என்னை கவனிப்பவர்கள்

.உங்கள் மின்னஞ்சல் முகவரியை FOLLOW BY EMAIL பகுதியில் இடவும்.மூங்கில் காற்றின பதிவுகள் உங்கள் மின்னஞ்சலுக்கு வந்து சேரும்.TPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்

Thursday, January 8, 2015

Custom Domain பெற்றால் சிக்கல் வருமா?

   
    காக்காய் உட்கார பனம்பழம் விழுந்த கதையா அல்லது என் வேண்டுகோளை தமிழ்மணம் ஏற்றுக்கொண்டதா  என்று தெரியவில்லை.230 க்கும் மேற்பட்ட தமிழ்மணத்தில் இணைக்கப் படாத வலைப்பூக்களின் பட்டியலை வெளியிட்டிருந்தேன். உடனடியாக இவற்றை இணைக்கும்படி கேட்டுக் கொண்டேன்.
(பார்க்க பதிவு : மனம் வைக்குமா தமிழ்மணம்)   ஒரு வாரத்திற்கு முன்பாக தமிழ்மண இணைப்புக்காக காத்திருந்த 230க்கும் மேற்பட்ட பதிவர்களின் வலைப்பூக்களை தன் பட்டியலில் சேர்த்துக்கொண்டது. அன்றைய தினம் தமிழ் மண முகப்பு பக்கத்தில் புதியது புதியது என ஏராளமான வலைப்பூக்கள் பார்க்கையில் மகிழ்ச்சியாக இருந்தது . 2015  நல்ல விதத்தில் தொடங்கி இருப்பதாகக் கொள்வோம்.அனைவரையும் மகிழ்ச்சியுடன் வரவேற்பதோடு தொடர்ந்து எழுதவும்  ஊக்கப் படுத்துவோம். தமிழ்மணத்திற்கு நன்றி 

   தமிழ்மணப் பட்டியை மட்டும் இணைத்து விட்டு பதிவை தமிழ்மணத்தில் இணைக்க முடியாமல் இருந்த அத்தனை வலைப்பூக்களையும் இனி தமிழ்மணத்தில் இணைத்து பார்வையாளர்களின் எண்ணிக்கையை சற்று உயர்த்திக் கொள்ள முடியும் .

