என்னை கவனிப்பவர்கள்

வெள்ளி, 4 செப்டம்பர், 2015

Follower விட்ஜெட் இணைக்கப் படாத வலைப்பூக்களை பின்தொடர முடியுமா?


கற்றுக் குட்டியின் கணினிக் குறிப்புகள் 
புதியவர்களுக்கு இந்தப் பதிவு பயன்படக் கூடும் 
வலைப் பூக்களில் பல வசதிகளை கூகிள் வழங்கி வருகிறது.அவற்றில் சிலவற்றை மட்டுமே பயன்படுத்துகிறோம். அவற்றில் நான் பயன்படுத்திய கற்றுக்கொண்ட ஒரு சிலவற்றை உங்களுடன் அவ்வப்போது
கற்றுக் குட்டியின் கணினிக் குறிப்புகள்  என்ற தலைப்பில் பகிர்ந்து வருகிறேன் ஒரு சிலருக்காவது பயன்படும் அல்லவா?

   வலைப்பூவில் எழுதுவன் நோக்கம் படைப்புத் திறனை வெளிப்படுத்துவது மட்டுமன்று. யாரும் படிக்க வேண்டியதில்லை எனது ஆத்ம திருப்திக்காகத் தான் எழுதுகிறேன்.பார்வையாளர்களைப் பற்றிக் கவலை என்று ஒரு சிலர் சொன்னாலும்  நமது படைப்புகளை பிறர் படிப்பதாலும்  அங்கீகரிப்பதாலும் மகிழ்ச்சி ஏற்படுகிறது என்பதே உண்மை .விவேக் ஒரு திறப்படத்துள் சொல்வது போல யாரும் இல்லாத கடையில் யாருக்காக டீ ஆற்ற வேண்டும்.
   நமது பதிவுகள்   நிறையப் பேரை சென்றடைய வேண்டும் என்று விரும்புவது அதற்கான முயற்சிகள் எடுப்பதும்   தவறில்லை. 
  அதன் பொருட்டே நமது பதிவை  படிப்பவர்களுக்கு  விரும்பினால் அவர்கள் பின் தொடர்வதற்கு ஏதுவாக Follower விட்ஜெட்  மற்றும்  EMAIL SUBSCRIPTION விட்ஜெட் இணைத்து வைத்திருப்போம். அதில் விவரங்கள் கொடுத்து    இணைப்பவர்களுக்கு நமது பதிவுகள் அவர்களது பிளாக்கர் டேஷ்போர்டுக்கு  போய் சேர்ந்து விடும். அதே போல பிறரது வலைப்பூக்களில் உள்ள இணைப்பு விட்ஜெட் மூலம் நமது பிளாக்கர் ஈமெயில் முகவரி கொடுத்து இணைத்துக் கொண்டால் அவர்களது பதிவு நமது பிளாக்கர் டேஷ் போர்டுக்கு  வந்து சேர்ந்து விடும். இணைத்ததற்கு அடையாளமாக  நம்முடைய profile படமும் அவரது follwer விட்ஜட் டில் காட்சி அளிப்பதை காணலாம் .
 மேலுள்ள விட்ஜெட் மூலம் உள்நுழைந்து பின்தொடர்வதற்காக இணைவோம் .
EMAIL SUBSCRIPTION மூலமும் நம்முடைய பதிவுகளை பிறரும் பிறருடைய வலைப் பதிவுகளை நாமும் தொடர்ந்து அறியலாம். இதனை பின்னர்  விரிவாக பார்ப்போம்.

   நமது வலைபதிவில் sign in செய்து உள்நுழைந்தால் பிளாக்கர் டேஷ் போர்டில் கீழ்க் கண்டவாறு  காண முடியும் இதில் நாம் இணைந்துள்ள வலைப் பூக்களின் பதிவுகளின் பட்டியலுடன் பதிவின்  சுருக்கத்தை காண முடியும். நாம் பின்தொடரும் வலைப் பதிவர்கள் புதிய பதிவுகள் இடும்போதெல்லாம் அவை சில நிமிடங்களில் நம்மை வந்தடைந்து விடும். விரிவாகப் படிக்க அதனை கிளிக் செய்தால் அவரது வலைப் பக்கத்துக்கு சென்றுவிடும் . இதே போல நம்மை  பின்தொடர்பவர்களுக்கும் நமது பதிவுகள்  சென்றடையும்.

