையும்
பதிலளிநீக்குஇனி வரும் பகிர்வுகளில் தர முடிந்தால் தாருங்கள் .உங்களுக்கு
என் மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் .மிக்க நன்றி பகிர்வுக்கு .
த.ம .9
எல்லாரும் சொன்ன மாதிரியே முதல் இரண்டு பத்திகளிலேயே தெரிஞ்சுபோச்சு...
பதிலளிநீக்குவானத்தில் தெரியும்
பதிலளிநீக்குவட்டமாக இருக்கும்.... அது என்ன? என்பத போல் பாடல் இருக்கிறது மூங்கில் காற்று.
நான் மேலும் உங்களிடம் அதிகமாக எதிர்பார்க்கிறேன்.
ஊகிக்கப் பதற்கு கடினம் என்பதற்காக எழுதவில்லை. அஞ்சல் பெட்டி தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டு தொடங்குவதாகவே அமைத்திருந்தேன் புதிதாக கற்ற உத்தியை பயன்படுத்த நினைத்தேன். அதன் விளைவே இந்த மாற்றம்
நீக்குநன்றி அருணா
கவிதையின் ஆரம்பத்திலேயே விடை தெரிந்து விடுவதால் மன பாராட்தொடுதான் படித்தேன்.
பதிலளிநீக்குஅருமை மறந்த தபால்பெட்டியை கவிதையில் மீட்டிய விதம்!
பதிலளிநீக்குதபால் பெட்டி
பதிலளிநீக்குஎத்தனை எத்தனை
நல்ல செய்திகளை
அமங்கலச் செய்திகளைச்
சுமந்த பெட்டி,
இன்று எழுதத்தான் ஆள் இல்லை.
என்னே காலத்தில் கோலம்.
அருமையான கவிதை ஐயா
மறைந்திருந்து தோற்றம் பெறும் தபால் பெட்டி படம் அருமை
த.ம.16
பதிலளிநீக்குகண்டுபிடிக்க முடிந்தது கவிதையிலேயே... ஆனாலும் கேள்விக்குறியில் ஒளிந்திருந்த பதில் அருமை.....
பதிலளிநீக்குசிவப்பு நிறத்தில் பளிச்சென்று
பதிலளிநீக்குஒவ்வொரு பகுதியின் மூலையிலும்
கேட்பாரற்றுத் தொங்குகின்றேன்/நிற்கின்றேன்
வெயிலிலும், மழையிலும்
உங்களுக்குச் சேவை செய்யவே
தினமும் என்னைப் பார்த்துச் செல்கின்றீர்கள்!
உங்கள் வீட்டிற்கு வருபவர்க்கு
அடையாளமும் நான்தானே!
அப்படியிருந்துமா என்னைத் தெரியவில்லை!
“நீங்க இப்ப எங்க இருக்கீங்க? ஓகே அந்தத் தெருவுக்கு வந்துட்டீங்களா? அங்கருந்து வலது பக்கம் பாருங்க அங்க ஒரு தபால்பெட்டி தொங்கிட்டுருக்கும்...அதை ஒட்டினாப்புல இருக்குக அதாங்க நம்ம வீடு”
அருமை
நீக்குநாமெல்லோரும் மறந்துபோன தபால் பெட்டிக்கு அழகிய ஒரு கவிதை படைத்து இருக்கிறீர்கள். என்னதான் மின்னஞ்சல், கூரியர் என்று வந்துவிட்டாலும், சிலசமயம் போஸ்டில் அனுப்புவதுதான் தவறாமல் போய்ச் சேருகிறது.
பதிலளிநீக்குநல்ல கவிதை, முரளி. பாராட்டுக்கள்!
உங்கள் வரிகளிலேயே கிளிக் ஆய்டுச்சே நீங்க யாரை சொன்னீங்கனு !!
பதிலளிநீக்குஆனாலும் நல்ல ஐடியா !! நான் கூட நினைத்துக்கொள்வேன் இப்போ காதல்கோட்டை படம் வந்திருந்தால் எப்படி இருக்கும் என்று!!
தபால் பெட்டிக்கும் கவிதை படைத்தவரே! இப்போதெல்லாம் தபால் ஆபீஸ் எங்கே இருக்கிறது என்பதே பலருக்குத் தெரியாது! மின்னஞ்சலும் Net Banking உம் வந்துவிட்ட பிறகு தபால்காரரின் வேலை குறைந்துவிட்டது. தபால்காரரை எதிர்பார்க்கும் வேலையும் குறைந்துவிட்டது. பழையன கழிதல்...!
