மிகப் பெரிய பதிவர் திருவிழாவை நடத்தி அதன் பெருமையை நம் வலைப் பதிவுகளில் பேசி வந்தோம். இன்னும் அந்த வரலாற்று பதிவர் சந்திப்பு நிகழ்வு மனதை விட்டு அகலாத நிலையில் இன்னுமொரு இன்ப அதிர்ச்சி.
நமது 26.08.2012 அன்று நடைபெற்ற வலைப்பதிவர் திருவிழா ஆனந்த விகடனின் காதுகளை எட்டியுள்ளது.
ஆம்! நமது தமிழ் பதிவர் சந்திப்பு பற்றிய செய்தி ஆனந்த விகடன் என் விகடனில் வெளியாகி உள்ளது. நிகழ்வு பற்றிய செய்திகள் விளக்கமாக படங்களுடன் இடம் பெற்றிருக்கிறது. ஆனால் இணையத்தில் மட்டுமே காண முடியும் என்று நினைக்கிறேன். அதனால் இன்னும் பதிவர்கள் பலருக்கு எட்டவில்லை என்று கருதுகிறேன். பதிவர்கள் குழுமம் ஈட்ட இருக்கும் வெற்றிகளுக்கு இது முதற் படி என்று கருதுகிறேன். இந்த பதிவர் சந்திப்பு சென்னையில் மிகப் பிரமாதமாக நடைபெறவேண்டும் என்ற விதையை விதைத்த புலவர் ராமானுசம் அய்யா அவர்களுக்கும் உடனிருந்து உழைத்த அத்துணை நண்பர்களுக்கும் பங்கேற்ற மூத்த, இளைய பதிவர்களுக்கும் மீண்டும் ஒருமுறை நன்றி.
இன்னொரு மகிழ்ச்சியான செய்தியும் உண்டு. நமது அஞ்சாசிங்கம் செல்வின் இந்த வார வலையோசையில் இடம் பெற்றிருக்கிறார்.அவருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
இதோ என் விகடனில் வெளியான கட்டுரையின் "ஸ்னாப் ஷாட்கள்"
இதோ என் விகடனில் வெளியான கட்டுரையின் "ஸ்னாப் ஷாட்கள்"
இதோ வெளியான பக்கத்திற்கான இணைப்பு
என் விகடனில் பதிவர்கள் சங்கமம்
கவனிக்க: நண்பர் ஒருவரின் பின்னூட்டம்
**********************************
பதிவர் சங்கமத்தில் வாசிக்கப் பட்ட என்னுடைய கவிதை