 
எல்லா வலைப்பதிவர்களும் தன வலைப்பக்கத்தில் folower விட்ஜெட் இணைப்பதில்லை. Follower விட்ஜெட் இணைக்கப் படாத வலைப்பூகளை நாம் பின்தொடர முடியுமா அதாவது அவர்களது பதிவுகளை அறிவதற்கு வழி இருக்கிறதா? இருக்கிறது. நீங்கள் விருபுகிற வலைப் பூவை உங்கள் வாசிப்புப் பட்டியலில் இணைத்து அவரகளது பதிவுகளின் அறிவிப்பை அறியலாம்
 உதாரணமாக  எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் வலைத்தளம் WWW.JEYAMOHAN.IN அவரது வலைப் பதிவை நமது படிக்கும் பட்டியலில் சேர்க்க வேண்டுமெனில்


கீழே படத்தில் உள்ளதை கவனியுங்கள் அதில் சிவப்பில் வட்டமிடப் பட்டுள்ள ADD ஐ கிளிக் செய்தல் அருகில் உள்ளவாறு ஒரு தகவல் பெட்டி தோன்றும்

அதில் Add from URL இல் நீங்கள் தொடர விரும்பும் வலைப்பூ முகவரியை அதாவது (எ.கா www.jeyamohan.in ) என்று இட்டு Follow பட்டனை அழுத்தவேண்டும் இனி அவர் புதிய பதிவு இடும்போதெல்லாம் உங்கள் டேஷ் போர்டுக்கு தானாக வந்து சேர்ந்து விடும்.

 பதிவுகளை  பதிவு எழுதுபவர் அறியும் வண்ணம் தொடர்வதற்கு  Follow publicly என்ற  ஆப்ஷன் உள்ளது. இதன் நீங்கள்  தொடர்வதை வலைப்பூஎழுதுபவர் அறிவார். உங்கள் profile விவரம் அறிய முடியும்..
       சில  நேரங்களில் அவரையும் அறியாமல் பின் தொடர விரும்பினால் follow anonymously என்ற ஆப்ஷனும் உள்ளது . நீங்கள்தான் பின்தொடர்கிறீர்கள் என்று அவர்களுக்கு தெரியாது உங்கள் profile படமும் விவரமும் மறைக்கப் பட்டுவிடும்.சில நேரங்களில் சில  காரணத்திற்காக  மற்றவர்களின் பதிவுகளை தொடர்கிறோம் என்பதை தெரிவிக்காமல் இருக்க சிலர் விரும்புவது உண்டு. அவர்களுக்கு இது பயன் படும்.
கீழுள்ள படத்தின் மூலம் எளிதில் புரிந்து கொள்ளலாம்மேலே following option இல் நீங்கள் விரும்பிய ஒன்றை தேர்ந்தெடுக்கலாம்.


இதன் மூலம் நாம் தெரிந்து கொள்வது Follower விட்ஜட் இணைக்காதவர்களின் பதிவுகளை தொடர முடியும் என்பதே


சிலர் தினந்தோறும் எழுதிக் குவித்துக் கொண்டிருப்பார்கள். அவை நமது டேஷ் போர்டை நிறைத்து எரிச்சலை உண்டாக்கும் .இதனால் நமது ரீடிங் லிஸ்டில் அரிதாக நல்ல பதிவுகள்  கண்ணில் படாமல் போக வாய்ப்பு உள்ளது. 
      அப்படியானால் ஏதோ ஒரு ஆர்வத்தில் இணைந்த வலைபூக்களை தொடர்வதை நிறுத்தினால் நன்றாக இருக்குமே? என்ற எண்ணம் தோன்ற வாய்ப்பு உள்ளது .
அப்படி நிறுத்த விரும்பினால் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றியும் 
Email subscption பற்றியும் இன்னொரு பதிவில் பார்ப்போம்  