தமிழ்மணம் பற்றிய முந்தைய  பதிவில். ஏற்கனவே இயங்கிக் கொண்டிருக்கும் வலைப்பூக்களின் பெயர்களும் அதில் இடம் பெற்றிருக்கிறது. அதன் காரணம்
இன்னொரு பதிவில் சொல்கிறேன் என்று குறிப்பிட்டேன்.
முதன் முதலில் வலைப்பூ தொடங்குபவர் பெரும்பாலும் இலவச பிளாக்கிங் சேவையைத்தான் பயன்படுத்துவார்கள். கூகிள் வோர்ட்ப்ரஸ் இச்சேவையை வழங்குகின்றன.
ஒவ்வொரு வலைதளத்திற்கும் ஒரு முகவரி உண்டு . அதற்கு டொமைன் என்று பெயர். உதாரணத்திற்கு  www.tnmurali.com. என்பது எனது வலைபூ முகவரி இதனை URL (Uniform Resource Locator) என்றும் கூறலாம்.இதில் tnmurali என்பது domain நேம் ஆகும்.
நான் வலைப்பூ தொடங்கும்போது கூகிள் வழங்கும் இலவச வசதியை பெற்றதால் எனது வலைப்பூ  முகவரி www.tnmurali.blogspot.com என்று இருந்து. இலவசமாக இருந்தால் blogspot என்ற வார்த்தை இணைந்தே இருக்கும். இதே Wordpress மூலம் வலைப்பூ தொடங்கினால்  www.ranjaninarayanan.wordpress.com  என்று இருக்கும். இதனயே வலைப்பூ முகவரி என்று  கூறலாம் ஒருவர் நமது வலைப்பூவை எளிதில் பார்வையிட பிரவுசரின் அட்ரஸ் பாரில் இதனை டைப் செய்தால் அந்த வலை தளத்திற்கு எளிதில் செல்ல  முடியும். நாம் வலைதளத்திற்கு பெயர்  வைத்திருப்போம். அந்தப் பெயரின் பின்னணியில் வலைப்பூ முகவரியே மறைந்திருக்கும். பெயரை தமிழில் வைக்கலாம். ஆனால் வலைப்பூ முகவரி தமிழில் இருக்காது. நமது  வலைப்பூவிற்குள் ஒவ்வொரு பதிவிற்கும் ஒரு முகவரி(permalink) இருக்கும். அது தானாகவே (Automatic Permalink) உருவாக்கிக் கொள்ளும். விரும்பினால் சில நிபந்தனைகளுக்குபட்டு (custom permalink) நாமே அமைத்துக் கொள்ள முடியும்.
   இலவச ப்ளாக்  வைத்திருப்போர் தன் வலைப்பூ முகவரியை இணையம் பற்றி  அறியாதவரிடம் சொல்ல நேர்ந்தால் blogspot.com ஐ சேர்த்து சொல்லவேண்டும் இதற்கு முன்னர் நான் எனது ப்ளாக் முகவரியை www.tnmurali.blogspot.com. என்று நீளமாக சொல்லவேண்டும். blogspot என்ற வார்த்தையை நீக்கி விட்டு www.tnmurali.com எனது வலைப்பூ முகவரி  எளிமையாக இருக்கும் அல்லவா?  ஆனால்  blogspot என்ற வார்த்தை இல்லாமல் முகவரி வேண்டுமெனில் பணம் செலுத்தி முகவரி பெற வேண்டும் முன்பு blogspot வைத்திருப்போருக்கு  கூகிள் கஸ்டம் டொமைன் வழங்கி வந்தது. தற்போது வழங்குவதில்லை .ஆனால் இதற்கெனவே சில நிறுவனங்கள் உள்ளன.
போன்ற நிறுவனங்களை கூகுள் பரிந்துரை செய்கிறது. இவற்றிடமிருந்து நாம் முகவரி பெற்றுக்கொள்ளலாம். நாம் கேட்கும் முகவரி ஏற்கனவே வேறு  யாருக்கும் அளிக்கப் படாமல் இருந்திருந்தால் நமக்கு கிடைக்கும். இதற்கு ஆண்டு தோறும் ஒரு தொகை செலுத்த வேண்டி இருக்கும் . நான் Godaddy.com இல் இருந்து 600 ரூபாய் செலுத்தி முகவரி பெற்றேன். அவை ஓராண்டுக்கு மட்டுமே செல்லுபடியாகும் பின்னர் அதனை முடியும் காலத்திற்குள் மீண்டும் புதுப்பிக்க வேண்டும் .
இவ்வாறு Customdomain மாற்றுவதால் சில அனுகூலங்கள் உண்டு  இவை பற்றி பின்னர் எழுதுகிறேன். ஆனால் இப்படி பெயர் மாற்றியதால் தமிழ் மணத்தில்  வலைப்பூவை இணைப்பதில் சிக்கல் எழுவதுண்டு. காரணம் முன்னதாக தமிழ்மணத்தில் பழையவலைப்பூ முகவரியே பதிவாகி இருக்கும். இப்போது இணைத்தால் உங்கள் வலைப்பூ பட்டியலில் இல்லை என்று தெரிவிக்கும். சில தந்திரங்களை கையாண்டு பதிவுகளை இணைக்க வேண்டும். அல்லது நிரலில் மாற்றம் செய்யவேண்டும்.

    அதன் காரணமாக தமிழ்மணத்தில் பழைய  முகவரியை திருத்தி அமைக்க வசதி இல்லை எனவே புதிதாக வலைப்பூ தொடங்கியவர் போல வலைப்பூவை தமிழ்மணத்தில் பதிவு செய்து இணைப்பு அனுமதிக்கு காத்திருக்க வேண்டும் .இதனால் தமிழ்மண தர வரிசைப்  பட்டியலில் முன்னர் இருந்த நிலையில் இருக்க முடியாது. பின்னால் இருந்தான் மீண்டும் வர வேண்டும்.
அவ்வாறு தற்போது  கஸ்டம் டொமைன் பெற்ற சிலர் மீண்டும் தமிழ் மணத்திற்கு விண்ணப்பித்திருந்தனர் . அதனால்தான்  பட்டியலில் பழைய பதிவர்களையும் காண முடிந்தது. 
இந்த சிக்கல் மற்ற திரட்டிகளில் இல்லை . 