பதிலளிநீக்குகவிதை அருமை.
பதிலளிநீக்குகேள்விக்குறியில் ஒளிந்திருந்த பதில் அருமை.
வாழ்த்துகள் அய்யா.
ஆகா.. அருமை! அருமை அய்யா முரளி! நான்காவது பத்தியில் நான் கண்டுபிடித்து விட்டாலும், நீங்கள் கருவை உருவாக்கக் கொண்டு சென்ற அழகை ரசித்துக்கொண்டே கடைசி வரை வந்தேன்... நிறைவாக ஒரு கணினி மந்திரம் போட்டு அசத்திவிட்டீர்கள்! புதிய முயற்சியை நடைமுறைப் படுத்திய விதமும் அழகு! இந்தப் படத்திற்குக் கதை எழுதுங்கள் என்று போட்டி வைப்பார்கள் அதுபோல இதைச் சோதனை செய்திருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்... என்றாலும் மறக்க முடியாத விடுக(வி)தையைப் போட்டு வெற்றி கொண்டமைக்கு வாழ்த்துகள் அய்யா.
பதிலளிநீக்குஅருமையான முயற்சி...! வாழ்த்துக்கள்...!
பதிலளிநீக்குபுதிரைப் போலவே அது உணர்த்தும் ஒரு வைகயான மென்சோகமும் என்னைக் கவர்ந்தது...
அல்லாம் போட்டாச்சு... போட்டாச்சு...!
ஆன்ராய்ட் போனில் இமேஜ் சரியாத்தான் பதில் சொல்லிச்சு..
பதிலளிநீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குநவீன விடுகவி.
பதிலளிநீக்குமறைநத கதவுகளுக்குப் பின்.
அருமை ஐயா.
நவீன விடுகவி.
பதிலளிநீக்குமறைநத கதவுகளுக்குப் பின்.
அருமை ஐயா.
வணக்கம் அய்யா,
பதிலளிநீக்குஊமைக்கனவுகள் பக்கத்தில் கண்டு இங்கு வந்தேன்,
நான் உண்ர்ந்தேன் அது தான் என்று,
என் சிறுவயதில், நாடகமாக, நகைச்சுவையாக, சமுக அக்கறைச் சாதனமாக, என் பிறந்த நாளுக்கு உறவில் ஒருவர் 100 கார்ட் என,,,,,,,,,,,
எல்லாமுமாக இருந்த பெட்டி,,,,,,
அருமை,
தங்கள் முயற்சியும் நன்று,
வாழ்த்துக்கள், நன்றி.
நண்பரே...
பதிலளிநீக்குஉணர்வுமிக்க,மிக அருமையான கவிதை !
சுட்டியை இயக்கி, அந்த தபால் பெட்டியை கண்டபோது எனக்கு உண்டான பரவசம்...
கால மாற்றத்தில், விஞ்ஞான வளர்ச்சியில், தொழில்நுட்ப மற்றத்தில் என ஏதோ ஒரு காரணத்துக்காக பழையன மறைவதும் புதியன தோன்றுவதும் இயற்கைதான் என்றாலும் ஏக்கம் தவிர்க்க முடியாததாகிவிடுகிறதுதான் !
அந்த காலகட்ட மனிதனின் அடையாளமாக அது அமைந்துவிடுவதுதான் ஏக்கத்துக்கான காரணம் !
இந்த அருமையான கவிதையை என் வலைப்பூவில் குறிப்பிட்டதற்கு நன்றி.
சாமானியன்
அருமைண்ணா.
பதிலளிநீக்குசபாஷ் ! கவிதைக்கு அழகே பூடகம் தான். அது தான் இறுதிவரை சுவாரஸ்யம் கூட்டும்.அதை அழகாக கையாண்டிருக்கிறீர்கள்.
பதிலளிநீக்குபுதுக்கவிதை தான் என்றாலும் ஓசை நயத்தோடு எழுதியிருப்பது மேலும் சிறப்பு . தபால் பெட்டியைப் பற்றிய அனைத்துச் சிறப்புகளையும் ஒரே கவிதையில் அடக்கி விட்டீர்கள்.தற்போதைய சூழலில் சுமார் இருநூறு கவிதைகளுக்கு மேல் வாசித்ததில் கிடைத்த முழுமையான _ திருப்தியான கவிதை இது . பாராட்டுகிறேன் ! வாழ்த்துகிறேன் !
மிக்க நன்றி தங்கள் பெயர் தெரிவித்தால் மகிழ்ச்சி அடைவேன்
நீக்கு