****************************************************************************** 

கற்றுக் குட்டியின்  முந்தைய கணினிக் குறிப்புப் பதிவுகள்


 • பிற பதிவர்களின் அலெக்சா ரேங்க் அறிவது எப்படி?
 • முன்னணிப் பதிவர்களின் அலெக்சா தரவரிசை பின்னிலை ஏன்...
 • உங்கள் வலைப்பூவை(BLOG) பேக் அப் எடுப்பது எப்படி?
 • உங்கள் வலையின் பார்வையாளர் எண்ணிக்கையை அதிகமாக்க வேண்டுமா?
 • காபி,பேஸ்ட் செய்யப்பட்டதை அறிவது எப்படி?-பகுதி 2(250 வது பதிவு)
 •  இன்ட்லியால் ஒரு இன்னல்
 • பிற பதிவர்களின் அலெக்சா ரேங்க் அறிவது எப்படி? 
 • .காபி,பேஸ்ட் பதிவர்களை என்ன செய்வது?


 • தமிழ்மணம்,தமிழ் 10 இல் ஒட்டு போட்டவர்களை அறிய முடியுமா?
 • எக்செல் சவால்-பல செல்களில் உள்ளவற்றை ஒரே செல்லில் இணைக்க முடியுமா?
 •  கற்றுக் குட்டியின் கணினிக் குறிப்புகள்-Font Shortcut-Word 2007 
 • காசோலை விவரங்களை வீட்டு பிரிண்டரில் டைப் செய்ய முடியுமா? 
 • விண்டோஸ் 7 ன் பயனுள்ள டூல் 
 • லேசா பொறாமைப் படலாம் வாங்க! 
 • எக்சல் எக்ஸ்பர்ட்டா நீங்கள்?சொல்லுங்கள்!எக்சல் தப்பா கணக்கு போடுமா? 
 • EXCEL இல் எண்களில் உள்ள ரூபாயை எழுத்துக்களாக மாற்ற முடியுமா?

   

   
 • 21 கருத்துகள்:

  1. ஆகா அருமையான தகவல் ஐயா
   இதுபோன்ற தகவல்களை, தொழில் நுட்பத் தகவல்களைத் தொடர்ந்து வழங்குங்கள் ஐயா
   அறிந்து கொள்ளக் காத்திருக்கிறோம்
   நன்றி
   தம +1

   பதிலளிநீக்கு
  2. நல்லதொரு விடயம் பதிவாகப் பகிர்ந்தீர்கள் சகோதரரே!

   இன்றும்கூட யாருடைய வலைப்பூ என்பது ஞாபகத்தில் இல்லை. அவரிடம் இந்த ஃபோலோவர் வசதி செய்யப் பட்டிருக்கவில்லை.. என்ன செய்வது என யோசித்தேன்.
   நல்ல வழி கூறினீர்கள்!

   நன்றியுடன் வாழ்த்துக்கள் சகோதரரே!

   த ம 3

   பதிலளிநீக்கு
  3. என்னைப்போன்ற கத்துக்குட்டிகளுக்குபயன் பெறும் விடயங்கள் நன்றி நண்பரே
   தமிழ் மணம் 2

   பதிலளிநீக்கு
  4. நான் பெரும்பாலும் ஃபேஸ்புக், கூகிள் ப்ளஸ்ஸில் ஷேர் செய்பவர்களை அறிவதன் மூலமும், ஈ மெயில் சப்ஸ்க்ரிப்ஷன் மூலமுமே தொடர்கிறேன். டேஷ்போர்ட் பக்கம் அதிகம் ஒதுங்குவதில்லை!

   பதிலளிநீக்கு
  5. ஏற்கனவே..... தாங்கள் கூறியுள்ள மூன்று வகைகளில்தான் படிதான் அமைத்துள்ளேன் அய்யா... நிணைவு படுத்தியதற்கு நன்றி ! அய்யா...

   பதிலளிநீக்கு
  6. இந்த ADD பட்டன் பத்தி இனிக்கு தான் தெரியுது!!! நான் கத்துக்குட்டி தானே:) நன்றி அண்ணா!

   பதிலளிநீக்கு
  7. அருமையான பகிர்வு கத்துக்குட்டி நானும் கற்றுக்கொண்டேன் ))) பகிர்வுக்கு நன்றி.