****************************************************
புதியவர்களுக்கு சில தகவல்கள்:(எனது அனுபவத்தின் மூலம் அறிந்தவை.

1.தமிழ்மணத்தில் சில குறி சொற்களின்(Labels) கீழ் பதிவுகள் வகைப் படுத்தப் படுகின்றன .அவை நகைச்சுவை, மொக்கை, நையாண்டி, அரசியல்,சமூகம்,அனுபவம்,நிகழ்வுகள்,புனைவுகள்,சிறுகதை ,கவிதை சினிமா,திரைப்படம்,விமர்சனம், சமையல், இவற்றில் பொருத்தமான சிலவற்றை பதிவுகளின் குறிசொற்களாக அமைத்தால் அந்தந்த தலைப்புகளின் கீழ் தமிழ்மண முகப்புகளில் அவை காட்சியளிக்கும் 

2. தமிழ்மண உறுப்பினர்கள் தமிழ்மணப்பட்டை இணைக்கப் பட்ட பதிவுகளுக்கு வாக்களிக்க முடியும் .உங்கள் பதிவுகள் ஏழு வாக்குகள் பெற்றால் வாசகர் பரிந்துரையில் உங்கள் பதிவுகள் இடம் பெறும் .

3.வாக்களித்தல், பிரபல பதிவுகளுக்கு பின்னூட்டமிடுதல், உங்கள் பதிவுகளுக்கு கிடைக்கும் பின்னூட்டம் போன்றவை தமிழ்மண தரவரிசைப் பட்டியலில் முன்னேறுவதற்கு காரணிகளாக அமையும்.

4.தமிழ்மண உறுப்பினர்கள் தமிழ்மணப் பட்டியலில் இடம்பெற்றுள்ள எந்த வலைப்பூவின் பதிவையும் இணைக்க முடியும்.வலைப்பூ உரிமையாளர்தான் இணைக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. 

5.  தமிழ்மணம் தானாகவே பதிவுகளை திரட்டுவதாக தெரிவித்துள்ளனர் .
6.தமிழ் 10 ,இன்ட்லி போன்ற திரட்டிகளிலும் உங்கள்  பதிவுகளை இணையுங்கள் 
7. உங்களைக் கவர்ந்த பதிவுகளுக்கு கட்டாயம் கருத்திடுங்கள் வாக்கிடுங்கள் 
8. இன்னொருவர் பதிவை காப்பி பேஸ்ட் செய்யாதீர்கள் அப்படி விரும்பினால் எழுதியவரின் அனுமதி பெற்றபின் அவரது வலைப்பதிவு இணைப்புடன் வெளியிட்டு நன்றி தெரிவிக்கவும்.
9.ஆபாசமோ தனி நபர் தாக்குதல்களோ பதிவுகளில் இடம் பெறாமல் பார்த்துக் கொள்வது நல்லது 
10. கருத்து வேற்றுமை உடையவர்களை  எதிரிகளாகக் கருத வேண்டியதில்லை .மறுப்புக் கருத்துகளிலும் நாகரிகத்தை பின்பற்றுங்கள்.
11. உங்கள் முகநூல் டுவிட்டர் நண்பர்களையும் வலைப்பதிவு எழுத தூண்டுங்கள்
12. உங்கள் பதிவுகளை முக நூல் டுவிட்டரிலும் இணையுங்கள் 

தமிழ்மணப் பட்டை வேலை செய்யாதவர்கள் தங்கள் வலைப்பூ முகவரியை  blogspot.in இல் இருந்து  blospot.com முகவரிக்கு ரீ டைரக்ட்  செய்யுங்கள். 

அனைவருக்கும் வாழ்த்துக்கள் 

**********************************************************
தொடர்புடைய பதிவு 
 மனம் வைக்குமா தமிழ்மணம்)



 • பிற பதிவர்களின் அலெக்சா ரேங்க் அறிவது எப்படி?
 • முன்னணிப் பதிவர்களின் அலெக்சா தரவரிசை பின்னிலை ஏன்...
 • உங்கள் வலைப்பூவை(BLOG) பேக் அப் எடுப்பது எப்படி?
 • உங்கள் வலையின் பார்வையாளர் எண்ணிக்கையை அதிகமாக்க வேண்டுமா?
 • காபி,பேஸ்ட் செய்யப்பட்டதை அறிவது எப்படி?-பகுதி 2(250 வது பதிவு)
 •  இன்ட்லியால் ஒரு இன்னல்
 • பிற பதிவர்களின் அலெக்சா ரேங்க் அறிவது எப்படி? 
 • .காபி,பேஸ்ட் பதிவர்களை என்ன செய்வது?