   பதிலளிநீக்கு

  8. சிறந்த தொழில்நுட்ப வழிகாட்டல்
   பின்பற்றுவோர் பயனடைவர்
   தொடருங்கள்

   பதிலளிநீக்கு
  9. நான் எந்த புதியவர் தளங்ளுக்கு செல்லும் போது பாலோவர் கெட்ஜெட் இல்லை என்றால் கமெண்டில் அதை சுட்டிக்காட்டி அதை முதலில் செய்யுங்கள் என்று சொல்வேன் அப்படி சொல்லியும் செய்யாதவர்கள் தளப்பக்கம் நான் மீண்டும் செல்வதில்லை

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. சிலர் இணைக்க தெரியாமல் கூட இருக்கிறார்கள்

    நீக்கு

   2. சொல்லிதருவதற்கும் உதவுவதற்கும் திண்டுக்கல் தனபாலன் மற்றும் உங்களைப் போல உள்ளவர்கள் இருக்கும் போது இணைக்க தெரியவில்லை என்று சொல்வது நம்புவது மாதிரி இல்லை, எனிடம் யாரவது கேட்டால் நேறம் இருந்தால் பதில் சொல்லுவேன் இல்லையென்றால் தனபாலன் இமெயில் கொடுத்ஹு அவரிடம் கேளுங்கள் என்று சொல்லிவிடுவேன்

    நீக்கு
  10. நேற்று தான் கில்லர்ஜி இதைப் பற்றி பேசினார்... அடுத்த பதிவு(ம்) அவருக்கு மிகவும் உதவும்...

   பதிலளிநீக்கு
  11. நல்ல பயனுள்ள பதிவு. இவை போன்ற தொழில்நுட்பக் கருத்துடைய பதிவுகள் எங்களுக்கு மிகவும் உறுதுணையாக உள்ளன.நன்றி.

   பதிலளிநீக்கு
  12. நீங்கள் சொன்ன பிறகுதான் எனக்கே உறைக்கிறது..நானும் இதுவரை ,FOLLOW BY EMAIL கேட்ஜெட்டை இணைக்கவில்லை :)
   நன்றி .

   பதிலளிநீக்கு
  13. நல்ல விடயம் கற்றுக் கொடுத்துள்ளீர்கள் நன்று நன்று ! மிக்க நன்றி சகோ! வாழத்துக்கள் ..!

   பதிலளிநீக்கு
  14. நாங்களும் ஃபாலோ பை இமெயில் இல்லாதவர்களிடம் சொல்லுவதுண்டு இணைப்பதற்கு. கில்லர்ஜியிடம் கேட்டுக் கொண்டோம். எப்படி என்று அவர் கேட்க நாங்கள் அதைச் சொல்ல இப்போது அவர் இணைத்துள்ளார். அதை இணைக்காதவர்கள் அந்த விட்ஜெட்டை இணைத்தால் நல்லது. ஏனென்றால் பல நல்ல பதிவுகள் ப்ளாகர் டேஷ் போர்டில் நாம் மெதுவாகச் சென்றால் கீழே எங்கேயோ போய்விடுகின்றது. அதனால் மிஸ் ஆகி விடுகிறது. இப்போது நாங்கள் பெரும்பான்மையோர் உங்கள் தளம் உட்பட நாங்கள் ஃபாலோ பை இமெயில் கொடுத்துவிட்டோம்...அது போன்று ஆனந்தவிகடனில் பலரும் இணைந்து பதிவிடுவதால் மதுரைத் தமிழன், க்ரேஸ், பகவான் ஜி, தளிர் சுரேஷ், மேலையூர் இன்னும் பலரது பதிவுகளும் நமது ஃபேஸ்புக் வழி நம் பெட்டிக்குள் வந்துவிடுவதால் எளிதாக இருக்கிறது.

   நல்ல பதிவு முரளி.....

   பதிலளிநீக்கு
  15. மிகவும் உபயோகமான ஒன்று! நிறைய நல்ல வலைப்பூக்களை இந்த விட்ஜெட் இல்லாமையால் தொடர இயலாமல் போகிறது! அப்படி நான் தவறவிட்டவை நிறைய! இனி ADD செய்து கொள்கின்றேன்! மிக்க நன்றி!

   பதிலளிநீக்கு

  நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
  கைபேசி எண் 9445114895