 • தமிழ்மணம்,தமிழ் 10 இல் ஒட்டு போட்டவர்களை அறிய முடியுமா?
 • 21 comments:

  1. // 5. சில திரட்டிகளைப் போல தமிழ்மணம் தானாகவே பதிவுகளை திரட்டாது.//

   தமிழ்மணம் தானியங்கியாகவும் பதிவுகளை திரட்டுகிறது. அது தவிர பதிவுப்பட்டைகளில் இருந்தும் அளிக்கலாம். அது தவிர தமிழ்மணம் முகப்பு பக்கத்திற்கு சென்று "இடுகைகளைப் புதுப்பிக்க" என்ற textboxல் உங்கள் பதிவின் முகவரியை (உதாரணமாக - http://www.tnmurali.com) அளித்தால் தமிழ்மணம் திரட்டிக் கொள்ளும்.

   நீங்கள் எதுவும் செய்யாவிட்டாலும் தமிழ்மணம் தானியங்கியாக திரட்டும், ஆனால் கூடுதலாக நேரம் எடுக்கும். நீங்கள் எழுதியவுடன் திரட்ட பதிவுப் பட்டையையோ, தமிழ்மணம் முகப்பிற்கு சென்றோ, தமிழ்மணத்திற்கு அளிக்கலாம்...

   ReplyDelete
   Replies
   1. இதுவரை நானேதான் இணைத்திருக்கிறேன். சோதித்துப் பார்க்கிறேன். தகவலுக்கு நன்றி

    Delete
  2. காக்காய் உட்காரப் பனம் பழம் வழலாம். ஆனால் இந்த விஷயத்தில் உங்கள் பதிவுதான் காக்காயாக வேலை செய்திருக்கிறது. தமிழ்மணம் நிர்வாகிகள் விழிப்புடனும் பொறுப்புடனும் பதிவர்களின் கோரிக்கைகளைப் பரிசீலித்து அதற்கு ஆவன செய்கிறார்கள் என்பது உறுதிப்படுகிறது. இந்தப் பிரச்சினையை தமிழ்மடத்திற்கு சுட்டிக்காட்டிய உங்களுக்கும் இந்தப் பிரச்சினையைத் தீர்த்துவைத்த தமிழ்மணம் நிர்வாகிகளுக்கும் பாராட்டுக்கள்.

   அடுத்த பகுதியாக சொல்லியதும் எல்லோரும் அறிந்து கொள்ளவேண்டியதே.

   ReplyDelete
  3. பயனுள்ள சிறந்த தொழில்நுட்பப் பதிவு
   தொடருங்கள்

   தைப்பொங்கலா? சிறுகதைப் போட்டியா?
   http://eluththugal.blogspot.com/2015/01/blog-post.html
   படித்துப் பாருங்களேன்!

   ReplyDelete
  4. உபயோகமான யோசனைகளை. தமிழ்மண நிர்வாகிகள் உறுப்பினர்களின் யோசனைகளை ஏற்றுக் கொள்ளும்போது அவர்களைக் குறிப்பிடலாம்!

   ReplyDelete
  5. மிகவும் பயனுள்ள பதிவு ஐயா

   ReplyDelete
  6. தமிழ் மண நிருவாகிகளுக்கு நன்றியினையும் பராட்டுக்களையும் தெரிவிப்போம்
   தம 3

   ReplyDelete
  7. பல புதிய பதிவர்களின் சார்பில் மனமார்ந்த வாழ்த்துக்கள்...

   ReplyDelete
  8. தகவலுக்கும் ,தாங்கள் வலைப்பதிவர்கள்மேல் கொண்ட அக்கறைக்கும் நன்றி முரளி

   ReplyDelete
  9. நான் இணைக்காமலேயே கடந்த எனது சில பதிவுகள் தமிழ் மணத்தில் இணைக்கப் படுகின்றன. இணைக்க வேண்டாம் என்று பல முறை நான் கேட்டுக் கொண்டிருப்பதால் வாசக நண்பர்கள் இணைக்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன் தமிழ் மணம் தானியங்கியாகப் பதிவுகளைத் திரட்டுகிறதோ என்னும் ஐயம் உண்டு. தமிழ் மண நிர்வாகிக்கு எழுதி இருக்கிறேன் பதில் இன்னும் வரவில்லை.

   ReplyDelete
  10. மிகவும் உபயோகமான பகிர்வு...
   பகிர்வுக்கு நன்றி ஐயா...

   ReplyDelete
  11. மிகவும் மகிழ்ச்சியான செய்தி! வலையில் எழுதுவோருக்கு தங்களின் ஆலோசனைகள் மிகவும் உபயோகமாக இருக்கும்! நன்றி!

   ReplyDelete
  12. மிகவும் மகிழ்ச்சி பலர் தமிழ் மணத்தில் இணைந்துவிட்டதற்கு. நீங்கள் எழுதியிருந்ததும் ஒரு காரணமாக இருந்திருக்கலாம் என்றுதான் தோன்றுகின்றது. தங்களின் முயற்சிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்! மிகவும் பயனுள்ள தகவல்கள் அடக்கிய பதிவு! மிக்க நன்றி நண்பரே!

   ReplyDelete
  13. எனது வலைப்பூக்களை இணைக்க திரு திண்டுக்கல் தனபாலன் உதவி செய்தார். அண்மையில் முனைவர் ஜம்புலிங்கம் வலைப்பூவில் தமிழ்மணம் பட்டை தெரிகிறது. இணைக்கட்டுள்ளது என நினைக்கிறேன். சோழ நாட்டில் பௌத்தம் என்ற வலைப்பூவில் முன்பு தெரிந்த தமிழ் மணம் பட்டையைக் காணமுடியவில்லை. com தளத்திற்கு மாற்றித் தந்தார் அவர். தற்போது com தளம் மறுபடியும் in என்றே வருகிறது. திண்டுக்கல் தனபால்ன் அவர்களுக்கு இது தொடர்பாக எழுதியுள்ளேன். நன்றி.

   ReplyDelete
  14. நற்பணி இது ...
   இணைக்கப்பட்ட புதிய பதிவர்கள் சார்பாக நன்றிகள் ...
   த ம ++

   ReplyDelete
  15. Custom domain மாற்றுவதால் உள்ள அனுகூலங்களையும் அவசியம் எழுதுங்கள்.

   பதிவில் நான் அறியாத தகவல்களும் உள்ளன.

   அறியத் தந்தமைக்கு மிக்க நன்றி முரளி.

   ReplyDelete
  16. வணக்கம்
   அண்ணா.
   யாவரும் அறிய வேண்டிய விடயம் மிக அருமையாக சொல்லியுள்ளீர்கள்.. எனக்கும் இந்த பிரச்சினை இருந்ததுதான்.. இப்போது சரியாகி விட்டது. நானும்.டொமையன் வேண்டியுளேன் 5 வருடத்திற்கு... இதுதான் எனது முகவரி-www.trtamilkkavithaikal.com/. டொமையன் வேண்ட முன்பு தமிழ் மணத்தில் இணைத்து பல வாக்கு பெற்றேன் பல பதிவுகளுக்கு டொமையின் வேண்டிய பின்பு அவை இல்லாமல் போய்விட்டது என்ன காரணம்விளக்கம் தருங்கள்...அண்ணா.

   -நன்றி-
   -அன்புடன்-
   -ரூபன்-

   ReplyDelete
  17. வணக்கம். nimiththigan.blogspot.in எனும் வலை நிரலில், நிமித்திகன் எனும் வலைப்பூவை 23.10.2013 முதல் பதிவிட்டு வருகிறேன். தமிழ் மணத்தில் இணைவதற்கு எப்போதோ பதிவு செய்திருந்தேன். ஆனால் இணைந்ததா என்பது அறியாமலேயே இருந்து வந்தேன். கடந்த சில நாட்களாக எனது வலைப்பூவிற்கு வருபவர்கள் - தமிழ் மணம் - வழியே வருவதைப் பார்க்க நேர்ந்தது. இப்பொழுதுதான் தெரிந்தது தங்களின் "காக்கை-பனம் பழக் கதை". மிக்க நன்றி. தமிழ் மணத்திற்கும் தங்களுக்கும்.

   அன்புடன்
   நிமித்திகன்

   ReplyDelete
  18. உலகத் தமிழர்களிடத்தில், நம்மை கொண்டு போய்ச் சேர்த்த தமிழ்மணம் என்றுமே என் மரியாதைக்குரிய பெயர்.

   ReplyDelete
  19. பலருக்கும் பயன்படும் பதிவு

   ReplyDelete

  நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
  கைபேசி எண் 9445114895